PAGE LOAD TIME

சித்திரை முதல் நாள்...............

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதும்பாங்க.
நம்ம தொலைக்காட்சிகள் நிலையும் அப்படித்தான் ஆகிப் போச்சு.
தை முதல் நாள் பொங்கல் அன்றே தமிழ்ப் புத்தாண்டாகவும் அறிவிக்கப் பட்டது.
அதன் சாதக பாதகமெல்லாம் என்ன அதனால் என்ன மாற்றங்கள் வரும் வராது என்றெல்லாம் வாத பிரதி வாத பதிவுகள் போடப் பட்டன.
அப்போதே எனக்கிருந்த கேள்வி இது எப்போதிருந்து நடைமுறைப் படுத்தப்படும் இந்த ஆண்டிலிருந்தேவா அல்லது வரும் ஆண்டுகளிலா?
சரி ஏப்ரல் 13 என்ன நடக்கிறது பார்ப்போம் னு பார்த்தால் பத்து நாளுக்கு முன்பிருந்தே சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு எல்லாத் தொலைக்காட்சிகளிலும் தொடங்கி விட்டது.
இதோ இன்று எல்லாத் தொலைக்காட்சியிலும் சிறப்பு நிகழ்ச்சி சிறப்புத் திரைப்படம் னு ஓடிக்கிட்டிருக்கு.
அப்ப அரசு அறிவிப்பு செய்ததிற்கும் அதற்கு சாதகமாக கட்சிகள் கூட்டம் போட்டு நன்றி தெரிவித்ததற்கும் என்ன அர்த்தம்?
சன் தொலைக்காட்சி மிகச் சாமர்த்தியமாக அதன் 15 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டமாகவும்,கே.டிவி சன்நெட்வொர்க் பிறந்தநாள் என்றும் அறிவிப்போடு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க,

ஜெயா வழக்கம் போல அரசை திட்டியபடி ,அரசு ஆணையை மீறி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது என செய்தி வாசித்தபடி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைக் காட்ட,

கலைஞர்,ராஜ் ,பொதிகை போன்றவை தமிழ் வருடப் பிறப்புன்னு சொல்லாமல்[எதுக்கு வம்பு]
சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என முழங்கிக் கொண்டிருக்கின்றன.

விசேட நாட்களில் விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் மூலம் வரும் வருவாயை இழக்க யாருக்கும் மனமில்லை.

எனவேதான் தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாற்றப் பட்டாலும் ஏப்ரல் 13 அல்லது 14 தேதிகளில் வரும் விளம்பரத்தை இழக்க விரும்பவில்லை.
தொலைக் காட்சிகள் மட்டுமன்றி வியாபார நிறுவனங்களும் வழக்கமான தள்ளுபடி மற்றும் சிறப்பு விற்பனையை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மக்களும் எப்போதும் போல விருந்து கேளிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடவே செய்கின்றனர்.கோயில்களிலும் வழக்கமான சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பின் எதற்கு இந்த மாற்றம்?

வியாபாரத்தையோ,விளம்பரத்தையோ இழக்க விரும்பாத வர்த்தக நிறுவனங்கள்,வருடத்தில் கூடுதலாகக் கிடைக்கும் இன்னொரு பண்டிகை விருந்து விடமுடியாத பொதுமக்கள் வழமை மாறாமல் கடை பிடித்துக் கொண்டிருக்க,பின் யாருக்காக இந்த புத்தாண்டு மாற்றம்?

அது போகட்டும் காலண்டர்,பஞ்சாங்கம் எழுதுவோர் சர்வஜித்து ஆண்டுக்குப் பிறகு இன்று சர்வதாரி ஆண்டு பிறந்ததாக கூறுகின்றனர்.அடுத்த வருடம் பிறக்கக் கூடிய ஆண்டுக்கு எப்படி காலண்டர் பஞ்சாங்கம் எழுதுவர்?

அரசாணைப்படி வருமாண்டு தை மாதப் பிறப்பான பொங்கல் அன்றே தமிழ் வருடப் பிறப்பும் எனக் கொண்டால் பன்னிரெண்டுக்கு பதிலாக பத்தே மாதங்களில் அடுத்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கப் போகிறதா?

இல்லை அடுத்து வரக்கூடிய எந்த அரசும் இதையே தொடர்ந்து கடை பிடிக்குமா அல்லது கண்ணகி சிலை,எம்ஜியார் நினைவு மண்டப வரவேற்பு வளைவு பூம்புகார் கலைக்கூடம் போல
மாறும் அரசுகளுக்கிடையே சிக்கி தத்தளிக்குமா?

