PAGE LOAD TIME

ரோஸி மிஸ் ஏன் வரலை?

'டேய் ரோஸி மிஸ் ஏன் வரலை'
'அவங்க நாய்க்குட்டி செத்துப் போயிடுச்சாம்'
'அவ்வ்வ்வ்.......வவ வவ் வவ வ வ்'
ரோஸி மிஸ் மீது அதிக பாசம் கொண்ட சிறுவன் மிஸ் வீட்டுக்குப் போகிறான்.
'மிஸ்... ''ரோஸி மிஸ்'
சிறுவனின் குரல் காதில் விழவில்லையோ.இல்லை மிக ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி செத்துப் போனதால் சோகமாயிருக்கும் ரோஸி மிஸ் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

சிறுவன் ரோஸி மிஸ்ஸின் கையில் இருக்கும் நாய்க் கட்டியிருந்த பட்டியைப் பார்க்கிறான்.
அதன் இன்னொரு முனை வெற்றிடமாக இருக்க சிறுவன் அந்த பட்டையை கழுத்தில் மாட்டியபடி தோட்டத்தின் ஈரமான மண்தரையில் 'வவ் வவ் வவ் ' என குரைத்தபடி புரண்டு புரண்டும் புல்வெளியில் நாய்க்குட்டி போல காலைத் தூக்கி ஃபிஸ் அடித்தும் நாய் வேஷம் போட்டு மிஸ் ஸிடம் பந்தையெல்லாம் தூக்கி எறிகிறான்.
அவனுடைய வெள்ளை யூனிபாஃர்ம் எல்லாம் சகதி பட்டுப் பாழாகிறது
ஒருவாறு மிஸ் சமாதானமாகி,சிறுவனை அணைத்துக் கொள்கிறார்.
'நல்லது நடக்கும்னா கறை படுவதும் நல்லது தானே'
சர்ஃப் எக்ஸல் விளம்பரத்தின் சமீபத்திய வரவு இது.
ஒரு பிளாஷ் பேக்:
ஒரு அண்ணனும் தங்கையும் தெருவில் நடந்து போகும் போது தங்கை கீழே விழுந்து துணியெல்லாம் சகதியாகிறது.தங்கை அழ அண்ணன் கீழே குனிந்து சேற்றைத் தட்டி 'அடிப்பியா அடிப்பியா 'என கண்டிப்பது போல பாவனை செய்ய அவனுடைய துணிகளும் அழுக்காகிறது.
இருந்தாலும் தங்கையிடம் 'சாரி சொல்லிடுச்சு' என சமாதானம் சொல்கிறான்.


'நல்லது நடக்கும்னா கறை படுவதும் நல்லது தானே'

இதைவிடக் கவிதை மாதிரி ஒரு சர்ப் எக்ஸல் விளம்பரம் நல்ல தண்ணீரில் துணி துவைத்தால் தான் நல்லதுன்னு ஒரு ஓட்டை பக்கெட்டில் மழை நீர் பிடிக்கும் குழந்தை கீழே விழுந்து புரண்டு......
கண்ணா என்ன பண்றே னு அம்மா கேட்க துணி துவைக்க நல்ல தண்ணி கொண்டு வந்.....ந்..த்.தேன் னு சொல்வதற்குள் ஓட்டை வழியாக தண்ணி காலியாகி இருக்கும்.எத்தனை முறை பார்த்தாலும் மயிலிறகாய் இதயம் வருடும் அந்தக் குழந்தையின் செயல் மெலிதான புன்னகையை வரவழைக்கவும் தவறியதில்லை.இது மனதைக் கவர்ந்தது என்றால் முன்னது பார்த்து மனது வலித்தது. மிஸ்ஸின் மீதுள்ள பாசம் என்றாலும் சின்னப் பிள்ளை நாய்க்குட்டி போல குரைத்து மண்ணில் புரண்டது பார்க்க இரசிக்கவில்லை.

12 மறுமொழிகள்::

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்டேட்ய்!

தமிழ் பிரியன் said...

///மிஸ்ஸின் மீதுள்ள பாசம் என்றாலும் சின்னப் பிள்ளை நாய்க்குட்டி போல குரைத்து மண்ணில் புரண்டது பார்க்க இரசிக்கவில்லை.////
அதே.. அதே

நட்புடன் ஜமால் said...

பின்னது இரசிக்கும் படியாகவும்

முன்னது முகம் சுளிக்கும் படியாகவும் தான் இருக்கின்றது.

Anonymous said...

யூ ட்யூப்ல இருக்கா??

சூரியன் said...

உண்மைதான் வருத்தமாகவும் இருந்தது ..

இரண்டாவது அழகு..

கண்மணி said...

தமிழ்ப் பிரியன்,ஜமால்,சூரியன் நன்றி.இப்ப யூ டியூப் சேர்த்திருக்கேன்
சின்ன அம்மிணி பழையது இருக்கு சேர்த்திட்டேன்.ரோஸி மிஸ் இல்லை

Anonymous said...

Thanks

Deepa said...

:-((( எனக்கு அந்த ரோஸி மிஸ் விளம்பரம் பிடிக்குமே! (என் மகளுக்குப் பிடித்ததால்) But yes, the other Ads are certainly in better taste!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. பாக்க கஷ்டமாத்தான் இருந்தது..

கண்மணி said...

முத்து கைஸே ஹோ

தீபா சின்ன பிள்ளைங்க இரசிக்கும் நிச்சயமாய்.ஆனா நமக்குத்தான் மனம் பதறுது.

கோபிநாத் said...

கடைசி யூ டியூப் error வருது.

அண்ணன் தங்கை பார்த்துயிருக்கேன்.

;)

கண்மணி said...

கோபி எனக்கு யூடியூப் நல்லா வொர்க் ஆகுது.no problem

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)