PAGE LOAD TIME

ஏய்..யூ..நெக்ஸ்ட்

'ஏய்யா இங்க வா இந்த செடிக்கெல்லம் நல்லா தண்ணி விடு'
இந்தாம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை'
'யோவ் சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'
இப்படித்தான் பலநேரம் பலபேர் வீட்டுத் தோட்டக்காரர்,சமையல் செய்யும் பெண்மணி ,கார் டிரைவரிடம் கட்டளை இடுகிறோம்.
இதையே கொஞ்சம் மாத்திச் சொல்லிப் பாருங்க.
'ராமையா இந்த செடிக்கெல்லாம் தண்ணி விடு'
'அன்னம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை'

'வேலு சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'
ஏய், இந்தாய்யா,இந்தாம்மா,யோவ் என்பதெல்லாம் விளி வேற்றுமைகள் தான்.ஆனால் இது சம்மந்தப் பட்டவர்களிடம் எந்த சலனத்தையும் பெரிதாக ஏற்படுத்தி விட முடியாது. இதுவே அவர்களின் பெய்ர் கொண்டு அழைத்திருந்தால் நிச்சயம் ஒரு தோழமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெய்ரிட்டு எல்லோரையும் அழைக்க முடியாதுதான்.ஆனால் பயன்படுத்தும் வார்த்தைகளின் வாஞ்சை மனதை வருடும்.


எங்க வீட்டுவரும் ஒரு காய்கறி விற்கும் அம்மா,கண்மணி இந்தா கீரை வாங்குன்னு என்னை சொல்ல முடியாது.ஆனா இது நல்லா இருக்கும் கண்ணு இது வாங்கிக்கடா போதுமாடா எனக் கேட்கும் போது சொத்தைக் கத்தரியும்,பூச்சி விழுந்த கீரையும் கண்ணுக்குத் தெரியாது।அந்தக் குரலின் நெருக்கம் இதமாக மனதை இளக்கி பேரம் பேசக்கூட இடம் கொடுக்காமல் வாங்கத் தூண்டும்।
வகுப்பில் மாணவர்களைக் கேள்வி கேட்கும் போதும் எல்லோருடைய பேரும் சட்டுனு ஞாபகம் வராது தெரியவும் தெரியாது।
ஹேய்....யூ...
நெக்ஸ்ட்...
நெக்ஸ்ட் னு சொல்ல வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆரம்ப நாளில் பாடம் நடத்துகிறேன் பேர்வழின்னு மாணவர்களை சோதிக்காத 'நல்ல' டீச்சர் நாம,அதுனால பெயர் ஊர்னு அவர்களைப் பற்றிய விவரக்குறிப்பு அத்துடன் வருங்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்னு ஒரு அசைன்மெண்ட்??!! எழுதச் சொல்லும் பழக்கம்।
அப்படி ஒருமுறை எழுதச் சொல்லி அந்த விபரங்களைப் படித்த போது ஒரு மாண்வன் எழுதியிருந்தான்.
'மிஸ் நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?'மிஸ் நான் என் பெயர் ,விபரங்களை எழுதினாலும் இவ்வளவு பேருக்கு மத்தியில் ஞாபகம் இருக்குமா? முன் பெஞ்ச் மாணவர்கள் அல்லது வகுப்பு லீடர் என இவர்களை மட்டும்தான் பேர் சொல்லி அழைக்கிறீங்க.மீதிப்பேரை யூ அல்லது நெக்ஸ்ட் னு சொல்லியே கேள்வி கேப்பீங்க ।சுமார் 50,60 பேர் இருக்கும் வகுப்பில் எல்லோர் பேரையும் நினைவு வச்சிக்க முடியாதுன்னாலும் 'சுப்பையா' னு என் பேரைச் சொல்லி நீங்க அழைக்கனும் .எங்க மிஸ்ஸுக்கு என் பேர் தெரியும் என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும.'
படித்தபோது கொஞ்சம் மனது வலித்தது.நிச்சயம் 60 பெயர்களை முதல்நாளே மனப்பாடம் செய்ய முடியாது.ஆனால் நாளாக நாளாகவும்,செய்முறை வகுப்புகளில் குழுவாகவும் பிரிப்பதால் சுலபமாகவும் தெரிந்து கொள்வேன்.
இருந்தாலும் முதல்முறையாக இப்படியொரு கோணத்தில் ஒரு மாண்வன் சிந்திக்கக் கூடும் என்பதே ஆச்சரியமாகவும் ,பெயரைத் தெரிந்து பேசுவதும் அழைப்பதும் உணர்வுபூர்வமான நெருக்கத்தையும் அக்கறையையும் காட்டும் என்பதும் 'சுப்பையா' மூலம் நான் கற்றுக் கொண்ட பாடம்.
மொத்தமாக விபரங்களை சேகரித்ததால் இது யார் எழுதுதியதுன்னு தெரியலை.
உடனே எழுப்பிக் கேட்டுத் தெரிந்து கொள்ள கொஞ்சம் கூச்சமாக :( இருந்தது.
ஒவ்வொருமுறை வருகைப் பதிவேடு எடுக்கும் போதும் கவனிக்க வேண்டும் எனப்பார்த்து ஒரு நாள் கண்டு பிடித்து விட்டேன்.
நான் அவனைக் கண்டு பிடித்து அதன் பிறகு பேரைச் சொல்லி அழைத்தபோது ஏற்பட்ட வெட்க உணர்வோடும் சந்தோஷத்தோடும் படித்துச் சென்ற சுப்பையா இன்றுவரை என் நினைவில் இருக்கிறான்.
மருந்து கடைக்கோ,மளிகை கடைக்கோ 'சுப்பையானு' பேர் வைத்திருப்பதைப் பார்த்தால் இன்றும் எனக்கு அவன் ஞாபகமே வரும்.

