PAGE LOAD TIME

யாரடி.நீ...மோகினி

ரொம்ப நாளைக்குப் பிறகு மனம் விட்டு வாய்விட்டு சிரித்து ரசித்த படம்.ஆனாலும் அப்பப்ப லாஜிக் வந்து தலையில குட்டி இப்படி அபத்தமான ஜோக்கு சீனுக்கு சிரிக்கிறாயா?டூ மச்சா தெரியலை னு கேட்டாலும் ......

உண்மையில் இரசித்துப் பார்த்தேன்.ஊய்...ஊய்..னு சீழ்க்கை ஒலியும் திரையில் வரும் சீனுக்கு பொருத்தமா கமெண்டும் தந்த தியேட்டர் மகா ஜனங்களின் ரசனை எரிச்சலையும் சமயத்தில் குபீர் சிரிப்பையும் தந்தது.
தனுஷ் னா கண்ணை இறுக்க மூடிக்கும் எனக்கே இந்த படத்தில் மட்டும் தனுஷ் பிடித்தது.
நிறைய இடங்களில் மாமனாரின் சாயல் தெரிந்தது கூட [தோற்றத்திலும் காமெடியிலும்] காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் SSI போன்ற ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன் இன்னம் கொஞ்சம் ஸ்மார்ட்டா டிரஸ் பண்ணலாம்.

தொள தொள னு கட்டமும் கோடும் போட்ட சட்டையும் முகத்துக்குப் பொருந்தாத நீண்ட கோரை முடியும்....சரி ...கதைக்கு வருவோம்.

அன்பை மறைத்து கண்டிப்பு காட்டும் அப்பா இரகுவரன்.அவரின் இழப்பு இப்போதுதான் புரிகிறது.
நெடிய மலிந்த கூன் விழுந்த அந்த உடம்பில் பேசுவது கண்களும் உதடுகளும்.அவரின் ஒவ்வொரு வசனமும் அவரின் உண்மையான நிலைமையைக் கூறுவது போலவே இருந்தது.
இதுதான் கடைசிப் படம்னு தெரிஞ்சிகிட்டாரோ.
பொருந்தாத மேட்ச் னு தெரிந்தாலும் விடாமுயற்சியாய் நயண்தாராவை துரத்துவதிலிருந்து முழு நீள காமெடி கலந்த நடிப்பு நன்றாகவே வருகிறது தனுஷுக்கு.
இடைவேளைக்குப் பிறகு சோகமும் காதலியே நண்பனுடைய மணப்பெண்ணாய் இருப்பதால் செண்டிமெண்ட்டும் போட்டு தாக்குவாங்கனு பார்த்தா...காமெடி வேற ஒரு டிராக்கில் போகிறது.

திறந்த வெளி பாத்ரூம்..டாய்லெட்..அதிகாலை அருகம்புல் ஜூஸும் சுகமான டெலிவரிக்கு பத்து நிமிட நடை என்று ஒட்டு மொத்த குடும்பமும் [குடும்பம்னா ஏதோ 7,8 பேர் இல்லை மொத்தம் 40 பேராம்.]சத்தத்தோடு[!!!!!;)]நடக்க தனுஷ் முழிக்க 'வாயு பிரியுது' னு சொல்லும் இரண்டாந்தர நகைச்சுவையென்றாலும் நாட் பேட்.

துணிக்கடைக்கு போய் மணிகணக்கில் காத்திருக்கையில் சிறுசுகளுக்கு 'கால் அலம்பி விடுவது'என தனுஷ் நல்லாவே செய்திருக்கிறார்.
கோமள வல்லியான நயண்தாரா சென்னையில் கீர்த்தியாம்.
ஆனந்தவல்லியான அவர் தங்கை 'பூஜா' வாம்.
மடியான பாட்டியாக வரும் சுகுமாரி,கம்பீரமான ஆச்சார தாத்தா வாக டைரக்டர் விஸ்வநாத் .
தனுஷின் காதலி நயண்தாரா என்பது எல்லோருக்கும் தெரிந்து கல்யாணம் நின்று போய் பெண் கேட்டு கிடைக்கலைன்னதும்
'பொண்ணைத்தான் குடுக்கலை..பாட்டியையாவது குடுங்க'என்று பாட்டியை சென்னைக்கு அழைச்சிட்டு வந்திடுவார்.

