PAGE LOAD TIME

மொழ மொழன்னு எம்மா..யெம்மா..மொழ மொழன்னு..எம்மா..யெம்மா

ஒருமுறை இல்லீங்க ரெண்டு முறை அதை உணர்ந்திருக்கிறேன்.
ஆனால் இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு...தரையில் விரிப்பேதும் இல்லாமல் படுத்துக் கிடந்த நேரத்தில் சின்னதாக ஒரு குறு குறுப்பில் உடல் சிலிர்க்க டிவியில் ஏதோ மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைக் கவனிக்க மனமின்றி அலட்சியப் படுத்த மீண்டும் மொழ மொழன்னு யெம்மா யம்மா....இந்த முறை குறுகுறுப்பு அதிகமாகப் பார்த்தால் சின்னதாக 'நூறு காலி' ஒன்று அதாங்க செண்ட்டிபீட் ஊற...ஆவ் எனத் துள்ளி எழுந்து கடித்து விட்டதோ 'எனத் தடயம் பார்த்து இல்லையென்றபோதும் மனம் நம்பாமல் கடித்திருக்குமோ எனும் அச்சத்தில் ஊர்ந்த இடத்தில் திருநீறு பூசி [சொனப்பூச்சிக் கடிச்சாத்தான் 'திருநீறு பூசனுமாம்.முடியிருந்தா கொட்டிடுமாம்] சில மணி நேரம் கழித்து ஏதும் விபரீதமான வலியோ குடச்சலோ இல்லாததால் ஏற்பட்டது நிம்மதி.
அதன்பின் மொழமொழன்னு எது பட்டாலும் உஷார்தான்.

பின்னொருமுறை ஊருக்குப் போய்விட்டு வந்து நெடுநாள் பூட்டியிருந்த வீட்டில் மூட மறந்து திறந்தே வைத்து விட்டுப் போன மிளகாய் டின்னில் கையை விட்ட போதும் மொழமொழ ன்னு...யம்மா யெம்மா...கொத்தாக மிளகாயை அள்ள மொழமொழ ன்னு அதுவும் வந்து விழுந்தது.மண்ணுளிப் பாம்பாம்.
நூறு காலிக்கே திருநீறு தாயத்து ரேஞ்சுக்கு பயந்தவ இந்த முறை மொழமொழன்னு எம்மா யெம்மா ரொம்பவே பயந்துட்டேன். பாம்புன்னா படையே நடுங்கும் போது டீச்சருன்னு சொன்னாலோ இல்லை நானும் ஒரு பிலாக்கர்னு தெரிஞ்சாலோ கடிக்காம விட்டுடுமா என்ன? கடிச்சிருக்குமோ என்ற கற்பனை பயத்திலேயே மயக்கம் வரப் பார்த்தது.மயங்கக் கூடாதுன்னு அடிக்கடி கையைக் கிள்ளி கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.சுய நினைவோடு இருக்கேனான்னு சுய சோதனை.அதற்குள் யாரோ ஒரு மிளாகாய் கடித்துப் பார்த்தால் காரம் உறைக்குதான்னு பார்க்கச் சொன்னது ஞாபகம் வந்து தங்கையை கொண்டுவரச் சொல்ல அவள் ஒரு சவத்த மிள்காயைத் தர உப்புமில்லை உறைப்புமில்லை.
ஆ...அய்யோ மிள்காய் காரம் தெரியலைனு பயத்துல கூவ பக்கத்து வீட்டுத் தோழி சிறியாநங்கை இலை ஒன்றைக் கொடுத்து மெல்லச் சொல்ல யெம்மாடி கசப்ப்ப்ப்ப்ப்ப்ப்போ கசப்பு.
சிறியாநங்கையை பின்னா நாளில் பாம்பு வராக் கவசமாக எங்க வீட்டிலும் வைக்க பாம்புகள் அந்தச் செடியை அநாயாசமாகக் கடந்து போவதும் சில நேரம் அதன் நிழலிலேயே படுத்துக் கிடப்பதும் தனிக் கதை.
இலை கசப்பு உறைத்தாலும் ஏன் வம்புனு டாக்டர் வீட்டுக்குப் போக அவர் எந்த தடயமும் அறிகுறிகளும் இல்லாமல் நிராயுதபாணியாக வந்து கடிச்சிருக்குமோ பாருங்கன்னு சொன்னா மொழமொழ ன்னு முழிக்கிறார்.ஏதோ தெரிந்த டாக்டர் என்பதால் ஃபீஸ் வாங்காமல் பேசி அனுப்பி விட்டார்.

