PAGE LOAD TIME

வாஹா


யணக்கட்டுரை எழுதும் அளவிற்கு துளசி டீச்சர், புதுகைத் தென்றல் போல அடிக்கடி பயணம் செல்பவள் அல்ல என்றாலும்
சமீபத்தில் டெல்லிக்குப் போயிருந்தபோது அமிர்தசரஸ் போகும் வாய்ப்பும் அங்கிருந்து வாஹா போகும் வாய்ப்பும் கிடைத்தது.
ரங்கமணியோட வெளி நாடோ அல்லது வெளியூரோ போகக்கூடிய வாய்ப்பு இருந்து போயிட்டு வந்துட்டாலும் ஹூம் பதிவெழுதும் அளவுக்கு மேட்டர் தேறாது.அவங்களுடைய வேலையே பிரதானமாக இருப்பதாலும் ,வேலை முடிந்தவுடன் அடுத்த ஃபிளைட்டுக்கே ஏற்கனவே ரிட்டன் டிக்கெட் போட்டுவிடுவதாலும் சைட் சீயிங் என்பது ச்சும்மா லுலூலாயிக்குதான்.
நானும் போயிட்டு வந்தேன்னு சொல்லிக்கலாம்.
இப்படித்தான் போன வருடம் சிங்கப்பூர் போகும் வாய்ப்புக் கிடைத்தது.
ஏதோ தமிழ் தெரிந்த நண்பர் அங்கு இருந்ததால் சந்தோஷா தீவு,பேரட் ஷோ,முஸ்தபா மால் னு பார்க்க முடிந்தது.
அப்படித்தான் டெல்லியும் அமைந்தது என்றாலும் இந்தமுறை கொஞ்சம் அதிகமாகவே பார்க்க முடிந்தது.
அமிர்தசரஸில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றதால் தமிழ்நாட்டிலிருந்து நாலு ஐந்து நண்பர் குடும்பங்கள் வந்திருந்தன.மேலும் விழாக் குழுவினரே விழா ஏற்பாட்டில் ஒருநாள் வாகா பார்டர் ,மறுநாள் பொற்கோவில் என அழைத்துச் சென்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை என்பதும் தினமும் கொடியேற்றி இறக்குவார்கள் என்பதும் மட்டுமே தெரியும்.
முத்துலட்சுமி வேற முன்னமே அமிர்தசரஸ் ,வாஹா பார்டர் பதிவு போட்டுட்டாங்க.அதனாலென்ன நாம போயிட்டு வந்ததை வச்சி ஒரு பதிவு ஒப்பேத்திடலாம்னு தோணுச்சு.
எல்லை பகுதியும் இராணுவ வீரர்களும் இருப்பார்கள் என்ன பெரிதாக இருந்துவிடப் போகிறது என்ற நினைப்போடுதான் போனோம்.[ஷாப்பிங் கட்டாயிடுச்சு].ஆனால் போன பிறகு வாழ்க்கையில் ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம்,நிகழ்வு இதுன்னு தோணுச்சு.
மாலை ஆறு மணிக்கு கொடி இறக்கும் நிகழ்வுக்குத்தான் போனோம்.விழாகுழுவினர் ஏற்பாடு செய்திருந்த பஸ் மற்றும் கார்களில் போனதால் அமிர்தசரஸிலிருந்து எத்தனை தூரம் என்பதெல்லாம் தெரியவில்லை.ஒரு 30 நிமிடப் பயணமாக இருக்கும்.
வாஹாவை நெருங்கும் போது ஏதோ மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குத்தான் வந்து விட்டோமோ என எண்ணும்படி அங்கங்கே தள்ளு வண்டி கடைகள்.அவித்த கடலை,கிழங்கு,பாப்கார்ன் ஐஸ்கிரீம் வண்டிகள்.
போட்டி போட்டுக் கொண்டு சிடியும் போட்டோவும் விற்கும் சிறுவர் கூட்டம்.ஆண்களும் பெண்களுமாக ஜே ஜே வெனப் போய்க் கொண்டிருந்தனர்.
விழாக்குழுவினர் சிறப்பு அனுமதி பெற்றிருந்ததால் எல்லை கேட்டின் அருகிலேயே இருமருங்கும் நாற்காலிகள் போடப்பட்டு அமர வைக்கப்பட்டோம்.
இந்திய கேட்டில் நமது தேசியக் கொடியும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இந்தியில் பாரத் என்றும் எழுதப் பட்டிருந்தது.கேட்டை ஒட்டிய தூணில் இந்திய சின்னமான சிங்கமுகம். மேலே ஒரு புறம் இந்திய தேசியக் கொடி.மறுபுறம் பாகிஸ்தான் கொடி பறந்து கொண்டிருந்தன.


