PAGE LOAD TIME

ஜிலேபியும் ....ஸ்திரீ பார்ட்டும்...

ஜிலேபியா ?..ஜாங்கிரியா ?

முதல் படம் ஜிலேபி

ரெண்டாவது ஜாங்கிரி

இதாண்டா ...ஜிலேபினு [நன்றி:டைரக்டர் : ராஜசேகர்]தெரிஞ்சிக்கவே நாளாச்சு எனக்கு.
ரொம்ப நாளாவே ஜிலேபிக்கும் ஜாங்கிரிக்கும் வித்தியாசம் தெரியாமலிருந்த போதுஜாங்கிரி என்பது நவீன யுகத்தின் அழகுப் பெயர் போலவும் ஜிலேபி என்பது கற்காலத்தின் புராதனப் பெயர் போலவும் நினைத்து ஜிலேபி என்பவர்களை உதடு சுழித்து அலட்சியப் பார்வைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பொன்னான நன்னாளில் ஜிலேபி சுவைக்கும் புளிப்பான அனுபவம் கிடைத்த போதுதான் இரண்டும் ஒன்றில்லை,இரண்டுக்குமான அடிப்படைப் பொருட்களே மாறுபடுமென்ற உண்மை லேசாக புளித்தது[உறைத்தது].

நம்மள ஜிலேபி சுத்தவுட்ட நானானிக்கு ஒரு நன்னி.[கிர்ர்ர்ர்ர்ர்....ரும் உண்டு.இப்பெல்லாம் மொக்கை போடக் கூட தோணலை.பருவகாலம் மாறுவது போல அப்பப்ப சிந்தனையிலும் ஒரு இலையுதிர்காலம்மும் வறட்சியும்...இந்த நேரத்துல மாட்டி விட்டுட்டாங்களே]

என்னதான் தோற்றத்தில் சற்றேறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் ஜாங்கிரிதான் பெஸ்ட்.ஒரிஜினல் ஸ்வீட் என்பது என் எண்ணம்.
லட்டு,ஜாங்கிரி
மைசூர் பாகு னு மூனும் ஜோடிசேர்ந்தாலேகல்யாணவிருந்து...களைகட்டும்.பலகாரக்கூடையும்நிறைகட்டும்.
ஜிலேபி எல்லாம் ச்சும்மா ஒரு லுலூ.... லாயி..தான்.சுலபமா செய்யக்கூடிய ஒரு வித்தியாச ஸ்வீட்..அம்புட்டுதேன்.ஆனாலும் லேசான புளிப்புச்சுவையுடன் மொறு மொறு ன்னு சூடாச் சாப்பிட்டா ஓகேதான்.
சரி அதென்ன ஜிலேபியும் ஸ்திரீ பார்ட்டும்...
சனிக்கிழமைகளில அசத்தப் போவது நிகழ்ச்சியில் தவறாம மூணு பெண்கள் வருவாங்க தொகுப்பாளினி சந்தியா நீங்கலாக.
பெண்வேடமிட்ட மூன்று பேர்...பெயர் ஞாபகம் வரலை.ஆரம்பத்துல ஒருவர் அசப்பில் ஊர்வசி மாதிரியே பேசி நடிக்க நன்றாக இருந்தது.பிறகு மூவரும் வந்து குழாய்ச் சண்டை போட்டனர்.டூயட் பாடலுக்கு ஆடினர்...ரசிக்க முடிந்தது.ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக பெண்வேடமிடுவது மட்டுமே தங்களுக்கு உள்ள திறமை போல செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாது சமீபத்தில் துபையில் நடந்த கலை நிகழ்ச்சியிலும் பெண் வேடமிட்டே ஒரு பாடலுக்கு அந்த கலைஞர் ஆடினார்.
வாராவாரம் புதுப் புது நகைச்சுவைத் துணுக்குகள்..மிமிக்ரி..புதுப் புது யுத்திகள்,ஜக்லிங்,கரகாட்டம் போன்ற பல்வேறு தனித் திறமைகளை வெளிப்படுத்தும் போது பெண்வேடமிடுவது ஏதோ மிகப் பெரிய திறமை போல தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அந்தக் காலத்தில் பெண்கள் அதிகம் பொது மேடைகளுக்கு வரத்தயங்கிய காலகட்டத்தில் ஆண்கலைஞர்கள் ஸ்திரீபார்ட் எனப்படும் பெண்வேடம் புனைந்து நடித்தனர்.
இன்றைய நவீன யுகத்தில் இது தேவையா?ஓரிருமுறை என்றால் பரவாயில்லை.சில நேரம் தாங்க்கள் ஆண் என்பதையே மறந்து விடுவார்களோ என்று கூடத் தோன்றும்.
சினிமாவில் ரஜினிதொடங்கி,சரத்குமார்,கமல்,கவுண்டமணி,பிரசாந்த்,பாண்டியன்,செந்தில்,சத்யராஜ் என பலர் ஏதாவது ஓரிரு படங்களில் காமெடிக்காக பெண் வேடமிட்டுள்ளனர்.
ஆணழகன் என்ற படத்தில் பிரசாந்த் பெண் வேடமிட்டு கே.ஆர். விஜயாவின் வீட்டுக்கு குடிவருவார்.அத்தனை அழகாக அசப்பில் பழைய நடிகை பிரமிளா மாதிரி பிரமிளாவை விடவே அழகாக இருப்பார்.அதற்காக எப்போதும் பெண் வேடத்திலேயே நடிக்க முடியுமா?வேண்டுமா?
ரொம்பநாளா இதுபத்தி ஒரு பதிவு போட இருந்தேன்.இப்ப ஜிலேபியோடு சேர்த்தாச்சு.
ஜாங்கிரி ஜாங்கிரிதான்...ஜிலேபி..ஜிலேபிதான்..
ஆவ்...ஜிவாஜி னு பேரே சொல்ல மறந்தாச்சே...
எனக்குத் தெரிந்து மூனு சிவாஜி...
1.வீரர் 2.நடிகர் 3.மகா நடிகர்
படிக்கிற காலத்துல மூனுக்கு மூனு கட்டம் போட்டு....
க ர டி
ர யி ல்
டி ல் லி

