PAGE LOAD TIME

டெம்ப்ளேட் சோதிடம் [Templatology]


நியூமராலஜி,நேமாலஜி,வாஸ்தாலஜி மாதிரி புதுசா ஒரு ஜோதிடக்கலையை பல நாட்களாக ஆராய்ச்சி பண்ணி முடிச்சாச்சி.உடான்ஸ்மேனியா பல்கலைக் கழகத்திலிருந்து [எங்கே இருக்கு கோபி?] 'டாக்டர்' பட்டம் வந்து வாங்கிக்க சொல்லியும் போக பிடிக்கலை.இந்த ஜோதிடத்துக்குப் பேரு என்னன்னு கேக்கலையே 'டெம்ப்லேட்டாலஜி'.

வலைப்பதிவின் டெம்ப்லேட் பார்த்தே பதிவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்கள் குணாதிசயம் என்னன்னு சொல்லிடலாம்.ஒவ்வொரு வகைக்கும் உதாரணம் சொல்ல ஆசைதான் .ஆனால் எதுக்கு பொல்லாப்பு.நீங்களே ஒப்பிட்டுப் பார்த்து என்ன ஏதுன்னு முடிவு பண்ணிக்கும் உரிமையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

1.பிலாக் ஆரம்பிக்கும் போது பிலாக்கர் வழங்கிய டெம்ப்லேட் தவிர இது வரைக்கும் எதையும் மாத்தாதவங்க. இவங்க ரொம்ப எளிமையானவங்க.ஆடம்பரம் இல்லாத அமைதியான குணம் உடையவர்கள்.சிலர் கூடுதலாக சோம்பேறி வகையைச் சேர்ந்தவர்கள்.ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு பதிவிடுபவர்கள்.ஆனா பழக 'ரொம்ப நல்லவங்க'சிலர் என் பதிவைப் படிங்க கருத்தைப் பாருங்க பக்க வடிவில் என்ன வந்தது என்பது போன்ற பிடிவாத கொள்கைவாதிகள்.

2.பீட்டா பிலாக்கருக்கு தக்கவாறு டெம்ப்லேட் மாத்திக்கிட்டவங்க காலத்துக்கும் சூழ்நிலைக்கும் வளைந்து கொடுக்கும் 'பிலக்ஸிபில்' வகை.பிலாக்கர் வழங்கும் வசதிகளைப் பயன்படுத்தும் இவர்கள் பலர் யதார்த்தவாதிகள்.அவர்களின் பதிவுகளைப் போல.

3.அடிக்கடி தன் வலைப்பக்கத்தின் வடிவத்தை மாற்றிக் கொள்பவர்கள் முற்போக்கு வாதிகள்.புதிய சிந்தனைகளும் அழகுணர்ச்சியும் நிரம்பியவர்கள்.

4.மிக அடிக்கடி டெம்ப்லேட் மாற்றுபவர்கள் புதிது பார்த்ததும் பழையதை மறக்கும் குழப்பவாதிகள்.எதிலும் நிலையான குணமற்றவர்கள்.பதிவிட செலவழிக்கும் நேரத்தை விட பக்கத்தை மாற்றுவதில் நேரம் செலவிடும் இவர்கள் உறுதியான மனநிலை இல்லாதவர்கள்.

5.தான் எழுதும் பதிவுகளுக்குத் தக்கவாறு டெம்ப்லேட் அமைத்துக் கொள்பவர்கள் நேர்மைக் குணமுடையவர்கள்.மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணமுடையவர்கள்.

6.வலைப் பக்கம் முழுவதும் விட்ஜெட்டுகள் ,உரல்கள்,அட்சென்ஸ் வைத்திருப்பவர்கள் தொழில் நுட்பம் தெரிந்த சாமர்த்தியசாலிகள்.பிழைக்கத் தெரிந்தவர்கள்.

7.கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் அடிக்கும் கலரில் டெம்ப்லேட் அமைப்பவர்கள் படிப்பவருக்காக கவலைப்படாதவர்கள்.தங்கள் விருப்பம் மட்டுமே பிரதானமாக நினைப்பவர்கள்.சுயநலவாதிகள்.

8.மிக மெல்லிய வண்ணத்தில் மிக டல்லாக டெம்ப்லேட் அமைப்பவர்கள் ரசனை குறைவானவர்கள்.எப்படியிருந்தாலும் ஏதோ வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது என நினைக்கும் விரக்தியாளர்கள்.

9.டெம்ப்லேட் முழுக்க தனக்குத் தெரிந்ததையெல்லாம் போட்டு பதிவு எங்கே எனத் தேட வைப்பவர்கள்.கொஞ்சம் வித்தை கர்விகள். கொஞ்சம் கோபக்காரர்கள்.எப்போது எந்த மனநிலையில் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.

10.டெம்ப்லேட்டில் பூக்கள் குழந்தைகள் கார்ட்டூன் என வைத்திருப்பவர்கள் சாதுவானவர்கள்.கடல்,மலை,நதி காடு என வைத்திருப்பவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள்
பிக்காஸோ ஓவியம் போல புரிந்தும் புரிபடாத படங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் பின் நவீனத்துவவாதிகள் கூடவே குழப்பவாதிகள்.பெண்கள் நடிகைகள் படம் வைத்திருப்பவர்கள் கடலை போடும் குணமுடையவர்கள்.மொக்கை மன்னர்கள்.

டிஸ்கி:ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் இத்துடன் சோதிடம் முடிகிறது.
இந்த பதிவில் வரும் கருத்துக்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கும் முயற்சியல்ல.சிலருக்கு பொருந்தலாம்.பொருந்தாமலும் போகலாம்.டேக் இட் ஈஸி.

