PAGE LOAD TIME

1+2+3+4+5+6+7+8-4=32

மழை விட்டாலும்....தூவானம் போல 32 தொடரில் இழுத்து விட்டுட்டாங்கப்பூ

அடுப்புக்குத் தப்பி வாணலியில் விழுந்த கதை.தமிழ்ப்பிரியன் அழைப்புக்கு தப்பி காட்டாறின் அழைப்பில் மாட்டியாகி விட்டது.
யப்பா எந்த பரீட்சையிலும் 32 கேள்விகேட்டதில்லை.32 என்ன கணக்கு சாமீயோவ்!


1.உங்களுக்கு இந்தபேரு எப்படி வந்தது?உங்களுக்கு இந்த பேர் பிடிக்குமா?

பிலாக் எழுதனும்னு முடிவெடுத்த போது ஒரு பேரு தேவைப்பட்டது.புனைபேர் வச்சுக்கிற அளவு எழுதிக் கிழிக்கப் போவதில்லை.சோ ஏற்கனவே நமக்கு இருந்த பல நாமகரணங்களில் பாட்டியால் மட்டுமே அன்பாக அழைக்கப் பட்ட கண்மணி கிளிக் ஆனது.ஆரம்பத்தில் இந்த பேரு பாத்து யாருமே பிலாக் பக்கம் வரதில்லையாம்.ஆனாலும் கண்மணி டீச்சர் னு சொல்லும் போது ரொம்ப பிடிச்சிருக்கு.

2.கடைசியாக அழுதது எப்போது?
நிறைய தருணங்கள்.அன்பான உறவுகளின் நட்புகளின் பிரிவில் என்றாலும் என் குடும்பத்து ஒரு உறுப்பினராய் இருந்த ஆசை நாய்க்குட்டி என்னைப் பார்த்தபடியே கண்களாலேயே உயிர் விட்ட நேரம்.

3.உங்க கையெழுத்து அழகாக இருக்குமா?
தெரியலைங்க.ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி கிறுக்குவேன்.சில பேர் சுமாராயிருந்தாலும் மேக்கப்புக்கு பிறகு ஜொலிப்பது போல ஒருவழியா ஒப்பேறிடும்.

4.பிடித்த மதிய உணவு?
சுத்த சைவமுங்கோ.முட்டை எப்பவாச்சும்.அதுவும் சைவம்தானே;)

5.நீங்களே வேறு யாராவதாக இருந்தா உங்ககூட நட்பு வச்சுக்குவீங்களா?
இதென்ன கேள்வி.நட்பு பாராட்டும் யாராக இருந்தாலும் ஓகே.ஆனா தலைக்கனம் இருந்தா டூ

6.கடல்ல குளிக்கப் பிடிக்குமா?அருவியில குளிக்கப் பிடிக்குமா?
போனவருஷம் வரை இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை.ஆனா இப்பக் கேட்டா பாபநாசமா?குற்றாலமா?மணிமுத்தாறானு ஒரு பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விதவிதமான அருவிக்குளியல்.சுகானுபவம்.கடலா?எப்பவும் இல்லை.சுனாமிக்குப் பிறகு நோ.

7..ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகத்தை.புன்னகை இருந்தால் நட்புடன் சிரிப்பேன்.உர்ர்ர்னு இருந்தால் விலகிப் போயிடுவேன்.

8.உங்களிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்?பிடிக்காத விஷயம்?

பிடிக்காத்து சட்டெனக் கோபப்படுவது
பிடித்தது யாரையும் நட்பாக்கிக் கொள்வது

9..உங்க துணைவரிடம் பிடித்த/பிடிக்காத விஷயம்

வேறென்ன ரங்கமணி நான் சொன்ன பேச்சைக் கேட்டா பிடிக்கும்.
கேக்கலைன்னா பிடிக்காது;)

10.யார் இப்போது பக்கத்தில் இல்லைனு வருத்தப்படுகிறீர்கள்.
முதல் குழந்தை என்பதால் ஆசையாக செல்லம் கொடுத்த அப்பா இப்போது இல்லையே என்று.
11.இதை எழுதும் போது எந்த நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்.
ஆரம்பித்த போது ஆரஞ்ச் இப்போது பச்சை முடிக்கும் போது .....???? அட ஒரே நாள்ல எழுதலைப்பா

12.என்ன படித்து/பார்த்துக் கொண்டு எழுதுகிறீர்கள்?
வேறென்ன?அழுகாச்சி சீரியல்தான்.

