PAGE LOAD TIME

20+30+15+10=மனிதன்

கடவுள் உலகத்தில் கழுதையை உண்டாக்கினாராம்.
அதனிடம் சொன்னாராம் "நீ காலை முதல் மாலை வரை உழைக்கனும்.எல்லா சுமைகளையும் உன் முதுகில் சுமக்கனும்.உனக்கு 50 வருட ஆயுளைத் தருகிறேன்."
கழுதை சொன்னதாம்''நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் 50 வயது வேண்டாம் 20 வருடம் போதும்''
கடவுள் சம்மதித்து அதன் கோரிக்கையை நிறைவேற்றினாராம்.
அடுத்து நாயை படைத்தாராம்.
''வீட்டைக்காவல் காப்பதுதான் உன் முக்கிய கடமை.உனக்கு கொடுப்பதைத் தான் உண்ண வேண்டும்.அவர்களுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும்.30 வயதை உனக்குத் தருகிறேன்"என்று சொன்னாராம்.
நாயும் "நீங்கள் சொவது சரி.ஆனால் எனக்கு 30வயது மிக அதிகம்.15 வருடமே போதும்'' என்றதாம்.
அடுத்ததாக கடவுள் குரங்கைப் படைத்தாராம்.
"நீ மரத்துக்கு மரம் தாவித் தாவி வாழனும்.தந்திரங்கள் செய்து மற்றவர்களைக் கவரத் தெரிஞ்சுக்கனும்.உனக்கு 20 வருட ஆயுள்"என்று கடவுள் கூற,
"சரிதான்.இதெல்லாம் செய்து விடுகிறேன்.ஆனால் 20 வருடம் வேண்டாம்.10 வருடங்களே போதும்னு" குரங்கு கேட்டதாம்.
கடவுளும் சம்மதித்து விட்டு,அடுத்து மனிதனை உருவாக்கத் தொடங்கினாராம்.
"என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் நீயே சிறந்தவன்.சிந்திக்கும் ஆற்றல் உனக்கு மட்டுமே தருகிறேன்.எல்லா உயிரினங்களையும் நீயே ஆளுமை செய்யலாம்.உனக்கு 20 வருடங்கள் வாழத் தருகிறேன் "என்றாராம்.
மனிதனுக்கு எப்பவுமே ஆசை அதிகம்.பேராசையோடு அவன் கேட்டானாம்,"எனக்கு கழுதை வேண்டாமென்ற 30 வருடங்கள்,நாயின் மிச்ச பதினைந்து வருடங்கள் ,குரங்கின் 10 வருடங்களையும் சேர்த்துத் தாருங்கள்".
"நன்றாக யோசித்துத் தான் கேட்கிறாயா?உனக்கு சம்மதம் என்றால் எடுத்துக் கொள் ''எனக் கடவுள் கூற
மனிதன் முதல் 20 வருடங்கள் 'மனிதனாக' வும்
அடுத்த 30 வருடங்கள் காலையிலிருந்து மாலை வரை ஓய்வின்றி உழைக்கவும்,படிப்பு வேலை ,திருமணம் ,குடும்பம் என சுமைகளைச் சுமக்கவும் ஆரம்பித்தான்.
அடுத்த 15 வருடங்கள் குடும்பம்,குழந்தைகளைக் காப்பாற்றுவதிலும் அவர்களைக் காப்பதிலும் செலவிடத் தொடங்கினான்.
அடுத்த 10 வருடங்கள் அந்த பிள்ளை வீடு ,இந்தப் பிள்ளை வீடு என அங்கும் இங்கும் மாறி மாறி சென்று தங்கவும்,பேரப் பிள்ளைகளுக்கு கதைகள் சொல்லி அவர்களைச் சந்தோஷப் படுத்திக் கவர்வதிலும் பொழுதைப் போக்கத் தொடங்கினானாம்.

7 மறுமொழிகள்::

சந்தனமுல்லை said...

அப்போ வீட்டுல திட்டுறது சரிதான் போல!!:-))

அதிரை ஜமால் said...

\Blogger சந்தனமுல்லை said...

அப்போ வீட்டுல திட்டுறது சரிதான் போல!!:-))\\

ennannu

கண்மணி said...

அதிரை ஜமால் said...

\Blogger சந்தனமுல்லை said...

அப்போ வீட்டுல திட்டுறது சரிதான் போல!!:-))\\

ennannu//


ஆரம்பத்துல கண்ணா ராஜானு வீட்ல கொஞறவங்க போகப் போக கழுதை னு திட்றதும் நாயா உழைக்கிறான்னு சொல்றதும் இதுக்குத்தான்

தமிழ் பிரியன் said...

உண்மை தான் டீச்சர்! ஆனா நான் இப்ப கழுதையா?.... அவ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

நானும் கழுதைதான் ஆனால் 20+30 ல் எத்தனை வயசுன்னு கண்டுபிடிக்க முடியாதே;)

தமிழ் பிரியன் said...

///கண்மணி said...

நானும் கழுதைதான் ஆனால் 20+30 ல் எத்தனை வயசுன்னு கண்டுபிடிக்க முடியாதே;)//
ஹிஹிஹி இன்னும் இரண்டோ, மூன்றோ வருஷத்துல கழுதை வாழ்க்கை முடிஞ்சு வேற வாழ்க்கை ஆரம்பமாகிடும் டீச்சர்.. கவலைப்படாதீங்க

கோபிநாத் said...

ம்ம்..நான் ரெண்டாவது இடத்துக்ககு வந்துட்டோம் ;))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)