PAGE LOAD TIME

சொர்க்கமா? நரகமா?

பில்கேட்ஸ் ஒரு நாள் மேலோகம் வந்தார்.
ஏன் எப்படி ஏதுன்னு கேள்வி கேட்காம மேல படியுங்க.
வாசலில் வந்து வரவேற்ற எமதர்மன் ,'சாரி மிஸ்டர் பில்கேட்ஸ் உங்களுக்கு இன்னும் சொர்க்கமா நரகமானு முடிவு பண்ணலை.'
'ஏன்'
'உங்க கம்யூட்டர் கண்டுபிடிப்புகள் எப்படியெல்லாம் பயனளிக்கிறது என்பதால் நான் உங்களுக்கு சொர்க்கம் தரச் சொன்னேன்.ஆனால் சித்ரகுப்தனோ கணிணி வளர்ச்சியால் என்ன என்னதீங்கு விளையுதுனு பட்டியல் போட்டு உங்களுக்கு நரகம்தான் குடுக்கனும்னு சொல்றான்.அதிலும் வலைப்பதிவுகளைப் படித்த பிறகுதான் மிகவும் கோபமாக இருக்கான்.'
'அப்ப என்ன செய்யப் போறிங்க'என பில் கேட்க
'உங்களுக்கு மட்டும் ஆப்ஷன் தரேன்.நீங்களாகவே இரண்டையும் பார்த்து முடிவு செஞ்சிக்குங்க'என் எ.தர்ம ராஜா சொல்கிறார்.
பில் முதலில் நரகத்திற்குப் போகிறார்.
அழகான விளக்குகளின் ஒளியில் தடாகமும்,தாமரைகளும் மலர்ந்திருக்க ஒரு புறம் மீன் கூட்டம் துள்ளி ஓட இன்னொருபுறம் மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.உஸ் என்ற ஓங்கார ஆர்ப்பரிப்போடு அருவி கொட்டிக் கொண்டிருக்க அழகான பிகினி உடைகளில் எழிலான மங்கையர்கள் புன்னகைத்தபடி கண்ணசைக்கவும் பில்லுக்கு மயக்கமே வந்து விட்டது
'அடடா நரகமே இத்தனை அழகென்றால் சொர்க்கம் எப்படியிருக்கும் என்று அங்கு போய்ப் பார்க்கிறார்.
அமைதியான சூழலில் அங்கிருந்தவர்கள் யாரோடும் யாரும் பேசாமல் தங்கள் வேலைகளைச் செய்தபடி இருக்க வெகு நிசப்தமான அந்த சூழல் பில்லுக்கு பிடிக்கவில்லை.

கண்ணைக்கவரும் அழகோ,ஒளியோ ஆர்பரிப்போ இல்லாத இந்த ஏகாந்தம் சுத்த போர் என்று திரும்ப நரகத்துக்கே வந்து விட்டார்.

கொஞ்சம் நாள் கழித்து எ.தர்மராஜா வந்து பார்த்து 'ஹவ் ஆர் யூ பில்கேட்ஸ் 'னு கேட்க
'என்ன மிஸ்டர் எ.த.ராஜ் யூ சீட்டட் மீ.அன்னைக்கு பாத்தப்போ அருவி,ஓடை,மீன்கள்,அழகிகள் னு செம ஜாலியா இருந்தது.இப்ப ஏதும் இல்லை.வெறிச்சோடி கிடக்கு 'என கோபிக்க
சி.குப்தன் நமட்டுச் சிரிப்போடு சொன்னார்,

அது நீங்க உருவாக்குன ஸ்கிரீன் சேவர்தான் மிஸ்டர் பில்'

5 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

;-)))

Anonymous said...

:)

துளசி கோபால் said...

ஆஹா.....:-))))

அது ஜஸ்ட் டெமோ. ன்னு சொல்லிட்டாரா?

கோபிநாத் said...

;)))))

அக்கா இந்த பூ வருவதை கொஞ்சம் நிருத்த முடியுமா!!..படிக்கும் போது இடைஞ்சலாக இருக்கு.

கண்மணி said...

done gopi

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)