PAGE LOAD TIME

நிறுத்த வழி சொல்லுங்களேன்

நமக்கு முதல்ல அந்த ஆசை வந்ததே தப்பு.சரி வந்துடுச்சி.ஏதோ கொஞ்சநாள் அனுபவிச்சுப் பார்ப்போமுன்னு அதை ஓகே பண்ணேன்.ஆனால் விடாது காலைச் சுத்தும் பாம்பு மாதிரி ஆகிவிட்டது நிலைமை.காலோடு போனாப் பரவாயில்லை பாருங்க கையைக் கடிக்கிறதே.
சும்மாவே செல்போனை எடுத்துப் பேசினா 30 நிமிடமாகும் வைக்க ஒன்னு எனக்கு காது சூடாகனும் இல்லை கேக்கிறவங்களுக்கு ரத்தம் வரனும்.இதுல அந்த ஆசை வேறு வந்திருக்க வேண்டாம்.

அப்பப்ப ஆயிரம் சர்வீஸ் மெசேஜ் வரும் அப்படித்தான் காலர் டியூன் வேனுமான்னு வந்தது.நாம போன் போட்டா நம்மளை பாட்டு ஓடவிட்டு நோகடிக்கிறாங்களே அவங்களை நாம்ளும் நோகடிப்போமின்னு அமுக்கிட்டேன்.வருஷம் அஞ்சு ஆச்சு.
மாதாமாதம் மீட்டர் வட்டிக்காரன் போல 30 ரூபாய் டிடெக்ட் ஆயிடுது.
இத்தோடு போச்சா?ஏதோ பெர்ரீய்ய ஆபிஸர் ரேஞ்சுக்கு நமக்கு வந்த மிஸ்டு காலை மிஸ் பண்ணக்கூடாதுன்னுட்டு மிஸ்ட் கால் அலர்ட் வேனுமான்னு கேக்க அதையும் ஓகே பண்ணேன்.அதுக்கு மாதம் 20 கழிஞ்சுடுது.
இதெல்லாம் போகட்டும் தினம் ஒரு மெசேஜ் னு [பழமொழி மாதிரி] எத்தையோ அமுக்கித் தொலைக்க அதுக்கு மாதம் இன்னொரு 30 எஸ்ஸாயிடுது.
ஆக 30+20+30 =80 ரூபாய் மாதாமாதம் கப்பம் கட்ட வேண்டிய குறுநில மன்னன்போல ஆகி விட்டது நிலைமை.
அதன் பிறகு சிஸ்லிங் அனுஷ்கா,கிக்லிங் பூஜானு வரும் எந்த சர்வீஸ் மெசேஜையும் படிக்காமயே டெலிட் செஞ்சிட்டாலும் இப்படி ரீசார்ஜ் பண்ணும் தொகையில் 'அநாவசியமா' பிடிக்கும் தொகையை எப்படி தடுப்பது.
நெட் புரவைடர் சைட்டுக்கு போய் டீ ஆக்டிவேட் கோடு எல்லாம் பார்த்து எஸ் எம் எஸ் அனுப்பிப் பாத்துட்டேன்.
ஆக்டிவேட் பண்ணும் போது இருக்கும் வேகம் டீ ஆக்டிவேட் பண்ணும் போது கண்டுக்கறதில்லை. உங்க ரிக்வெஸ்ட் புராஸ்ஸிங்ல இருக்குன்னு சொல்லியே வருஷமாயிட்டுது.
அப்படியே ரீசார்ஜ் பண்ணாம கொஞ்ச நாளைக்கு சிம்மை தூக்கிப்போட்டு விடலாமானு பார்த்தா மறுபடியும் ரீசார்ஜ் பண்ணும் போது வட்டியும் முதலுமா கழிஞ்சுடுது.
எனக்குகாலர்ட்யூனும்வேண்டாம்;மிஸ்டுகால்அலெர்ட்டும்வேண்டாம்;பொன்மொழியும் வேண்டாம்.இதிலிருந்து தப்பிக்க ஏதாச்சும் வழி இருக்கா சொல்லுங்களேன்.
சிம்மை தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கச் சொல்லாதீங்க.அதுக்கு உங்களைக் கேப்பானேன்;(
வழியிருக்கா மக்கள்ஸ்.

