PAGE LOAD TIME

இன்னொருமுறை [மகாத்மா] காந்தி பிறக்க வேண்டும்

எதேச்சையாக ஜெயா தொலைக்காட்சியைத் திருப்ப ஒரு காட்சி .
ஒரு பத்து இருவது பேர் உருட்டுக் கட்டைகளுடன் ஓட,ஒரே ரகளை.
ஏதோ சினிமாக்காட்சி போலும் என் நினைத்தவளுக்கு,பிண்ணனியில் செய்தி வாசிக்கும் குரல் கேட்க,
மெய்மறந்து,விழி உறைய அந்தக் காட்சிகளைப் பார்த்த போது நெஞ்சு படபடத்தது.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை என்பது புரிந்தது.
நிறையப் பேர் அதன் பின்னர் சன்,பொதிகை ராஜ் இப்படி செய்திகளில் பார்த்திருக்கக் கூடும்.ஆனால் சுடச்சுட[இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு வருந்துகிறேன்]ஜெயாவில் பார்த்திருந்தால் இன்னமும் நெஞ்சு கொதிப்பு அடங்கியிருக்காது.
யார் யோக்கியன்?யார் மீது தவறு?இதெல்லாம் அப்பாற்பட்டது.இரண்டு கோஷ்டியுமே முரட்டுத் தனமாகத் தாக்கிக் கொண்டனர் என்றாலும்,தனியாய் மாட்டியவனை தெரு நாயைப் போல அடித்த காட்சி.....
அவனும் முதலில் கத்தியோடுதான் பாய்ந்தான்.ஒருவேளை அவன் கை ஓங்கியிருந்தால் எதிரணியில் பல உயிர்கள் அங்கேயே போயிருக்கலாம்.
ஆனால் அவன் வசமாக மாட்டியதும் கீழே விழுந்து அசைவின்றி கிடந்தபோதும் ஆத்திரத்தோடு..திரும்பத் திரும்ப அடித்தது கொடூரமாக இருந்தது.
அப்படியே காமிரா திரும்பி சற்று தொலைவிலேயே நின்று கொண்டிருந்த காவல்துறையினரைக் காட்டியதும் படபடப்பு இன்னும் அதிகமானது.
ஏற்கனவே கலவரம் வெடிக்கக் கூடும் என எதிர்பார்த்தே அங்கு குவிக்கப் பட்டிருந்த போதும் ஏன் அவர்கள் பேசாமல் இருந்தனர்.
உத்தரவு கொடுக்கவில்லை என்று சொல்கின்றனர்.
இதற்கு முன்பு அனுமதியில்லாமல் சட்டக் கல்லூரி வளாகத்தில் நுழைந்ததற்காக வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கலாம். அப்பாவி கைதி மாட்டிக் கொண்டால் வீரம் காட்டும் காவல்துறை குறைந்த பட்சம் விலக்க முயற்சித்திருக்கலாம்.அதற்கு கூடவா அனுமதி வேண்டும்.ஆனால் கலவரம் வருமென்று அங்கு வந்து காத்திருக்கும் போது இப்படி கை கட்டியிருந்த காவல்துறை செய்தது ஒரு தவறென்றால் ,
ஓடி ஓடி வெவேறு கோணத்தில் வீடியோ எடுத்த மீடியாவை என்ன சொல்வது...
எத்தனை பேர் பார்த்தீர்களோ தெரியாது...அடிபட்ட ஆறுமுகமென்ற பையனை ஆட்டோவில் ஏற்றிய பிறகு ஒரு மீடியாக்காரர் ஓடோடி வந்து என்ன ஏது கேட்டபடியே படமெடுத்துக் கொண்டிருந்தார்.
உயிருக்கு ஒருவன் போராடும் போதும் கருமமே கண்ணாக இருப்பதுதான் அவர்கள் கடமை போலும்.
ஆனால் மீடியாக்காரர்களால் தான் இந்தப் பிரச்சினை கவனம் பெற்றது என்பது உண்மைதான்.ஆனாலும் அந்த நேரத்திலும் காமிராக் கோணமும் ,கேள்விகளும் மட்டுமே பிரதானம் என நினைக்கும் அவர்களை நினைத்தால் எரிச்சல் வருகிறது.

இது பற்றி பேசும்போது என் தோழி சொன்னாள்.ஒருமுறை மீட்டர் வட்டி பிரச்சினை தொடர்பாக ஒருவனைத் தெருவில் இழுத்துப் போட்டு புரட்டி எடுத்தார்கள்.யாரும் கிட்டே போகவில்லை.ஏன்னா நமக்கும் உதை விழலாம் என்ற பயம் என்றாள்.
மீறி ஏதாவது செய்யப் போனால் உன்னை யாரு சட்டத்தைக் கையிலெடுக்கச் சொன்னது என ஆயிரம் கேள்விகள்.கோர்ட்,சாட்சினு இழுத்தடிக்கக் கூடிய நிலை இதெல்லாம் தவிர்க்கவே வெறுமனே வேடிக்கைப் பார்க்கும் பொது ஜனம்.
ஆனால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையே வேடிக்கை பார்த்ததே அதுதான் கொடுமை.

