PAGE LOAD TIME

சுலபமாக எடையைக் குறைக்கும் வழி....

ஒரு மனிதர் ரொம்ப குண்டாக இருந்தார்.
உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் முடியலை.
அந்த நேரம் பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். உடல் எடை குறைய ஒரு ஜிம்மில் ஒரு புதுமையான வழியை அறிமுகப் படுத்தியிருந்தனர்.
அவரும் அங்கு சென்று விசாரித்தார்.
நீங்க பணம் கட்டுங்க ஒரு மாதம் டிரீட்மெண்ட் தருவோம்.எப்படி யார் தருவது எல்லாம் பணம் கட்டிய பிறகு சொல்வோம் என்றார்கள்.
அவர்கள் கேட்ட தொகை அதிகம்னாலும் கட்டிவிட்டு வந்தார்.
மறுநாள் யாரோ கதவைத் தட்ட திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி.
மிக அழகான ஒரு பெண் கவர்ச்சியான உடையில் நின்றிருந்தாள்.
தான் அந்த ஜிம்மில் இருந்து வருவதாகவும் அவருக்கு எடை குறைக்கும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொன்னாள்.
இவர் ஏதோ அந்த அழகி 'முந்தானை முடிச்சு' படத்துல தீபா டீச்சர் 'அ' ஆ போட கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்த மாதிரி தன்னைத் தொட்டு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கப் போகிறாள் என சந்தோஷப்பட
அவளோ அவள் முன்னால் ஓடுவதாகவும் இவர் தன்னை துரத்திப் பிடிக்க வேண்டும் அப்படிப் பிடித்தால் அவள் அவருக்கே சொந்தம் என்றாள்.
தொட்டாலே போதும்னு நெனச்ச நம்ம ஆளு அவளே சொந்தமாகலாம் என்றதும் தேன் குடித்த நரி போல மயங்கி அவளைத் துரத்தினார்.
மெல்லிய அழகான அந்த பெண்ணின் மாரத்தன் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நம்ம ஆளு தஸ்ஸூ ப்ஸ்ஸூனு மூச்சிறைக்க ஓடினார்.பிடிக்க முடியலை
இது மறுநாளும் தொடர,இப்படியே ஒரு மாதம் போனதும் அவர் எடை 20 கிலோ குறைஞ்சிடுச்சி.
ஆசை விடாமல் அடுத்த மாதமும் பணம் கட்டினார்.
இந்த முறை இன்னும் மிக அழகான ஒரு பயிற்சியாளினி வந்தாள்.
இவரும் இவளையாவது பிடிச்சிட்டு அடையனும் என வேகமாக துரத்த ஆரம்பித்தார்.முடியலை.
இந்த மாதம் 30 கிலோ குறைந்து விட்டது.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் பணம் கட்டி னார்.கடந்த இரண்டுமுறையை விட இன்னும் அழகான பெண் வருவாள்.எப்படியும் அவளைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மறுநாள் கதவு தட்டப்பட்டது.ஆசையோடு கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி.
இன்ப அதிர்ச்சி இல்லீங்கோ பயமான அதிர்ச்சி.
வாட்ட சாட்டமான மாமிச மலை போல ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான்.ஆளு பார்த்தா நம்ப 'ஹல்க்கு' [பச்சை மனிதன்] மாதிரி இருந்தான்.
இந்தமுறை அவன் துரத்த இவர் ஓட வேண்டுமாம்.அப்படி ஓடும்போது அவனிடம் சிக்கினால் இவர் அவனுக்கே சொந்தமாம்.
துரத்தல் ஆரம்பித்தது.
அவன் கிட்ட மாட்டக் கூடாதுன்னு ஓடினார்..ஓடினார்...ஓடிக் கொண்டேயிருந்தார்.
ஒரு மாதம் முடிந்து பயிற்சிக்கு வந்த மாமிசமலை ஆள் ஜிம்முக்குபோய் ரிப்போர்ட் கூட குடுத்துட்டார்.
ஆனால் நம்ம ஆள இன்னும் காணோம்.
யாராவது நேத்து சென்னையில் நடந்த மாரத்தன்ல பார்த்தீங்களா?
இல்லை பீஜிங்க்கு ஓடிட்டாரா தெரியலை.
பார்த்தா சொல்லுங்க பிளீஸ்!

