PAGE LOAD TIME

தம்போலா.........[TAMBOLA]

நெல்லை வந்த புதிதில் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல வேண்டியிருந்தது.
முக்கியமான நண்பர்கள் குடும்பம் மட்டும் அழைக்கப் பட்டிருந்தனர்.
ஒரு உயர் அதிகாரியின் வீட்டு விசேஷம் என்பதால் பஃப்பே முறை உணவு அயிட்டங்களோடு விளையாட்டு,போட்டி என்று ஒரு அருமையான கெட்-டூ-கெதர் நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
விருந்தினர்களோடு காரையார் டேம் சென்று வந்ததால் பார்ட்டிக்கு கொஞ்சம் லேட்டாகவே போனேன். அதற்குள் வினாடி வினா நிகழ்ச்சிகள் நடந்து விட்டிருந்தது.அதில் கேட்கப் பட்ட மிக முக்கியமான கேள்வி 'பல்லே லக்கா' என்றால் என்னவாம்.[உங்களுக்குத் தெரியுமா]
வினாடி வினா நிகழ்ச்சிக்குப் பிறகு பந்து எறிதல் போட்டி ஒன்று தம்பதிகளுக்காக நடத்தப் பட்டது.
குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் நின்று கொண்டு மாற்றி மாற்றி பந்து எறிந்து 1 நிமிடத்தில் எத்தனை முறை விடாமல் கேட்ச் பிடிக்கிறார்கள் என்று கணக்கு.
ஜெயித்த தம்பதியர் அதிக பட்சம் 16 முறை காட்ச் பிடித்திருந்தனர்.நானா?...ஹூம் வெறும் 5 முறை தான் [புது இடம் புது மனிதர்கள் கூச்சம் இருக்குமில்ல]
பின்னர் குழந்தைகளுக்கான ஒரு வார்த்தை விளையாட்டு.ஆங்கிலத்தில் 'at'என முடியும் அதிக பட்ச வார்த்தைகளை எழுத வேண்டும்.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாண்டுக்கு பேனாவைக் கூட பிடிக்கத் தெரியலை.இன்னொன்று ant என எழுதியது.
பின்னர் 'யாரு மனசுல யாரு' பாணியில் ஒருவர் ஏதாவது பெயரை நினைக்க அடுத்தவர் ஐந்து கேள்விகள் மூலம் அதன் விடையைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு.
அடுத்து சினிமாப் பேரை அபிநயம் மூலம் ஒருவர் சொல்ல அடுத்தவர் கண்டுபிடிக்கும் ஜோடி விளையாட்டு.குருவி,பூவே உனக்காகஇப்படி பெயர்களை ஓரளவு ஜோடிகள் கண்டுபிடித்து விட்டனர்.
நமக்கு வந்தது என்னன்னா 'பொல்லாதவன்'இதற்கு எப்படி அபிநயம் பிடிக்க?கொஞ்சம் க்ளூ கொடுத்து அடித்து உதைப்பது போல ஆக்ஷன் காமிக்க பின்னாலிருந்து ஒரு புண்ணியவான் தனுஷ் நடித்தது என க்ளூ தர சரியாக் கண்டு பிடிச்சுட்டேன்;)இதுல பாராட்டு வேறு.நம்ம பொது அறிவெல்லாம் சினிமாவோட மட்டும்தான்னு ரங்கமணிக்கு மட்டும்தானே தெரியும்.
எல்லா போட்டிகளின் முடிவிலும் பரிசுகள் எடுத்துக் கொள்ளப் பட்டது.ஆம் குவித்து வைக்கப் பட்டிருந்த பரிசுப் பொருட்களில் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகளை செலக்ட் செய்து எடுத்துக் கொள்ளலாம்.நான் என்ன பரிசு எடுத்தேன்னு பின்னாடி சொல்றேன்.
சிறிது இடைவேளை விட்டு விருந்து நடந்த பிறகு துவங்கியது அடுத்த கேம் 'தம்போலா'இதை ஹூஸி[ஹௌஸி] கேம் னும் சொல்றாங்க.
இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை.நார்த் இந்தியன் விளையாட்டாம்.
டிக்கெட் வாங்குங்க என்று சொல்லி 10 ரூபாய்க்கு ஒரு டிக்கெட் என்று 2,5,10, 20 என வாங்கினர்.
அதில் மூன்று வரிசைகளாக ஒன்பது கட்டங்களில் எண்கள் அச்சிடப் பட்டிருந்தது.ஒவ்வொரு வரிசையிலும் மொத்தமுள்ள ஒன்பது கட்டங்களில் ஐந்து மட்டுமே 1 முதல் 99 வரையுள்ள எண்களால் நிரப்பப்பட்டிருந்தது

