PAGE LOAD TIME

பார்கெயினிங்

'இந்தா கிலோ பத்து ரூபாய் ன்னா கட்டாது.எட்டு  ரூபாய்னு வச்சிக்கிட்டு ஒரு கால் கிலோ குடு'
'கீரைக்கட்டு மூணு ரூபாயா..ஹூம் என்ன யானை விலை சொல்றே...ரெண்டு கட்டு அஞ்சு ரூபாய்க்குத் தருவியா'
ஆமாம் அஞ்சுக்கும் ஆறுக்கும் யானை எங்கே விக்கிறாங்க.
இது போல உரையாடல் தினசரி ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் நிச்சயம்
நடந்து கொண்டுதானிருக்கும்.
கூடைக்காரிசொன்ன விலைக்கு வாங்கினா கால்கிலோவுக்கு அம்பது காசும் கீரைகட்டுக்குமேலும் ஒரு அம்பது காசும் மிச்சமாகும்.அப்படியே பேரம் பேசி வாங்கிட்டாமிச்சம் பிடிச்ச காசுல யானையா வாங்க முடியும்.பூனைக்கு ஊத்த பால் கூடவாங்க முடியாது.

இதே அம்மா ஸ்பென்சர் பிளாஸா அல்லது ஃபுட்வெர்ல்ட்நீல்கிரீஸ் மாதிரி கண்ணாடிக் கதவோடு குளிர் பதனம் செய்யப்பட்ட கடையில்எத்தனை நாளைக்கு முன்னே வந்ததுனு கூட தெரியாத காய்கறியை அள்ளி தள்ளுவண்டியில்  போட்டுகிட்டு ஸ்டைலா கவுண்டருக்கு வந்து நிக்கும்.கம்ப்யூட்டர் டக்டக்குனு கணக்கு போட்டு துப்பியதை கொடுத்துவிட்டு மிச்சம் பைசாவுக்கு சில்லறையில்லனா பாப்பாவுக்கு கொடுப்பது போலபல்லி மிட்டாயும் சாக்லேட்டும் தந்தா மறு பேச்சு பேசாம வாங்கி வரும்.ஏன்அங்க இவங்க வீரப் பிரதாபத்தைக் காட்டி அம்பது அம்பது காசா மிச்சப்படுத்தவேண்டியதுதானே?
தலையில்கூடைசுமந்தோதள்ளுவண்டியிலோவரும்காய்கறி,பழவியாபாரிகளுக்கு
ரூபாய்க்கு20,30 பைசான்னு கிடைக்கும் இலாபம்தானே வருமானம்.ஒரு நூறு ரூபாய்க்குவிற்றால் 20,30 ரூபாய் இலாபம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையின்ஆதாரம். போக்குவரத்து டீ சாப்பாடு செலவு போக  எவ்வாளவு கையில்நிற்கும்.பலபேர் பேருந்தில் கூட வராமல் கால்நடையாகவே அருகிலிருக்கும்இடங்களுக்கு போவார்கள்.வெயிலோ மழையோ பார்க்காம அன்றாட வயித்துப்பாட்டுக்குப் போராடும் அன்னாடங்காச்சிகள் பலபேர்.
இவர்களிடம் 'அந்நியன்' மாதிரி அம்பது அம்பது பைசாவா அம்பது பேருக்கிட்ட
லாபம்வைக்கிறாயேனு சண்டை போட முடியாது.இந்த சொற்ப இலாபம் தானே வருமானம்.அதையும்சாமர்த்தியமா பேரம் பேசுவதாக நினைத்துக் கொண்டு குறைத்தால் பாவமில்லையா?
சிலபேருக்கு பேரம் பேசுவது கை வந்த கலை.கூசாமல் சொன்ன விலைக்குப் பாதியாக்கிகேட்பாங்க.பேரம் படிந்து விட்டால் வானத்தையே வில்லாக வளைச்சிட்ட மாதிரிசந்தோஷம்.பக்கத்து வீட்டுக்காரங்க இதைவிட அதிகம் குடுத்திருந்தா இன்னும்தன்னைப் பற்றி கர்வம் அதிகமாகும்.
நானும் ஒரு காலத்தில்இப்படித்தான் இருந்தேன்.பின்னாளில் ரங்கமணி கவனிக்க நேர்ந்த தருணங்களில்'என்னோட அல்பதனத்தை' எடுத்துக் கூறிய பிறகு திருந்தி விட்டேன்.
நாலு நாளைக்கு முன்னால் என் தோழி கிழிந்த செருப்பை தைக்கக் கொடுத்தாள்.
எவ்வளவு பணம்ப்பா னு கேட்க செருப்பு தைப்பவர் 15 ரூபாய் குடுங்கம்மான்னார்.
'அய்யோ இதென்ன அநியாயம் கொஞ்சமா இந்த வார் அறுந்து போனதுக்கு 15 ரூபாயா.அநியாயம்னு வந்துட்டாள்'
பாட்டா ஷோரூமில் மறு பேச்சு பேசாமல் 2 மாதம் முன்பு வாங்கியது ரூ499.95.
கடைக்காரர்கிட்ட சுளையா500 ரூபாய் கொடுத்தது.பாக்கி 5பைசா வாங்கலை.எனக்குத் தெரிந்து யாரும் சரியா 95 பைசா கொடுத்திருக்க மாட்டோம்.
தைக்காமல்விட்டால் இன்னும் அதிகமாக அறுந்து 500ரூ போச்சு.ஆனால் 15 ரூஅநியாயமாம்.யாராவது செருப்புத் தைப்பவர்கள் ஏஸீ போட்ட ஷோருமில் இருந்துவேலை செய்வதைப் பார்த்திருக்கோமா?
இல்லை ஒரு சின்ன கடையாவது வச்சி நாலு பேரை வேலைக்கு வச்சிருக்காங்களா?
பிளாட்பாரஓரத்திலோ மரத்தடியிலோ தெரு முனையிலோ ஒரு ஓரமாக ஒதுங்கி கடை விரித்துக்கொண்டு நாம கையால் தொடத் தயங்குவதை தானே கையில் எடுத்துதைத்துத்தருகிறவர்கள் அவர்கள்.எப்போதேனும் ஒருமுறை தைக்க நேரிடலாம்.அதற்கேன்இத்தனை பேரம்.
இன்றைக்கு என்ன வருமானம்  வரக்கூடும் என்ற கணிப்போஉத்திரவாதமோ இல்லாமல் தொழில் செய்யும் இவர்களிடம் நம் 'பேரம் பேசும்வீரத்தைக்' காட்டத்தான் வேண்டுமா?
இதே போல் வீடு வீடாக பழைய பேப்பர்வாங்கும்  வியாபாரிகள்.கிலோ 3ரூ சொன்னால் 5க்கு எடுத்துக்கன்னு பேரம்பேசுவோம்.4ரூபாய்க்கு வாங்கும் ஹிண்டுவை திரும்ப 2ரூபாய்க்கா விற்கமுடியும்.பேப்பெருக்கு 50 காசுன்னு சொன்னால் ஹூம் 70 ன்னு குடு இல்லைன்னாவேற ஆளுக்கிட்ட போட்டுக்கறேன்னு சொல்லிட்டு மாவு சலிக்கவும் அலமாரிதட்டுக்கு அடியில போடவும்  செய்வோம்.கிலோவுக்கு 2ரூ இலாபம்னாலும் 50,100கிலோவுக்கு 100 ,200 வருமானம்தான் அவர்கள் பொழப்பு.இதற்காகத்தானே சைக்கிளை மிதிமிதின்னு மிதிச்சிகிட்டு  தெருத் தெருவா சுத்துறாங்க.

