PAGE LOAD TIME

ஓடோ..ஓடோ..ஓடோடிப் போனேன்


டினேன்.....ஓடினேன்.ஆனாலும் ஆக்டோபஸாய் கிளை விரித்துப் பிரிந்து பறந்து மேலும் துரத்திக் கொண்டே வந்தன.சட்டென்று முதுகில் குத்தியது போல எரிச்சலும் வலியுமாக உணர்ந்த கணம் என்னுள் இருந்த 'மறத் தமிழச்சி' விழித்துக் கொண்டு கெக்கலித்தாள்.புலி விரட்டிய தேசத்தில் புறமுதுகு காட்டுவதா எனத் திரும்பிய நேரம் சுள்ளென்று இடது கையில் ஒரு எரிச்சல்.மாட்டியாகி விட்டது இனியென்ன எனத் திரும்பிப் பார்த்தால்...புடவையையும் சட்டையையும் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்திருந்தது ஒரு தீக் கங்கு.சொக்கப்பனை கொளுத்தியது போல எதிரே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன பச்சைப் புல்வெளியும் ஈச்சமரக்கன்றுகளும்...


அவ்வை சண்முகி படம் பார்த்திருந்தீர்களானால் அப்படியே அந்த வெடி விபத்துக் காட்சியைக் கண்முன்னே கொண்டு வாருங்கள்.என்ன அங்கே மீனாவோட குட்டிப் பொண்ணு ஓடோடும்...இங்கே ஒரு குண்டுப்பொண்ணு ஓடோடிப் போனேன்.எதுக்கு இந்த பில்டப்பா?

கணநேர சந்தோஷத்துக்கு காசைக் கரியாக்கனுமா னு யோசிக்கும் ரகம்தான்.இருந்தாலும் சிவகாசிக்குப் பக்கம் வந்துட்ட பிறகும் இப்படி யோசிக்க முடியுமா?மேலும் வெடி தேசமென்பதால் நண்பர்களும் உறவுகளும் பட்சணத்தோடு பட்டாஸையும் கொடுத்து விட்டுப் போனதால் இதுவரை பார்த்திராத,பார்க்கவும் விரும்பாத 'டமார் டுமீர்'கள் ஏராளமாக சேர்ந்து போனது.மத்தாப்பூ,சங்கு சக்கரம் ,பிளவர் பாட்,பென்சில் சாட்டை என கண்ணைக்கவரும் வண்ணக்கோலங்கள் அதிகமாக புகையைக் கக்குவதால் மூச்சிரைப்பு[வீஸிங்] உள்ள பிள்ளைங்களுக்கு அதிகமாகவும் மற்றவர்களுக்கு சளி பிடிக்கவும் செய்து போனமுறை வீட்டில் இருந்தவங்க விருந்துக்கு வந்தவங்கன்னு ஒருத்தர் பாக்கியில்லாமல் வரிசை கட்டிப் போனதில் எங்க குடும்ப டாக்டருக்கு ஏக சந்தோஷம்.சும்மாவே என்ன இந்தப் பக்கம் ஆளையேக் காணோம்னு கேட்பவர்.:))
அதனால் இந்த வருடம் இந்த அயிட்டங்களை ஓரம் கட்டிவிட்டு 'ராத்திரி நேரத்து' வாண வேடிக்கைகளை மட்டும் கொளுத்த முடிவானது. பார்பி,டோரா,பவர் ரேஞ்சர்,ஸ்பைடர் மேன்னு வகைவகையா பேருங்க.பச்சை நூல்கண்டு சுற்றிய ஆட்டம் மற்றும் ஹைட்ரஜன் பாம் வகைகள்.இது எல்லாம் போக 7 ஷாட்,12 ஷாட் னு வகைகள்.எப்படி வைக்கனும் என்னென்ன பாதுகாப்புனு பட விளக்கத்தோடு இருந்தன.அதில் ஒன்று கார் பாட்டரி சைஸில் மூன்று அடுக்குகளாக வெடிகள் இணைக்கப்பட்டு இரட்டை திரி வைத்து இருக்க ஆளாளுக்கு வாங்கிப்படித்து எப்படி வைக்கனும் என உறுதி செய்து கொண்டபின் தங்கையின் கணவர் திரியைப் பத்த வைக்க சுறு சுறுவன தீப்பிடித்து ஒவ்வொன்றாய் வெடித்து உயரே கிளம்பி ஒரு 20 அடி உயரத்துக்குப் போனதும் கொஞ்ச நேரம் 'கம்முனு' இருந்துவிட்டு படீரென வெடிக்க ஆஹா வானமெங்கும் கிளைகிளையாய்ப் பிரிந்த வர்ணஜாலம்.

