PAGE LOAD TIME

மரமது மரத்திலேறி

நேற்று ஏதோ ஒரு சேனலில் நகைச்சுவை பார்த்துக் கொண்டிருந்தேன்.நடிகர் பிரசன்னா,நடிகை சந்தியா நடித்த ஒரு புது படத்திலிருந்து நகைச்சுவை காட்சி.பாஸ்கர் கல்லூரி பேராசிரியர்.அவர் வகுப்பில் மாணவர்களின் கிண்டலும் கேலியும்.
'என் சப்ஜெக்ட் தமிழ் இல்லை இருந்தாலும் தமிழ் நடத்துகிறேன்' என கீழ்வரும் பாடலை 'கடகடவென' ஒப்பிக்க வகுப்பில் ஆரவாரம் .அவர் அதை கரும்பலகையிலும் எழுதிப் போட்டு பொருள் கூறுவதற்குள் கிண்டலும் கேலியுமாக காட்சி முடிவடைந்து விட்டது.


மரமது மரத்திலேறி என்ற சொற்றொடர் மட்டுமே நினைவிலிருக்க கூகிள் வாத்தியார் உதவியை நாடினேன்.எப்போதும் போல உதவினார்.

சங்க காலத்தில் தனிப் பாடல் திரட்டு என்ற வகையில் சுந்தரகவிராயர் என்பவர் பாடிய பாடல் இது.பதினொரு முறை மரம் மரம் என ஒற்றை வார்த்தை திரும்ப வந்தாலும்கூட மாறுபட்ட பொருள் கொள்ளும்படியான தமிழ்நயம்.


மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெ டுத்தார்


1.மரமது - [அரசு]
2.மரத்திலேறி - [மா]
3.மரமதைத் தோளில் வைத்து -[வேல்]
4.மரமது -[அரசு]
5.மரத்தைக் கண்டு -[வேங்கை]
6.மரத்தினால்[வேல்]
7. மரத்தைக் குத்தி - [வேங்கை]
8.மரமது வழியே சென்று -[அரசு]
9.மரமது கண்ட மாதர் - [அரசு]
10.மரமுடன் - [ஆல்]
11.மரமெடுத்தார் - [அத்தி]

அரசமரம் என்பது நாட்டின் அரசனையும், [மாமரம்] மா என்பது யானையையும் வேலமரம் வேல்கம்பையும்,வேங்கைமரம் வேங்கைப் புலியையும் ஆலமரம் அத்திமரம் சேர்ந்து
மரமுடன் மரம்= [ஆல்+அத்தி]என ஆலத்தியையும் குறிக்கிறது.

இப்பாடலின் பொருள் பின்வருமாறு விளங்கப் படுகிறது.

அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப்புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்தவழியே திரும்ம்பி தனது அரண்மனைக்குச்சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி [ஆரத்தி]எடுத்து வரவேற்றனர் .

இதில் பதினொரு முறை 'மரம்' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது.ஒவ்வொருமுறையும் வெவ்வேறு மரத்தைக் குறிப்பதாக அமைந்து பொருள்படுகிறது.

நன்றி:ஜெய்பீ[ஜெயபாரதி]

19 மறுமொழிகள்::

கே.ரவிஷங்கர் said...

எங்க ஆளையே காணோம் ரொம்ப நாளா?

நல்லா இருக்கு. இதே மாதிரி நாம ஒண்ணு பதிவு பண்ணியிருக்கோம்.

பார்க்க:

http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_08.html

இய‌ற்கை said...

mmm..template super ah irukunga..

neenga design panninatha?

download panni riuntha link thara mudiyuma?

இய‌ற்கை said...

mm..ippadi neraiya ilakiyangalai pakirthu kollungal..nandru:-)

துபாய் ராஜா said...

நல்ல விளக்கம்.அந்த நகைச்சுவை காட்சியும் பார்க்க நன்றாக இருக்கும்.

goma said...

அருமையான இலக்கிய விருந்து

கண்மணி said...

ரவி உங்க லிங்க் போய் படிச்சேன்.காளமேகப் புலவர் ம் எனும் முன் பாடல் சொல்பவர் ஆனா சொல்லிப்பார்க்க நம்க்குத்தான் பல்லு சுளிக்கிக்கும் :))

கண்மணி said...

இயற்கை இது தரவிறக்கம் செய்ததுதான்.இலையுதிதல் மட்டும் சேர்த்தது
www.btemplates.com போய்ப் பாருங்க.நிறைய இருக்குங்க

கண்மணி said...

நன்றி துபாய் ராஜா
நன்றி கோமா.இலக்கியம் னு சொல்லி பயம் காட்டாதீங்க.பிடித்தது இரசித்தேன்.பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவே.

தமிழ் பிரியன் said...

வாவ்! கலக்கல்! எங்க டீச்சருடைய திறமையில் ஒரு துளி தானே..;-)

கோபிநாத் said...

ம்ம்ம்...இப்படி எல்லாம் கூட இருக்கா!!?

Anonymous said...

வாங்க வாங்க , பழையபடி முழு வேகத்துக்கு வாங்க. :)

Annam said...

super post:)

சென்ஷி said...

நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி டீச்சர் :)

priya said...

unga templatum super, postum superr...

நிகழ்காலத்தில்... said...

நிறைய எழுதுங்க இது மாதிரி

நிறைவாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

சுப்பிரமணி said...

நானும் நேற்று அந்த நகைச்சுவையைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கூகுள் வாத்தியாரிடம் கேட்டேன். அவர் தெய்வாதீனமாக முன்னோடியாகிய உங்களை முன்னிறுத்தி விட்டார்.
நன்றி. தேடல் வேலையை எளிதாக்கி விட்டீர். நன்றி.

கண்மணி said...

ஜூலை மாதம் நேற்றா உங்களுக்கு?:))
தமிழ்ப் பதிவுகளின் வளர்ச்சி கூகுளாரின் தேடல் முடிவு
சொல்லும்.

சுப்பிரமணி said...

அம்மையீர்! அவரவர்க்கு ஒரு காலம் வர வேண்டாமா? எனக்கு எட்டியது இப்போதுதான்.

கண்மணி said...

சாரிங்க சுப்பிரமணி.அதே காமெடி மறுபடியும் எப்போ வேணும்னாலும் போடலாம் எனும் யோசனை இல்லாமல் கேட்டது என் தப்புதான்.சரியா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)