PAGE LOAD TIME

ஐயாம்...ய...பிலாக்கர்

விளையாட்டு போல ரெண்டு வருஷம் ஆகப் போகிறது பிலாக் தொடங்கி.இன்னமும் என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேருக்கு பிலாக்கிங் னா என்னனு தெரியலை.
மொபைல் போன் போல மிக அதிக புழக்கத்தில் வர இன்னும் நாளாகலாம்.
ஊடகங்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் ஓரளவு வெளியே தெரிய ஆரம்பிச்சிருக்கு.
இந்த நேரத்துலதான் 'தினப் புளுகு' பத்திரிக்கையிலிருந்து எனக்கு ஒரு ஃபோன்.
'மேம் நீங்க ஒரு பிலாக்கர் னு கேள்விப்பட்டோம்.உங்ககிட்ட ஒரு பேட்டிக்கு
வரலாமா'
சட்டென்று ஒரு கர்வம் தலைத் தூக்க 'ஓ யெஸ் தாராளமா வரலாம்.இன்னைக்கு ஈவினிங் ஐ யாம் ஃபிரீ' னு சொன்னேன்.[நாளைக்கு என்று சொன்னால் வேறு யாரையாச்சும் இண்டர்வியூ பண்ணிடுவாங்கன்னு முன்னெச்சரிக்கைதான்]
சாயங்காலம் பத்திரிக்கை நிருபர் வந்தார்.
நிரு:வணக்கம் மா.நீங்க எத்தனை வருஷமா பதிவெழுதறீங்க.
நான்:சுமார் 2 வருஷமா..
நிரு:வாவ் கிரேட்
சரிம்மா உங்க பதிவுகள் எதை மையப் படுத்தி எழுதப் படுகின்றன
நான்:பின்னூட்டங்களையும்..டிராபிக் ரேட்டையும்
நிரு:என்ன சொல்றீங்க...உங்க பதிவின் அடிப்படை நோக்கம் என்னன்னுகேட்டேன்
நான்:நானும் அதைத்தேன் சொல்றேன்.வலை ஒரு விரிந்து பரந்த எல்லைகளற்ற உலகம்.எதை வேணும்னாலும் எழுதலாம.கட்டுப்பாடுகள் இல்லை
நிரு:அப்ப அறிவியல்,துறை சார்பு,இலக்கியம் னு எழுதவில்லையா
நான்:பொதுவா வலையில் மிக மிகச் சிலரே சமுதாயம்,கலை அரசியல்,தமிழ் னு எழுதுவாங்க.பெரும்பாலானோர் டைம் பாஸுக்காக எழுதுவதால் ஜாலி,மொக்கை,கும்மி னு எழுதி பின்னூட்டம் பாப்போம்.
நிரு:அப்ப வலைப் பதிவினால் எதுவும் சாதிக்க முடியாதுன்னு நெனைச்சித்தான் நீங்க ஜாலியா எழுதறீங்களா?
நான்:அப்படியில்லைங்க.வலைப் பதிவு என்பது கட்டுப்பாடற்ற உரிமைகளைக் கொடுப்பதால் மனதில் பட்டவைகள் நெட்டில் சுட்டவைகள் னு எதுவும் எழுதுவோம்.இங்கு தீவிரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினால் யாரும் படிப்பார்களா என்பது சந்தேகம்.அப்படியும் பல நேரங்களில் பல விழிப்புணர்வு,விவாதப் பதிவுகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
நிரு:என்ன எழுதுகிறோம்,எதற்காக எழுதுகிறோம் என்ற குறிக்கோள் ஏதும் இல்லாமல் எழுதுவது தப்பில்லையா?அப்படி உணர்ந்திருக்கிறீகளா?
நான்:சில நேரம் அப்படி தோன்றியிருக்கு.ஆனா பல நேரம் அது ஒன்றும் தப்பில்லை னும் தோனும்.இணைய அரட்டை போலத்தான் இதுவும்.தங்களுக்கு தெரிந்த விஷயங்களை சுவாரஸ்யமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரட்டைக் கச்சேரி போலத்தான்.