இது போல 5,10 வரிசைகளும் உண்டு போல.
எல்லோரும் டிக்கெட் வாங்கிய பிறகு கேம் நடத்துபவர் டைஸ் உபயோகித்தோ அல்லது வேறு முறையிலோ இரட்டை இலக்க எண்களின் பெயரை சொல்லிக் கொண்டே வருவார்.
உதாரணமாக ஏழு ,ஒன்று எழுபத்தியொன்று எனச் சொல்லுவார். நம்மிடம் உள்ள சீட்டில் அந்த 71 இருந்தால் டிக் செய்யவோ ஸ்டிரைக் அவுட அல்லது ரவுண்ட் பண்ணவோ செய்யனும்.இப்படி டிக் செய்து வரும் போது நம்முடைய டிக்கெட்டில் ஏதாவது ஒரு வரிசையில் எல்லா எண்களும் டிக் செய்யப்பட்டு விட்டால் நாம் லைன் அல்லது ரோ வின்னர்.
பர்ஸ்ட் ரோ,செகண்ட் ரோ,தேர்ட் ரோ என எது வேண்டுமானாலும் முதலில் ரவுண்ட் செய்யப் படலாம்.இப்படி எல்லா வரிசைகளையும் யாராவது ஜெயித்த பிறகு கடைசியாக வருவதுதான் 'ஃபுல் ஹவுஸ்'.
அதாவது டிக்கெட்டில் உள்ள எல்லா எண்களையும் யார் முதலில் டிக் செய்கிறார்களோ அவர்கள் ஃபர்ஸ்ட் ஃபுல்ஹவுஸ் வின்னர்.அடுத்து வருபவர் செகண்ட் ஃபுல்ஹவுஸ் வின்னர்.
இது ஒரு லாட்டரி கேம் மாதிரி அதிர்ஷ்ட கேம்[சூதாட்டம்] தான்.அதற்குப் பிறகு வந்து கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்ட பிறகுதான் தெரிந்தது இது ஆன்லைனிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பது.இண்டர்நெட் மட்டுமல்லாது sms,mms மூலமும் இந்த bingo விளையாடப் படுகிறது.

சரி இந்த விளையாட்டை நான் எப்படி விளையாடினேன் தெரியுமா? பார்ட்டிக்குப் போகும் அவசரத்தில் திருவாளர் மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டுப் போய்விட்டேன்.
தம்போலா டிக்கெட் வாங்கியவுடன் பக்கத்தில் இருந்த ஒரு சின்னப் பொண்ணை உதவிக்கு அழைத்துக் கொண்டேன்.ஆண்ட்டி ஸ்பெக்ஸ் எடுத்து வரலை.அதனால் என் டிக்கெட்டிலும் நீயே டிக் செய் என்றேன்
அந்தப் பெண் கூலாகக் கேட்டது கண்ணாடி இல்லாம கண்ணு சரியாத் தெரியலைன்னு சொன்னீங்க ஆனா இவ்ளோ மோசமா?
ஏன்னா நான் டிக்கெட்டை தலைகீழாப் பிடிச்சிருந்தேன்:(
வழக்கம் போல ஜெயிக்கலை.ஆனா ஒரு வேளை கண்ணாடி போட்டிருந்து நானே தம்போலா டிக்கெட்டை டிக் பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாமோனு மைல்டா டவுட் வருது;)
சரி நான் என்ன பரிசு எடுத்தேன்னு சொல்லலையே....கண்ணாடி இல்லாத காரணத்தால் பரிசுப் பொருட்களை குத்து மதிப்பாகப் பார்த்து விக்கோ டர்மெரிக் ஃபேஸ் கிரீம இருக்கட்டும்னு 'விக்கோ'[Vicco] கிரீமை எடுத்தேன .வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அது 'விக்கோ வஜ்ரதந்தி' டூத் பேஸ்ட்டுனு:((

