PAGE LOAD TIME

ஹிக்..ஹிக்...யக்..

பலமுறை தட்டியும் போகவேயில்லை.மீண்டும் ஒரு முறை கையை வீசி வேகமாகத் தட்ட
இங்கே ...அதோ அங்கே ஈ ...ன்னு கிச்சுவும் பிச்சுவும் காட்ட
''என்னது?''
''ஈ தானே ஓட்டிக்கிட்டிருக்கீங்க அதான் ஹெல்ப்..''
''அடப்பாவி மக்கா டீ வடிகட்டில இருந்த டீத் தூளை தட்டினா ஈ ஓட்டுறேனா''
ஈ யை விட்டுட்டு ச்சீ...டீ யை விட்டுட்டு அவங்களை ஓட்டும் போது அம்புஜம் மாமி ஹிக் ஹிக் யக்..னு வந்தாள்.

''என்ன மாமி''?
ஹிக்..ஹிக்..''
''என்னாச்சு மாமி''
ஹிக்..ஹிக்க்.
கொக்கு சைவ கொக்கு ரேஞ்சுக்கு மாமி ஹிக்க
என்னாச்சு சொல்லுங்க
கண்மணி ஹிக்..எனக்கு...எனக்ஹி..ஹிக்..ஹிக்க்..ரொம்ப நேரமா விக்கல் வருதுடி.நிக்க..ஹிக்கவேயில்லை.
''அட இதுக்கு என்ன நிறைய தண்ணி குடிக்க வேண்டியதுதானே?
குடிச்சேன்..ஹிக்..நிக்கலை
சரி கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுப் பாருங்கன்னு கொடுத்தேன்.ஒரு ஸ்பூன் ஒரு ஸ்பூனா மாமி சாப்பிட அவளுக்கு ஒரு வாய் தனக்கு ஒரு வாய்னு சின்னதும் அள்ளிப் போட்டுக்கிட்டதே தவிர விக்கல் நின்ன பாடில்லை.
இன்னும் கொஞ்சம் தண்ணி குடிங்கன்னு ஒரு சொம்பில் கொடுக்க
பாட்டி ஐடியா எதுக்கு தண்ணி தனியா சர்க்கரை தனியா சாப்பிடனும்னு பெரியவன் அதுல சர்க்கரையைக் கொட்டியும் ஹிக்..ஹிக்கிக் கொண்டேயிருந்தாள்.
''பாட்டி நம்ம உடம்புல இருக்கிற டயப்ரம் [உதரவிதானம்] தீடீரென பாதிக்கப்பட்டு சுருங்கி விரிஞ்சா இப்படி விக்கல் வரும்னு மிஸ் சொன்னாங்க''பெரியவன் படித்ததை ஞாபகப்படுத்த
''அய்ய கண்ணு நம்மள யாராச்சும் நெனைச்சிக்கிட்டா இப்படி விக்கும் ராசா''னு முனியம்மா சொல்ல
''அய்யே நெனைச்சுக்கிட்டா விக்காது பொரைக்கில்ல ஏறும்''
''யெம்மா அப்படியே கொஞ்ச நேரம் மூச்சைப் புடிச்சா நின்னுடும்னு முனியம்மா சொன்னதைக் கேட்டு சின்னவன் மூக்கை அழுத்திப் பிடிக்க மாமிக்கு மூச்சு முட்டி கண்ணுல தண்ணி வந்ததுதான் மிச்சம்.
''யம்மா கடைசியா ஒரே வழிதான்னு சொல்லி மாமியை நாக்கை நீட்டச் சொல்லி பிடித்து இழுக்க...
''ஹிழ்..ஹைழ்..ஏழ்ழ்..விழுழி முனிழிமா னு மாமி அலற பயந்து விட்டுட்டாள்.
இதுவரை வாயை மூடியபடியே வந்த ஹிக்க்..ஹிக் இப்போ அதி பயங்கரமா மாமி நக்கை நீட்டியபடி இருக்க வந்தது.
முழம் நீட்டுக்கு நாக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க சிகப்பு புடவையும்,பெர்ரிய்ய பொட்டுமாக மாமி பார்க்க காளி ரேஞ்சுக்கே இருந்தாள்.
''போதும் மாமி வாயை மூடுங்க''
''அழ்யோ முழ்யடியலை...னு நாக்கை உள்ளே தள்ளுவதற்குள் மறுபடி விக்க

ச்சுப்பிரமணிக்கோ குஷி.மாமியும் நம்மைப் போல நாக்கை நீட்டுறாளேன்னு தானும் நாக்கை தொங்க போட்டபடியே வாலையாட்டியபடி மாமியை சுத்தி சுத்தி வந்தது.

ஏதோ விக்கினோமா ரெண்டு வாய் தண்ணியக் குடிச்சோமானு போகிற விக்கல் இப்படி மாமியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
எல்லா 'கை' வைத்தியமும் செய்தாகி விட்டது.

சரி சரி மாமி இதெல்லாம் சரிப்படாது வாங்க டாக்டர் கிட்ட போவோம்.அப்படியே வாயைத் திறந்து தொண்டைக்குள்ளேயே ஒரு ஊசி போட்டார்னா சரியாகும்னு [அதிர்ச்சி வைத்தியம்] சொல்ல மாமி பயத்துல நாக்கை இழுத்து வாயை மூட அப்பாடி ஹிக்க்ஹிக்கும் போயே போச்சு.

