PAGE LOAD TIME

தில்லை .......நெல்லையானது...

நல்லா இருக்கீங்களா?

தில்லை நடராஜ தரிசனமும்
எல்லைக் காளியின் அருளும்
பள்ளிப் பிள்ளகளும்
பக்கத்து வீட்டு அரட்டையுமாய்
போன பொழுதுகள் மாறி

தாமிரபரணித் தண்ணீரும்
தென்காசித் தூறலும்
குற்றாலச் சாரலும்
பாபநாச குளியலுமாய் மாற

இனிக்கும் நெல்லைத் தமிழும்
இடியாப்பமும் சொதியும்

மணக்கும் மட்டிப் பழமும்
திகட்டாத இருட்டுக்கடை அல்வாவும்

புதிய அனுபவமாகிப் போக
தில்லை நெல்லையானதால்

தமிழ்மணத்தில்
காணாமல் போனவர்கள் பட்டிய்லில்
கண்மணி டீச்சர்

சுகமா இருக்கியளா?

வந்துடுவோம்ல சீக்கிரமே.....

22 மறுமொழிகள்::

Anonymous said...

அதுதான் வந்திட்டீயளே!! :):)

ஆயில்யன். said...

//சின்ன அம்மிணி said...
அதுதான் வந்திட்டீயளே!! :):)
///
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))

கயல்விழி முத்துலெட்சுமி said...

ஆத்தி சும்ம்மா (சுகமா) இருக்கியளா.. வாங்க வாங்க..

தமிழ் பிரியன் said...

Teacher, Welcome Back to the form....... :)

ambi said...

அட எங்க ஜில்லாவுலய இருக்கீக?

எலே! அக்காவுக்கு வேண்டிய சவுரியம் எல்லாம் செஞ்சு போடு லே! யாராவது தடுத்தா, சீவிடுங்க. :))

தமிழ் பிரியன் said...

டீச்சர், சுகமா ஈக்கியளா? கொஞ்சம் நெல்லை தமிழிலும் இனி பதிவுகளை எதிர்பார்க்கலாம்....... :))

நானானி said...

அட!கண்மணி டீச்சரு இப்ப எங்க ஊருக்குப் போயிட்டிஹளா? ஊருக்கு வரும் போது பாக்கேன். எங்க இருக்கீஹ? சொகமாயிருகீஹளா?

இலவசக்கொத்தனார் said...

யக்கோவ், எல்லாஞ் சொகந்தானே. இல்லைன்னா நம்ம பிள்ளைக கிட்ட சொல்லிப் போடுங்க. அதை எல்லாம் நல்லா பாத்துக்கிடுவாக.

அப்புறம் நம்மூரு தண்ணிய குடிச்சிட்டீயள்ளா, இனிமே எல்லாம் நல்லாத்தேன் நடக்கும்.

நானானி said...

அட! கொத்ஸும் நம்ம ஊருதானா?

நிஜமா நல்லவன் said...

ஆஹா வாங்க வாங்க.
பதிவுல தான் நெல்லைப்பாசம்னு பார்த்தா பின்னூட்டத்திலும் நெல்லைச்சீமை காரங்க பாசத்தை பொழியவிட்டு இருக்காங்களே!!

ஆயில்யன். said...

//ambi said...

அட எங்க ஜில்லாவுலய இருக்கீக?

எலே! அக்காவுக்கு வேண்டிய சவுரியம் எல்லாம் செஞ்சு போடு லே! யாராவது தடுத்தா, சீவிடுங்க
//

பாவம் டீச்சர்!

ரசிகன் said...

//
தமிழ்மணத்தில்
காணாமல் போனவர்கள் பட்டிய்லில்
கண்மணி டீச்சர்

சுகமா இருக்கியளா?

வந்துடுவோம்ல சீக்கிரமே.....//
:))))))

பொன்வண்டு said...

வாங்க டீச்சர் வாங்க !!

வராம இருந்தாத்தான் விட்டுருவோமா?

:))))

நெல்லை சிவா said...

எலே..இம்புட்டு பயபுள்ளலுகளும் நம்ம ஊருதானா..சூப்பரு சொதியும் சேத்துத்தான்..

அபி அப்பா said...

வாங்க டீச்சர், வரவு நல்வரவாகட்டும்!!!

அபி அப்பா said...

இன்னும் டுபுக்கர் வந்து குசலம் விசாரிக்க காணுமே!!!

சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...
ஆஹா வாங்க வாங்க.
பதிவுல தான் நெல்லைப்பாசம்னு பார்த்தா பின்னூட்டத்திலும் நெல்லைச்சீமை காரங்க பாசத்தை பொழியவிட்டு இருக்காங்களே!!//


ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஎ :)))

nellainews said...

இம்புட்டு பேரும் திருநேலி காரவுகளா... நெனச்சு பாத்தா நெஞ்சு புல்லா சந்தோஷங்க...

http://www.nellaitamil.com said...

நெல்லை காரவுக இவ்வளவு பேரு இருக்கீகளா... இப்பதான் மனசுக்கு ரொம்ப சந்தோஷம்

தமிழ் பிரியன் said...

டீச்சர் எந்த பதிவின் பின்னூட்டத்திற்கும் பதில் சொல்லலை பாத்துக்குங்கப்பா!...
இதெல்லாம் நம்ம சட்டப்படி தப்பு டீச்சர்.. :))

கண்மணி said...

அத்துணை பேருக்கும் நன்றி
அடேங்கப்பா என்ன ஒரு ஊர்ப் பாசம்
நானானி நெல்லையென்னவோ அருமைதான்[பதிவில் சொன்னது போல]
ஆனாலும் தில்லாஇப் பாசம் விடல இன்னும்.ஊருக்கு வரும்முன் சொல்லுங்க.சந்திப்போம்

கண்மணி said...

தில்லைப் பாசம் னு திருத்தி வாசிங்க

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)