PAGE LOAD TIME

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும் [விழிப்புணர்வு மீள் பதிவு]


ப்ச் ன்னு துரத்தி அடித்தாலும் நம்மையே பாசமாக சுற்றிச் சுற்றி வந்து க்ய்ய்ங் கொய்ய்ங் னு ரீங்காரமிட்டுக் கொண்டே நம்மைக் கடித்து வைப்பதோடு டெங்கு மலேரியா பைலேரியா சிக்கன் குனியா நிமோனியா எனப் பலவித பரிசுகளையும் வாரி வழங்கும் வள்ளல் திருவாளர் 'கொசு' அவர்களுக்கு இந்த மீள் பதிவு சமர்ப்பணம்.
பாருங்க இப்ப டைப்பிக் கொண்டிருக்கும் போதும் அண்ணன் கடித்துக் கொண்டே 'டாங்கீஸ்' னு சொல்றார்.இந்தப் பதிவு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதியது.உண்மையில் என் சொந்த அனுபவமே.பொதுவாக மீள் பதிவு போடும் அளவிற்கு நம்ம பதிவுகள் இல்லையென்றாலும் போட்டதன் காரணம் டிஸ்கியில் சொல்றேன்.

இப்ப மீள் பதிவைப் படிங்க:

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும்


ஒருமுறை ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையின் இணையப் பக்கத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் விளையட்டுக்கள் பகுதியில் ஒரு விளையாட்டு பார்த்தேன்.
''கொசு அடிக்க வாரீகளா'' ன்னு ஒரு விளையாட்டு.100 கொசு அடித்தால் பரிசாம்.

முறத்தால் புலி அடித்த மறத்தமிழச்சி வம்சம்னாலும் நமக்கு கரப்பன் பூச்சியைக் கண்டாலே குலை நடுங்கும்.[அப்படி சொல்லிக்கிட்டத்தான் சினிம நடிகை ரேஞ்சுக்கு ஒரு கெத்தாக இருக்கும்].சரி கொசுதானே அடிக்கச் சொல்றாங்க.பரிசு வேறு உண்டாம்.இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஆன்லைன் போட்டியில் ஒரு பைக் வின் பண்ணாராம்.[சொல்லிக் கேட்டதுதான்].

இந்த கொசு அடிக்கும் போட்டிக்கு ஒரு மடிக் கணிணியோ அல்லது டிஜிடல் கேமராவோ கிடைக்கலாம்.ஒருவேளை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்றல் என்ன செய்வது.சரி அப்போ ரங்கமணிக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுடுவோம் என்று போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.

முதலில் இஷ்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டுக் கொண்டேன்.100 கொசுவுக்கு பேசாம 108 தேங்காய் ஒடைப்பம் என்று தோன்றியது.இருந்தாலும் அவசரப்பட்டு 'டீல்'வைக்க வேண்டாம் என்று வெறும் விண்ணப்பத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

'ஸ்டார்ட்' பட்டனை அழுத்தியதும் ஒரு பின் புலத்தில் கொசுக்கள் அங்கும், இங்கும் பறந்து கொண்டிருந்தன.எலிக்குட்டியை [மவுஸ்]கொசுவின் மீது வைத்ததும் மவுஸுடன் சேர்ந்து ஒரு வலை தோன்றியது.அடிபட்ட கொசுவைப் பிடித்துப் போடவாம்.

ஒவ்வொரு கொசு அடிபடும் போதும்,கிரிக்கெட் ஸ்கோர் போல திரையில் எண்ணிக்கை ஓடியது.ஆரம்பத்தில்  படு வேகமாக 45..46.48.49...என்று ஸ்கோர் போய்க் கொண்டிருந்தபோது, 'சுரீரென்று' கையை ஒரு கொசு கடித்தது. திடுக்கிட்டுத் திரும்பினல் ஒரு நிஜக் கொசு கடித்துக் கொண்டிருந்தது. ஓங்கி அடித்து அதையும் சேர்த்து அரை சதம் வந்து விட்டதா என்று பார்த்தால்,எலிக்குட்டி நிஜக் கொசுவை கணக்கில் எடுக்காமல் 49 ஸ்கோரே காட்டியது.நிஜக் கொசுவுக்கும் கணிணி கொசுவுக்கும் ஆகாதோ?

