PAGE LOAD TIME

ஒன்பதும் தொன்னூற்று ஐந்தும்.........

கதிர் நாற்பதின் பொருட்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்த போதே அவன் தாயார் நிறைய அறிவுரைகள்  சொல்லித்தான் அனுப்பினாள்.
உன்னுடைய நோக்கம் நாற்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
எந்தச் சூழலிலும் முப்பதை விடக்கூடாது.அத்துடன்  பதின்மூன்றும் ,பதினான்கும்  மிக முக்கியம்.
அதனினும் முக்கியமாக என்பதைக் கடைபிடித்து எண்பத்தியிரண்டு,எண்பத்து மூன்றுகளை ஒதுக்கி எழுபத்தி ஒன்பதை தேர்ந்து எடுக்க வேண்டும்.

தாயார் சொன்னபடியே கதிர் நடந்ததோடு சிவாவையும் நண்பனாக்கிக் கொண்டான்.
சிவா தன் பிறந்தநாளுக்காக ஒன்பதிற்கு ஏற்பாடு செய்து கதிரையும் அழைத்திருந்தான்.
இருபத்தி ஆறும்,தொன்னூற்று மூன்றும்  நிச்சயம் விருந்தில் இடம் பெறும்.தாய்க்கு கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது.
மறுத்தால் நண்பனும் வருத்தப்படுவான் என்பதால் என்ன செய்வதெனக் குழம்பிய கதிர்,சிவாவிடம் தவறாக நினைக்காதே சிவா நான் தொன்னூற்று ஐந்தில் இருப்பதால் என்னால் விருந்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லி விட்டான்.
இருந்தும் முப்பதைலிருந்து தவறி விட்டோமேயென்று வருந்தி அம்மாவுக்கு தொலைபேசினான்.அவன் சொன்னதைக் கேட்ட அம்மா சொன்னாள் வருத்தப்படாதே கதிர்  முப்பதைக் கடைபிடிக்காமல்  சிவாவிடம் மறுப்பு சொல்லியதால் தான் நீ வருந்துகிறாய்.ஆனால் உன் வருத்தத்திற்கும் மருந்து முப்பதிலேயே உள்ளது என்று  ஆறுதல் சொன்னாள்.
இந்தக் கதையில் வரும் எண்களின் பொருள் புரிந்தால்  அடடா இந்த காலத்திலும் இப்படியொரு பிள்ளையா ?காதுல பூ சுத்தாதீங்கன்னு  சொல்லுவீங்க.
போகட்டும் இது கதைதானே.நிஜமல்ல.அதனால்தான் நானும் முப்பதை மீறி இப்படிக் கதைத்திருக்கிறேன்.
இன்னும் புரியலையா?

எல்லாம் திருக்குறளின் அதிகாரங்களைக் குறிப்பிடும் எண்கள் சாமி.
தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அய்யா வீட்டிற்கு ஒரு தமிழறிஞர் வந்திருந்தாராம்.அவருக்கு ஒன்பதுக்கு ஏற்பாடு செய்யட்டுமான்னு கேட்டபோது இல்லை மன்னிக்கவும் நான் தொன்னூற்று ஐந்தில் இருக்கிறேன் என்றாராம்.
திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரம்-----விருந்து
தொன்னூற்று ஐந்து-------மருந்து
இதைப் படித்த பிறகு நானும் இப்படிக் கதை சொல்லிப் பார்த்தேன்.
இன்னும் விளக்கம் வேண்டுமா?

நாற்பது-----கல்வி
முப்பது-----வாய்மை
பதின் மூன்று----அடக்கம்
பதின் நான்கு-----ஒழுக்கம்
எண்பது----நட்பு ஆராய்தல்
எண்பத்தியிரண்டு----தீ நட்பு
எண்பத்திமூன்று-----கூடா நட்பு
எழுபத்தியொன்பது-----நட்பு
ஒன்பது-----விருந்[து]தோம்பல்
இருபத்து ஆறு-----புலால் [மறுத்தல்]
தொன்னூற்று மூன்று----கள் [உண்ணாமை]
தொன்னூற்று ஐந்து-----மருந்து


பதிவிட்டவர்:

5 மறுமொழிகள்::

கதிரவன் said...

:) உக்காந்து யோசிச்சிருக்கீங்க டீச்சர். கதை நல்லா இருக்குது..

விருந்துல கலந்துக்கிட்டு “தொன்னூற்று ஐந்தில் இருப்பதால் இதெல்லாம்(புலால்,கள்) வேணாம்”னு சொல்லி இருபத்து ஆறையும்,தொன்னூற்று மூன்றையும் கடைப்பிடிக்கற அப்பாவிகள் இந்தக்காலத்திலயும் இருக்காங்க டீச்சர்

அப்புறம், //என்பது----நட்பு ஆராய்தல்
என்பத்தியிரண்டு----தீ நட்பு
என்பத்திமூன்று-----கூடா நட்பு// இதில் ‘என்பது’ என்பது ‘எண்பது’ என வரணும்னு நினைக்கிறேன்

கண்மணி said...

வாங்க கதிரவன்
நாயகன் பேர் கதிர் ன்னதும் படிச்சீங்களோ
எண்பது/என்பது கவனிக்கவில்லை.
சுட்டியமைக்கு நன்றி.

கதிரவன் said...

//நாயகன் பேர் கதிர் ன்னதும் படிச்சீங்களோ//

:) அப்டி இல்லீங்க. வழக்கமா Google Reader மூலமா உங்களோட எல்லாப்பதிவுகளையும் படிச்சிடுவேன்;ஆனா பின்னூட்டம் அதிகம் இட்டதில்லை

கண்மணி said...

தெரியும் உங்க 'பஸ்ஸை நிறுத்துங்க பதிவு மறக்க முடியுமா?=)):))
பாலோயர்னும் தெரியும்.அந்த அளவு என் எழுத்துக்கள் பிடித்திருந்தால் மகிழ்ச்சியே.
உங்க ரஷ்ய அனுபவங்கள் படித்தேன் .பின்னூட்டம் இடவில்லை.அவ்வளவே.
வாழ்த்துக்கள் கதிரவன்

Anonymous said...

அட!!!

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)