PAGE LOAD TIME

விடாது துரத்தும் பாரம்பரியம்

நிறைய விஷயங்கள் பரம்பரையாக வரக் கூடியவையாக இருக்கும்.
உருவ அமைப்போ குணாதிசயமோ அல்லது சில நோய்களோ கூட ஒரு குடும்பத்து பாரம்பரியமாக வரக்கூடும்.இதுக்கெல்லாம் காரணம் ஜீன்கள் தான்னு தெரியும்.
நாமே விரும்பவில்லை என்றாலும் விடாது துரத்தும் சில பாரம்பரிய
தொல்லைகளைப் பார்ப்போம்.


பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்று நோய்.மருத்துவரின் முதல் கேள்வியே உங்க குடும்பத்துல இதற்கு முன்னால் யாருக்காவது இருந்ததா என்பதுதான். இருதயக் கோளாறுகள் ,உயர் இரத்த அழுத்தம்,ஹார்ட்அட்டாக் போன்றவைகளுக்கு முக்கியமாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு பாரம்பரியத் தொல்லைகள்தான்.இத்தோடு போச்சா ஹூம் சர்க்கரை,இரத்தத்தில்கொழுப்பு,எலும்பு தேய்மானம்,ஆர்த்தரைட்டீஸ் எனப்படும் மூட்டு வலிகள்..ஸ்ஸ்ஸ் அப்பாடா கண்ணைக் கட்டுது.இப்படி உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வியாதிகளுக்கு நம்ம மூதாதையர் மறக்காம அட்வான்ஸ் கொடுத்துட்டு போயிருக்காங்க.

அடுத்து டீன் ஏஜ் பருவத்தினருக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கும் முகப்பரு,தேமல் போன்றவை கூட நம்ம முப்பாட்டன் விட்டிட்டு போன சொத்து தானாம்.இதெல்லாம் சகஜம் எங்க பாட்டிக்கு இருந்தது .எங்கம்மாவுக்கு இருந்தது எனக்கும் இருக்குன்னு பெருமைப் பட்டுக்கவோ விட்டுத் தள்ளவோ வேண்டியதுதான்.நைட் பிளைண்ட்நெஸ் எனப்படும் மாலைக்கண் வியாதியும் அப்படித்தான்.
''டேய் அப்பா ஆறு மணிக்கு மேலே என்னை எதையுமே பார்க்க விடாம இப்படி பண்ணிட்டியே.நான் கரெண்ட் பில்லுகூட கட்டறதேயில்லை டேய் அப்பா டேய் படுவா' னு கவுண்டர் சின்னதம்பியில் புலம்பறாப்புல நிலமைக்கு பரம்பரையும் காரணம்இரட்டைக் குழந்தைகள் பிறப்பதும் ஒரு குடும்பத்து வம்சாவளி செயல்தான்.ஏதாவது ஒரு தலைமுறையிலோ அல்லது அடுத்தடுத்த தலைமுறையிலோ கூட ஏற்படலாம்.ரெட்டைக் குழந்தைகள் நிலை மாறி மூன்று ,நான்கு னு கூட சர்வசாதாரணமா ஆகிவிட்டது.


குழந்தகளோட பல நடவடிக்கைகள் வளர்ப்பு காரணமாக மட்டும் இல்லாது பாரம்பரியமாகவும் வரக்கூடும்.இயல்பான பிடிவாதம்,முரட்டுத் தனம்,படுக்கையில் சிறுநீர் கழித்தல் என பலவற்றைச் சொல்லலாம்.ஏண்டா இப்படி குரங்கு மாதி தாவுறே ,இப்படி எருமை மாதிரி இருக்கே ,பேயாட்டம் ஆடுறேன்னு கோபத்துல அவங்க சேட்டை தாங்கம கத்தினாலும் மறந்துடாதீங்க அதுல பல குணம் உங்க அப்பா ,தாத்தாவுடையதாகவோ அல்லது மாமனார் ,அவரோட தாத்தாவோடது ஆகவோ இருக்கலாம்.

ஒபிஸிட்டி னு சொல்லப்படும் பருமனான உடல் வாகு,பானை கவிழ்த்தாற் போன்ற தொப்பை வயிறும் பரம்பரையாக இருக்குமாம்.சரி சரி ஏதோ அவங்க புள்ளைங்களுக்கு போலிஸ் வேலைக்கான முதல் குவாலிபிகேஷனை வழிவழியா விட்டுட்டுப் போறாங்கன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என் பாட்டன் இதையும் சேர்த்துக் கொடுத்தானேன்னு புலம்பற மாதிரி வழுக்கையையும் சேர்த்து கொடுத்திட்டாங்க.தோப்பு துரவு,வீடு வாசல் னனு சேர்த்து வச்சாங்களோ இல்லையோ இப்படி காலி மனைக்கும் இல்ல பட்டா பண்ணி வச்சிட்டாங்க.
இது போல இன்னும் எவ்வளவோ இருக்குங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்துங்க :))

9 மறுமொழிகள்::

மின்னுது மின்னல் said...

வெல்கம் பேக் !!!

தமிழ் பிரியன் said...

ஆகா.. கருத்துக்களா கொட்டுதே..:)
எங்க தாத்தா எனக்கு கால் வலி(நீர்) கொடுத்துட்டு போய் இருக்கார்ன்னு நினைக்கிறேன்..;-))

கண்மணி said...

நன்றி மின்னல்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் எங்கே போயிட்டேன் இந்த வெல்கம்:)நலந்தானே

கோபிநாத் said...

ம்ம்ம்ம்...எங்க தாத்தா என்னாத்த கொடுத்துட்டு போயிருக்காருன்னு இன்னும் சரியாக கண்டுபிடிக்க முடியல...;))

goma said...

இந்த ஜீன் நல்ல விஷயங்களையே தராதா....
நல்லதென்றால் நாமே வளர்த்தது வேண்டத்தகாததென்றால் அது ஜீன் தந்தது அப்படித்தானே...

பாச மலர் said...

அத்தகைய சொத்துகளைவிட இத்தகைய சொத்துகள் அதிகம்தான் போலும்..

கண்மணி said...

கோமா நல்லவைகளுக்கும் ஜீன் காரணமாகலாம்.ஆனால் இவைகள் நாம் தேடாமலே நம்மை துரத்துபவை
வாங்க பாசமலர்.சொன்னது கொஞ்சம்தான்

கண்மணி said...

தமிழ் உங்களுக்கு கால்வலியா பாவம் கோபிக்கு என்னென்னே தெரியலையாம்

வல்லிசிம்ஹன் said...

வாங்க,வாங்க.

நானும் வெல்கம் பாக் சொல்லிக்கறேன்.

ஆமாம் இவங்க பரம்பரையா நமக்கு நிறையக் கொடுத்துட்டுத்தான் போயிருக்காங்க:))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)