PAGE LOAD TIME

டிரிங்...டிரிங்..டிரிங்....

'டிரிங்' 'டிரிங்'
டெலிபோன் மணி ஓயாமல் அடிக்க கைவேலையை போட்டுவிட்டு ஓடி வந்து எடுத்தால்
'சுந்தரம் இருக்காருங்களா'?
'அப்படி யாரும் இல்லைங்க'
'இது மதுரை தானுங்களே'
'இல்லை கோயமுத்தூர்'
ஓ சாரிங்க ராங் நெம்பர் போலனு போன் கட்டாகும்.
இது பெரும்பாலான நேரங்களில் நடக்கக் கூடியது.இந்த மாதிரி ராங் கால் அழைப்புகள் பல நேரம் சுவாரஸ்யமா இருந்தா கொஞ்சம் சுத்த விட்டும் வேடிக்கை பார்ப்பதுண்டு.போன் செய்து விட்டுத் தான் யாருன்னு சொல்லாமலே நம்மளையும் பேச விடாம சம்மந்தமேயில்லாத ஊர் கதையெல்லாம் சொல்லும் ஆசாமிகளும் உண்டு.

'டிரிங் டிரிங்'
'ஹலோ'
'மேடம் நாங்க ஐசிஐசிஐ பேங்கல இருந்து பேசறோம்'
'என்ன விஷயம்'
'நாங்க புதுசா ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சிருக்கோம்.0% வட்டியில கடன் தருகிறோம்னு ஆரம்பிக்கும் போதே இடைமறித்து 'சாரிங்க அவரு வெளிய போயிருக்கார். தேவையென்றால் வந்ததும் சொல்றேன்'னு கட் பண்ணிடனும்.
இல்லைனா அந்த ஸ்கீம் இந்த ஸ்கீம் என ஒரு அரை மணி நேரம் பொண்ணு தாளிச்சு எடுத்துடுமே.அடுப்புல வச்சிட்டு வந்த பொருளும் கருகி தீஞ்சிப் போயிருக்கும்.

'டிரிங் டிரிங்'
'ஹலோ'னு போனை எடுத்தால்
'உங்களுக்கு பழைய டிரிங் டிரிங் சத்தம் கேட்டு அலுத்து போயிடுச்சா?உடனே காலர் டியூனை மாத்துங்க.... என ஒரு ரெக்கார்டு பண்ணப்பட்ட குரல் ஒலிக்கும்.தப்பித் தவறி அழுத்த நெனைச்சா அந்த பட்டனை அழுத்து இந்த பட்டனை அழுத்துனு ஒரு 20 நிமிஷம் சுத்தவிடுவாங்க.

'டிரிங் டிரிங்'
'ஹலோ'உங்க டாடா இண்டிகாம் பில்லைக் கட்ட ஒரு சுலபமான வழி.நீங்க ....க்கு...லாகான் செய்தோ அல்லது ************என்ற டோல் ஃபிரீ எண்ணுக்கு போன் செய்தோ...பாருங்க
நம்ம கிட்ட டாடா இண்டிகாம் கனக்ஷனே இருக்காது.

'டிரிங் டிரிங்'
மதிய நேரத் தூக்கத்தில் இருந்தவளை போன் சத்தம் எழுப்பிவிட எடுத்து,
'ஹலோ'
'மேடம் சார் இருக்காங்களா'?
'நீங்க யாரு என்ன வேணும்'

'மேடம் நாங்க டாடா லைப் இன்ஷ்யூரன்ஸ் ல இருந்து பேசறோம்.இங்க எங்க பிராஞ்ச் தொடங்கி ஒருவருஷம் ஆகுது.அந்த ஆண்டுவிழாவுக்காக ஒரு சர்ப்பிரைஸா எல்லா லேண்ட்லைன் டெலிபோன் நெம்பரையும் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுத்ததில் உங்க நெம்பரும் வந்திருக்கு மேடம் வாழ்த்துக்கள்.'