[அரையடி நீளம் மட்டுமே இருக்கும் அது மொக்கையாக ரெண்டு பக்கமும் தலையோடு இருக்கும்.அது கடித்தால் வெண்குட்டம் வரும்.கைவிரல்கள் மொக்கையாகிப் போகும்னு சொன்னாங்க பின்னால.]

சரி எதுக்கு இப்படி திடீரென ஒரு மொழமொழ கொசுவர்த்தி யெம்மா யெம்மா னு ன்னு கேக்கறீங்களா?பின்ன 'குருவி' படத்துக்கு இதைவிட சூப்பரா எப்படி விமர்சனம் எழுதுவது?

கில்லி ஓடுச்சு என்று அதே பாணியில் மோசமான திரைக்கதை தந்த தரணி..

தளபதியின் மகன் உதயநிதி விஜய் ரசிகராம்.தப்பில்லை.குருவி காப்பாத்துமா?

ஏற்கனவே இளைத்த தேகம் மேலும் இளைத்துக் கறுத்து தனுஷ் மாதிரியாகிவிட்ட [நடிப்பிலும்]விஜய்...
ஆளும் தேய்ந்து ஒட்டிப் போன கன்னங்களும் பொருந்தாத மேக்கப்பிலும் திரிஷா...

பார்த்ததோடு நிக்காம மகா தேவையாக நினைத்து பதிவிடும் நானும் இதைப் படிக்கும் நண்பர்களும் .....
யார் பாவம்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

படம் ஊத்திக்கிட்டாலும் கருத்தாழம் மிக்க பாடல்கள் தமிழைத் தூக்கி நிறுத்துகின்றன.
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்....தான் இந்த மொழ மொழன்னு யெம்மா யெம்மா.....பாருங்க அந்த 'இரட்டைக் கிளவி' [கிழவி இல்லீங்க] வார்த்தை ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும் தேவையோ இல்லையோ வந்து ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்குது.
இப்படி அர்த்தமில்லாமலே அர்த்தமாக்கப் பட்ட அந்த'மொழமொழ'க்கு சிறப்பு சேர்க்கத்தான் இந்த பதிவு.

'நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு ம்முக்கா'வத் தூக்கிச் சாப்பிட்டுவிடுமில்ல?

டிஸ்கி:நாக்கு முக்க னு முணகிக் கொண்டிருந்த எங்கூட்டு குட்டீஸ் வாயில இப்ப மொழமொழன்னு யெம்மா தான்

36 மறுமொழிகள்::

ஆயில்யன். said...

//'இரட்டைக் கிளவி' //
//கருத்தாழம் மிக்க பாடல்கள் தமிழை தூக்கி நிறுத்துகின்றன.
//

இதுதான் டீச்சர் விமர்சனம் !


:)))

இலவசக்கொத்தனார் said...

திருநெல்வேலி வந்துட்டீக இல்ல, இனிமே பாம்பு, தேளு, நட்டுவாக்காலின்னு எல்லாம் சகஜமாயிரும். கவலைப்படாதீக.

தமிழ் பிரியன் said...

