PAGE LOAD TIME

சொல்லத்தான்...நினைக்கிறான்....

பகலையும் இரவாக்கிடும் மங்கிய வெளிச்சம்
காற்றில் மிதந்து வரும் மெல்லிசை கானம்

சில்லென்று மேனி சிலிர்க்கும்
இதமான ஏசி குளிர்

நட்சத்திர விடுதியின் தனிமை
ஏங்கிய பொழுதுகளின் நிதர்சனம்
காத்திரு தருணங்களின் நிஜம்

அழகின் குத்தகையைத் தனதாக்கியவள்
அருகாமை தந்திடும் பரவசம்
பாய்சனாய் கொல்லும்
அவளின் மீதான நறுமணம்

சொல்லத் துடித்திடும் மனது
ஒத்துழைக்கத் தயங்கிடும் உதடுகள்

மூன்றே வார்த்தைகள் என்றாலும்
மூச்சு முட்டத் தவிக்கிறான்....

வாய்வரை வந்தவை வார்த்தைகளாகாமல்
வடிவம் சிதைந்து நெஞ்சுக்குள் இறங்கி
குளிர் பானத்தோடு கலந்து கரைந்து
தடம் தெரியாமல் போய்விடும் தயக்கம்....

காலம் காத்திருக்கலாம்
காதலியும் காத்திருக்கலாம்
விடுதிக்காரன் விடுவானா

நேரம் நெருங்குகிறதே
வாய்க்குமோ இனியொரு சந்தர்ப்பம்
மெல்லத் துணிந்து மெதுவாகச் சொன்னான்.......''பில்லை நீயே கொடுத்துவிடு''

10 மறுமொழிகள்::

கண்மணி said...

test comment...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......இடுகையை தமிழ்மணத்துல இணைக்க முடியல...
தமிழ்மண்ம் பேச்சு டூ......

சின்ன அம்மிணி said...

யக்கோவ், கடைசில பஞ்ச் டயலாக் சூப்பர், இப்படிக்கு குசும்பன் எழுதப்போகும் எதிர் கவிதை எதிர்பார்க்கும் உங்கள் வாசகர்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சின்ன அம்மிணி .. கண்மணியே குசும்பன் ஸ்டைல்ல தான் கவிதை எழுதி இருக்காங்க.. :)))

தமிழ் பிரியன் said...

டீச்சர், கடைசியில் அடிச்சுட்டீங்க சிக்சர்... ;))

அபி அப்பா said...

super teacher!

ரமணன்... said...

ha ha ha :)

வெடிகுண்டு முருகேசன் said...

கலக்கல் கவுஜ :)

தமிழ் பிரியன் said...

டீச்சர் எதுக்காக நாங்க காத்திருக்கனும்... எனக்கு மட்டும் சொல்லிடுங்க பிளீஸ்... டிசம்பர் 12 வரைக்கும் எல்லாம் காத்திருக்க முடியாது...:)

Anonymous said...

:))

Anonymous said...

கொடுமை :((

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)