13.வர்ணப் பேனாவாக மாறுவதானால் என்ன நிறமாக ஆசை.
கறுப்பு...அதுதான் கோணல் கையெழுத்தையும் அழகாகக் காட்டும்.

14.பிடித்த மணம்
மென்மையான எல்லா நறுமண்மும்.அதிலும் மல்லிகை/சந்தனமுல்லை/பன்னீர் ரோஸ் [அடச்சே ஒரே வார்த்தையில் பூ னு சொல்லு தாயீ]
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

மன்னிச்சிடுங்க .யாரையும் இல்லை.ஏன்னா நாந்தான் இந்த ஆட்டத்தில் கடேசி.என் நட்புவட்டம்/வேடந்தாங்கல் பறவைகள்/கும்மி குடும்பம் ஏற்கனவே குமுறி விட்டது.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

காட்டாறுஇந்த தோழியின் கவிதைகள் /அனுபவங்கள்.அம்மணியும் இப்போது அதிகம் எழுதுவதில்லை
தமிழ்ப் பிரியன் இவரின் பதிவுகளில் மென்மையும் வன்மையுமான கருத்துக்கள்

17) பிடித்த விளையாட்டு?
வேறென்ன வார்த்தை விளையாட்டுதான்.[விவாதம்/பிடிவாதம்]

18) கண்ணாடி அணிபவரா?
ஆம்...ஹூம்..டீச்சருங்களுக்கே உள்ள சாபக்கேடு.விடைத்தாள் திருத்தியே வெளிறிப்போன பார்வைக்கு வேறென்ன செய்ய?அதிலும் நாம கண்ணாடி போட்ட கதை சூப்பர்.
பவர் செக் பண்ண டாக்டர் ஒரு பலகையைக் கொடுத்து அதிலுள்ள் வாக்கியங்களைப் படிக்கச் சொல்லி.ஒவ்வொரு பவர் வில்லைகளைப் பொருத்த
குட்
ஓகே
சூப்பர்
எக்சலெண்ட் னு சொல்லி சொல்லி +0.5 பவருக்கு 2.5 கண்ணாடி போட்ட அறிவாளி.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
கண்மணி ன்னா நகைச்சுவை தானுங்களே

20) கடைசியாகப் பார்த்த படம்?
டிவிடியில் ..நான் கடவுள்.மனசை என்னமோ பண்ணுச்சு.
திரையில்.....மாசில்லா..மணி...அடங்கப்பா ஒவ்வொரு பாட்டுக்கும் திரையரங்கில் லைட் போட்டு போட்டு நேத்து பிறந்த பாப்பாவிலிருந்து பாட்டிவரை [நான் இல்லீங்க] ஆடி குத்தாட்டம் போட்டு திரையரங்கே அதிரும் அளவுக்கு [கதை இல்லைனாலும் ]விறுவிறுப்பு இருந்தது.ரசித்தேன்

21) பிடித்த பருவ காலம் எது?
செப்டம்பர் மாதம்....என் வாழ்வின் பல முக்கிய சந்தோஷ நிகழ்வுகளை உள்ளடக்கியதால்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ஜூவி..ஆவி..நக்கீரன்..சாரி இலக்கியம் எல்லாம் இல்லீங்கோ லோக்கல் நடப்புகள்தான்

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
டெஸ்க்டாப்புனு கேட்டதுக்கு பதில் டெம்ப்ளேட்டுன்னு கேட்டிருக்கலாம்.நிறைய.....என் பிலாக்குக்கு வர்ரவங்க மண்டை குழம்பும் அளவு...ஒரு பதிவை படித்து முடிக்கும் முன்பே நாலு டெம்ப்லேட் மாறியிருக்கும்.இரசனைங்கோ

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது குழந்தையின் மழலைச் சிரிப்பும் பேச்சும்.....
பிடிக்காதது வாக்குவாதத்தில் எனக்கெதிராக எழும் குரல்...

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
தினமும் என்றால் சுமார் 2கிமீ..வேலைக்கு
இப்போது தமிழ்நாட்டின் தென்கோடிக்கு அருகில்....

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நீங்கதான் சொல்லோனும்

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஒன்று மட்டும் என்றால் நம்பிக்கை துரோகம் ரெண்டுன்னா + பொய்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களும்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
ஏன் இப்போது உள்ளபடியே இருக்கலாம்.