24 மறுமொழிகள்::

Anonymous said...

நம்பர் 1 எனக்கு சரியா வரும். ஆனா டெம்ப்ளேட் மாத்தாததுக்கு காரணம் நான் கணினிக்கைநாட்டு. இன்னும் பதிவுல போட்டோக்கு எப்படிக்கட்டம் கட்டறதுன்னு தெரியாத கணினிக்கைநாட்டு. :)

சென்ஷி said...

:-)

சூப்பர்!

சென்ஷி said...

//கடல்,மலை,நதி காடு என வைத்திருப்பவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள்//

ஹிஹி.. சந்தோசம் :)

சந்தனமுல்லை said...

:)) மிகவும் ரசித்தேன்! சூப்பர்!

சந்தனமுல்லை said...

இதுலே நான் எதுலே வர்றேன்?!! கணிச்சு சொல்வீங்களா..ஃபீஸ் எதுவும் கேக்காம ப்ளீஸ்!! :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லாவே யோசிச்சீங்க..

எனக்கும் முதல் இது தான் நான் ஒரு சோம்பேறிங்க..

ஆயில்யன் said...

//தான் எழுதும் பதிவுகளுக்குத் தக்கவாறு டெம்ப்லேட் அமைத்துக் கொள்பவர்கள் நேர்மைக் குணமுடையவர்கள்.மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் குணமுடையவர்கள்.//

டீச்சர் உங்களோட நேர்மை எனக்கு புடிச்சிருக்கு :)

ஆயில்யன் said...

/ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் இத்துடன் சோதிடம் முடிகிறது.//

ஒ கட்டம் கட்டமா ஆராய்ச்சி போகப்போவுதா சரி ! :)

கண்மணி said...

சின்ன அம்மிணி
முத்து உங்க ரெண்டு பேருக்கும் முதல் சரிதான்.
அம்மினி படத்துக்கு கட்டம் கட்டுவதுன்னா என்ன?;((

கண்மணி said...

சென்ஷி நீ இயற்கையின் [நேச்சர்] காதலன் தான்

கண்மணி said...

முல்லை உங்களுக்கு 2 வதும் 10வதும் பொருந்தும்.

கண்மணி said...

ஆயில்யா முடிஞ்சா அடுத்த கட்ட ஆராய்ச்சியை முடித்து விட்டு 'டாக்டர்' பட்டம் வாங்க ஐடியா

கண்மணி said...

ஆயில்யா நான் 4 வது ரகம்.ஒருவேளை 5ம் பொருந்துதோ?
சரி ஏதோ தம்பி வஞ்சகப் புகழ்ச்சியா சொல்றே ஓகே

கோபிநாத் said...

யக்கா...எப்படி இப்படி எல்லாம் ;)))

ஆமா நீங்க எங்க வரிங்க இதுல!!?? ;))

அபி அப்பா said...

டீச்சர் நான் எத்தனாம் நம்பர்?????

Mrs.Faizakader said...

ரசித்து படித்தேன்..ரொம்ப அருமையாக இருக்கு..

பிரியமுடன்...வசந்த் said...

//3.அடிக்கடி தன் வலைப்பக்கத்தின் வடிவத்தை மாற்றிக் கொள்பவர்கள் முற்போக்கு வாதிகள்.புதிய சிந்தனைகளும் அழகுணர்ச்சியும் நிரம்பியவர்கள்.//

இது நானு....

LOSHAN said...

அய்யய்யோ.. குழப்பிட்டீங்களே.. நான் இதுல ரெண்டு மூணு வகையில வர்றேனே.. ஆனா நல்லா இருக்கு உங்க சோதிடம்.. இதைப் படித்தவுடனேயே நிறையப் பேர் டெம்ப்ளேட் மாத்தப் போறாங்க.. ;)

கண்மணி said...

அபி அப்பா நீங்க தனி .யாராச்சும் மாத்திக் குடுத்தா ஹிட் பதிவா போடுவீங்க

கண்மணி said...

வாங்க Faizakadar நன்றிங்க

கண்மணி said...

வசந்த் அடிக்கடி மாத்தினா 3 லிருந்து 4 க்கு போயிடுவீங்க [என்னைப் போல]

கண்மணி said...

லோஷன் நானும் 2,3வகை போல இருக்கும் .எல்லாம் சேர்த்து கூட்டிக் கழித்துக் கணக்குப் பாருங்க [ராதா ரவி ஸ்டைலில்] 4 மட்டுமே மிஞ்சும்.:))

மிஸஸ்.தேவ் said...

டெம்ப்ளேட் ஜோதிடம் சூப்பரா இருக்கே. ஆனா இவ்ளோ வாசிச்சும் நான் எந்த வகைல சேர்றேன்னு தெரியலையே கண்மணி டீச்சர்.நீங்களே முடிஞ்சா ஒரு தடவை நம்ம பிளாக் டெம்ளேட்டையும் பார்த்து அந்தப் பத்துல நான் எங்க இருக்கேன்னு கொஞ்சம் சொல்லக் கூடாதோ?!

www.mrsdoubt.blogspot.com

இதான் என் பிளாக் ...வந்திருக்க மாட்டிங்க இங்க...ஆனாலும் இப்போ
பார்த்து சொல்லுங்க டீச்சர் சீக்கிரமா ...

கண்மணி said...

வாங்க மிஸஸ்.டவுட் உங்க பதிவு பார்த்திருக்கேன்.பின்னூட்டம் போட்டதில்லை.உங்க பேருக்கு ஏத்த் மாதிரி டவுட்டா?நீங்க 1A எளிமை அல்லது 1.B சோம்பேறி எது???:))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)