ஆனாலும் இதிலும் ஒரு எல்லை,வரைமுறை,கண்ணியம் இருக்க வேண்டும் என்றே வலைப் பதிவர்கள் விரும்புகிறோம்.
நிரு:அப்படீன்னா வலைப் பதிவு,பிலாக்கிங் எல்லாம் டைம் பாஸ் தானா?பயனில்லையா?
நான்:அப்படிச் சொல்வேனா நான்.வலைப் பதிவு ஆரம்பித்த பிறகுதான் பல நாடுகளிலிருந்தும் நண்பர்கள் கிடைத்துள்ளனர்.புதிய பல செய்திகளை அறிய முடிகிறது.கணிணி தொடர்பான பலவற்றை அறிய முடிந்தது.இதற்கு இடையிலும் சில முகஞ்சுளிக்க வைக்கும் சூழ்நிலை தோன்றுகிறது.நமக்குப் பிடித்தவைகளை மட்டும் படித்துக் கொள்ள வேண்டியதுதான்.
நிரு:இந்த இரண்டு வருடத்தில் வலைப்பதிவில் நீங்க சாதிதது என்ன?
நான்:சாதனை என்ற வார்த்தை வலைப் பதிவுக்கு தேவையில்லை.மனதில் தோன்றும் எண்ணங்களின் வரி வடிவம்தான் பதிவுகள்.ஒருபதிவர் இதை மட்டும்தான் எழுதுவார் என்று யாரையும் முத்திரை குத்த முடியாது.கதை,கவிதை,பின் நவீனத்துவம்,கும்மி,மொக்கை,திரையிசை,கணிணி என எல்லாத் துறைகளையும் பதிவர்கள் எழுதுகிறார்கள்.
பொதுவா நாம் அடுத்தவர் நாட்குறிப்பேட்டை படிக்க மாட்டோம்.ஆனால் இங்கு அதை அவர் அனுமதியுடன் படித்து கமேண்ட் பண்ணுகிறோம்.
நிரு:உங்க வாசகர் வட்டத்தை எப்படீ உருவாக்கிக்கிறீங்க.
நான்:வட்டமுமில்லை சதுரமுமில்லை.தலைப்பை சும்மா ஜூடா வச்சம்னா என்னன்னு எட்டிப் பார்க்கும் ஆவல் வரும்.பதிவுல கொஞ்சம் உப்புமா கிண்டலாம் இல்லை கொசுவர்த்தி சுத்தலாம்.தலைப்புக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லாம எழுதலாம்.உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸா நல்ல பதிவும் எழுதலாம்.ஆனா ஈ ஓட்டினாலும் கவலைப் படக்கூடாது.
நிரு:முடிவா நீங்க வலைப்பதிவு பற்றி என்ன சொல்றீங்க
நான்:ஆரம்பமாகச் சொன்னதுதான் முடிவும்....வலைப்பதிதல் அவரவர் சொந்த விருப்பம்.பொதுவில் வைத்து பலர் படிக்க நேர்வதால் ஒரு கட்டுப்பாடும் கண்ணியமும் இருக்க வேண்டுமே தவிர...இவர் அப்படி எழுதுவார் அவர் இப்படித்தான் எழுதுவார் என்பதில்லை.இது எழுத்துக்கான, எழுத்தாளர் ஆவதற்கான முயற்சியுமில்லை .வெகு சிலரே அந்த ஆர்வம் கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் நம் எழுத்துக்கள் கவனிக்கப் படனும் என்பதை விட நாம் எழுதும் பதிவு எத்தனை பேரால் படிக்கப் படுகிறது இரசிக்கப் படுகிறது என்பதை அறியவே விரும்புகின்றனர்.
தினமும் புதிது புதிதாக பதிவர்கள் வருகை அதிகரித்து வருவதால் தங்களுக்கான் தனித் தன்மை நட்பு மற்றும் வாசகர் வட்டம் இருக்க வேண்டும் என்பதே பதிவர்களின் விருப்பமாக இருக்கிறது.