ஒன்னுமே புரியலைன்னாலும் சரி அதுக்கேன்ன செய்யனு கேட்க,
'உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு கொடுப்போம்.நீங்க பிரீமியம் ஏதும் கட்ட வேண்டாம்.'ஆனா நீங்க திருமணமானவராக இருக்கனும்.60 வயதுக்கு உட்பட்டவராயிருக்கனும்.சாரோட உடனே எங்க ஆபிஸுக்கு வாங்க'

உடனே சந்தோஷத்துல மிதந்து ,ரங்கமணிக்கு போன் போட்டு வரச் சொல்லி கிளம்பியிருப்பேன்னு நெனைச்சீங்களா? நாங்க படு உஷார் பார்ட்டியில்ல.
இது போல என் தோழி ஏமாந்த கதைதான் தெரியுமே.

இந்த மாதிரி வந்த எதோ ஒரு விளம்பர போனை நம்பி கணவருடன் போனவளிடம் என்னென்னவோ பேசி அதைத் தருவோம் இதைத் தருவோம்னு சொல்லி அதுக்கு அட்வான்ஸா உங்க கிட்ட தற்சமயம் கையில் இருப்பதைக் கொடுத்தால் போதும்னு சொல்லி 2000 ரூபாயை பிடுங்கி கிட்டு ஏமாத்திட்டாங்களாம்.
அதனால் நான் சுதாரித்துக் கொண்டு சரி பார்க்கலாம்னு போனை கட் பண்ணாலும் இன்னொரு கூத்தும் நடந்தது பாருங்க.

வீட்ல ரெண்டு லேண்ட்லைன் கனக்ஷன் இருக்கு.ஒரு லைனில் வந்த இந்த போனை கட் செய்த சில நிமிடங்களில் இன்னொரு போனிலும் அழைப்பு.இரண்டும் அடுத்தடுத்த சீரியலில் உள்ள எண்கள்.
நன்றாகத் தெரிந்து விட்டது.நிச்சயம் அதே கம்பெனி போனாகத் தான் இருக்கும்னுட்டு.
உடனே எங்க வீட்டு வாண்டு ஒன்னைக் கூப்பிட்டு போன் அட்டெண்ட் செய்யச் சொல்ல,
'தம்பி வீட்ல யாரும் பெரியவங்க இல்லையா?'
நீங்க யாரு?'
நாங்க டாடா லைப்...இன்ஸ்யூரன்ஸ்ல ..பேசறோம். சரி பிறகு பேசறோம்னு வச்சிட்டாங்க.ஸ்பீக்கர் போனில் கேட்டதால் அந்த உரையாடல் சத்தமாகவே கேட்டது.

என்னங்க ஏதோ டிரிங் டிரிங் கதையா இருக்கேன்னு நெனைச்சிட்டீங்களா? இதெல்லாம் எனக்கே நிகழ்ந்த அனுபவங்கள்.இன்னமும் நிறைய இது போல அழைப்புகள் வந்திருக்கு.இவை கொஞ்சம் சாம்பிள்தான்.

நேரம் காலம் தெரியாமல் எரிச்சலூட்டக் கூடிய இந்த மாதிரி அழைப்புகள்ள இருந்து தப்பிக்க வழி என்னன்னு தெரியலை.மொபைல் மட்டுமில்லாம லேண்ட் லைன்லயும் வந்து தொல்லை பண்ணும் இந்த அழைப்புகள் எரிச்சலாக இருந்தாலும் ஏமாந்து விடாமயும் இருக்கனும்.அதுக்குத்தான் பதிவு.

இது வாய்ஸ் மேட்டர் பதிவு.அடுத்து எஸெமெஸ் தொல்லை பதிவு தொடரும்.[விடமாட்டோம்ல]

15 மறுமொழிகள்::

அதிரை ஜமால் said...