21 மறுமொழிகள்::

துளசி கோபால் said...

இங்கே இதுக்குப்பேர் 'ஹெளசி' Housie.

முதியோர்கள் கூடும் கூட்டங்களில் இது கட்டாயம் உண்டு.

நான் விளையாட மாட்டேன்.

காரணம்?

அதான் சொல்லிட்டேனே....'முதியோர் கூடும் கூட்டங்களில்' :-)))))

கண்மணி said...

நானும் மாட்டேன்னு சொன்னேன்.இதென்ன வயசானவங்க விளையாட்டுக்கு என்னைப் போய் கூப்புடறீங்கன்னு...[அதுக்காகத்தானே ஸ்பெக்ஸை கூட வேணும்னே மறந்து வச்சிட்டுப் போனேன்]....
ஹௌஸியைத்தான் ஹூஸி னு அடிச்சுட்டேன்.
சரி பண்ணிட்டேன் டீச்சர்

மாதங்கி said...

நல்லா எழுதியிருக்கீங்க கண்மணி

balalaika இது ஒரு இசைக்கருவி

வல்லிசிம்ஹன் said...

அடடா வயசான்வங்க விளையாடற எடத்துக்குப் போயிட்டிங்களே.

இங்க வாங்க நாம தட்டாமால விளையாடலாம்:)

ambi said...

சுத்த போர்ங்க அது. சப்பாத்தி ஆட்டம்.

நம்மூர்காரங்க கிட்ட உசாரா இருங்க.

தமிழ் பிரியன் said...

இந்த ஆட்டங்கள் எல்லாம் திருநெல்வேலி ரேஞ்சுக்கு இல்லையே டீச்சர்?........ ;)

தமிழ் பிரியன் said...

என்னங்க டீச்சர், 25 வயசெல்லாம் ஒரு வயசா?...... இப்பவே வயசாயிடுச்சுன்னு சொல்றீங்க....
(மக்களே! 25 ஐ திருப்பிப் போட்டு படித்தால் நான் பொறுப்பல்ல)

நிஜமா நல்லவன் said...

//தமிழ் பிரியன் said...
இந்த ஆட்டங்கள் எல்லாம் திருநெல்வேலி ரேஞ்சுக்கு இல்லையே டீச்சர்?........ ;)//ரிப்பீட்டேய்...........

அபி அப்பா said...

அபுதாபி தமிழ் சங்கத்தின் தேசிய விளையாட்டு டீச்சர் இது. நான் கூட இதை ரொம்ப நாள் ரசிச்சு விளையாடினேன். பின்ன தான் என்சோட்டு பசங்க "டேய் நாம விளையாட மாடியிலே தனி இடம் இருக்குடா"ன்னு கூட்டிகிட்டு போக அன்னிக்கு முதல் அங்க தான் நம்ம விளையாட்டு.

Abudhabhi Indian association முதல் மாடியிலே இன்ன தான் இருக்கும் என போட்டு உடைக்க வேண்டாம் யாரும்.

நானானி said...