படித்து முடிப்பதற்குள் கொல கொல என்று ஆகி விட்ட்டது. அதுவும் 'குருவி' என்ற வார்த்தை வந்தவுடன் பொல பொல என்று ஆகி விட்டது..... :))))))))))

கண்மணி said...

ஆஹா நம்மள டீச்சர்னு நம்புறீயா ஆயில்யா [ஹூம் இப்படி நாலு வார்த்தை எழுதித்தான் நம்பவைக்கனும்]

கண்மணி said...

கொத்தனாரே அதென்ன பாம்பு தேளுன்னாக்கூட உங்க ஊரு ஸ்பெஷல்....எங்கூரிலும் இதெல்லாம் நிறையப் பார்த்திருக்கோமில்ல

ஆனாலும் பாருங்க நேத்தக்கி பெய்த ஒரு மழைக்கே காம்பௌண்ட் சுவத்துல நாலு அங்குல நீளத்துல அட்டக் கரியா ரெண்டு அட்டைங்க கெளம்பிட்டுது.அம்மா இனி மழைக்கு எறும்பு கொசுவெல்லாம் வரும்மா னு தோட்டக்காரர் சொல்றார்;(

கண்மணி said...

மள மள ன்னு படிச்சிட்டு விடு விடு ன்னு கிளம்பிடணும் த.பிரியன்.
ஆமா முதல் பின்னூட்டம் போடனும்னு ஏதேனும் வேண்டுதலா?;)

ராமலக்ஷ்மி said...

//கருத்தாழம் மிக்க பாடல்கள்//

அதெல்லாம் கனவாகிப் போன கோலங்கள்!

போன வருட மழை நாளில் என் அம்மா வீட்டின் (திருநெல்வேலியேதான்) தோட்டத்துப் பின் அறையில் இருந்து இழுத்துப் போட்டார்களே பார்க்கலாம் ஐந்தாறு அடி நீளமுள்ள பத்து, பனிரெண்டு பாம்புகளை..அக்கா,7-வது,அக்கா 8-வது என என் தம்பி மனைவி போனில் ரன்னிங் கமெண்ட்ரி வேறு கொடுத்துக் கொண்டிருந்தாள்!)

கண்மணி said...

ஏங்க புதுசா வந்தவளை இப்படி மிரட்டுறீங்க ராமலஷ்மி.
ஆனாலும் போர்க்களத்தப் பார்த்தவன் குழாயடிச் சண்டைக்கு பயப்பட மாட்டான்.நானும் அப்படித்தேன்;)
இருந்தாலும் உஜாரா இருந்துக்கிடுதேன்

தமிழ் பிரியன் said...

////கண்மணி said...

ஆஹா நம்மள டீச்சர்னு நம்புறீயா ஆயில்யா [ஹூம் இப்படி நாலு வார்த்தை எழுதித்தான் நம்பவைக்கனும்]////
அவங்களா நீங்க..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்ப அமிலம், காரம்ன்னு எங்களை எல்லாம் பயமுறுத்தியது ஆரு....

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...

மள மள ன்னு படிச்சிட்டு விடு விடு ன்னு கிளம்பிடணும் த.பிரியன்.
ஆமா முதல் பின்னூட்டம் போடனும்னு ஏதேனும் வேண்டுதலா?;)///
ஹிஹிஹிஹிஹிஹிஹி எல்லாம் கும்மி பாசந்தேன்.......

நிஜமா நல்லவன் said...

படிச்சி முடிக்கிறதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன். கலக்க ஆரம்பிச்சுட்டீங்க பழையபடி.

குசும்பன் said...

டீச்சர் படம் பார்த்ததால் வரபோகும் விளைவுகள் நீங்க சொன்ன பூரான் கடியைவிட மோசமானதாக இருக்கும் போலவே!!!

குசும்பன் said...