எதேச்சையாக டிவி வாங்கச் சென்ற ஒரு பெண்மணி கடையில் இருந்த டிவிக்களில் பற்பல சேனல் நிகழ்ச்சிகள் ஓடுவதைப் பார்த்த படியே எதை வாங்கலாம் என யோசிக்க அவர் கண்ணிலும் இந்த தாக்குதல் காட்சி பட்டிருக்கிறது.
அவரும் ஏதோ சினிமாவில் வரும் பைட் சீன்னு பார்க்க அடுத்த கணமே அலறுகிறார்.
அடிபட்டு,மரத்தைப் பிடித்தபடி தொங்குவது தன் மகன் ஆறுமுகம் எனத் தெரிந்ததும்.
இந்தக் கலவரத்துக்கு ஜாதீய பிரச்சினைதான் காரணம் என்கின்றனர்.
என்னுடைய வாதம் இதுதான்.எந்த பிரச்சினையாக இருந்தாலும் அடிதடி,வெட்டுக் குத்துதான் தீர்வா?
அப்படி அடிதடியில் ஈடுபட்டவர்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையே பாழாகும் எதிர்காலம் கேள்விக்குறியகும்னு யாருமே ஏன் யோசிப்பதில்லை.
இப்படி நினைத்திருந்தால் அகிம்சா வழியிலேயே ஒரு மனிதனால் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே.
முன்பு எப்போதும் இல்லாத அளவு வன்முறைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்க யார் காரணம்?எது காரணம்?
அரசியல் அமைப்புகளா?இல்லை வன்முறை தலை விரித்தாடும் இன்றைய திரைப் படங்களா?

'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்' னு சொன்னதை இளைய தலைமுறை தவறாமல் கடைபிடிக்கிறதா?

பிஞ்சு நெஞ்சில் நஞ்சைக் கலந்து இளைய தலைமுறையை நாசப்படுத்தும் இந்தக் கலாச்சாரம் ஒழியுமா?இல்லை மேலும் மேலும் வேர் விட்டு வளருமா?
கருணை,இரக்கம்,அகிம்சை எல்லாம் அகராதியில் அளவில் மட்டும்தானா?
இனி அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையா? பேச்சு வார்த்தை உடன்படிக்கை என்பதெல்லாம் பேரளவில்தானா?
அடிபடுபவனும்,அடித்தவனும் யாராக இருந்தாலும் எல்லோருக்கும் வலி ஒன்றுதானே?உயிர் ஒன்றுதானே?
வன்முறை என்பது அறவே ஒழிந்து அகிம்சை வழியில் உரிமைகளைப் பெற வேண்டும்,தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்றால் இது மட்டுமே வழியாக இருக்க முடியும்.

இன்னொருமுறை [மகாத்மா] காந்தி பிறக்க வேண்டும்.


பி.கு:ஒரு பெண்ணாக தாயுள்ளத்துடன் ஒருவன் அடிபடுவதைத் தாங்கமாட்டாது அய்யோ வன்முறையை விடுங்களேன் என புலம்பத்தான் இந்த பதிவு.
மற்றபடி இதில் உள்ள நுண்ணரசியல் [எது சம்மந்தப்பட்டது,யார் சம்மந்தப்பட்டதாயினும்]எனக்குத் தெரியாது.

11 மறுமொழிகள்::

கோபிநாத் said...

இப்போதைக்கு உள்ளேன் அக்கா ;)))

Robin said...

மகாத்மா காந்தி மேல் ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம்?
மகாத்மா காந்தியை தேச துரோகி என்று தூற்றும் ஒரு கும்பல் மீண்டும் அவர் பிறந்து வந்தால் உயிரோடு கொளுத்திவிடும் என்பதை மறக்கவேண்டாம்.

Anonymous said...

What gandhi will do ?

Whether he will change this people attitude?

If yes why he didnt do it in his own time ?

He gave name Harijan now he may change the name to some other jan but things wont change without change in people mindset.

கண்மணி said...

கோபி சாமர்த்தியக்காரன் நீ
ராபின் ,அனானி சாதி பற்றியோ காந்தி என்ன செய்ய முடியுமென்றோ வாதிடவில்லை.

