PAGE LOAD TIME

சரோஜா தேவி... மீசை

இந்த அழகான புகைப் படத்தைப் பாருங்கள்.அழகும்,கனிவும்,சாந்தமும் ஒரு சேர மேலும் பார்க்கத் தூண்டும் அழகாக மட்டுமில்லாது கண்ணியமான அழகாகவும் இருக்கும் இந்த முகத்தில்

இப்படி மீசை வரைந்தால் எப்படியிருக்கும்....?

அப்படித்தான் சிறு பிள்ளைத்தனமாகத் தொன்றுகிறது தற்போது பாப்புலராகி வரும் 'ரீ மிக்ஸ்' பாடல்கள் என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டவர் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் திரு.அப்துல் ஹமீது அவர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியில் 'எல்லாமே சிரிப்புத்தான்'நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளர் ரீமிக்ஸ் பாடலை பாடிக்காட்டினார்.
அது குறித்துப் பேசும் போதுதான் திரு.ஹமீது அவர்கள் சொன்னார்கள்'சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது நாங்கள் விளையாட்டுத்தனமாய் ஒரு காரியம் செய்வோம்.அழகாக ஒட்டப்பட்டிருக்கும் சரோஜாதேவி போஸ்டர் மீது மீசை வரைந்து பார்ப்போம்.அது எத்தனை சிறு பிள்ளைத்தனமானதோ அப்படித்தான் உள்ளது இப்போதைய ' ரீ மிக்ஸ் கலாச்சாரமும்' என்றவர் மேலும் கூறினார்'பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் எத்தனை அர்த்தச் செறிவுள்ளது.அதில் முத்தைத் தருபத்திக் கிறை....என்ற திருப்புகழ் அடிகளைப் போல ஆலங்குடி சோமு அவர்கள் 'முத்துக்கள் விதைக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைப்பேன்.....' என்று அருமையான வரிகளைப் போட்டிருப்பார.

இப்போது வந்த பொன்மகள் ரீமிக்ஸ் ,'பொன்...மகல்.வந்தால்....பொருல்..கோடி தந்தால்.' என நுனி நாக்கில் சிதைக்கப்பட்டு பாடப்படுகிறது'என்று வருத்தப்பட்டார்.
மேலும் அவர் கூறிய இன்னொரு தகவல் அவர் ஊரில் பொருட்கள் வாங்கும் போது கவரின் மீது
''தமிழை வளர்க்க
தமிழில் பேசுங்கள்''
என அச்சிடப் பட்டிருக்குமாம்.நல்ல தமிழை நல்ல முறையில் பேசினாலே தமிழ் நன்றாக வளரும் என்றார்.
இன்னமும் பழைய பாடல்களை 'துள்ளாத மனமும் துள்ளும்'என இரவு நேரங்களில் கேட்கும் போது கிடைக்கும் இன்பம் இந்த ரீ-மிக்ஸில் கிடைப்பதில்லை.
இசையே உயிர் இசையே மூச்சு எனத் திரியும் இளசுகளுக்கு ரீமீக்ஸ் மிகவும் பிடிக்கும்.இதுவும் இசையின் இன்னொரு பரிமாணம் பழையதை புது வடிவத்தில் தருதல்.இதெல்லாம் அரைக் கிழங்களுக்கு எங்கு புரியப் போகிறது ...என எகத்தாளம் பேசலாம்.
ஆனால் தற்போது பழையப் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைப்பது,திரைப்படங்களுக்கு பொல்லாதவன் ,பில்லா,திருவிளையாடல் என பழைய பெயர்களையே திரும்ப வைப்பது வளர்ச்சியின் இன்னொரு பரிமாணமாக இல்லாமல் கற்பனைத் திறனின் வறட்சியாகவே படுகிறது.
புதுமை என்பது புதிது புதிதாக கண்டுபிடித்து செயல்படுத்துவதில் இருக்க வேண்டுமேயன்றி பழையதை புதிய மொந்தையில் தரும் விதமாக இருக்கக் கூடாது.