17 மறுமொழிகள்::

சென்ஷி said...

:)

அருமை டீச்சர்!

கண்மணி/kanmani said...

நன்றி சென்ஷி

கோபிநாத் said...

;))

Anonymous said...

ப்ரெசண்ட் டீச்சர்

துளசி கோபால் said...

எனக்கும் யாரைப்பார்த்தாலும் பேரைக் கேட்கத்தோணும். கேப்பேன். அப்படி அதைச் சொல்லியும் கூப்பிடுவேன்.

எங்க இவர்தான் பெயரை சொல்லி ஏன் கூப்புடறேம்பார். அதுக்குத்தானே பெயர் இருக்குன்னுவேன்:-)

அருமை

கண்மணி/kanmani said...

கோபி ஸ்டைலா சின்ன அம்மிணிங்கோ

கண்மணி/kanmani said...

துளசி டீச்சர் அக்கா மாணவர்கள் பத்தி உங்களுக்கு நிறையத் தெரிஞ்சிருக்கும்.

கலை said...

நல்ல பதிவு. பலரும் இப்படி இருக்கும் பெயரைக் கூப்பிடாமல் வேறு மாதிரி மற்றவர்களைக் கூப்பிடும்போது ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன்.

புதிய பக்க அமைப்பும் கலக்கலா இருக்கு. ஒருவேளை நாந்தான் நீண்ட நாளைக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறேனோ?? :)

கண்மணி/kanmani said...

வாங்க கலை.மிக மிக நீண்ட நாட்கள் இல்லை வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்.
நலந்தானே?தேவதையும் நலமா?

KarthigaVasudevan said...

டீச்சரின் கவனத்துக்கு ...

நாங்க பேரை மாத்தி ரொம்ப நாள் ஆச்சு ...இன்னும் ஆரம்பத்தில் இருந்த பெயரையே ஞாபகம் வைத்துக் கொண்டு அழைத்ததற்கு எனது கண்டனங்கள் .
இப்ப இருக்கற பேரைச் சொல்லி கூப்பிட்டுப் பழகுங்கப்பா ...மத்தபடி பதிவு நல்லா இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) மிஸஸ்.தேவ் நீங்களும் நானும் அடிக்கடி பேரு மாத்திக்கிட்டே இருந்தா பாவம் இவங்களும் தான் என்ன செய்வாங்க..

துபாய் ராஜா said...

டீச்சருக்கே பாடம் சொன்ன சுப்பையா...
:)

ப்ரியமுடன் வசந்த் said...

மிகவும் சரியான பார்வை

பெயர் சொல்லி அழைப்பதால் நெருக்கமே விழையும்.....

சந்தனமுல்லை said...

மிக அருமை! எல்லோரும் ஆசிரியர் குறித்து இடுகையிட்டுக்கொண்டிருக்க தாங்களோ மாணவர் குறித்து இட்டிருக்கிறீர்கள்!! சூப்பர்!

ஆயில்யன் said...

//மிக அருமை! எல்லோரும் ஆசிரியர் குறித்து இடுகையிட்டுக்கொண்டிருக்க தாங்களோ மாணவர் குறித்து இட்டிருக்கிறீர்கள்!! சூப்பர்!//

அதே! அதே!! :))

அப்புறம் இம்புட்டு தைரியமா பேசுற பசங்களை நினைச்சு இப்ப பெருமையா இருக்கு! - நானெல்லாம் வாத்தியாருங்களுக்கு பயந்துக்கிட்டே ஸ்கூலுக்கு போவாம பல தடவை கட் அடிச்சுட்டு வீட்ல படுத்து தூங்கிய காலமெல்லாம் உண்டு :)

கலை said...

ஆமாமா. வருடமாகியிருக்கும். நானும் புது வலைப்பதிவு போயாச்சு :).

தேவதையும் நலமே. அவளுடைய குரல் பதிவு, விளையாட்டு ஒளிப்படம் எல்லாம் கூட அவளுடைய வலைப்பதிவில போட்டிருக்கு :).

அதுசரி, wordpress username கொடுத்து, அல்லது என்னுடைய NAME/URL கொடுத்து பின்னூட்டம் போட முடியலையே. அது ஏன்?

sriram said...

ஐயையோ, மேடம் நீங்க டீச்சரா?
இது தெரியாம நான் என் பதிவுல ஆங்கிலம் பத்தி உங்களுக்கு விளக்க முயற்சி பண்ணிட்டேன்.
மன்னிக்கவும்
பதிவு நல்லா இருந்தது. இத்த நான் ரொம்ப நாளா கடைபிடிச்சிக்கிட்டு வர்றேன். முடிதிருத்தகத்தில் உள்ள பையனையும், காய்கறி/ மளிகை கடையில் உள்ள பையனையும் பேரிட்டு கூப்பிட்டுப் பாருங்கள்- அவர்கள் முகத்தில் வரும் சந்தோஷத்தை...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)