டிஸ்கி:தமிழ்மணத்துல கூட ஒரு அப்பா பதிவர் எடை குறைக்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.அவருக்கு இந்த ஜிம் அட்ரஸ் குடுங்க.

14 மறுமொழிகள்::

Blogger said...

ஆங்கிலத்தில் படித்த ஓன்று தான்...ஆனாலும் நல்லதொரு மொழிபெயர்ப்புக்காக பாராட்டுக்கள்...

ramachandranusha(உஷா) said...

:-)))))))))))))))))))))))

கதிர் said...

//தமிழ்மணத்துல கூட ஒரு அப்பா பதிவர் எடை குறைக்கனும்னு சொல்லிக்கிட்டிருந்தார்.//

ஏற்கனவே அவர் தூங்கிட்டு இருக்கும்போது அவரை எலி இழுத்துட்டு போயிடுதுன்னு ரூம்மேட்ஸ் புகார் பண்றாங்க. இதுல இன்னும் எடை குறைக்கணும்னா..... கொசு வந்து தூக்கிட்டு பறந்துடும். நல்லவேள துபாய்ல கொசு இல்ல.

நிஜமா நல்லவன் said...

ம்ம்ம்....ஜூலை 3-ம் தேதி போஸ்ட் போட்டுட்டு போனீங்க....திரும்ப செப்டெம்பர் 1-ம் தேதியா? ஏன் இவ்ளோ இடைவெளி அக்கா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி எத்தனை நாளாச்சு பதிவு போட்டு? பயங்கர பிசியாகிட்டீங்க போல ? நெல்லை அதிகம் வேலை கொடுக்குதா?
என்ன போங்க தமிழ்மணம் பதிவு இதெல்லாம் மற்ந்த மாதிரி அப்பா பதிவர் எப்படி இருப்பாருங்கறதையும் மறந்துட்டீங்களா?

Anonymous said...

நல்ல
நகைச்சுவை
பதிவு
பகிர்தமைக்கு
நன்றி

கண்மணி/kanmani said...

நன்றி ரெபெல்
மற்றும் அனானி

கண்மணி/kanmani said...

உஷாக்கா நன்றி

முத்து நான் எதையும் மறக்கலை.
நேரம்தான் இல்லை
தம்பி தான் அப்ப பதிவர் பத்தி சொல்லிட்டாரே பாக்கலையா

கண்மணி/kanmani said...

தம்பி வாங்க
உங்களைத்தான் வச்சி பதிவெழுத நெனைச்சேன் ;( கோச்சுப்பீங்கனு விட்டுட்டேன்

அப்பா பதிவர் மாட்டிக்கிட்டார்

நிஜமா நல்லவா நல்லாயிருப்பா
மாசம் ஒரு பதிவு போடவே மேட்டர் சிக்கலை.உன்னை மாதிரி டாட்டா பதிவு போடட்டுமா:))

Thamiz Priyan said...

டீச்சர்! மீள் வருகைக்கு நன்றி! அடிக்கடி பதிவு போடுங்க டீச்சர்... வந்து வந்து பார்த்து ஏமாந்துட்டு போகாம இருப்போமெ... :)

Thamiz Priyan said...

///கண்மணி said...
.உன்னை மாதிரி டாட்டா பதிவு போடட்டுமா:))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டீச்சர், பதிவுகளைப் படிக்கிறீங்கன்னு நல்லாவே தெரியுது... இனி அடிக்கடி கிளாசுக்கு வாங்க!]
டீச்சருக்கு காத்திருக்கும் மாணாக்கர்கள் சங்கம்

சரவணகுமரன் said...

:-)

Anonymous said...

:))
கலக்கல்

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-)))))

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)