PAGE LOAD TIME

அது-இது-எது

நீதி மன்றம்.கூண்டில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன்
ஆதாரங்கள் போதுமானதாக இருந்தாலும் குற்றவாளி அதை மறுக்கிறான்.
'நான் கொலையே செய்யவில்லை.இன்னம் கொஞ்ச நேரத்தில் நான் கொலை செய்ததாக கூறப்பட்டவனை வரவழைக்கிறேன்' என்று யாருக்கோ ஃபோன் செய்தான்.
'இதோ வந்து விடுவான்'என்றதும் நீதிபதி முதல் அனைவரும் வாசலையே பார்க்க,

'நீதிபதி ஐயா நான் குற்றவாளி இல்லை என்பதை நீங்களும் நம்புவதால்தானே வாசலையே பார்க்கிறீர்கள்.எனவே சந்தேகத்தின் பலனை எனக்கு சாதகமாக்கி என்னை விடுதலை செய்யுங்கள் '
சிறிது நேரம் யோசித்த நீதிபதி,'அதே சந்தகத்தின் அடிப்படையில் உனக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன் ஏனென்றால் செத்தவன் உயிரோடு வருவான் என எல்லோரும் வாசலைப் பார்த்தபோது நீ மட்டும் அங்கே பார்க்காமல் இருந்தாய்.உனக்குத் தெரியும் அவன் உயிரோடு இல்லை வரமாட்டான் என்பது'என்றார்.

அது தீர்ப்பு

ஒரு மனநல காப்பகம்.
ஒருநாள் ஒரு பைத்தியம் தவறி நீச்சல் குளத்தில் விழுந்து விட ,அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பைத்தியம் தண்ணீரில் குதித்து காப்பாற்றி விட்டது.
காப்பாற்றிய பைத்தியத்தைப் பார்த்து மருத்துவர் சொன்னார்,'வெரி குட் தண்ணீரில் விழுந்தவனைக் காப்பாற்றி விடனும்னு நினைத்தாய் பாரு நீ குண்மடைந்து வருவது தெரிகிறது.ஆனாலும் பார் நீ காப்பாற்றிய ஆள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்'
'அய் செத்துட்டானா?நான் தானே ஈரம் காயட்டும் என்று ஃபேனில் மாட்டித் தொங்க விட்டேன்'

இது பைத்தியம்


கிச்சு அடிக்கடி கேட்பான் காதல்னா என்னம்மா
'டேய் உனக்கேண்டா இந்தக் கேள்வி'
'இல்லைம்மா ஒரு குரூப்பா காலேஜ் பொண்ணுங்களை காட்டும் போது அழகான பொண்ணைப் பார்த்து மட்டும் ஹீரோவுக்கு காதல் வருதே'
'போடா போய் வேலையைப் பாரு.பெரிய மனுஷனாட்டம் என்ன கேள்வின்னு திட்டினாலும் எனக்கும் டவுட்டாயிடுச்சி.சமீபத்தில் ஆரம்பத்திருக்கும் ஒரு சன் தொலைக்காட்சி தொடரில் ஒரு பொண்ணைப் பார்க்க வந்த இடத்தில்,அந்த வீட்டிலிருக்கும் இன்னொரு அழகான பொண்ணை ஹீரோ விரும்ப அவன் அம்மாவும் அவளையே பெண் கேட்கிறார்.குடும்பத்து ஏத்த பொண்ணாக அவள் இருப்பாள்னு அந்த அம்மாவுக்குதோன்றியதாம்.அதெப்படி ஆளைப் பார்த்த உடனே நல்லவங்க கெட்டவங்கனு தெரியும்.ஏன் அந்த இன்னொரு பொண்ணு நல்ல பொண்ணா இருக்க மாட்டாளா?அவளை விட அழகுன்னு பையனுக்கு இவளைப் புடிச்சிருக்கு.பையனுக்கு புடிச்சிருக்கு இனி நம்ம பேச்சை கேட்க மாட்டானேனு அம்மா சம்மதிக்கிறாள்.
பார்த்த காதல் பார்க்காத காதல் கேட்ட காதல் கேட்காத காதல் சொன்ன காதல் சொல்லாத காதல் எல்லாம் எப்படிங்க?

எது காதல்

9 மறுமொழிகள்::

அமர பாரதி said...

இது பின்னூட்டம்.

கோபிநாத் said...

ஒரு மாதிரி புரியுது...;)

கண்மணி said...

:(( ??????

தமிழ் பிரியன் said...

:)

சூரியன் said...

தீர்ப்பு நெத்தியடி.. காதல் நொந்தக்காதல்..

கண்மணி said...

Thanks tamil piriyan and suriyan

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

இரா.சிவக்குமரன் said...

நல்லாத்தான் எழுதறீங்க..ஆனா அடிக்கடி எழுத மாட்டீங்கறீங்க.
நிறைய எழுதுங்க..

அபி அப்பா said...

நச்ன்னு 4 கருத்து சொன்னாலும் டீச்சர் கருத்து சொன்னா நெத்தியடி தான். அதிலும் தீர்ப்பு சூப்பர்! அடிக்கடி வந்து எழுதுங்க டீச்சர்! மத்தபடி எப்படி இருக்கீங்க. இன்னுமா பிசி. பழைய பாஃர்ம்க்கு வாங்க வந்து கலக்குங்க!!!!

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)