PAGE LOAD TIME

பிள்ளைக்கறி யா....மார்ஸிபன் கேண்டியா?

படத்துல இருப்பது என்னன்னு பாருங்க.

ஒரே பிரசவத்துல பிறந்த நால்வர்னு அல்லது இரட்டையர் என்று நினைத்தால் தப்பு.இந்த பிள்ளைகள் இனிப்பானவங்க.சாப்பிட்டுப் பாருங்க தெரியும்.


என்ன உவ்வே........வ்வா....இது பிள்ளைக்கறி இல்லீங்க.இந்த வடிவத்துல உள்ள கேண்டீஸ் அதாவது மிட்டாய் மாதிரி தின்பண்டம்.
என்ன ஆச்சரியமா இருக்கா?இது மார்ஸிபன் [Marzipan][உச்சரிப்பு சரியானு தெரிஞ்சவங்க சொல்லுங்க]எனப்படும் ஒருவகை இனிப்பு வகை.

இந்த மார்ஸிபன் என்பது பொடித்த பாதாம் பௌடருடன் சம அளவு பொடித்த சர்க்கரை சேர்த்து நீருடன் பிசைந்தால் கிடைக்கும் பொருள் பசை போன்று இழுவைத் தன்மையுடன் இருக்கும்.இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டவோ அச்சாக மாற்றவோ செய்யக்கூடிய அளவில் இழுவைத் தன்மை கொண்டது.இது தான் மார்ஸிபன் எனப்படும் அடிப்படைப் பொருள்.
இத்துடன் கார்ன் மாவு பசை,குளுக்கோஸ் ,முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு சேர்க்கப் பட்டு வேண்டிய வடிவில் தயாரிக்கப் படுகிறது.

பெரும்பாலும் கேக் வகைகளை அலங்கரிக்கவே பயன்பட்டாலும் இதன் இன்னிப்புச் சுவை மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மையால் தங்கள் கை வண்ணத்துடன் கற்பனையையும் சேர்த்து எப்படி எப்படி செய்திருக்கிறார்கள் பாருங்கள்.
ஜூ்யிஷ் சிம்பல்:

குட்லக் பிஹ்க்:

ஃப்ரூட்ஸ்:

கிறுஸ்துமஸ் சாண்டாகிளாஸ் போன்ற பல வடிவங்கள கூட உண்டாம்.

டிஸ்கி:என்னதான் இனிப்பு வகை என்றாலும் குழந்தை வடிவத்துல இருப்பதைச் சாப்பிட கொஞ்சம் 'தில்' வேணும்.
எங்க வீட்டு ரங்கமணி ஒருமுறை லண்டன் போய் வந்தபோது குட்டி குட்டியா பட்டாணி சைஸ்ல சின்ன சின்ன வடிவங்களில் மிட்டாய் வாங்கி வந்தார்.நான் ஜெல்லி மிட்டாய் னு நெனச்சேன்.அதுதான் இதுவோ....?

10 மறுமொழிகள்::

Anonymous said...

!!!??

Thamiz Priyan said...

டீச்சர், என்னோட முதல் கமெண்ட் எங்க?
/// ஓ.... இதெல்லாம் எப்படி தான் மனது வந்து சாப்பிடுகிறார்களோ? ... :(
உயிரற்ற மற்றவை நன்றாக உள்ளது... சாப்பிட அல்ல! பார்க்க! :) ///

துளசி கோபால் said...

Play doughவை விட இது மலிவுன்றதாலே இதுலே பலவித பழங்களைச் செஞ்சு விளையாடிக்கிட்டு இருந்தோம் நானும் மகளும் 20 வருசம் முன்பு:-)))

எங்க லைப்ரரியின் 50வது ஆண்டு விழாவுக்கு மார்ஸிபான் லே செஞ்ச புத்தகங்கள், (அசல்புத்தகத்தில் உள்ளது போலவே படமெல்லாம் போட்டு எழுதியும் இருந்துச்சு) Bookworms,ன்னு செஞ்சு கொடுத்தாங்க கேக் டெகரேஷனுக்கு.

அதை வெளியே போட மனசில்லாமல் நம்மூட்டுலே ட்ரேயில் அலங்கரிச்சு வச்சுருக்கேன்:-)


இந்தப் 'புள்ளைங்க' ஆனாலும் சூப்பரா இருக்கு.

நிஜமா நல்லவன் said...

பதிவு நல்லா இருக்கு ஆனா சாப்பிட உவ்வே........

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
டீச்சர், என்னோட முதல் கமெண்ட் எங்க?///


அதிக பட்சம் மீ த பர்ஸ்ட் அப்படின்னு கமெண்ட் போட்டு இருப்பீங்க. அதுவும் மை பிரண்ட் இப்ப எல்லாம் அதிகம் வராத தால. இதுக்கு போய் கமெண்ட் எங்கன்னு கேள்வி கேட்டுகிட்டு சின்ன புள்ள தனமா இல்ல :))

Unknown said...

பிள்ளைகளைத் தவிர மற்றவை நல்லா இருக்கு.

வர வர கேண்டி கம்பெனி காரனுங்களுக்கு மூளை பிசகிடுச்சோ என்னவோ....கிரியேடிவிட்டி என்ற பெயரில், அபத்தங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாக்க கண் கொள்ளா அழகு அந்த பிள்ளைங்க.. ஆனா கேண்டி ன்னதும்
பயந்துட்டேன்..

கோபிநாத் said...

என்ன கொடுமை இதெல்லாம்...;(

HK Arun said...

குழந்தைகளை இணிப்புப் பண்டங்களாக வடிவமைத்திருப்பது ஒரு தரங்கெட்ட ஈனச்செயலாகவே எனக்குப் படுகின்றது.

காட்டுமிராண்டித்தனமான (வர்த்தகச்) சிந்தனை.

ரசிகன் said...

அடப்பாவிங்களா? குழந்தை வடிவத்துல கடிச்சி சாப்பிட எப்டி மனசு வருது..
ச்சீ..ச்சீ,... கேவலமா இருக்கு மனுஷங்க ரசனை:(

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)