31) மனைவி/கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
அப்படி ஒன்றுமில்லை.தெரிந்தே செய்யும் நேர்மை

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
ஒரே முறை கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்.
முடிந்தவரை நாமும் சந்தோஷமாகவும்...
முடிந்தவரை அடுத்தவர்களை சந்தோஷப் படுத்தவும்...
போதுமே

அப்பாடி ஒருவழியா [விடிய விடியக் கண்விழித்து]பதில் எழுதிட்டேன்.
Free Signature Generator

21 மறுமொழிகள்::

கதிரவன் said...

டீச்சர், ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப்பக்கம் வந்திருக்கீங்க போல. அடிக்கடி எழுதுங்க..

அப்புறம், நீங்க 2வது பதில்ல சொல்லியிருக்கறது ’ச்சுப்பிரமணி’யையா ?? :-(

காட்டாறு said...

நன்றியக்கோவ்! என்னவோ தெரியல.. உங்க பதிவை வாசிக்கும் போது... BG-ல பாட்டு கேட்டது... "கேட்டதும் கொடுப்பவளே.. கண்ணு மணி... "அப்படின்னு. வேறு யாருக்காவது கேக்குதா.. கேட்டு சொல்லுங்கோவ். நன்றி நன்றி நன்றி!

நட்புடன் ஜமால் said...

9..உங்க துணைவரிடம் பிடித்த/பிடிக்காத விஷயம்

வேறென்ன ரங்கமணி நான் சொன்ன பேச்சைக் கேட்டா பிடிக்கும்.
கேக்கலைன்னா பிடிக்காது;)\\


ஜூப்பர் டீச்சர் ...


வாழ்க்கை பற்றியும் நல்லா சொல்லியிருக்கீங்க (டீச்சர்ன்னா சும்மாவா ...)

ராமலக்ஷ்மி said...

அனைத்து பதில்களையும் ரசித்தேன்:)!

தமிழ் பிரியன் said...

நன்றிங்க டீச்சர்!

தமிழ் பிரியன் said...

///தமிழ்ப் பிரியன் இவரின் பதிவுகளில் மென்மையும் வன்மையுமான கருத்துக்கள்///
டீச்சர்.. இப்படியெல்லாம் அபாண்டமா சொல்லலாமா? நாம எல்லாம் எந்த காலத்துல வன்மையா பதிவு போட்டோம்.. ;-))

Anonymous said...

இப்பல்லாம் பதிவுலகம் பக்கம் நீங்க வர்றதே இல்ல போல இருக்கு.

சென்ஷி said...

நலமா டீச்சர்!?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்மணி உங்களுக்கு போன் செய்துட்டே இருந்தேன்.. நம்பரைமாத்திட்டீங்களா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கேட்டா பிடிக்கும் கேக்காட்டி பிடிக்காது சூப்பரு...

கோபிநாத் said...

ஆகா...அக்கா பதிவு மின்னுது ;)

எப்படி இருக்கீங்க??

கண்மணி said...

கதிரவன் அது ச்சுப்பிரமணி இல்லை.ஜீனோ சுஜாதாவின் என் இனிய இயந்திரா பேரு
ஆத்தா மாட்டிவிட்டுட்டு பிஜிஎம் கேக்குதா

தமிழ்ப்பிரியன் டேக் இட் ஈஸி

ராமலஷ்மி,ஜமால் நன்றி
முத்து சாரிம்மா நெம்பர்மாறிடுச்சி.
சின்ன அம்மிணி நீ சொல்லலாமா தாயீ
கோபி நலம்.நலமே விழைவு

கண்மணி said...

யாரு சென்ஷி னு புது வரவா?;)

நாஞ்சில் நாதம் said...

Welcome back

கண்மணி said...

thank you nanjil natham
muthu call u later

சென்ஷி said...

//கண்மணி Says:
8 July, 2009 9:54 PM

யாரு சென்ஷி னு புது வரவா?;)//

ஆமா டீச்சர்.. பிரபல பதிவர்களுக்கு மாத்திரம் கமெண்ட் போட்டு பதில் வருதான்னு காத்திட்டு இருக்கேன்.

கண்மணி said...

//ஆமா டீச்சர்.. பிரபல பதிவர்களுக்கு மாத்திரம் கமெண்ட் போட்டு பதில் வருதான்னு காத்திட்டு இருக்கேன்.//

அப்படீன்னா இங்க வழி தவறி வந்திட்டீங்களே சென்ஷி

இராம்/Raam said...

:))

priya said...

welcom back!! :)

அபி அப்பா said...

வாங்க டீச்சர் எப்படி இருக்கீங்க! எல்லா பதிலும் சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

:)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)