PAGE LOAD TIME

A...B...C...D

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எண்ட்ரீ.
பிஸி என்று பொய் சொல்ல விரும்பலை.என்ன எழுதுவது என ஒரு தேக்கமும்,சோம்பலுமே காரணம்.
புதுப்புது தமிழ்மண வரவுகள் வந்து தூள் கிளப்பும்போது,எத்தனை நாளைக்குத்தான் அம்புஜம் மாமி,அல்வா,ச்சுப்பிரமணி என்று உங்களைப் படுத்துவது?
இருந்தாலும் அப்பப்ப நாமலும் இருக்கோம்னு காட்டனுமில்ல?ஹி..ஹி..

தீபாவளி சமயத்துல விஜய் டிவியில் நடிகர் சூர்யா,பாமரன் பங்கேற்ற நீயா நானா? நிகழ்ச்சி.செயல்வழிக் கல்விமுறை நல்லதா?தேவையா? என்ற விவாதம். பல சுவாரஸ்யமான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டாலும் நடிகர் சூர்யா சொன்ன ஒரு விஷயம் கவனிக்கத் தக்கதாக இருந்தது.
அவருடைய பள்ளிப் பருவத்தில் அவர் படிக்கும்போது 'சி'பிரிவில்[C section] போடப்பட்டதாகவும்,' அ' பிரிவு [A section] மாணவர்கள் என்றால் மட்டுமே நன்கு படிப்பவர்கள் என்ற கருத்து நிலவியதால் தான் எப்போதும் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
நமக்கும் அப்படியொரு சூழ்நிலை அந்த காலத்திலேயே வந்தது.அப்பல்லாம் அட்மிஷன் சுலபமா கிடைச்சிடும் ஆனா ஹைஸ்கூல்ல சேரும்போது ஒரு டெஸ்ட் வைப்பாங்க.
நாம லீவுல ஊர் சுத்திவிட்டு ஸ்கூல் தொறந்த போது வந்ததால டெஸ்ட் பத்தி தெரியலை.
வாட்ஸ் யுவர் நேம்? வாட்ஸ் யுவர் ஃபாதர் போன்ற கேள்விகளுக்கு பதில் எழுதிவிட்டு பொது அறிவுக் கேள்விகளை விட்டுவிட ரேங்க் அடிப்படையில் 'ஈ'
[D sec] பிரிவுக்கு போடப்பட்டேன்.
அ,ஆ பிரிவுல எல்லாம் உலக மகா புத்திசாலிகள் இருப்பது போலவும் இ,ஈ.....உ பிரிவுகளில் எல்லாம் மக்கு சாம்பிராணிகள் போலவும் தோணும்.
அடுத்த வருஷம் வீட்ல சொல்லி 'அ' பிரிவுக்கு வந்துட்டேன். கடைசிவரை எல்லா வகுப்புகளிலும் ,பள்ளி இறுதியிலும் முதலாவதாகவே வந்தேன். ஒருவேளை 'ஈ' பிரிவிலேயே இருந்திருந்தாலும் நான் தான் முதலாவது வந்திருப்பேன்.இருந்தாலும் 'அ' பிரிவு இல்லைனா படிக்கத் தகுதியில்லாதவங்க போல ஒரு நினைப்பு.
இப்பக்கூட மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அப்படித்தான் இருக்கு.அதிலும் பெரிய இடத்துப் பிள்ளகள் எல்லாம் [மக்காக இருந்தாலும் கூட] 'அ' பிரிவில் இருக்கும்