இப்படிப் பல விஷயங்களில் பட்டுத் தெளிந்து இப்பெல்லாம் பேரம் பேசுவதையே நிறுத்தி விட்டேன்.
இப்பவும்நம்மளை ஏதோ பொழைக்கத் தெரியாத ஆளு மாதிரி பக்கத்து வீட்டம்மாவும்காசிருக்கும் திமிர் எவ்வளவு சொன்னாலும் வாங்கிடுது.இதுனால நமக்கும் அதிகவிலைன்னு எதிர் வீட்டம்மாவும் நினைச்சாலும் கவலைப் படுவதில்லை.
சிறு வியாபாரிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டேன்.
பதிவிட்டவர்:

13 மறுமொழிகள்::

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

நல்ல முடிவு

அருமையான பதிவு

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !!!!!

goma said...

உண்மைதான்.தங்கம் விலை கிடு கிடுவென்று எவ்வளவு ஏறினாலும் ஏன் என்று கேட்கத்தோன்றாது.
5ஸ்டார் ஹோட்டலில் ,அரை வயிறு உணவுக்கு ஒரு மாத வீட்டுச் செலவுக்கான ரூபாயை தரத் தயாராக இருப்பவர்கள், ஒரு ஏழைக்கு 50 பைசா விட்டுத் தரத் தயங்குவார்கள்

Anonymous said...

நாங்களும் உங்களைப்போலத்தான்.

பாலராஜன்கீதா

கோபிநாத் said...

நல்ல விஷயம் ;)

கடவுளே அக்காவுக்கு இந்த டெம்ப்ளேட் மாத்தும் எண்ணம் எப்பதான் நிக்குமோ!! ;)

வல்லிசிம்ஹன் said...

கண்மணி, எழுதி இருப்பது அத்தனையும் உண்மை.
பென்னி வைஸ் அண்ட் பௌண்ட் ஃபூலிஷ்னு
இது பத்தி தானே சொல்றாங்க.

கண்மணி said...

வாங்க வல்லியம்மா நலந் தானே

பிரியமுடன்...வசந்த் said...

டெம்ளேட் மாத்திக்கிட்டே இருக்கீகளே

இங்க சொல்லியிருக்கும் யாவும் நடக்கிற நிஜமான நிகழ்வுகள்தாம்...

Anonymous said...

:((

sriram said...

கண்மணி,
நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன், காய்கறி / பழம் / பூ வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை ரொம்ப நாளைக்கு முன்னரே நிறுத்தி விட்டேன். ஆனால் சென்னை பாண்டி பஜார்/ பர்மா பஜார், சத்யா பஜார், டெல்லி கரோல் பாக், பாலிகா பஜார் போன்ற இடங்களில் பேரம் பேசாமல் வாங்கவே கூடாது.
2000 ருபாய் சொன்ன லக்கேஜை 750ரூபாய்க்கு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு.
இடம் அறிந்து பேரம் பேச வேண்டும்.
என்றும் அன்புட்ன
பாஸ்டன் ஸ்ரீராம்

தருமி said...

இப்படி விலை கேக்காம வீட்டுக்கு சாமான்கள் வாங்கிட்டு வந்து தங்ஸிடம் குட்டு வாங்கினா ...

துளசி கோபால் said...

சொன்னது அத்தனையும் ரொம்பச் சரி.
நான் பூக்கார அம்மாவிடமும் பேரம் பேசுவது இல்லை.

ஆட்டோ ஓட்டுனரிடம் மட்டும் அதுவும் ரொம்ப தூரம் போகும் இடமானால்....... அதுகூட இப்போ இல்லை.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு!

கண்மணி said...

நன்றி வசந்த்,ஸ்ரீராம்,தருமி சார்,துளசியக்கா ,அருணா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)