//கண்மணி said...
ஏங்க புதுசா வந்தவளை இப்படி மிரட்டுறீங்க ராமலஷ்மி.
ஆனாலும் போர்க்களத்தப் பார்த்தவன் குழாயடிச் சண்டைக்கு பயப்பட மாட்டான்.நானும் அப்படித்தேன்;)
இருந்தாலும் உஜாரா இருந்துக்கிடுதேன்//

டீச்சர் நீங்க இதுவரை பார்த்து இருப்பது தம்மாதுண்டு பூரானும், மண் புழுவும் ஆனா அவுங்க சொல்வது பாம்பு சும்மா ஒரு ஆறு அடிக்கு...

ஆடு பாம்பே விளையாடு பாம்பே.... (மகுடி சவுண்டை மனசுல நினைச்சுக்கிட்டே படிங்க)

இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி காலை, மாலை என் பேரை மூன்று முறை சொல்லுங்க .

யாமிருக்க பயமேன்!!!

கண்மணி said...

வாப்பா குசும்பா நீயே மூனு வேளை தோப்புக்கரணம் போட்டாத்தான் புவ்வா னு கெடக்கே இதுல நான் பாராயணம் பண்ணனுமா உன் பேரை

கண்மணி said...

பழைய கொள்ளிடக்கரை உடைஞ்சாலோ வீராணம் வழிஞ்சாலோ வரக்கூடிய அபாயம் ஒரு புறமிருக்க 'ச்சோ' னு கொஞ்சம் அதிகமா மழை பெய்து ஊரெல்லாம் தலை நனைஞ்சாலே நாங்க இருந்த நகர்ல தண்ணி இடுப்பளவு வந்து நாலு நாளைக்கு ஹௌஸ் அரஸ்ட் ஆயிக் கெடக்கும் போது சர்ரு...சர்ரு னு குறுக்காலயும் நெடுக்காலயும் ஓடிக்கிட்டே இருக்கும் ...சிலது தென்னை ஓலையோடு சேர்ந்து ஊஞ்சலாடும்...சிலது படி வழியா உள்ள வரப் பார்க்கும்.6,7 அடி உள்ளது எல்லாம் தவக்களையைத் தின்னுட்டு காம்பௌண்ட் சுவர் பக்கம் ஹாய்யா படுத்திருக்கும்.இன்னும் சிலது பாக்கெட் பாலுக்கு வச்ச பையிலும்,சிலது போஸ்ட் பாக்ஸிலும் ரெஸ்ட் எடுக்கும்.எனக்கே காதுகுத்தா?
நான் சிலதுன்னு சொன்னது பூரானும் இல்லை மண் புழுவுமில்லை குசும்பா...ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ப்பாஆஆஅம்பு [வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைல்]

ராமலக்ஷ்மி said...

இந்த வாரு வாரிட்டீங்களே குசும்பனை, பாவங்க! அவர் சொன்ன மாதிரி, முதல் 2 பாம்பைப் பார்த்ததும்
பாம்பாட்டியை வரவழைச்சு, மகுடி ஊதித்தான் பிடிச்சாங்க அதுகளை என்பது கூடுதல் தகவல்!

ambi said...

எங்கூர்ல பொழுது போகலைன்னா பாம்பாட்டிய கூப்பிட்டு பாம்பு பிடிக்க சொல்லுவோம்.

ஒரு தடவை, வாய்காலில் ஒரு அக்கா முங்கி எழுந்தாங்க. அவங்க பன் கொண்டைல ஒரு தண்ணி பாம்பு சூப்பரா உக்காந்து போஸ் குடுக்குது.

அந்த அக்கா அசரவே இல்லையே! மறுபடி தண்ணில முங்கி எழுந்துட்டாங்க.
ஒரு தைரியத்துக்கு அவங்க அட்ரஸ் வேணா தரவா டீச்சர்? :p

ambi said...

//பாம்பு, தேளு, நட்டுவாக்காலின்னு எல்லாம் சகஜமாயிரும். கவலைப்படாதீக//

@koths,
சரியா சொன்னீங்க அண்ணாச்சி, நானே ஒரு பத்து இருபது அடிச்சு போட்ருக்கேன்

கண்மணி said...

