PAGE LOAD TIME

திருக்குறள்....ஒரு புள்ளி விபரம்

உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
பலர் முழுமையாகவும் சிலர் பகுதியளவும் குறள்களை மனனம் செய்து வைத்திருப்பர்.
ஆனால் திருக்குறள் மொத்தத்திலும் எத்தனை வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெரியுமா?
திரும்பத் திரும்ப வருபவைகளை ஒன்றாகக் கருதி நோக்கும் போது,

திருக்குறள் முழுமையிலும் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை =42,956

இதில் புள்ளி இல்லாத எழுத்துக்கள் [உயிர்/உயிர்மெய் எழுத்துக்கள்]=29,156
இதில் புள்ளி உள்ள எழுத்துக்கள்[மெய் எழுத்துக்கள்]=13,749
ஆய்த எழுத்து =51 [முறை]

ஆமை புகுந்த வீடும் அமீனா புகந்த வீடும் னு ஒரு சொல் வழக்கு இருக்கு.ஒரு ஆமை புகுந்தாலே வீட்டுக்கு ஆகாதாம்[ஆமை என்ன பண்ணுச்சி?]ஆனால்
திருக்குறளில் மொத்தம் 19 ஆமைகள் இருக்கு.அதுனால தான் உலகப் பொதுமறையாகக் கருதப் படுகிறதோ;)
உடமைகள் மொத்தம் 10 இருக்கு.[அதிகாரங்கள்]


இது எல்லாம் சரியான்னு கேக்காதீங்க .ஆணி புடுங்காத நேரத்துல எண்ணிப் பார்த்துக்கங்க.

17 மறுமொழிகள்::

கௌபாய்மது said...

இப்பிடி பிச்சு பிச்சு ஆராய்ந்திருக்கானுகள். எனக்கு சில சந்தேகங்கள் கண்மணி,

1. புள்ளியில்லா எழுத்துக்களுக்குள் உயிர் எழுத்துக்கள் வராதா?

2. அப்படி நீங்க சேர்த்தாலும் 'ஈ' புள்ளியில்லா எழுத்தா அல்லது புள்ளியுள்ள எழுத்தா?

3. இப்பிடி புள்ளியுள்ள புள்ளியில்லா என்று குழப்புவதை விட்டு, உயிர், மெய், உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துக்கள் என்று கூறினால் ஏதும் குறைஞ்சு போகுமா?

தமிழ் பிரியன் said...

தகவல்களுக்கு நன்றி டீச்சர்!

தமிழ் பிரியன் said...

இன்று மதியம் டீச்சரின் பதிவுகளில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்பட்டது போல் உள்ளது. மண்டை காய்ந்து போய் விட்டது டீச்சர்..... :(

நிஜமா நல்லவன் said...

தே.மு.தி.க ல சேர்ந்து விட்டீர்களா? ஒரே புள்ளி விவரமாக இருக்கிறதே?

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
இன்று மதியம் டீச்சரின் பதிவுகளில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்பட்டது போல் உள்ளது. மண்டை காய்ந்து போய் விட்டது டீச்சர்..... :(///

வழிமொழிகிறேன்

கண்மணி said...

வந்துடுவீங்களே குத்தம் கண்டுபிடிக்க
கௌபாய் மது உயிர்/உயிர்மெய் ரெண்டும் சேர்த்துத்தான்29,156
இதுல ஈஈஈஈஈஈஈ...ஈஈஈஈஈஈஈஈஈஈ புள்ளி உள்ளதானு ஒரு சந்தேகம்?புள்ளி மண்டையில [மேல] வரனும்.ஈஈஈஈஈஈ க்கு பக்கவாட்டுல இல்ல இருக்கு.

கண்மணி said...

அடைப்புக்குறிக்குள் போட்டது கண்ணுக்கு தெரியலையா?

கண்மணி said...

தமிழ்பிரியன் சோதனை இன்னும் பாதியிலேயே இருக்கு எனக்குன்னா மண்டை காஞ்சது?

தமிழ் பிரியன் said...
This comment has been removed by the author.
கௌபாய்மது said...

கண்மணி ஏன் கண்மணி சிவக்குற அளவுக்கு கோவப்படுறீங்க :-)

நா ஒண்ணும் குத்தம் கண்டுபிடிக்கலீப்பா. சும்மா கலாய்ப்போம்னுதான்.

பதிவையும் என்னோட பின்னூட்டத்தையும் பாத்து எனக்கு கிறுக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்கப் போறாங்க. முதல்ல உயிரமெய்ன்னு மட்டும்தான இருந்திச்சு. அப்புறமாத்தான உயிர்/உயிர்மெய்ன்னு வந்திச்சு.

பாருங்க "அடைப்புக்குறிக்குள் போட்டது கண்ணுக்கு தெரியலையா?"ன்னு கேக்குறீங்க. :-(

சரி கண்மணி, இதுக்கு வேறயா கோவிச்சுக் கொள்ளாதீங்க.

