PAGE LOAD TIME

பிறப்பு ஒன்றுதான்...பெயரென்னவோ வேறு வேறு..பொதுவாக ஒரு குழந்தை பிறந்தால் அவள் ஆண்மகவை/பெண்மகவை ஈன்றாள் அல்லது பெற்றெடுத்தாள் னு சொல்லுவோம்.
பசுவுக்கும் கன்றை ஈன்றது என்றே சொல்வோம்.


ஈணுதல் என்பது ஒரே ஒரு குழந்தை பெறும்போது சொல்லப் படும் வழக்கு.

நாய்,பூனை,பன்றி இவைகளைச் சொல்லும் போது குட்டிகள் போட்டது என்கிறோம்.ஒன்றுக்கு மேற்பட்டவை பிறக்கும் போது குட்டி போட்டது என்பதாகச் சொல்லப் படும்


அப்ப சில பெண்களுக்கு இரட்டை/மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தால் அந்தப் பெண்ணும் குட்டி போட்டவளா எனக் கேட்கக் கூடாது.
நான் சொல்வது இயற்கை நியதி.சில நேரங்களில் முரண்பாடுகள் இருக்கத்தானே செய்கிறது.


அதுபோல மகான்கள்,முனிவர்கள் பற்றிச் சொல்லும் போது அவதரித்தார்கள் என்று சொல்வது வழக்கு.ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம் இப்படி...

உயிரும் பிறப்பும் ஒன்றாக இருந்தாலும் அவை எப்படி வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன பாருங்கள்.

16 மறுமொழிகள்::

Thamiz Priyan said...

படங்கல் சூப்பரா இருக்கு டீச்சர்... :)

சென்ஷி said...

என்ன கொடும டீச்சர் இது :(

Thamiz Priyan said...

///தமிழ் பிரியன் said...

படங்கல் சூப்பரா இருக்கு டீச்சர்... :)///
டீச்சர், அது படங்கள்... வருங்கால சமுதாயம் தமிழ் பிரியன் ‘ல்' க்கு பதிலாக 'ள்' போட்டான் என்று சொல்லக் கூடாது பாருங்க... அதற்காக திருத்தம்...

சென்ஷி said...

//தமிழ் பிரியன் said...
///தமிழ் பிரியன் said...

படங்கல் சூப்பரா இருக்கு டீச்சர்... :)///
டீச்சர், அது படங்கள்... வருங்கால சமுதாயம் தமிழ் பிரியன் ‘ல்' க்கு பதிலாக 'ள்' போட்டான் என்று சொல்லக் கூடாது பாருங்க... அதற்காக திருத்தம்...
//

ம்ம் சந்தோஷம்..

வாழ்க்கை வரலாறு, சுயசரிதை ஏதும் எழுத வாய்ப்பு கிடைச்சா தமிழ் பிரியனுக்கு நடுவுல "ப்" விட்டதையும் சேர்த்து எழுதுங்க

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கண்மணி,

பசு உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டதால் அங்கு ஈணுதல் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

பொதுவாக அஃறினையை குறிக்கும்போது போடுதல் என பாவிப்பார்கள்.

ஒரு முறை காளமேகப்புலவர் ஒர் அன்னசத்திரத்தில் பசியாறிக்கொண்டிருந்தபோது எதிரே ஒரு மனிதன் முன்குடுமியுடன் சோற்றுப் பருக்கைகள் எல்லா இடமும் தெறிக்கச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். சோற்றுப்பருக்கைகள் காளமேகப்புலவரின் சாப்பாட்டிலும் வந்து விழ கோபமடைந்த புலவர் இவ்வாறு எடுத்துவிடுகிறார்,

"முன்குடுமிச் சோழியா,
சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா,
கோட்டானே குரங்கே,
போட்டாளே உனையொருத்தி வேலையற்றுப் போய்.."

இங்கு போட்டாளே என்பது அவனை அஃறினைப் பொருளாகவோ அல்லது தாழ்த்தப்பட்ட நிலைக்கோ கொண்டு செல்லவதாக உணர்கிறேன்.

(சின்ன வயசுல படிச்சது. ஞாபகத்துக்குக் கொண்டுவர கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன். நன்றி கண்மணி.)

நிஜமா நல்லவன் said...

உள்ளேன் டீச்சர்.

நிஜமா நல்லவன் said...

///சென்ஷி said...
வாழ்க்கை வரலாறு, சுயசரிதை ஏதும் எழுத வாய்ப்பு கிடைச்சா தமிழ் பிரியனுக்கு நடுவுல "ப்" விட்டதையும் சேர்த்து எழுதுங்க//நானும் "ப்" சேர்க்க சொன்னேன் ஒருமுறை. அவருக்கு தமிழை எதனுடனும் சேர்க்க பிடிக்கவில்லை போலிருக்கிறது.