ஆகா ஒரு தினுசாத்தான் கெளம்பிட்டாங்கய்யா...தின்னவேலிக்காரங்க.
ஏங்க தமிழ்நாட்டு பாம்பு எல்லாம் அங்கன தான் இருக்கா?
அதிகமா இருப்பது எந்த ஏரியான்னாவது சொல்லுங்க மக்கா

அம்பி அந்த அக்காவுக்கு என்னோட அட்ரஸ் வேணுமா கேளுங்க

அபி அப்பா said...

குருவிக்கு வந்த விமர்சனத்திலே இது தான் முதல் ரேங் டீச்சர்! நாக்க மூக்க பாட்டுன்னா நட்டுக்கு உசுரு!!!

நானானி said...

//உஜாரா இருந்துக்கிடுதேன்//
வேற வழி?

கண்மணி..இப்ப நா குருவி பாக்கவா வேணாமா? ப்ரார்த்தனாவில் ஓடுது.
அங்கேன்னால் படத்தைப் பத்தி சட்டை பண்ணாமல் போய்டுவோம்.
இப்ப நான் என்ன செய்ய?

துளசி கோபால் said...

என்னங்க இப்படி நெளியுது?

ஓஓ.... பாம்புன்னா நெளியத்தான் செய்யும் இல்லே?

நம்மூர்லே பாம்பு தேள் இப்படி எதுவும் இல்லீங்க.

மகளுக்குப் பாம்பைக் காமிக்கணுமுன்னு பாம்புப்பண்ணைக்குக் கூட்டிட்டுப்போனோம்.

தெரிஞ்சுருந்தா நெல்லைக்கே வந்திருக்கலாம் தொல்லையே இல்லாமல்:-)

கண்மணி said...

அந்தக் காலத்துல நிலா காட்டி சோறூட்டுவாங்க.இல்லை மூனு கண்ணன் னு பூச்சாண்டி காட்டுவாங்க.
இப்ப சன் டிவி காட்டியும் நமீதா காட்டியும் சோறூட்டும் போது நட்டுக்கு 'நாக்கு முக்கா' புடிச்சதில் ஆச்சரியமென்ன?

கண்மணி said...

நானானி பிரார்த்தனா என்றால் ஓகே ஏத்ஹாச்சும் கொறிச்சிகிட்டு வெளியே வேடிக்கைப் பார்க்கலாம்.
உள்ளரங்கு என்றால்தான் எழுந்து ஓட முடியாது.
யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக.

கண்மணி said...

துளசிக்கா டிஸ்கவரியில ஆஸி பாம்பு,நியூஸி பாம்புனு காட்டுறாங்களே அதெப்படி?

துளசி கோபால் said...

விடுகதை:

ஆஸி யில் உண்டு
நியூசியில் இல்லை.
அது என்ன?

டீச்சர் நான் சொல்றேன் விடை.

'பாம்பு'

ராமலக்ஷ்மி said...

அம்மா வீட்டில் இழுத்துப் போட்டடித்த பாம்புக் கதைய எடுத்து விட்டாலும் விட்டேன். கொள்ளிடமெல்லாம் தாண்டி நியூசியில் இல்லா ஆஸிப் பாம்பு வரை ஒரே பாம்பா படமெடுத்தாடி பயங்காட்டுதே!

//ஆகா ஒரு தினுசாத்தான் கெளம்பிட்டாங்கய்யா...தின்னவேலிக்காரங்க.//

தின்னவேலிக்காரவுக ரொம்ப நல்லவுக..
'ஆ..பாம்பு..'னு முடிக்கும் முன்னே ஒரு படையே வந்து நிக்குமாக்கும் உதவிக்கு!

பொன்வண்டு said...

:))))

கோபிநாத் said...