(உதிரி சந்தேகம்:- 19 ஆமை இருக்குறதுக்கும் உலகப் பொதுமறையா கருதப்படுகிறதோ என்ற வியப்புக்கும் என்னங்க சம்மந்தம்?)

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...

தமிழ்பிரியன் சோதனை இன்னும் பாதியிலேயே இருக்கு எனக்குன்னா மண்டை காஞ்சது?///
என்ன பிரச்சினைனு சொன்ன உதவ முடியமானு பார்க்கிறோமே?

தென்றல் said...

/ஆமை புகுந்த வீடும் அமீனா புகந்த வீடும் னு ஒரு சொல் வழக்கு இருக்கு.ஒரு ஆமை புகுந்தாலே வீட்டுக்கு ஆகாதாம்[ஆமை என்ன பண்ணுச்சி?]/

என் நண்பன் இப்படிதான் ...'ஆமை என்ன பண்ணுச்சி?' னு வீட்டில ஆமை வளர்த்தான்... நல்லாதான் இருக்காங்க..

பாருங்க...வந்த விசயத்தை விட்டுட்டு....
தகவலுக்கு நன்றிங்க!!

கண்மணி said...

தென்றல் ஆமை புகுந்த வீடு மூட நம்பிக்கையோ இல்லையோ .....ஆனாலும் மனுஷங்களுக்கு பயம் போகலையெ....

கண்மணி said...

கௌபாய்மது குழந்தை என்பது வயதில் சிறியதாகையால் பிறந்தது என்றும் இறந்தவராயினும் மூத்தவர் என்பதால் உதித்தார் என்றும் கொள்ளலாம்.
வயது,பணம்,செல்வாக்கு,பதவி போன்றவையே திணைகளை நிர்ணயிக்கும் காரணிகளாகிவிட்டது.

போகட்டும் தமிழின் சிறப்புக்கு இன்னுமொரு சேதி உங்களுக்குச் சொல்கிறேன்.
தமிழில் 'அர்த்தாபத்திய நியாயம்'என்று ஒன்று உண்டு.
ஒரு பொருளை விளக்கும் போதே அதன் எதிர்மறை பொருளையும் மறைமுகமாகக் கூறும் நயம்.

உதாரணமாக,
நான் இப்போதெல்லாம் புலால் உண்பதில்லையென்றால் என்ன பொருள்.இதற்கு முன்பு உண்டுகொண்டிருந்தேன் என்பது.
கம்பராமாயணத்தில் அகத்திய முனிவரின் முன் ஸ்ரீராமன் நின்றதை கம்பர் இப்படிச் சொல்வாராம்.
'நின்றவன் முன்னே நெடிதுயர்ந்து நின்றான்'.எதிரில் இருக்கும் அகத்தியர் உருவில் குள்ளமானவர் எனக் கூறாமல் ராமனின் உயரத்தைக் கூறுதல்..

Thamizhan said...

கண்மணியாரே
மகிழ்ச்சி.
திருக்குறள் போட்டிகள் வையுங்களேன்.
மலர் எத்துனை முறை வந்துள்ளது
மற்ற செய்திகள் பற்றி.
கவிஞர் வைரமுத்து இரவு பகலாக திருவள்ளுவர் எங்காவது இலக்கணப் பிழை செய்திருக்கிறாரா என்று
காய்,கனி,தே மா,திணை எல்லாம் பிரித்துப் பார்த்தராம்.ஒரு தவறு கூடக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

கௌபாய்மது said...

கண்மணி,

//
கௌபாய்மது குழந்தை என்பது வயதில் சிறியதாகையால் பிறந்தது என்றும் இறந்தவராயினும் மூத்தவர் என்பதால் உதித்தார் என்றும் கொள்ளலாம்.
வயது,பணம்,செல்வாக்கு,பதவி போன்றவையே திணைகளை நிர்ணயிக்கும் காரணிகளாகிவிட்டது...
//

உங்கள் பிறப்பு ஒன்றுதான்.. இடுகையில் போடவேண்டிய பின்னூட்டத்தை இங்கே போட்டுவிட்டீர்கள். வாசிப்பவர்கள் குழம்பப் போகிறார்கள்.

தமிழைப்பற்றி நிறைய எழுதவேணும் எனறு நினைத்தாலும் நேரம் கிடைக்குதில்ல கண்மணி.

நீங்க இப்பிடி ஏதாவது எழுதுங்க. பின்னூட்டத்திலேயே நாமும் எழுதுவோம்.

அது சரி ஏன் உங்கள எல்லோரும் டீச்சர் என்கிறாங்க. :-)

19 ஆமைக்கும் உலகப்பொதுமறையானதுக்கும் என்ன சம்மந்தம்னு இன்னும் சொல்லல டீச்சர்.

கோபிநாத் said...

\\அது சரி ஏன் உங்கள எல்லோரும் டீச்சர் என்கிறாங்க. :-)\\

அக்கா உண்மையிலேயே டீச்சர் தான் ;))

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)