''மாமி நீங்க இப்படியே விக்கிகிட்டிருந்தா கின்னஸ்லயாச்சும் பேர் வந்திருக்கும்''

''என்னடி சொல்ற கண்மணீ''

''ஆமாம்மாமி அமெரிக்காவுல சார்லஸ் ஆஸ்பர்ன் ஒருத்தர் சுமார் 69 வருஷம் தொடர்ந்து விக்கலோடு இருந்திருக்கார்.அவரோட 28 வயசுல ஆரம்பிச்சது 97 வயசுல அவர் இறப்பதற்கு ஒரு வருஷம் முன்னதான் நின்னுச்சாம்.இதுலயும் அந்த மனுஷன் ரெண்டுமுறை கல்யாணம் செய்துகிட்டு எட்டு குழந்தைகளையும் பெத்துகிட்டிருக்கார்.

''ஆமாம்டி இந்த விக்கல் ஏன் வருது''

அடடா இதை இதைத்தானே எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்.கருத்து கந்தசாமியா மாறி தெரிஞ்சதை எடுத்துவிட நல்ல சந்தர்ப்பம்.
''வேக வேகமா நாம் சாப்பிடும்போது அல்லது கார்போனேட்டட் பானங்கள்,ஆல்கஹால் மாதிரி சாப்பிடும்போது அதிகப் படியான காற்று நுரையீரலுக்கு போகும் போது,தீடீரென ஏற்படும் இந்த மாற்றத்தால் நுரையீரலையும் வயிற்றுப்பகுதியையும் பிரிக்கும் உதரவிதானம் சுருங்கி காற்று 'ஹிக் யக்'ஒலியோடு வெளித் தள்ளப்படுகிறது.
சிலருக்கு சுக்கு காபி இஞ்சி தண்ணீர் போன்ற காட்டமான பானங்களை குடித்தாலும் வரும்.
பொதுவாக விக்கல் வந்தால் தானாகவே சரியாகிவிடும்.இல்லையென்றால் தண்ணீர் குடித்தாலே போதும்.சர்க்கரை,மூக்கைப் பிடித்து கொஞ்ச நேரம் மூச்சடக்குவது அல்லது திடீரென அதிர்ச்சி தருவது எல்லாம் சில நேரம் உதரவிதானத்தின் தசை இறுக்கத்தை தளர்த்தி விக்கலை நிறுத்தவே செய்யும்.ஆனால் சிலருக்கு சிலது வொர்க் அவுட் ஆகும்.

நீண்டநாள் தொடர்ந்த விக்கல் இருந்தால் நிச்சயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.
வயிற்றுப்புண் [அல்சர்] ,வாயுத் தொல்லை [காஸ் டிரபுள்] இருந்தாலோ கூட அடிக்கடி விக்கல் வரும்.அல்லது சில வியாதிகளுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்தும் கூட விக்கலை ஏற்படுத்தலாம்.இரத்ததில் யூரியா அதிகரிக்கும் போது அதைக் குறைக்கத் தண்ணீர் தேவைப் படும்போதும் விக்கல் வரும்.

உடனடியாக நிற்காமல் தொடர்ந்து இருந்தால் மூச்சை அடக்குகிறேன் பேர்வழின்னு மூச்சடக்காமல்,அல்லது மாமி மாதிரி நாக்கைத் தொங்க விடாமல் மருத்துவரைப் பார்ப்பது நலம்.

அடுத்து ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க.கருத்து சொல்ல கெளம்பிட்டோம்ல.

9 மறுமொழிகள்::

கோபிநாத் said...

ஐ...நான் தான் பாஸ்டூ ;))))) (எம்புட்டு நாள் ஆச்சு))

கோபிநாத் said...

மீண்டும் வந்தமைக்கு ஒரு வருக ;)))

இப்பாவும் எப்பாவும் மாமி பாவம்...அவ்வ்வ்வ்வ்வ்வஃவ்ஃவ் ;))

கலக்கல் காமெடி ;)

வினையூக்கி said...

வாங்க வாங்க... நீண்ட நாட்களுக்குப்பின்னர் வந்து இருக்கீங்க

goma said...

உங்க ஹிக் ஹிக் வாசித்ததும் எனக்கும் ஹிக் ஹிக்.. ஹிக்கான காரணமும் அதை நிறுத்துவதற்கு வைத்தியமும் சொல்லி ஹாஸ்யமாய் ஆக்கி விட்டீர்.
இந்த பதிவு ஒரு ஹிக்[ட்] ஆனது.
பாராட்டுக்கள்

தமிழ் பிரியன் said...

திரும்பவும் அம்புஜம் மாமி, பிச்சு, கிச்சு, ச்சுப்பு எல்லாமா கலக்கல்! கருத்து கண்மணி டீச்சர் வாழ்க! வாழ்க!

ராமலக்ஷ்மி said...

விக்கல் பற்றிய விவரங்களை சின்னகதை மூலமாக விளக்கியிருக்கும் விதம் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இன்னமும் என்னை நீங்க கால் செய்யலை.. உங்களுக்கு விக்கலோ பொரையோ ஏறக்கடவது.. அதான் வைத்தியம் தெரியுதே..:)

Anonymous said...

அம்புஜம் மாமி வந்தாச்சா !!! எனக்கு விக்கல் வந்தா Deep Breath எடுப்பேன். ஒரு பத்து தரம் பண்ணினா சரியாயிடும்.

கண்மணி said...

நன்றி கோபி,தமிழ்ப் பிரியன்,ராமல்ஷ்மி,வினையூக்கி,சின்ன அம்மிணி.
முத்து பழைய நெம்பரேதான்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)