;)))

குசும்பன் said...

//ambi said...

எங்கூர்ல பொழுது போகலைன்னா பாம்பாட்டிய கூப்பிட்டு பாம்பு பிடிக்க சொல்லுவோம்.
//

என்ன இது சின்னபுள்ள தனமா எங்க ஊரில் சின்ன புள்ளைங்க எல்லாம் தட்டான் , பட்டாம் பூச்சி எல்லாம் புடிச்சு விளையாடாதுங்க எல்லாம் பாம்புதான் புடிச்சு விளையாடும் அப்படி வீரம் விளைஞ்ச மண்ணில் பிறந்து வளர்ந்த எங்களுக்கு பொழுது போக்கு சும்மா மலை பாம்பு, ராஜ நாகம் (நன்றி ஆங்கில பட டைட்டில்) இப்படி பிடிச்சுதான் விளையாடுவோம்.
சில சமயம் பெல்ட் தேடி கிடைக்கவில்லை என்றால் ஓடி போகும் பாம்பை புடிச்சு இடுப்பு வேஷ்டிய கட்டும் பெருசுங்க வாழும் ஊர் எங்க ஊர்.

(ஏன் எல்லாம் முறைக்கிறீங்க கொஞ்சம் ஓவராதான் போய்ட்டேனோ!!!)

குசும்பன் said...

// கண்மணி said...
வாப்பா குசும்பா நீயே மூனு வேளை தோப்புக்கரணம்//

டீச்சர் நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க, அது கொசு கடித்தது போல் லேசா வீங்கி இருக்கும் தொப்பை குறைய சாப்பிடும் முன்பு 100 முறை உட்காந்து எழுந்தா சீக்கிறம் செல்ல தொப்பை குறைந்து விடுமாம் அதுக்காக நான் உடற்பயிற்ச்சி செய்தால் அது தோப்புகரணம் ஆகிடுமா?

சில சமயம் படுத்து எழுந்திக்கிறேனே அப்ப அதுக்கு பேரு என்னா காலில் விழுகிறேன் என்று ஆகிடுமா.

என்ன இது சின்ன புள்ள தனமா..
மெயிண்டெயின் பண்ணுடா சுனா பானா
மெயிண்டெயின் பண்ணுடா..

குசும்பன் said...

கண்மணி said...
//நாங்க இருந்த நகர்ல தண்ணி இடுப்பளவு வந்து நாலு நாளைக்கு ஹௌஸ் அரஸ்ட் ஆயிக் கெடக்கும் போது ///

வடிகால் வசதி இல்லா குக் குக் குக் கிராமத்தில் இருந்துக்கிட்டு பேச்ச பாரு, லொள்ள பாரு, லோலாய பாரு...(சின்ன கவுண்டர் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்).

குசும்பன் said...

//ராமலக்ஷ்மி said...
இந்த வாரு வாரிட்டீங்களே குசும்பனை, பாவங்க!//

என்னா இது! தலையிலே பாறாங்களே விழுந்தாலு (தூக்கி போட்டாலும்) அசால்டா தூசியை தட்டிவிட்டு போய்கிட்டே இருக்கும் வீர மக்கள் நாங்க.

கண்மணி said...

குசும்பா நீயே கல்யாண சாகரத்தில் சிக்கி தவிக்கிறாய்.உன்னை மேலும் கலாய்த்து நோகடிக்க மனமில்லை.பொழச்சிப் போ...:))
கோபி மாதிரி ஒரேயொரு சிரிப்பான் போட்டு என் எதிர்வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.
:))

நானானி said...

கேளடி...கண்மணி!!!
சிவாஜி வாயிலே ஜிலேபி...தொடருக்கு
உங்களையும் அழைத்திருக்கிறேன்.ஓடோடி வந்து
சிவாஜி வாயிலே ஜிலேபியை
திணியுங்கள்!!!

Anonymous said...

:)))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)