தமிழ்பிரியன்! திருநெல்வேலியை என்னான்னு நெனச்சுட்டீங்க? பெரிய சிட்டியாகிட்டுவருது தெரியுமா? அ..க்காங்!!!
துள்சியும் கண்மணியும் கூட வல்லியும் ஆனாலும் இப்படி சதாய்க்கக்கூடாது!!

கயல்விழி முத்துலெட்சுமி said...

அதானே இதெல்லாம் விளையாடறாங்களா திருநெல்வேலியில்.. முன்னேற்றம் தான் போங்க.. :)

கண்மணி said...

நன்றி மாதங்கி தகவலுக்கும் வருகைக்கும்

வாங்க அம்பி என்ன இப்படி பயம் காட்டறீங்க

தமிழ்பிரியன்&நி.நல்லவன். நெல்லையின் ரேஞ்ச் வீரத்தில் மட்டுமில்லை நட்புணர்விலும் இருக்கு

கண்மணி said...

நானானி,முத்துலஷ்மி அட தின்னவேலின்னதும் கூட்டா கலாய்க்கிறீங்களோ.நானும் இப்ப அவ்விடந்தானே விட்டுக் கொடுப்பேனா?

கண்மணி said...

அபி அப்பா இதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும்னு சொல்வாங்க

தமிழ் பிரியன் said...

/// நானானி said...

தமிழ்பிரியன்! திருநெல்வேலியை என்னான்னு நெனச்சுட்டீங்க? பெரிய சிட்டியாகிட்டுவருது தெரியுமா? அ..க்காங்!!! ///
ஆகா எங்க கிட்டயேவா? பூர்வாசிரம பூமியாச்சேன்னு 400 கி.மீ தள்ளி வந்து கல்யாணம் முடிச்சா அவங்க ஊருக்கு காலைல ஒரு பஸ், மாலையில் ஒரு பஸ். அதை விட்டா பஸ் நிலையத்தில் படுத்து தூங்க வேண்டியது தான். அதை எல்லாம் பதிவா போட வேண்டாமேன்னு பார்க்கிறேன்...... ;))

கோபிநாத் said...

\\கண்ணாடி இல்லாத காரணத்தால் பரிசுப் பொருட்களை குத்து மதிப்பாகப் பார்த்து விக்கோ டர்மெரிக் ஃபேஸ் கிரீம இருக்கட்டும்னு 'விக்கோ'[Vicco] கிரீமை எடுத்தேன .வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அது 'விக்கோ வஜ்ரதந்தி' டூத் பேஸ்ட்டுனு
\\

;))))))))))))

அக்கா எப்படிக்கா இப்படி எல்லாம்...கலக்குறிங்க ;)

ராமலக்ஷ்மி said...

Tambola- north indian game-தானுங்க. திருமணமாகி Thane(Mumbai-அருகில்) முதன் முதலில் குவார்டர்ஸ்ஸில் குடித்தனம் சென்ற போது, எங்களை வரவேற்க கொடுக்கப் பட்ட பார்ட்டியில் முதல் கேமிலேயே பரிசும் பெற்றேன். மூளைக்கு எங்கே வேலை? 'லக்' இருந்தா தட்டிக்கலாம் பரிசை. பெங்களூரிலும் இந்த கேம் ரொம்ப சகஜம்.

உறுதியான பல்லுக்கு உபயோகிப்பீர்,விகோ பேஸ்ட்:-))))!

ராமலக்ஷ்மி said...

நமக்கும் திருநெல்வேலிதான். தமிழ் பிரியா பார்த்து..பார்த்து..நானும் நானானி கட்சியாக்கும்!

கண்மணி said...

வாங்க ராமலஷ்மி நமக்கு தில்லை
நான் இப்போ இருப்பதோ நெல்லை
வாய்ப்பிருந்தால் சந்திப்போம்

ராமலக்ஷ்மி said...

நட்புக்கு ஏது எல்லை?
சந்தோஷமா சந்திக்கலாம்!

Anonymous said...

nalla irukku vilaiyada katthu kittene

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)