PAGE LOAD TIME

அடச் சே...என்ன நடக்குது ......இங்கே...

பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தார்.நிறைய பேரில்லை மாப்பிள்ளையின் அம்மா மட்டுமே.
பெண்வீட்டில் பெண்ணோட அக்கா மட்டும் இருந்தார்.
மாப்பிள்ளையோட அம்மாவாச்சும் எளிமையா ஒரு காட்டன் புடவை கட்டியிருந்தார்.பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.
சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் தொடங்கியது.

மாப்பிள்ளையின் அம்மா அவன் குணங்களைச் சொல்லத் தொடங்கினார்.
''எங்க பையனுக்கு ஏழு வயசாகுது.இவனுக்கு நான் வெஜ் தான் ரொம்பப் பிடி்க்கும்.வெஜ் சாப்பாடுன்னா ஓடிடுவான்.சில நேரம் ஊட்டி விடனும்.நெய் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
நான்- வெஜ் ல கூட நெய் போட்டு சாப்பிடுவான்''

பொண்ணோட அக்கா,''அட இவளும் அப்படித்தான் நான் வெஜ் புடிக்கும் நெய் போட்டுத்தான் இவளும் சாப்பிடுவா.இவளுக்கு ஐந்து வயசாகுது''

''என் பையனுக்கு ஐஸ்கிரீம் னா உயிர்.ராத்திரியில ஐஸ்கிரீம் வண்டி சத்தம் கேட்டாப் போதும் நம்மை தூங்க விட மாட்டான்.
அவனுக்கு ஒன்னு வாங்கிக் குடுத்துட்டு நாங்களும் சாப்பிட்டா,தன்னோடதை முதல்ல அவசரமா சாப்பிட்டு விட்டு எங்களுடையதும் கேட்டு அடம் பிடிப்பான்.அதனால் நாங்க பாதி சாப்பிட்ட பிறகுதான் அவன் பங்கை அவன் கிட்ட குடுப்போம்.''

''ஓஹோ!எங்க பொண்ணுக்கு சாக்லெட் தான் உயிர்.அதிலும் மட்டமானது பிடிக்காது.பைவ் ஸ்டார் டெய்ரிமில்க் இப்படித்தான் சாப்பிடுவா.''

எங்க பையன் சமத்து. யார் வந்தாலும் நல்லா விளையாடுவான்.''

''எங்க பொண்ணும் ரொம்ப சமத்துதான்.ஆனா யார் வந்தாலும் தன்னைத்தான் முதலில் கொஞ்சனும்னு அடம் பிடிப்பா''

''எங்க பையன் சொன்னதைக் கேப்பான் அடிக்க மாட்டோம்''

''எங்க பொண்ணு கொஞ்சம் அடம்.அடிச்சிடுவேன்.பிறகு அழுவேன''

இவ்வளவு சம்பாஷணையும் தங்களைப் பற்றித்தான் என்பதை உணராமல் பொண்ணும் மாப்பிள்ளையும் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர்.

மாப்பிள்ளையோட அம்மா 'பொண்ணை நல்லாப் பாத்துக்கடா' என்பதை கண்டுக்கவேயில்லை.
பொண்ணோ பையன் இருந்த பக்கம் திரும்பவேயில்லை.

ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து மாப்பிள்ளைக்கு வரதட்சிணையாக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் [அவருக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பதால்] தருவதாகவும்
பொண்ணுக்கு தினமும் சாக்லெட் தந்து நல்லாப் பார்த்துக்கனும் என்றும் கல்யாணம் பேசி முடிக்கப் பட்டது.

அடுத்த ஐந்தாவது நிமிடமே பொண்ணுக்கு அட்டிகை காதில் கம்மல் தலையில் நெத்திச்சுட்டி வைத்து அலங்கரித்து தலையில் பூவும் நெற்றியில் போட்டும் வைக்கப் பட்டது.

மாப்பிள்ளைக்கு சரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப் பட்டு ரெடியானார்.

அதற்குள் நான்கு ஐந்து உறவினர்களும் வந்து சேர,
மாப்பிள்ளையின் அம்மா ஒரு செயினை அவன் கையில்[??!!]கொடுத்து பொண்ணுக்கு போட வைக்க தானும் உதவினார்.
பொண்ணோட [நைட்டி ]அக்கா பதிலுக்கு ஒரு செயினை பொண்ணு கையில் கொடுத்து மாப்பிள்ளைக்குப் போட வைத்தார்[அவரேதான் போட்டார்]

பின்னால் மாலை மாற்றுதலும் நடந்தது.வீடியோ கவரேஜும் இருந்தது.
பெரும்பாலன நேரம் அனைவரும் 'போஸ்' கொடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஒருவழியாக மிகக் குறைவான நேரத்தில் ஒரு திருமணம் நிச்சயிக்கப் பட்டு நடந்தும் விட்டது.