சூர்யா சொன்னது போல இன்னமும் பள்ளிகளில் மிக நன்றாகப் படிக்கக் கூடிய அல்லது பெரிய இடத்துப் பிள்ளைகளை 'அ' மற்றும் ஆ பிரிவுகளில் போடும் வழக்கமே இருக்கிறது.
எல்லாப் பிரிவு வகுப்புக்களும் ஒரே பள்ளியுடையது என்ற எண்ணமும்,ஒவ்வொரு பிரிவிலும் நன்கு படிக்கும் மாணவர்களோடு சுமாரான மாணவர்களையும் கலந்து சேர்த்தால் பாகுபாடும் இருக்காது மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உதவியாக சேர்ந்து படிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
தாழ்வு மனப் பான்மைக்கும் இடமிருக்காது.
இனி இதற்காகவும் கவலைப் படத் தேவையில்லை.அது அதுக்குன்னு 'பானம்' இருக்கு.குடிச்சாப் போதும்.நம்ம வூட்டுப் புள்ளைங்க அப்துல்கலாம் ஆக மாறிடும்.
முன்பெல்லாம் குழந்தைங்க உடல் வளர்ச்சிக்கு,ஊட்டச்சத்து மிகுந்த பானம் என சிலதை விளம்பரப் படுத்துவாங்க.
இப்பெல்லாம் நேரிடையா பிரெய்ன் வளர்ச்சிக்கே பாலில் கலந்து குடிக்கும் பானம் இருக்காம்.குடிச்சா நாசா விஞ்ஞானியாகவோ அல்லது அப்துல் கலாமாவோ ஆயிடலாம்.
அப்பெல்லாம் 'வெண்டைக்காய் நிறைய சாப்பிடு' நல்லாக் கணக்குப் போடலாம் சொல்லி சாப்பிட வைப்பாங்க.
சத்துள்ள பானம் அவசியம்தான்.ஆனா குடிச்சாலே அப்துல் கலாம் அல்லது ஐஸ்வர்யா ராய் ஆக முடியும்னா ஜோர்தானே.
அப்படியே தமிழ்மணத்துல பதிவாப் போட்டுத் தாக்குறதுக்கும்,பின்னூட்டம் அள்ளறதுக்கும் ஏதாச்சும் பானம் இருக்கா மக்கா? பாருங்க A.B.C.Dனு [ அ,ஆ,இ,ஈ ]ஆரம்பிச்சு எங்கியோ போயிடுச்சி பதிவு.

டிஸ்கி: சும்மா கிடந்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டாரு ஒரு மண்டபத்து சா மி ...ஹூம் காமெடிங்கிற பேர்ல கடிச்சி வைக்கப் போவுது...விதி வலியது.....

11 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

டீச்சர், வெல்கம் பேக்....
(ஒவ்வொரு தடவையும் சொல்ல வச்சிட்டு காணாம போய்டுறீங்க.. :( )

முத்துலெட்சுமி-கயல்விழி said...

என்ன கண்மணி டீச்சருக்கே.. ஏபிசிடி வகுப்பா??
:)

Anonymous said...

யக்கோவ், அப்பப்ப வர்ரீங்க , காணாம போறீங்க, என்ன நடக்குது அங்கே

அபி அப்பா said...

வாங்க டீச்சர்! எங்க ஆளையே கானுமே? என்னது டீச்சருக்கு 3 பின்னூட்டம் தானா? டேய் பசங்களே ஓடிவாங்கடா! இங்க தீபாவளி கொண்டாடுவோம்!

கண்மணி said...

தமிழ்ப்பிரியன், முத்துலஷ்மி,சின்ன அம்மிணி,அபி அப்பா நன்றி....

குட்டிபிசாசு said...

யக்கோவ்,

எங்க போயிட்டீங்க! அப்படியே பிந்தைய தீபாவளி வாழ்த்துக்கள்!!

ஆயில்யன் said...

/ 'வெண்டைக்காய் நிறைய சாப்பிடு' நல்லாக் கணக்குப் போடலாம் சொல்லி சாப்பிட வைப்பாங்க//


இது உண்மைதான்!

கணக்கு பரீட்சைக்கும் கணக்கு போட்டு பார்த்தமோ இல்லையோ வெண்டைக்காய் காலி பண்ணிட்டு போயிருக்கோம் !

ஆனாலும் ரிசல்ட் வழக்கம்போல வெறும் 98தான் :(((

ஆயில்யன் said...

// குட்டிபிசாசு said...
யக்கோவ்,

//

குட்டி பிசாசா இருந்துக்கிட்டு இந்த எபெக்ட் நல்லாவா இருக்கு??


யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

இதுதான் ஜூப்பரூ :))))

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...
யக்கோவ், அப்பப்ப வர்ரீங்க , காணாம போறீங்க, என்ன நடக்குது அங்கே
//

யக்கோவ் எப்பவாவது வர்ரீங்க உடனே காணாம போறீங்க என்ன நடக்குது அங்கே?

(இது ஒ.கேவா?)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
டீச்சர், வெல்கம் பேக்....
//


வெல்கம் மட்டும் சொல்லு மேன்!

எதுக்கு நீர் பேக் சொல்றீரு? அதான் அவுங்க உடனே பின்வாங்கிடறாங்க :(

ஆயில்யன் said...

//ச்சுப்பிரமணி என்று உங்களைப் படுத்துவது?
//

ச்சுப்பிரமணி நல்லா இருக்கா????

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)