20 மறுமொழிகள்::

நிஜமா நல்லவன் said...

//பழைய பெயர்களையே திரும்ப வைப்பது வளர்ச்சியின் இன்னொரு பரிமாணமாக இல்லாமல் கற்பனைத் திறனின் வறட்சியாகவே படுகிறது.///


முற்றிலும் உண்மையே:)

நிஜமா நல்லவன் said...

//திரு.ஹமீது அவர்கள் சொன்னார்கள்'சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது நாங்கள் விளையாட்டுத்தனமாய் ஒரு காரியம் செய்வோம்.அழகாக ஒட்டப்பட்டிருக்கும் சரோஜாதேவி போஸ்டர் மீது மீசை வரைந்து பார்ப்போம்//

அட நம்ம மாதிரி தான் எல்லோரும் போல. நான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டுத்தனமா சிம்ரன் முகத்தில் மீசை வரைஞ்சிருக்கேன்:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல உதாரணம் தான்.. ஆனா கண்மணி இதெல்லாம் சொன்னா யாரு கேக்கறா.. உங்களுக்கு வயசாகிடுச்சு.. மாற்றம் வரத்தான் செய்யும்ன்னு கடகடன்னு கம்ப்ளெய்ண்ட் வரும்..

g said...

புகைப்படம் அழகாக இருந்தது. மீசை வச்ச புகைப்படம் கூடுதல் அழகு. ரீமிக்சைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.

Yogi said...

பழைய பாடல் விரும்பிகளுக்கு (நண்பர்களின் கேலி கிண்டல் தனி :) ) ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது முழுக்கவும் உண்மை.

கண்மணி/kanmani said...

நி.நல்லவா நாம் எல்லோருமே சின்னப் பிள்ளகளாய் இருந்த போது[?!]அழகான படத்துக்கு மீசை வரைஞ்சி பார்த்திருப்போம்..இதெல்லாமும் எல்லாக் குழந்தைப் பருவத்தினருக்கும் உண்டு போல[ நாம தான் கிறுக்கோன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்]

கண்மணி/kanmani said...

முத்து வயசாச்சி னு சொல்லி ரசனை இல்லைனு சொல்லலாம்.ஆனா பாருங்க ஒரு சின்னப் புள்ளைக்கு புடவை கட்டி அல்லது வேட்டி கட்டி பெரிய மனுஷங்களா பாவிச்சா அழகு.அதையே வயசான தாத்தா பாட்டிக்கு நிஜாரும் கவுனும் போட்டுப் பார்த்தா ..பாக்க நல்லாருக்குமா?அப்படித்தான் ரீமிக்ஸ் இருக்கு

கண்மணி/kanmani said...

ரசனை என்பாது வயதைப் பொறுத்து மட்டுமில்லைதானே.....இசையை அனுபவிக்க ரசிக்க வயது தடையே இல்லை பொன்வண்டு.ஆனா ரீமிக்ஸ் ரசனை பீஸா கலாச்சாரம் போல் அவசியத் திணிப்பாகி விட்டது

கண்மணி/kanmani said...

வாங்க ஜிம்ஷா...பேரெல்லாம் வித்தியாசமா இருக்கு. உங்களுக்கு ரீமிக்ஸ் பிடிக்கும் போல.

மங்களூர் சிவா said...

ரீமிக்ஸ்-ங்கிறது அழகான பெண்ணின் முகத்துல மேக்கப் மாதிரிங்க மீசை மாதிரி இல்லநன்றி - நயந்தாரா

வல்லிசிம்ஹன் said...