ஜி வா ஜி
வா யி லே
ஜி லே பி

இப்படி எழுதி விளையாடுவோம்.இது தவிர ஜிவாஜிக்கும் அவர் வாயில இருக்கிற ஜிலேபிக்கும் என்ன சம்பந்தம் னு தெரியாது ;)
இதை அந்த மூன்று பேர் கிட்டயே [1.வீரர் 2.நடிகர் 3.மகா நடிகர்] கேட்டுத் தெரிஞ்சிக்குங்க.
நான் யாரையும் அழைக்கலைங்க..ஏன்னா இதுவரை யார்..யாரயெல்லாம் அழைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

9 மறுமொழிகள்::

ambi said...

கரக்ட் ஜாங்கிரி சுவையே சுவை. ஜிலேபி எல்லாம் சப்பாத்தி தேச ஸ்வீட்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

திடீர்ன்னு வரீங்க.. திடீர்ன்னு பதிவு போட்டுட்டு காணாப்போறீங்க...ம்.
ஜிலேபி எனக்கும் பிடிக்காது ஜாங்கிரின்னா உயிர்.

அபி அப்பா said...

எனக்கு இந்த ஜிலேபி ஜாங்கிரி வகையராக்களை விட மில்க் ஸ்வீட்ஸ் தான் இஷ்ட்டம். அதனால ரசகுல்லா விளையாட்டுன்னா நான் ரெடி!!!

ராமலக்ஷ்மி said...

அழகா அடுக்கிட்டீங்க!
ஜிலேபி ஜாங்கிரியை மட்டுமல்ல, அழகா பெண் வேடமிடுவோர் கதையையும்தான். நானும்தான் தந்திருக்கிறேனே ருசிக்க முடியாத ஜிலேபிய..வந்து பாருங்க.

Anonymous said...

\\திடீர்ன்னு வரீங்க.. திடீர்ன்னு பதிவு போட்டுட்டு காணாப்போறீங்க...ம்.
.\\

அதானே

தமிழ் பிரியன் said...

/// கயல்விழி முத்துலெட்சுமி said...

திடீர்ன்னு வரீங்க.. திடீர்ன்னு பதிவு போட்டுட்டு காணாப்போறீங்க..///
ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

தமிழ் பிரியன் said...

ஜிவாஜிக்கும் ஜிலேபிக்கும் கனெக்சன் சூப்பர்... :))))

நிஜமா நல்லவன் said...

///சின்ன அம்மிணி said...
\\திடீர்ன்னு வரீங்க.. திடீர்ன்னு பதிவு போட்டுட்டு காணாப்போறீங்க...ம்.
.\\

அதானே///


அதே தான் நானும் கேக்கிறேன்.

Vijay said...

//கண்மணி said...
நல்ல பதிவு விஜய் உங்கள் பேழையிலிருந்து இன்னும் பல நல்ல முத்துக்கள் [பதிவுகள்] வெளிவந்து ஒளி வீசட்டும்.
வாழ்த்துக்கள்.//

அன்புடன் வாழ்த்தியதற்கு நன்றி
-விஜய்
கோவை

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)