இப்படி ஒவ்வொரு புதுவகையையும் படித்துப் படித்து வெடிக்கும் போதுதான் அது நடந்தது.எங்க வீட்டு உதவியாள் ஒரு முட்டாள் முனியன்.நாம் என்ன சொல்லுகிறோமோ அதற்கு எதிர்மறையாக மட்டும்தான் செய்வார்.அத்துடன் அவசரத்திற்கு பிறந்த அவசர குடுக்கை.கடைக்குப் போய் இதை வாங்கி வா என்றால் எதை என்று சொல்லும் முன் கடையில் நின்று கொண்டிருப்பார்.
அவருக்குத் தானும் ஒரு வெடி வெடிக்க ஆசை .சரி என அனுமதிக்க அய்யாவும் போய் கன ஜோராய் திரியைப் பத்த வைத்தார்.சட்டென்று ராக்கெட் மாதிரி சீறிக் கிளம்பிய நெருப்பு மேல் நோக்கிப் போகாமல் தரை வழியாகநேராக அகலத் திறந்து வைத்திருந்த காம்பவுண்ட் கேட் வழியாக உள்ளே பாய்ந்து நெருப்புக் கோளமாக ஒரே இடத்தில் சுற்றியது. சரி சரியாக வெடிக்கலை ஏதோ நமத்துப் போன அயிட்டம் போலன்னு பார்த்துக் கொண்டிருந்தோம். தெருவுக்கும் நாங்கள் நின்று வேடிக்கைப் பார்த்த போர்ட்டிகோவுக்கும் சுமார் 30 அடி தூரமிருக்கும் என்பதால் பயமில்லாமல் நெருப்புக் கோளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் படாரென்று வெடித்தது.திரியைத் தலைகீழாக வைத்து விட்டதால் ஆகாயத்தில் நடக்க வேண்டிய வாண வேடிக்கை எங்க வீட்டு தோட்டத்தில் அரங்கேற...அப்போதுதான்..ஓடோ..ஓடோ ஓடோடி போயும் சட்டையைத் துளைத்துக் கொண்டு என் கையைப் பதம் பார்த்தது.பிள்ளைகள் எல்லோரும் வீட்டுப் பக்கம் ஓடியதால் போர்டிகோ தூண் இருந்ததால் யாருக்கும் பிரச்சினையில்லை.வெடியின் வீரியம் எத்தனையிருந்தால் தோட்டத்துப் பச்சைப்புல்வெளியும் குரோட்டன்ஸ் செடிகளும் திகுதிகுவன எரியும்.?
ஒருவழியாகத் தண்ணீர் ஊற்றி அணைத்தாகி விட்டது.வெடிகூட வைக்கலைங்க. வேடிக்கைப் பார்த்ததற்கே இப்படி விழுப் புண் படும்படியாகி விட்டது.லேசானா காயம்தான் .உடனே ஸ்கின்கார்டு மருந்து போட்டாச்சு.ஆனாலும் அதற்கப்புறம் பிள்ளைகள் வெடி பற்றி பேச்சே எடுக்கலை.வெடிக்கவும் இல்லை.
ஓடியது:

10 மறுமொழிகள்::

Anonymous said...

அச்சச்சோ!!உங்க தீபாவளிப்பதிவு இதுதானா!!!

புதுகைத் தென்றல் said...

முதல் முறையாக பட்டாசு ஏதும் வெடிக்காத தீபாவளி
இந்த வருட தீபாவளிதான். ஏனோ மனமே இல்லை.
பிள்ளைகள் வெடிக்க பாத்துக்கினு இருந்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சச்சோ கண்மணி :(

நானும் இந்தமுறை வேடிக்கைதான் பார்த்தேன் ஆனா என் பைய்ன் ஒத்தவெடியா வெடிச்சான்.. :)

கண்மணி said...

வாங்க சின்ன அம்மிணி தீபாவளி தொடர் போச்சா ....இது சொந்த கதை நொந்த கதை

கண்மணி said...

வாங்க புதுகை நா மும் வேடிக்கைப் பார்க்கும் ஆள்தான் .அப்படியும் விழுப்புண் அவ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

முத்து அச்சச்சோ சோ சொல்லி .....அவ்வ்வ்வ்வ் புண்பட்ட மனதை
இன்னும் நோகடிக்காதிங்க .இது மா வீரமாக்கும் ;((

கோபிநாத் said...

ஆகா! ;((

இப்போ ஓகே தானே!??

கோபிநாத் said...

ஆகா! ;(

இப்போ ஓகே தானே!?

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமெ கண்மணி.
இன்னி வரை எனக்கு ஃப்ளவர் பாட் பயம்தான்
. இப்ப எவ்வளவோ பரவாயில்லை.

சிலசமயம்(முன் காலத்தில்) இவை வெடிக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
பாவாடையில் பொத்துக்கொள்வதும், அம்மா உடனே அதை யாருக்காவது கொடுத்துவிடுவதும் உண்டு:)

கண்மணி said...

கோபி நோ பிராபளம்.
வல்லிம்மா சங்கு சக்கரமும் வெடிக்கும் ஆஹ்ஹா. ச்சும்மா ஒரு தகவலுக்கு எழுதினேன் ஒரு எச்சரிக்கை தன

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)