கண்மணி/kanmani said...

கௌபாய் மது இது ஒரு தமிழ் இலக்கிய சொற்பொழிவாளர் தொலைக்காட்சியில் சொல்லக் கேட்டது.
பிறப்புக்கு அஃறிணை உயர்திணை இல்லை என்றே நினைக்கிறேன்.
எண்ணிக்கையையும் அவற்றின் குணநலன் பொருட்டும் ஈணுதல்,குட்டி போடுதல்,அவதரித்தல் என்று சொல்லியிருக்கலாம்.
பசுவை உயர்வாக கருதுவதாலும் ஒற்றை எண்ணிக்கையாலும் ஈன்றது னு சொல்லலாம்.
இது செவிவழி செய்திதான்.அதனால் உங்க கருத்தை மறுக்கவுமில்லை..முழுமையாக ஏற்கவும் இல்லை.நன்றி

மறுமொழிக்கு பதில் சொல்லும் போது வார்த்தைகளில் நயம் குறைந்திருக்கலாம் தவிர,கோபம் ஏதும் இல்லை.

கண்மணி/kanmani said...

ஆஹா சென்ஷி ஆரம்பத்துல நான் தமிழ்ப்பிரியன் னு எழுதி அவரே 'ப்' விட்ட பிறகு நாம் ஏன் போடனும் னு நானும் விட்டுட்டேன்...

ஆயில்யன் said...

//சென்ஷி said...
என்ன கொடும டீச்சர் இது :(
//

சென்ஷி ”சொல்ல கேட்டது”
ஆயில்யன் :)))

(அப்பாடா ஒரு வழியா கமெண்டிட்டூ எஸ்ஸாகியாச்சு!)

Thamiz Priyan said...

///கண்மணி said...

ஆஹா சென்ஷி ஆரம்பத்துல நான் தமிழ்ப்பிரியன் னு எழுதி அவரே 'ப்' விட்ட பிறகு நாம் ஏன் போடனும் னு நானும் விட்டுட்டேன்...////
டீச்சர் தமிழ்ப் பிரியன் என்ற பெயரில் ஒரு மரியாதைக்குரிய பதிவர் இருக்கார். வருஷத்து சில பதிவுகள் போடுகின்றார். அதனால தான்..
அதுக்கு இம்மாங் கும்மியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தமிழ்மொழியில் பிறப்புக்கென்ன எல்லாவற்றுக்குமே உயர்திணை அஃறிணை உண்டு.(மனதில் அவ்வாறான எண்ணங்களை வைக்காதிருப்பது நலம்.)

"குழந்தை பிறந்தது" குழந்தை எனும் உயர்திணை பிறந்தது எனும் அஃறினையில் முடிகிறது. இதெல்லாம் தமிழிலக்கணங்களில் தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது.

மேலும் ஒருவர் இறந்தபின் அவரின் ஞாபகார்த்தமாக வெளியிடும் நினைவுப புத்தகத்தில் 1068 ஆம் ஆண்டு கணேசலிங்கத்துக்கும் இராயேஸ்வரிக்கும் இவர் மகனாக உதித்தார் எனும் வழமையும் உள்ளது.

தமிழில் இவ்வாறு ஒரே அர்த்தத்தைத் தரும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்கக் கூடியதான் வார்த்தைகள் அதிகம். நல்லதும் கூட.

வேற்று மொழிக் கவிதைகளை தமிழ்மொழிக்கு எதுகை மோனைகள் தப்பாது மொழிபெயர்க்க இவ்வாறு நிறைய சந்தர்ப்பங்களைத் தந்து நிற்கிறது எங்கள் இன்பத் தமிழ்மொழி.

கோபிநாத் said...

தகவலுக்கு நன்றி ;)

MURUGAN S said...

தமிழ் இலக்கணம் சூப்பரா இருக்கு !!

துளசி கோபால் said...

ஜனிச்சு:-)

காரூரன் said...

கண்மணி,
நல்ல ஆய்வு, நானும் என் கணக்குக்கு சொல்கின்றேன். மனிதன் தேவைகளுக்கு ஏற்ப பிற உயிர்களை நடத்துவான். பசு கருக்கட்டுதலில் இருந்து கன்று ஈன்றும் வரை மனிதனின் பார்வையில் தான் இருக்கும். நாயின் கருக்கட்டலும் பிறப்பும், குட்டி அனாதராவாக விடப்படுவதால் " நாய் குட்டி போடுதல் என்பர்". முனிவர்கள் எப்போது பிறந்தார்கள் எதற்காக பிறந்தார்கள் என்று தெரியாததால் அவதாரம் என்கிறார்கள் போலும்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)