இணையத்தில் தமிழ் பயன்பாடு சாத்தியமான பிறகுதான் வலைப் பதிவுகளும் அதிகரித்திருக்கின்றன.அந்நிய மொழி உதவியின்றி எதையும் தாய்த் தமிழில் வெளிப்படுத்த முடிகிறது.
வலைப் பதிவை எளிமையாக்கியும்,வலைப் பதிவு கருவிகள் மென் பொருட்கள் தயாரித்தும் இன்னமும் மேம்பட்ட சேவைகளுக்காக பலர் உண்மையாக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்னைப் பொறுத்த மட்டில் ஐ யாம் ய பிலாக்கர் னு சொல்லிக் கொள்வது தவிர்த்து நான் ஒன்றும் பெரிய சாதனை பண்ணிவிடவில்லை.அதற்காக வருத்தப் படவுமில்லை.ஏனெனில் பெரும்பாலானோர் அப்படித்தான் இருக்கிறோம்.

டிஸ்கி:ரெண்டு வருஷமா என்னத்தைக் கிழிச்சோம்னு தோன்றிய எண்ண ஓட்டத்தைப் பதிவாக்கி வெளியிடும் சாமர்த்தியம் மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறேன்..;)

12 மறுமொழிகள்::

ராமலக்ஷ்மி said...

'பிளாகிங்' பற்றி 'அ' முதல் 'ஃ' வரை சொல்லியிருக்கீங்க கண்மணி!
இரண்டு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்!

இவன் said...

//பின்னூட்டங்களையும்..டிராபிக் ரேட்டையும்//
நான் மட்டும்தான் அப்படி என்று நினைச்சேன் எல்லோரும்மே அப்படித்தானா??

//பொதுவா நாம் அடுத்தவர் நாட்குறிப்பேட்டை படிக்க மாட்டோம்.ஆனால் இங்கு அதை அவர் அனுமதியுடன் படித்து கமேண்ட் பண்ணுகிறோம்.//
இது நச் பதில்....

//நிரு:உங்க வாசகர் வட்டத்தை எப்படீ உருவாக்கிக்கிறீங்க.
நான்:வட்டமுமில்லை சதுரமுமில்லை.//

செவ்வகம்தானே??

தமிழ் பிரியன் said...

ஐயாம் ஆல்சோ எ பிளாக்கர்...
(என்னை யாராவது பேட்டி எடுக்க வந்தால் தனியாக பெட்டி கவனிக்கப் படும்.).... சூப்பர் பதில்... :))))

தமிழ் பிரியன் said...

ஐயாம் ஆல்சோ எ பிளாக்கர்...
(என்னை யாராவது பேட்டி எடுக்க வந்தால் தனியாக பெட்டி கவனிக்கப் படும்.)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் டீச்சர் :))

Aruna said...

A very true and sincere interview!!!!
anbudan aruna

.:: மை ஃபிரண்ட் ::. said...

congrats.

கோபிநாத் said...

\\டிஸ்கி:ரெண்டு வருஷமா என்னத்தைக் கிழிச்சோம்னு தோன்றிய எண்ண ஓட்டத்தைப் பதிவாக்கி வெளியிடும் சாமர்த்தியம் மட்டுமே கற்றுக் கொண்டிருக்கிறேன்..;)\\

வாழ்த்துக்கள் அக்கா..;))

நீங்க சொன்னது எல்லாத்துக்கும் ஒரு ரீப்பிட்டே ;))

கயல்விழி முத்துலெட்சுமி said...

i am also ..a blogger.. (என்ன இண்ட்ர்வியூவே இனி எடுக்கமாட்டாங்களா)

கண்மணி உங்கள் போன்ற சில நகைச்சுவை பெண் திலகங்களுக்கு மத்தியில் நானும் ப்ளாக்கர் ன்னு சொல்லிக்க மகிழ்கிறேன்..
வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆனா ஈ ஓட்டினாலும் கவலைப் படக்கூடாது//
ஆமாங்கண்ணு ஆமாம்:)

மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்மணி. இதே போல எல்லோரையும் மகிழவைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பொன்வண்டு said...

வாழ்த்துக்கள் டீச்சர் !! :)

சரவணகுமரன் said...

//நாளைக்கு என்று சொன்னால் வேறு யாரையாச்சும் இண்டர்வியூ பண்ணிடுவாங்கன்னு முன்னெச்சரிக்கைதான்

:-)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)