........................இருங்க....இருங்க இதுவரைக்கும் என்ன நடக்குது இந்தப் பதிவுல என்று யூகிச்சி யூகிச்சி மண்டை காஞ்சிட்டீங்களா?

தீட்ஷிதர் குடும்பத்து பால்ய விவாகம் னு யூகமா?தப்பு தப்பு!!!

இவ்வளவு நேரம் நீங்க பார்த்தது கேட்டது நடந்த சம்பாஷணை எல்லாம் 'செல்லங்கள்' என்ற ஒரு பொதிகைத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இடம் பெற்றவை.
வளர்ப்புப் பிராணிகள் பற்றிய அந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் தான் இந்த வாரம் இந்த மாதிரி'கூத்து'அரங்கேறியிருக்க்கிறது.

இதில் மகா கொடுமை இந்த நிகழ்ச்சியை ஒரு 10 வயது சிறுவன் தொகுத்து வழங்கியது.
அடுத்த மெகா கொடுமை இந்த கல்யாணம் முடிவானதாக வந்த சீனுக்கு இடையில்
TOMMY WEDS JULY
WE CORDIALLY INVITE YOU ALL
னு இன்விடேஷன் காட்டினார்கள்.
இன்னொரு மகா மெகா கொடுமை இந்த நிகழ்ச்சி குறித்த கேள்விகள்
1.மணப்பெண் /மாப்பிள்ளையின் பெயர் என்ன?
2.மாப்பிள்ளைக்கு வரதட்சிணையாக என்ன தரப்பட்டது
3.இருவருக்கும் மிகப் பிடித்த உணவு என்ன?

[கையில் பால் சொம்பு குடுத்து தனி அறையில் தான் விடலை]

நானும் ஒரு பத்து வருஷம் வெள்ளை பொமெரேனியன் வளர்த்திருக்கிறேன்.உயிராக இருக்கும்.அதன் பாசத்தில் எத்தனையோ முறை நெகிழ்ந்து போயிருக்கிறோம்.அது உடம்பு முடியாம இருந்த காலத்தில் அதற்கு எல்லாவித பணிவிடைகளும் செய்திருக்கிறேன்.அது எங்களை விட்டுப் பிரிந்த போது பல நாள் சாப்பிடாமல் அழுதிருக்கிறேன்.நான் மட்டுமல்ல நம்மில் பலர் இப்படி ஆசையாக வளர்க்கிறோம்.செல்லப் பிராணிகள் வளர்ப்பது மனதுக்கும் ஒரு ரிலாக்ஷேஷன்.அதுக்காக இப்படி அசிங்கமாக கூத்தடிக்க வேனுமா?

ஒளிபரப்பு,தொகுப்பாளர்கள்,நிகழ்ச்சிகள் இதில் மற்ற சேனல்களை விட தரத்தில் பின் தங்கியிருந்தாலும் அதன் பண்பாடு தரமாகவே இருக்கும்.பொதிகையிலா இப்படி?

கேரளாவில் கண்ணன் சீதா கல்யாணம் னு மாடுகளுக்கு செய்ததே அதிகம்னு பதிவு போட்டேன்.இப்ப நாய்களுக்கு கல்யாணமாம்.
சரி அடுத்து பூனைக் கல்யாணம்.எலிக் கல்யாணம்,மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்குக் கல்யாணம்.....இந்த வரிசையில்......
அடுப்புக்கும் குக்கருக்கும் கல்யாணம்....
மேசைக்கும் நாற்காலிக்கும் கல்யாணம் செஞ்சாலும் ஆச்சரியமில்லை.

எப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கிடுதே....ஹி..ஹி
இப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.

18 மறுமொழிகள்::

இம்சை said...

150க்கு வாழ்த்துக்கள்...

ஆயில்யன் said...

வாழ்த்துக்களோ
வாழ்த்துக்கள்

எனி ஸ்பெஷல் கும்மி உண்டோ???


ஆர்வத்துடன்....!

ஆயில்யன்

ஆயில்யன் said...

//பொண்ணோட அக்கா அதை விட எளிமை..நைட்டி[இரவுக் கவுன்] யில் இருந்தார்.
//

அடடே...! பரவாயில்லையே!
இப்பவெல்லாம் பொண்ணுங்களே அப்படித்தான் நிக்குதுங்க!?

துளசி கோபால் said...

ஆரம்பத்திலேயே ஊகிச்சேன்.. ஆனா டிவி ஷோன்னு நினைக்கலை.


போகட்டும், எங்க கோபால கிருஷ்ணனுக்குப் பொண்ணு இருக்கா?


150க்கு வாழ்த்து(க்)கள்.

உண்மைத்தமிழன் said...

கண்மணி 150-வது பதிவாமே.. வாழ்த்துக்கள்..

பத்து சதம் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

பொதிகை சேனலையெல்லாம் பார்க்கும் அளவுக்கு பொறுமை இருக்கிறதா..?

