PAGE LOAD TIME

முதுமை என்பது வயதுக்கா?..........மனதுக்கா?

இதற்கு முன்பாக
முதுமை வரமா?சாபமா?
னு ஒரு பதிவிட்டிருந்தேன்.என் பதிவை விட அதற்கான பின்னூட்டங்களே மிக அருமையாக இருந்தன.

இப்போது புதிதாக எனக்குள் ஒரு கேள்வி..முதுமை என்பது வயதுக்கா?மனதுக்கா?

இளம்பிராயத்தில் படிப்பு வேலை என்று வாழ்க்கையின் ஓட்டத்தோடு பயணித்து விட்டு இளைப்பாறுதலும் இரசித்தலும் இல்லாத வாழ்க்கையில் பல சந்தோஷமான கணங்களை தருணங்களை இழக்க நேரிடுகிறது.
ஐம்பதை தாண்டிய பிறகோ ஓய்வு பெற்ற பிறகோ தான் தம்மைச் சுற்றி இருப்பவைகளைப் பார்க்கவும் இரசிக்கவும் நேரம் கிடைக்கிறது.
ஆனால் அந்த இரசிப்பும் ஆசைகளும் பெரும்பாலும் புறக்கணிப்பிலேயே முடிகிறது.எல்லாம் ஆண்டு அனுபவித்தாச்சி.இனி கிருஷ்ணா இராமா னு கிடக்க வேண்டியதுதானே என்ற மனப் பாங்கே இதற்கு காரணம்.

இளம்பிராயத்தினரின் பேச்சினூடே எங்க காலத்திலே எல்லாம் என்று ஏதும் சொல்ல வரும்போது'அப்பா/அம்மா அது உங்க காலம் இப்ப எவ்வளவோ காலம் மாறிப் போச்சு உங்களுக்கு தெரியாது நீங்க பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு நிம்மதியா இருங்கஎன்கிறோம்'[கிடங்க என்பதைத் தான் கொஞ்சம் நகாசு போட்டு இருங்க என்கிறோம்]

ஆனால் உண்மையிலேயே வயதானவர்களின் அனுபவமும் பக்குவமும் உதாசீனப் படுத்தப் படுகின்றன.

சின்னபிள்ளைகள் விளையாடும்போது ''டேய் தம்பி நானும் வரேன் என்னையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கோ' என்று கேட்பது வெறும் விளையாட்டுக்கு மட்டுமல்ல.இழந்து போன மறந்து போன பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியே.
ஆர்வமும் ஈடுபாடும் புரிந்துணர்வும் இருக்கும் பல வயதானவர்களின் சிந்தனைகள் மேம்பட்டதாகவே இருக்கும்.பலசமயம் இன்றைய காலத்தோடு ஒட்டிய கருத்துக்களோடும் இருக்கும் எனில் அவர்களை முதியவர்கள் என்று சொல்வது சரியா?

உடற்கூறால் முதிர்ந்தவர்களானாலும் எண்ணத்தின் வழி செம்மையாக செயல்படுபவர்கள் என்றுமே இளையவர்கள் தான்.

சோம்பேறித்தனமும் யோசிக்கும் திராணியும் இன்றி செக்கு மாடு மாதிரி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இளையவர்கள் மனதளவில் வயதானவர்களே.

நாகரிகமும் காலத்திற்கேற்ற இரசனையும் இருப்பது மட்டுமே இளம் வயதினருக்கான அடையாளங்களாக கருதப் படுகிற்து.
முற்போக்கு சிந்தனையும் அனுபவமும் செயல்பாடும் இரண்டாம் பட்சமாகவே கருதப் படுகிறது.
அவசர யுகத்தில் இறக்கை கட்டி பறக்காமல் அவர்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் செய்யனும்.
ரேஷனுக்குப் போகவும்,பால் கார்டு வாங்கவும் பில கட்டவும் வீட்டைப் பார்த்துக் கொள்ளவும் ,குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரவும் என எக்ஸ்ட்ரா வேலைகளைச் செய்யும் இயந்திரம் மட்டுமல்ல அவர்கள்.நமக்கான வேலைகளை முடிந்தவரை தாங்களே முன்வந்து செயல்படவே முனைகின்றனர்.
வயதில் முதுமையடைந்தாலும் மனதளவில் துடிப்பும் வேகமும் விவேகமும் பக்குவப் பட்ட எண்ணங்களும் உள்ளவர்கள் ,புறக்கணிக்கப் படும் சூழ்நிலை கருதி தங்களை வெளிக்காட்டத் தயங்குகின் றனர்.
வயதானவர்கள் என ஒதுக்காமல் அவர்களின் ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்பளிப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் முதல் கடமை.
பின்னர்தான் மற்ற வசதிகளை செய்து தருதல்.

நேரத்துக்கு சாப்பாடு ,நல்ல மருத்துவ வசதி இன்னும் பல சௌகர்யங்கள் என வயதான பெற்றோருக்கு நாம் எல்லா வசதிகளையும் செய்து தந்திருக்கிறோம்.அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்று சொல்லும் நாம் என்றாவது அவர்களின் உள் மன ஆசைகளை எண்ணங்களை அறிய முற்பட்டிருக்கிறோமா?