பெயர்தான் குறிப்பிடப்படவில்லையே தவிர புது வருடத்திற்கான எல்லா கொண்டாட்டங்களையும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்கின்றனர்.
அரசின் சார்பு தொலைக்காட்சியே சித்திரை முதல் நாள் என்று நிகழ்ச்சிகளை வழங்குகிறது..

இனி வைகாசி முதல் நாள்.....ஆனி முதல் நாள் என மாதத்தின் எல்லா முதல் நாட்களுக்கும் சிறப்பு கிடைக்குமா?இல்லையெனில் சித்திரை முதல் நாளுக்கு மட்டுமென்ன சிறப்பு?...எனக் கேட்கத் தோன்றுகிறது.
இனி
சித்திரையில் என்ன வரும்
அக்கினியின் வெம்மை வரும்
அசந்து போனால் அம்மை வரும்
வருடப் பிறப்பு என்று வரும்?

சித்திரை முதல்நாள் வாழ்த்துக்கள்!!!!!!!

8 மறுமொழிகள்::

Anonymous said...

அற்புதமான பதிவு நடப்பது நடக்கட்டும் கிழவி தூக்கி மனையில் வை என்று செய்தனர். இப்போது பூனை வெளியில் வந்துவிட்டது

Thamiz Priyan said...

தமிழ் புத்தாண்டை மாற்றிய விவகாரத்தில் சில விஷயங்கள் மட்டுமே எனக்கு தெரிகின்றன. தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்தைக் கொண்டு கொண்டாடுவோர் இன்னும் சில வருடங்களுக்கு அதை விட முடியாது பின்பற்றுவார்கள். அந்த விடுமுறையை எடுத்து விட்டால் படிப்படியாக கொண்டாட்டம் குறைந்து விடும். கலைஞர் செய்ததில் உள்ள தவறு இந்த விஷயத்தை அரசு விவகாரமாக எடுத்துக் கொண்டது. இது சம்பந்தமாக அனைத்து நாட்டு தமிழறிஞர்களிடம் விவாதித்து இருக்க வேண்டும்.... :( . கடைசியாக தமிழ் புத்தாண்டுக்கு வடமொழி பெயர்கள் 60 எப்படி வர முடியும் என்ற கேள்வியும் உள்ளது... :)

Thamiz Priyan said...

'அம்மா'வைப் பொறுத்த வரை இதை ஜோதிடர்களில் கருத்துப் படியே நடந்து கொள்வார். ஜோதிடர்களும் இப்போது ‘அம்மா'வுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக இதை மாற்ற வேண்டும் என்பது போல் தான் சொல்வார்கள்.... :)

Thamiz Priyan said...

மீடியாக்கள் வழக்கம் போல் வியாபாரத்தை மடடுமே கணக்கில் கொண்டு இதன் மூலம் வருமானத்தைப் பார்க்கும் :)

ஆயில்யன் said...

நல்ல டெம்ப்ளட் :)

சின்னப் பையன் said...

நல்லா சொன்னீங்க... கண்டிப்பா தேர்தலுக்குப் பிறகு புது வருடம் மீண்டும் 'சித்திரை'க்கு வந்துவிடும்...

Thamiz Priyan said...

///ஆயில்யன். said...

நல்ல டெம்ப்ளட் :) ///
ஆயில்யன் உங்களுக்கே இது நல்லா இருக்கா சார். மஞ்சளா ஆயில்யன் பேர் கூட எனக்கு தெரிய மாட்டுது. பேக்ரெளண்ட்டை வேற கலர் மாத்துங்க டீச்சர்..ப்ளீஸ்...
டீச்சர் ஏன் மீண்டும் மீண்டும்
///test
from கண்மணி பக்கம் by கண்மணி///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

கருணாநிதி கொண்டு வரும் முன்னேற்ற திட்டங்களுக்கு அவரை எவ்வளவு பாராட்ட தோன்றுகிறதோ... அதே அளவுக்கு அவரை திட்ட தோன்றுகிறது, இது போன்ற முட்டாள்தனங்களை பார்க்கும்போது... பழம் தமிழர் எதை கொண்டாடினால் என்ன... தமிழின் பெயரால் இரண்டு விழாக்கள் கொண்டாடப்படுகிறன ... இப்போது இவர் ஒன்றே ஒன்று போதும் என கூறுகிறார்... எதிர்த்து பேசினால் பார்ப்பன்/தமிழ் துரோகி என்பார்..

தை 1- தமிழர் திருநாளாகவும் சித்திரை 1- தமிழ் திருநாளாகவும் இருக்கட்டும்... கொண்டாட்டங்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே.. சட்டம் போட்டு கொண்டாட வைக்க முடியாது...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)