ஹிந்தி நை மாலும் என்பதால் என்ன பேசினார்கள் பாடினார்கள் என்பது புரியவில்லை என்றாலும் ஜெய்கோ பாடல் மட்டும் புரிந்தது.அங்கு சென்ற கணம் முதல் ஒரு இனம் புரியாத பரவசமும் சிலிர்ப்பும் ஏற்பட்டது உண்மை.இது என் நாடு என்ற உணர்வும் வீரர்களின் கோஷமும் என்னையறியாமல் கண் கலங்க வைத்தது.
இரண்டு இரண்டு வீரர்களாகவும் சிலசமயம் நால்வராகவும் இராணுவ நடை நடந்து கேட் அருகில் வந்து காலைத் தூக்கி துக்கி உதைப்பதும் திரும்புவதுமாக இருந்தனர்.காலைத் தூக்கி என்றால் கிட்டத்தட்ட நெஞ்சுவரை முழங்காலைத் தூக்கி அடிக்கின்றனர்.அடுத்து பாகிஸ்தான் பக்கமும் இதுபோல நிகழ்ந்தது.
இந்திய எல்லைப் பக்கம் திரண்டிருந்த கூட்டம் இரண்டு புறமும் நிரம்பி வழிந்தது.ஒவ்வொரு முறையும் 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' 'பாரத் மாதா கீ ஜே' 'வந்தே மாத்ரம்' என்று கோஷம் எழும்போது சிலிர்ப்பாக இருந்தது.


அந்தப்புறம் கூட்டம் குறைவாக இருந்த போதும் பர்தா அணிந்த பெண்களும் அமர்ந்து கொண்டு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிட்டனர்.
நிகழ்வின் உச்சக் கட்டத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கதவுகளும் படாரெனத் திறக்கப் பட்டன.வீரர்கள் மாறி மாறி கை குலுக்கிக் கொண்டனர்.அடுத்தடுத்து வீரர்கள் கேட்டை நோக்கிப் போவதும் வருவதுமாக இருந்தனர்.
இறுதியாக இந்திய வீரர் நம் கொடியையும் பாகிஸ்தானிய வீரர் அவர்கள் கொடியையும் மெதுவாக இறக்கிக் கொண்டே வர நம் வீரர்கள் அதை இரு கைகளிலும் ஏந்தி இராணுவ மரியாதையோடு கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் கதவுகள் மூடப்பட்டன.
அன்றைய நிகழ்வில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுக்கு மற்ற வீரர்கள் கை கொடுத்து வாழ்த்தினர்.எங்களுக்கு சிறப்பு அனுமதி என்பதால் சிறு தேநீர் விருந்தும் கொடுத்தனர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையைப் பிரிக்கும் கம்பி வேலிகளையும் பார்த்தோம்.