ஹலோ!

அதிரை ஜமால் said...

\\இது வாய்ஸ் மேட்டர் பதிவு.அடுத்து எஸெமெஸ் தொல்லை பதிவு தொடரும்.\\

நல்லாயிருக்குங்க...

கண்மணி said...

நன்றி ஜமால்.
நானென்ன கதையா சொல்றேன். நல்லாருக்குன்னு சொல்றீங்க:))

நடந்தது...நடந்து கொண்டிருப்பது...

தமிழ் பிரியன் said...

மெய்யாலுமா டீச்சர்... அப்ப இனி யாருக்கு போன் செய்யனும்னா முதலில் கொஞ்சம் கலாய்ச்சிட்டு அப்புறம் போன் செய்யனும்னு தோணுதே?.. ;))

அதிரை ஜமால் said...

\\Blogger கண்மணி said...

நன்றி ஜமால்.
நானென்ன கதையா சொல்றேன். நல்லாருக்குன்னு சொல்றீங்க:))

நடந்தது...நடந்து கொண்டிருப்பது...\\

கதைகள் தான் நல்லாயிருக்குமா.

நிஜமும் நல்லாயிருக்கும்.

அட நிஜமாங்க.

கண்மணி said...

தமிழ்ப் பிரியன் என்னுடைய 'கலாய்ப்பு' டேகில் உள்ள மூன்று பதிவுகளைப் படிச்சிருக்கீங்களா?
அது கதையல்ல நிஜம் [டீச்சரின் லூட்டி]

நான் ஆதவன் said...

//மெய்யாலுமா டீச்சர்... அப்ப இனி யாருக்கு போன் செய்யனும்னா முதலில் கொஞ்சம் கலாய்ச்சிட்டு அப்புறம் போன் செய்யனும்னு தோணுதே?.. ;))//

ரிப்பீட்டே.....

நானானி said...

ஹலோ..மேடம்! நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? கொஞ்ச நேரம் மொக்கை போடலாமா?

Shakthiprabha said...

எரிச்சலூட்டும் அனுபவத்திலிருந்து ரசனைக்குறிய பதிவு.

கோபிநாத் said...

\\இது வாய்ஸ் மேட்டர் பதிவு.அடுத்து எஸெமெஸ் தொல்லை பதிவு தொடரும்.[விடமாட்டோம்ல]\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...ரைட்டுக்கா...நடத்துங்க ;))

நிஜமா நல்லவன் said...

/இது வாய்ஸ் மேட்டர் பதிவு.அடுத்து எஸெமெஸ் தொல்லை பதிவு தொடரும்./

தொடருங்க...தொடருங்க...!

குசும்பன் said...

//உங்க கிட்ட தற்சமயம் கையில் இருப்பதைக் கொடுத்தால் போதும்னு சொல்லி 2000 ரூபாயை பிடுங்கி கிட்டு ஏமாத்திட்டாங்களாம்.//

என்னது சும்மா வெளியே போகும் பொழுதே 2000 கையில் இருந்துச்சா? எங்க பாக்கெட்டில் எல்லாம் மேக்ஸிமம் 15ரூபாய்க்கு மேல இருந்தது இல்ல:))))

உங்க தோழி நம்பர் சொல்லுங்க அவுங்களுக்கு துபாயில் ஒரு குலுக்களில் அவுங்க பெயர் விழுந்து இருக்கும்:))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நானும் இப்படித்தான் ஒரு நாள் கண்மணிங்கறவங்களுக்கு போன் செய்து பதிவர் கண்மணி இருகாங்களா.. அவங்க ஏன் பதிவெழுதலன்னு கேட்டுவச்சேன். ஹிஹிஹி:)

சின்ன அம்மிணி said...

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்.

Anonymous said...

please register your mobile or phone to ndnc(National Do Not Call Registry).refhttp://ndncregistry.gov.in/

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)