நிகழ்ச்சிகள், நிகழ்ச்சியின் நோக்கம், கதை வடிவம் நன்றாக இருந்தாலும் எடுக்கப்படும் விதம் படு சொதப்பலாகி எரிச்சலூட்டுகிறது..

நிற்க..

இந்தக் கதை.. ஏதோ வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்திருப்பார்கள்.. வெளிநாடுகளில் இது மிகவும் சகஜமாம்.. இங்கே மற்ற சேனல்கள் இது போன்ற சினிமாத்தனமில்லாத நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவதில்லை என்பதால் அவற்றைவிட இது பெட்டர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

Thamiz Priyan said...

பொதிகையிலுமா? :(

கோபிநாத் said...

\\எப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கிடுதே....ஹி..ஹி
இப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.\\

150க்கு வாழ்த்துக்கள் ;))

கலக்குங்க ;)

Thamiz Priyan said...

///எப்படியோ நமக்கும் பதிவு போட மேட்டர் சிக்கிடுதே....ஹி..ஹி
இப்படி போஸ்ட் போட்டே 150 வந்துடுச்சி.இது என்னோட 150 வது போஸ்ட்டுங்க.///
:)))))))))

வடுவூர் குமார் said...

என்ன 150 தானா?
பிளாக்கர் கோடில் ஏதாவது இருக்கா என்று பாருங்க...

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

///தீட்ஷிதர் குடும்பத்து பால்ய விவாகம் னு யூகமா?///


ஓதனும் ஓதக்கூடாதுன்னு சொல்லி ஊரே கலவரக்காடாகி இப்பதான் அடங்கிகிடக்கு. திரும்ப எதுக்கு அவங்கள இழுக்குறீங்க.:):):):):):)
(பத்த வச்சிட்டேனா?????)

நிஜமா நல்லவன் said...

///இதுவரைக்கும் என்ன நடக்குது இந்தப் பதிவுல என்று யூகிச்சி யூகிச்சி மண்டை காஞ்சிட்டீங்களா?///இதவேற கேட்டு தெரிஞ்சுக்கணுமா?
மண்டைய கழட்டி வச்சுட்டு தான் நான் பதிவு படிக்க வருவேனாக்கும்! இப்ப எப்படி காயும்?

நிஜமா நல்லவன் said...

///[கையில் பால் சொம்பு குடுத்து தனி அறையில் தான் விடலை]///


:):):):):):):):):):):)

நிஜமா நல்லவன் said...

///அது எங்களை விட்டுப் பிரிந்த போது பல நாள் சாப்பிடாமல் அழுதிருக்கிறேன்.///

:(:(:(:(:(:(:(:(:(

நிஜமா நல்லவன் said...

///ஒளிபரப்பு,தொகுப்பாளர்கள்,நிகழ்ச்சிகள் இதில் மற்ற சேனல்களை விட தரத்தில் பின் தங்கியிருந்தாலும் அதன் பண்பாடு தரமாகவே இருக்கும்.பொதிகையிலா இப்படி?///வச்சதெல்லாம் சுமக்குமாம்
பொதிகழுதை
பொதிகையும் ஒரு
பொதிகழுதை ஆயிற்றோ?

நிஜமா நல்லவன் said...

////சரி அடுத்து பூனைக் கல்யாணம்.எலிக் கல்யாணம்,மீன் தொட்டியில் இருக்கும் மீன்களுக்குக் கல்யாணம்.....இந்த வரிசையில்......
அடுப்புக்கும் குக்கருக்கும் கல்யாணம்....
மேசைக்கும் நாற்காலிக்கும் கல்யாணம் செஞ்சாலும் ஆச்சரியமில்லை.////


'பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும்' கூட யாராவது நடத்திடப்போறாங்க?
:)

Yogi said...

வாழ்த்துக்கள் டீச்சர் :)

கண்மணி/kanmani said...

அனைவருக்கும் நன்றி
ஆனா யாருக்கும் கோபமே வரலை....
வடுவூர் குமார் 150 ஆ?ன்னா என்ன அர்த்தம்.கொன்சம்னு நெனச்சா கும்மி கணக்கையும் சேத்துக்கங்க.

துளசியக்கா....கோபாலுக்கு பொண்ணு வெள்ளையா வேனுமா?கருப்பா வேனுமா?;)

உண்மைத்தமிழன் பொதிகையும் பார்ப்போமில்ல.எத்தனை முறைதான் பார்த்த சினிமா,அழுகை சீரியல் மட்டும் பார்க்கிறது.ஆனா பொதிகை இன்னும் மாறனும் ஒளிபரப்பு தரத்தில்...
இம்சை,ஆயில்யன்,கோபி,தமிழ்பிரியன்,நிஜமா நல்லவன்,பொன்வண்டு நன்றி....

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)