தம்பி கோபி எழுதிய அப்பா பற்றிய ஒரு பதிவு செல்வியின் டைரிமிக அழகாக இதை உணர்த்தும்.

புறக்கணிக்கப் படுதல் என்பது உடல் ரீதியானது மட்டுமல்ல மனதளவும்தான்.

உடலால் முதிர்ந்தாலும் மனம் என்றுமே இளமையாகத் தானே இருக்கும்.மனதுக்கும் வயதுண்டோ?
உண்டு எனில் அதன் கூறுகளை எப்படியறிந்து கொள்வது?மனம் என்றுமே மார்க்கண்டேயன் தான்.ஆண்டு கூட கூட பக்குவப்படுமேயன்றி முதிர்ச்சியடைந்து வயதானதாக மாறாது.

வயது என்பது உடலுக்கு மட்டுமே..மனதுக்கு இல்லை.

12 மறுமொழிகள்::

அபி அப்பா said...

குட் நல்ல கொஸ்ட்டின்! என்னை பொருத்தவரை நான் என்றும் மார்க்கண்டேயன் தான். ஏன்னா நான் எப்பவும் கொசுவத்தியிலேயே வாழ்வை கழிப்பதினால் இருக்குமோ?

Thamiz Priyan said...

கண்டிப்பாக வயது என்பது உடலுக்கு மட்டுமே..மனதுக்கு இல்லை.

ஆயில்யன் said...

கொஞ்சம் நினைச்சுப்பார்த்தா :)))

அப்புறம் இன்னும் கொஞ்சம் நினைச்சுபார்த்த :((

இருக்கு !

நிஜமா நல்லவன் said...

மனசுக்கு ஏது வயசு? உடல் மட்டுமே தளர்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மனசோட வயசு அவங்க
அவங்க நினைப்பைப்பொறுத்து இருக்கு.. அய்யோ எனக்கு வயசாகிடுச்சு இப்படித்தான் நான் இருக்கனும் அப்படித்தான் இருக்கனும்ன்னு அவங்களாவே மனசை மாத்திகிட்டா ஒழிய.. மனசுக்கு வயசே கிடையாது ..

கோபிநாத் said...

\\வயது என்பது உடலுக்கு மட்டுமே..மனதுக்கு இல்லை.\\

பதிவின் தலைப்பில் கேள்வியை கேட்டுட்டு கடைசியில நீங்களே பதிலை சொல்லிட்டிங்க..;)

உங்க பதில் தான் என்னோட பதிலும்.

அப்புறம் விளம்பரத்துக்கு மிக்க நன்றிக்கா ;))

dondu(#11168674346665545885) said...

என்னை மாதிரி இளைஞர்களுக்கு இதில் பின்னூட்டமிட ஒன்றும் இல்லை. :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரசிகன் said...

//வயது என்பது உடலுக்கு மட்டுமே..மனதுக்கு இல்லை.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்...:))))))

மங்களூர் சிவா said...

என்னைய மாதிரி ச்சின்ன பையங்களுக்கு இதில் பின்னூட்டமிட எதும் இல்லை

:))

Enjay said...

மனதிற்கு வயது உண்டு கண்மணி, ஒரே விஷயத்தை 10 வயதில் ஒரு மாதிரியும், 15 வயதில் வேறு போலவும், 30, மற்றும் 40 வயதில் வேறு மாதிரியும் நோக்கும் தன்மை மனதின் வயதினால் மட்டுமே ஆனால் அதை நாம் முதிர்ச்சி என்று அடையாளம் கண்டு கொள்கிறோம். மனிதனின் உடல் ஆட்படும் பரிணாம வளர்ச்சிபோல் மனதும் பல பரிணாமங்களை தாண்டிச்செல்கிறது அதன் பயனே நம்மில் ஏற்படும் மாற்றங்கள். அது நல்ல திசையில் பயணிக்கும் போது அதை முதிர்ச்சி என்றும் மாற்று திசையில் பயணிக்கும் போது அயர்ச்சி (புலம்பல்) என்றும் கொள்கிறோம்.

துளசி கோபால் said...

இளசோ இல்லை முதிர்வோ.....மனசு ச்சும்மா கிடக்காம எப்போதும் எதையாவது நினைச்சுக்கிட்டுத் தானே கிடக்கு.

உடல்நலம் நல்லா இருக்கும்போது ஆரோக்கியமான எண்ணங்கள் இருக்குதான்னு பார்க்கணும்.

அதேபோல நலமில்லாதபோது சுயப் பரிதாபத்தை விட்டுட்டு எதாவது நல்லதா நினைக்க முயற்சி செய்யணும்.

கொசுவத்தி எல்லா வயசினருக்கும் இருக்கு:-))))

நானானி said...

இளமை கால நினைவுகளை அசை போடும் முதியவர்களுக்கு, உடல் ஒத்துழைத்தால் அன்று போல் இன்றும் ஓடி விளையாட முடிந்தால் வயது முதுமைக்கேயன்றி மனதுக்கல்ல.

என்னைப் பொறுத்தவரை வயது என் முதுமைக்குத்தான்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)