பிறகு 6 மாசம் கழித்து நயண்தாராவும் மொத்த குடும்பமும் தனுஷ் வீட்டுக்கே வந்திடறாங்க.
விஸ்வநாத் தாத்தா மட்டும் மனம் மாற நாளாகும்னு தன் நண்பன் வீட்டுக்குப் போயிடுறார்.சுபம்.

1.இன்னொரு பையனோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டதை சொன்ன பிறகும் நயனை பிடிவாதமாக காதலிப்பது
2.கூடவே இருக்கும் நண்பன் சீனுவுக்கு தனுஷும் முறைப்பெண் நயனும் ஒரே கம்பெனிய்ல் வேலை செய்வது தெரியாதாம்.
3.40 பேர் கொண்ட குடும்பத்தில் அதுவும் ஆச்சாரமான குடும்பத்தில் ஒரு பாத்ரூம்,டாய்லெட் கூட இல்லையாம்.திறந்தவெளியில் போகனுமாம்.கல்லைக் கொண்டு சுத்தப் படுத்திக்கனுமாம்.கர்மம்டா சாமீ

4.தன் தாத்தாவுக்கும் குடும்பத்துக்கும் பிடிக்காது என்பதால் தன் தங்கை தனுஷைக் காதலிப்பதை தடுக்கும் நயன் அதெப்படி கரெக்டா கல்யாணத்துக்கு முதல் இரவில் தனுஷை தேடி வந்து இப்ப காதல் வந்துடுச்சி கட்டிக்கோன்னு சொல்றார்.

5.சாகக் கிடக்கும் பாட்டியைச் சுற்றி எல்லோரும் அழ,டாக்டர் கை விரிக்க,எல்லோரையும் போகச் சொல்லிட்டு தனுஷ் நாலு வார்த்தை சின்னப் புள்ளத்தனமாப் பேச பாட்டி எழுந்து உட்கார்ந்துக்கறா.ஆஹா நல்லாருக்கே இந்த வைத்தியம்.

இப்படி இடிக்கும் லாஜிக் நிறையவே இருக்கு.அதையும் மீறி காமெடி படத்தை தொய்வில்லாமல் நகர்த்துவதால் மோகினி மயக்கவே செய்கிறாள்.மோகினி மட்டுமல்ல அழகாக இளைத்துப் போன நயண்தாராவும்தான்.

11 மறுமொழிகள்::

Thamiz Priyan said...

முதல் திரை விமர்சனம் நல்லா இருக்கு :)

கோபிநாத் said...

\\அழகாக இளைத்துப் போன நயண்தாராவும்தான்\\

நான் இன்னும் படம் பார்க்கவில்லை..;(

இராம்/Raam said...

Notepad'லே டைப் பண்ணி Blogger editor'லே paste பண்ணுவீங்களா???

alignment சரி பண்ணுங்க.....

கண்மணி/kanmani said...

என்ன சொல்றீங்க ராம்?நேரிடை டைப்பிங் தான் நாண்தான் சைடு பார் விட்த் குறைத்தேன்.பாண்ட் பிராப்ளமா?

இராம்/Raam said...

//என்ன சொல்றீங்க ராம்?நேரிடை டைப்பிங் தான் நாண்தான் சைடு பார் விட்த் குறைத்தேன்.பாண்ட் பிராப்ளமா?//

இது டெம்பிளேட் பிராப்ளம்'னு நினைக்கிறேன்...... Left(content)bar'க்கும் Right Bar'க்கும் நிறைய ஸ்பேஸ் இருக்கிறதுனாலே அப்பிடி தெரியுது....

அப்புறம் word-wrap வேற இருக்கு.. அதுதான் அப்பிடி தெரியுது.... :)

Thamiz Priyan said...

இந்த டெம்ப்ளேட் பேக்ரெளண்டில் எழுத்துரு எல்லாம் சரியா தெரியுது டீச்சர் :)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இங்கேயும் ஒரு விமர்சனம் இருக்குது. வாசியுங்கோ.