குதிரைமீது அமர்ந்திருந்த எல்லை வீரர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
சுமார் ஒருமணி நேரம் துடிப்போடும் சிலிர்ப்போடும் என் தேசம் என் நாடு என்ற உணர்வு மேலிட பார்த்துக் கொண்டிருந்தாலும் சில கேள்விகளுக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை.
1.வீரர்கள் காலைத்தூக்கி தூக்கி உதைப்பது ஏன்?அதன் அர்த்தம் என்ன?இதைக்கேட்டபோது உடன் வந்த ஒரு நண்பர் சொன்னார்.இது போன்ற கொடி ஏற்றும் அல்லது இறக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகச் செய்தால் எடுபடாது.அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் காட்டி பின் நட்புணர்வைக் காட்டுகிறார்கள் என்றார்.இது அவரின் யூகம்தான் என்றாலும் சரியா எனத் தெரியவில்லை.
2.நம் பக்கம் 'ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமும்,அவர்கள் பக்கம் 'பாகிஸ்தான் ஜிந்தாத் கோஷமும்' வெறியோடு வலுக்கும் போதெல்லாம் நாமே பிரிவினையைத் தூண்டுகிறோமோன்னு சந்தேகம் வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக வெளியே வரும்போது சின்ன சின்ன தொலைக்காட்சிகளில் வீடியோவாக ஓட விடப்பட்டுக் கொண்டிருந்த இந்த கொடியேற்ற/இறக்கக் காட்சிகள் ,விடாது துரத்தி வந்து சிடி வாங்கச் சொல்லுதல் நம் தேசப் பற்றையும் வணிகமாகி விட்டதோன்னு தோன்றியது.சரி இப்படியொரு நிகழ்வை நேரில் பார்க்க முடியாதவர்கள் சிடிக்கள் மூலம் தானே பார்க்க முடியும்.விஜய் டிவியில் ஒருமுறை வாஹா நிகழச்சி காட்டினார்களாம். நான் பார்க்கவில்லை.
சிடி வாங்கி இருக்கலாம்.ஏனோ வாங்கவில்லை. கையில் கொண்டு போயிருந்த கேமிராவை வைத்து பிடித்ததே போதும்னு தோணுச்சு. 30 நிமிட முழு வீடியோ பதிவுல ஏற்ற நேரமாகும் என்பதால் இந்த சாம்பிள் மட்டும் பாருங்க. இல்லையானால் யூ டியூபில் பாருங்க.
10 மறுமொழிகள்::

Anonymous said...

informative and useful.

தமிழ் பிரியன் said...

ஆஹா... வாஹா எல்லாம் போய்ட்டு வந்தாச்சா?....:))

டெம்ப்ளேட் துள்ளலா இருக்குங்க டீச்சர்!

Anonymous said...

டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

ஆஹா வாயா பாத்தாச்சா!!!!!!!

நான் பாக்கணும்னு நினைச்சிருக்கற இடம்..
இருங்க பதிவை படிச்சிட்டு வர்றேன்.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய இடம் என்பதாலேயே நானும் செல்லும் அந்த நந்நாளுக்காக காத்திருக்கிறேன்.

ஹைதை பக்கம் வர்ற ஐடியா ஏதும் இருக்கா? மீ த வெயிட்டிங் டு மீட் யூ. :))))

கோபிநாத் said...

நல்ல பகிர்வு..வீடியோவுக்கு நன்றி ;)))

ஆயில்யன் said...

ஆஹா வாஹா ஒஹோ
டெம்பளட் வாஹாவை படிக்கிறதுக்குள்ள அசந்துப்போயிட்டேன்! :)

வாஹா ஒடிக்கிட்ட்டேஏஏஏஏஏஏஏஏ இருக்கு!

கண்மணி said...

நன்றி அம்மினி
தமிழ்ப்பிரியன் ஆப்கோ முஜே நாரஜ் ஹூய்ன்[பாப்பா மேட்டர் சொல்லவேயில்லை]
புதுகை இப்போதைக்கு நோ ஹைதை
கோபி முழு வீடியோ பதிவேற்றி முடியாமல் விட்டுட்டேன்.நிறைய நேரமாகுது.யூடியூபில் ஏற்ற முடிந்தால் சொல்கிறேன்.அவ்வ்வ்

ஆயில்ஸ் இது பாராட்டா,கிண்டலா?பதிவுக்கு மேட்டர் கிடைக்கலேன்னா டெம்ப்ளேட் ரிப்பேர் செய்வேன் ஆஹ்ஹாஹ்ஹா

Anonymous said...

நன்று

அன்புடன் அருணா said...

நானும் போயிருக்கிறேன்....ஒருவிதமான உணர்ச்சி மிகுந்த அனுபவம் அது...

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)