13 மறுமொழிகள்::

அபி அப்பா said...

மீ த பஷ்ட்;-)

சென்ஷி said...

கஸ்டமர் கேர்க்கு போன் செய்து ரீ சார்ஜ் பணம் வீணாய் கம்பெனிகாரர்கள் கவராமல் தடுப்பதற்கான தொடர்பு எண்ணைக் கேட்டு அதற்கு மெசேஜ் செய்யவும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நேரா போய் கஸ்டமர் கேர் காரங்களை மிரட்டுவீங்களா ..இங்க வந்து கேட்டுக்கிட்டிருக்கீங்க..

கண்மணி said...

கேட்டாச்சு சென்ஷி ஆனா அவங்க சொன்ன நெம்பருக்கு மெசேஜ் அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ்

கண்மணி said...

அவ்வ்வ்வ் முத்துலட்சுமி நானென்ன கோவில்பட்டி வீரலட்சுமியா?;)

கண்மணி said...

வழக்கம் போல பதிவு படிக்கிறதேயில்லையா அபி அப்பா

ஐந்திணை said...

:-)

gopi said...

customer care க்கு போன், sms பண்ணி டைம் waste வேண்டாம். விளாவரியா லெட்டர் 1+1 எழுதி சர்விஸ் ப்ரொவய்டர்க்கு கொடுத்து acknowledgment copy வாங்கவும். ரெண்டு நாள் கழித்து remind செய்யவும். they do not act for removal of these extra fittings without written complaint.

Vidhoosh/விதூஷ் said...

Which service provider's simcard is it?

Call the service provider, and dont list all your problems in a single day.
First day, make a request to remove your caller tunes. Donot forget to receive your "SERVICE REQUEST reference number" which is generally called as SR Number or Complaint reference number.which is generally called as SR Number or Complaint reference number. Make a note of it with date, time, customer care executive's name.
second day, missed call alerts. Again, Donot forget to receive your "SERVICE REQUEST reference number" which is generally called as SR Number or Complaint reference number. again make a note of it with date, time, customer care executive's name.


they will definitely commit a day on which the same will be cancelled. remember to call back and speak to them on the day.

Even my father activated so many daily slokas, caller tunes etc etc. it definitely takes a task, but followup on time will definitely help.

you might get some good friends out of these cust.care executives too...

கண்மணி said...

நன்றி விதூஷ்
ஆனா இந்த சர்வீஸ் புரவைடர் கிட்ட [கஸ்டமர் கேர்] பேசுவதைவிட கப்பமே கட்டிடுவேன்.பேசியே கொன்னுடுவாங்க.செய்யறேன்னு சொல்வாங்க இல்லை பேசும் போது கட் ஆகி பின்னர் பிஸியாகிடும்
இருந்தாலும் முயற்சிக்கிறேன்.அது
ஏர்செல் நெம்பர்

Anonymous said...

நான் எஸ்ஸாகிக்கறேன். அனுபவப்பட்டவங்க ஏதாச்சும் சொல்லட்டும்.

Vidhoosh/விதூஷ் said...

http://www.aircel.com/ContactUs/Offices/tamil-nadu-nodal.asp

இந்த வலைபக்கத்தில் நோடல் ஆபீசர்களின் எண்கள் உள்ளது. உங்கள் SR எண் மற்றும் கம்ப்ளைன்ட் கொடுத்த தேதியோடு தொடர்பு கொள்ளுங்கள். 99% இவர்கள் பிரச்சினைகளை தீர்க்கிறார்கள். பேசும்போது இவர்களிடம் திட்டியோ, புலம்பியோ பேச வேண்டாம். சாதாரணமாகவே, ஏறத்தாழ ஆறேழு மாதமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப் படவில்லை என்று கூறுங்கள். மீண்டும் follow-up செய்யுங்க.

அபி அப்பா said...

அட டீச்சர் படிச்சுட்டேன். வேணுமின்னா கேள்வி கேளுங்க பதில் சொல்றேன்.இதை படிச்ச பின்னே டாட்டா இண்டிகாம் வாங்கி நான் பட்ட கஷ்டம் பத்தி பதிவே போட இருந்தேன். இருக்கேன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)