அகிம்சைன்னா காந்தின்னுதான் தெரியும் அந்த சமாதானம் கிடைக்கத்தான் காந்தி கேட்டேன்.
ஆனா இது பேராசைனு தெரியும்.
ஜாதி பேதம் வர்க்க பேதம் வேனாம்னு ஆசைப்படத்தான் முடியும்.வேறென்ன செய்ய?
குறைந்த பட்சம் வன்முறை கூடாது என்பதே ஆசை.

கோபிநாத் said...

படித்துவிட்டேன்...;(

கண்மணி said...

கோபி கோச்சிக்கிட்டயா?பின்ன படிக்காம அபிஅப்பா மாதிரி பின்னூட்டம் போட்டா?

பாச மலர் said...

அந்தக் காட்சி மிகவும் கொடுமையாக இருந்தது கண்மணி..சினிமாவைப் பார்த்துவிட்டு வன்முறைக் காட்சிகள் என்று முகம் சுளிக்கிறோம்..இதை என்ன சொல்வது..

இந்தக் காவல்துறை, மீடியா இரண்டும் இப்பாடி வேடிக்கை பார்க்கிறதே என்ற்ற கோபம் மட்டும்தான் மிஞ்சியது...

தமிழ் பிரியன் said...

மிகவும் மன வருத்தத்தை அளித்தது... இனி வரும் காலங்களில் இது இன்னும் மோசமாக மாறுமே தவிர, சரியாக வாய்ப்பில்லை அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால்

தமிழ் பிரியன் said...

மிகவும் மன வருத்தத்தை அளித்தது... இனி வரும் காலங்களில் இது இன்னும் மோசமாக மாறுமே தவிர, சரியாக வாய்ப்பில்லை அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால்...

Muthukumar said...

அவரு என்ன, இது மாதிரி பிரச்சினை வரும்போதெல்லாம் நான் வந்து தீத்து வெக்கிறேன்-னு உத்தரவாதம் குடுத்துட்டுப்போனாரா இல்ல, எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வுகளை அவரு ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டுப்போனாரா ?

இதாங்க நம்ம கிட்ட இருக்கிற பெரிய தப்பே. நம்ம பிரச்சினைகளுக்கு அடுத்தவன் வந்து தீர்வு சொல்லட்டும், நாம அக்கடா-ன்னு நம்ம வேலைய பாத்துட்டு இருக்கலாம்னு நெனக்கிறது. (சிவாஜி பாணில சொல்லப்போனா நோகாம நொங்கெடுக்கிறது) நா ஒங்கள குறிப்பா குத்தம் சொல்லல அம்மணி, நம்ம எல்லாரோட மனப்பான்மைய சொல்றேன்.

ஏன் காந்தி இன்னொரு தடவ பொறக்கணும் ? நாம் ஒவ்வொருத்தரும் ஏன் நமக்குள்ள இருக்கற காந்திய அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது ? அட, அதுக்கான யத்தனமாவது ?

வாலியோட கவிதை ஒண்ணுதான் ஞாபகம் வருது.

மரங்கள் தமக்குள் பேசிக்கொண்டன.
நம்மிடமிருந்து எத்தனையோ
சிலுவைகளை உருவாக்குகிறார்கள்
ஆனால் -
அவர்களிடமிருந்து இன்னொரு ஏசு
இன்னும் ஏன் உருவாகவில்லை ?

அன்புடன்
முத்து

கண்மணி said...

வாங்க முத்துக்குமரன் உங்க கேள்வி ஞாயம்தான்
ஒரு விஷயம் பாருங்க இன்னொரு முறை மகாத்மா ன்னு சொன்னதுக்கு பதிலா இன்னொரு மகாத்மா பிறக்க வேண்டும் என் சொல்லியிருக்க வேண்டும்.
நான் சொல்ல வந்தது உங்கள் கருத்தில் ஓரளவு ஒத்துப் போவதே.

பிறத்தல் என்பது நாளை ஒரு புது பிறப்பல்ல நம்மில் யாருக்கேனும் ஏற்படக் கூடிய மாற்றம் நம்மை புதுப்பித்தல்
நீங்களோ நானோ அல்லது இன்னொருவரோ மகாத்மாவாக உருவாகலாம்.ஹிம்சைக்கு [வன்முறை] எதிராக கொடி பிடிக்கலாம்.
அதற்கான தைர்யமும்,தியாகமும் ,உறுதியும் கொண்டு முன் வரும்போது நம்மிலிருந்து நிச்சயம் ஒரு மகாத்மா [காந்தி] பிறக்கலாம்.
காந்தி என்ற பெயர் அகிம்சையின் வடிவம்
அன்னை தெரசா என்பது தியாகம் போல

வாலியின் கவிதையில் என்றுமே ஒரு நிதர்சனம் இருக்கும் அருமை.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)