//முத்து வயசாச்சி னு சொல்லி ரசனை இல்லைனு சொல்லலாம்.ஆனா பாருங்க ஒரு சின்னப் புள்ளைக்கு புடவை கட்டி அல்லது வேட்டி கட்டி பெரிய மனுஷங்களா பாவிச்சா அழகு.அதையே வயசான தாத்தா பாட்டிக்கு நிஜாரும் கவுனும் போட்டுப் பார்த்தா ..பாக்க நல்லாருக்குமா?அப்படித்தான் ரீமிக்ஸ் இருக்கு//

அசத்திட்டீங்க கண்மணி. நல்ல உதாரணம். ஒவ்வொரு பாடலும் சிதைக்கப் படும்போது மனம் கஷ்டப்படுகிறது.

Thamiz Priyan said...

ரீ மிக்ஸ் பாடல்கள்.... :(
கான்சர்ட் என்ற பெயரில் பாடல்களின் கொலைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்... :(

அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு மீசை!!!:-))))

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்ல உதாரணம் தான்.. ஆனா கண்மணி இதெல்லாம் சொன்னா யாரு கேக்கறா.. உங்களுக்கு வயசாகிடுச்சு.. மாற்றம் வரத்தான் செய்யும்ன்னு கடகடன்னு கம்ப்ளெய்ண்ட் வரும்..
//

ஹி..ஹி. ரிப்பீட்டே :))

சென்ஷி said...

டீச்சர்... சரோஜாதேவிக்கு சரியா மீசை வைச்சா அழகாத்தான் இருந்திருக்கும். நீங்கதான் மீசைய ரொம்ப பெருசா வரைஞ்சு கெடுத்துட்டீங்க :(

கோபிநாத் said...

அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்...;)

ரீமிக்ஸ் - சாரி எனக்கு அந்த அளவுக்ககு அதுல ஈடுபாடு இல்லை ;)

Unknown said...

ஒரு காலத்துல பாட்டு அதிகமாகவும் இசை அழுந்தியும் இருக்கும். பின்னர் பாட்டும் இசையும் சம அளவு போல் கலந்து வந்தது. அதன் பின் இசை கூடுதலாகி பாட்டே கேட்கவில்லை. இது ரொம்ப மோசம் ஆனால் அந்த பாட்டை இப்ப உள்ள குட்டீஸ் பாடிக் காட்டுகிறார்கள். அதுதான் அவர்களுக்கு பிடிக்குது. காலத்துக்கு தகுந்தாற் போல மாறிக் கொள்ள வேண்டியதுதான்.

எனக்கும் இந்த ரீமிக்ஸ் பாட்டுகள் பிடிப்பதில்லை.
குறிப்பாக ரீமிக்ஸோ இல்லையோ
'பொன்...மகல்.வந்தால்....பொருல்..கோடி தந்தால்.
என்று பாடி தமிழைக் கொலை செய்பவர்களையும், தமிழும் உச்சரிப்பும் அறியாமல் பாடும் வடநாட்டு பாடகர்களை பாட வைப்பவர்களையும் பார்த்து செம எரிச்சல் வருகிறது.

ரசிகன் said...

போட்டோ மீசை உதாரணம் சூப்பருங்க கண்மணி அக்கா:)

Vijay said...

ரீமிக்ஸ், நல்லாதான் இருந்துச்சிங்க. ஆனா, நம்ப சினிமா பார்முலாவுல எது எல்லாம் சக்சஸ் ஆச்சோ, அது எல்லாம் திரும்ப திரும்ப வந்து, ஜனங்க, வேணான்டா வுட்ரான்றவரைக்கும் சுத்திக்கிட்டுதான் இருக்கும். அது மாதிரி இதுவும் சீக்கிரமே மாறும். ஜுச்ட் கால ஓட்டம்தான். Just wait and see.

SP.VR. SUBBIAH said...

/////இன்னமும் பழைய பாடல்களை 'துள்ளாத மனமும் துள்ளும்'என
இரவு நேரங்களில் கேட்கும் போது கிடைக்கும் இன்பம் இந்த ரீ-மிக்ஸில்
கிடைப்பதில்லை.////

கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆளைக் கொல்லாமல் விட்டால் போதாதா?

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)