கண்மணி, ராம் என்ன சொல்றார் எண்டா உங்கட பந்திகளினுள் குட்டிக்குட்டி பந்திகள் உள்ளன. உதாரணமாக, முதலாவது நீங்கள் எழுதியது. இரண்டாவது அதன் சரியான வடிவம்.

அன்பை மறைத்து கண்டிப்பு காட்டும் அப்பா இரகுவரன்.அவரின் இழப்பு இப்போதுதான் புரிகிறது.
நெடிய மலிந்த கூன் விழுந்த அந்த உடம்பில் பேசுவது கண்களும் உதடுகளும்.அவரின் ஒவ்வொரு வசனமும் அவரின் உண்மையான நிலைமையைக் கூறுவது போலவே இருந்தது.
இதுதான் கடைசிப் படம்னு தெரிஞ்சிகிட்டாரோ.
பொருந்தாத மேட்ச் னு தெரிந்தாலும் விடாமுயற்சியாய் நயண்தாராவை துரத்துவதிலிருந்து முழு நீள காமெடி கலந்த நடிப்பு நன்றாகவே வருகிறது தனுஷுக்கு.
இடைவேளைக்குப் பிறகு சோகமும் காதலியே நண்பனுடைய மணப்பெண்ணாய் இருப்பதால் செண்டிமெண்ட்டும் போட்டு தாக்குவாங்கனு பார்த்தா...காமெடி வேற ஒரு டிராக்கில் போகிறது.


அன்பை மறைத்து கண்டிப்பு காட்டும் அப்பா இரகுவரன்.அவரின் இழப்பு இப்போதுதான் புரிகிறது. நெடிய மலிந்த கூன் விழுந்த அந்த உடம்பில் பேசுவது கண்களும் உதடுகளும்.அவரின் ஒவ்வொரு வசனமும் அவரின் உண்மையான நிலைமையைக் கூறுவது போலவே இருந்தது.இதுதான் கடைசிப் படம்னு தெரிஞ்சிகிட்டாரோ. பொருந்தாத மேட்ச் னு தெரிந்தாலும் விடாமுயற்சியாய் நயண்தாராவை துரத்துவதிலிருந்து முழு நீள காமெடி கலந்த நடிப்பு நன்றாகவே வருகிறது தனுஷுக்கு. இடைவேளைக்குப் பிறகு சோகமும் காதலியே நண்பனுடைய மணப்பெண்ணாய் இருப்பதால் செண்டிமெண்ட்டும் போட்டு தாக்குவாங்கனு பார்த்தா...காமெடி வேற ஒரு டிராக்கில் போகிறது.


ஓகேவா :)

கண்மணி/kanmani said...

ஓஹோ இதுதான் மேட்டரா.நான் தான் அப்படி பிரித்து பிரித்து லைன் எழுதினேன்.கட்டுரை போல பெரிய பாரா வாக இருப்பது வேண்டாமென்று.
நன்றி ராம் ,கௌபாய் மது

தமிழ்பிரியன் மாறும் மாறும் மாறிக் கொண்டே இருக்கும்;):))

Thamiz Priyan said...

///கண்மணி said...

தமிழ்பிரியன் மாறும் மாறும் மாறிக் கொண்டே இருக்கும்;):))///
மாற்றம் ஒன்று தான் மாற்றமே இல்லாமல் இருப்பது.... :)

நிஜமா நல்லவன் said...

கடைசி வரிய படிச்சிட்டு படம் பார்க்காம இருந்தா கடவுளுக்கே பொறுக்காது:))

Thamiz Priyan said...

///கோபிநாத் said...

\\அழகாக இளைத்துப் போன நயண்தாராவும்தான்\\

நான் இன்னும் படம் பார்க்கவில்லை..;(


நிஜமா நல்லவன் said...

கடைசி வரிய படிச்சிட்டு படம் பார்க்காம இருந்தா கடவுளுக்கே பொறுக்காது:))///
கூட்டாளிகளுக்கு என்ன ஒரு ஆர்வம். ;)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)