ஒருவழியாக 67..69..70 என்று போனது.ஆரம்பத்தில் மெதுவாக பறந்து கொண்டிருந்த கொசுக்கள் வேகமாகப் பறக்கத் தொடங்கி வலையில் சிக்குவேனா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தன. அப்போது,''அய்ய் ஆண்ட்டி என்ன செய்றீங்க'' என்றபடி ஓடி வந்தது பக்கத்து வீட்டு அரை டவுசர் வாண்டு.
''கொசு அடிக்கிறேண்டா கண்ணா ''என்றதும் நக்கலாக ஒரு பார்வையுடன்,''அய்ய் இப்படியா அடிப்பாங்க என்றபடி ஓடிப் போனது.அப்பாடா ஒரு வழியாக இப்போதைக்கு தொல்லை விட்டது என்று கொசு அடிப்பதில் மும்மரமானேன்.சட்டென்று முதுகில் ஏதோ படவே திரும்பினால் 'எப்பூடி என்றபடி ப.வீ.வாண்டு ஒரு 'ஹிட் ஸ்பிரேயருடன்'நின்றிருந்தது.அடப்பவி நல்ல வேளையாக முகத்தில் அடிக்காமல் விட்டாயே என்று மெதுவாக விஷயத்தைச் சொல்லி பக்கத்தில் அமர வைத்து வேலையைத் தொடர்ந்தேன்
76..78...79..81..84..மறுபடியும் முதுகில் ஒரு 'முசுமுசு' குட்டிப் பிசாசு என் தோளில் சாய்ந்தபடி முசுமுசுன்னு மூச்சு விட்டுக் கொண்டே ''ஹிம் ம் அதை அடிங்க..இதை அடிங்க ''என்று பரபரத்தது.88..93...95...வாண்டு அப்படியே சாய்ந்து முன்னல் வந்து தானே என் கையைப் பிடித்து எலிக்குட்டியைத் தானே அங்கும் இங்கும்  நகர்த்தியது..98..99..100..ஸ்ஸ் அப்பாடா!
வெற்றிகரமாக 100 கொசு அடித்தாகிவிட்டது.
திரையில் ''வாழ்த்துக்கள்'' என்ற அறிவிப்புடன 'பரிசுக்கு இங்கே அழுத்து' என்று வந்தது.
அதை அழுத்திவிட்டு படபடப்புடன் காத்திருந்தால்..
''கொசு அடித்தது போதும் போய் வேலையப் பாரு ராசா'' என்று வந்தது.என் முகத்தில் கொசு ஆடவில்லை சாரி ஈ ஆடவில்லை.
ப.வீ.வாண்டு 'ஹிக்ஹிக்கீ' என்று கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தது.


டிஸ்கி:1.ஒரு வாரமா எங்க வீட்டுல பிள்ளைகளுக்கு உடம்பு சுகமில்லை.தம்பி பையனுக்கு 'டெங்கு'காய்ச்சல்.டிவி விளம்பரத்துல பார்த்ததோடு அது பற்றி ஒன்றும் தெரியாது.ஆனா இரத்தத்தில் platelets count குறையும் அபாயம் வருமாம்.உடம்பில் ஆங்காங்கே சிவப்பாக திட்டு திட்டாக இரத்தம் உறைந்து போகுமாம்.இதனால் இரத்த அழுத்தம் குறையக்கூடுமாம்.100,000 க்கும் குறைவானால் மிக ஆபத்து.அவனுக்கு 10,5000 வரை சாதாரண வைரஸ் சுரம்னு இருந்துட்டு பின் அட்மிட் செய்து இப்போது 2,90,000 ஆக உயர்ந்துவிட்டது.நன்றாக குணமாகி வருகிறான்.
இன்னொரு தம்பி பையனுக்கும் தங்கையின் பையனுக்கும் காய்ச்சல்.மூட்டுக்களில் வலி என்பதால் சிக்கன் குனியா வாக இருக்கலாம்னு சந்தேகம்.எல்லாம் திருவாளர் கொசுவின் கைங்கர்யம்.
இப்போது காலநிலை சீரற்று மாறுவதால் மர்மக் காய்ச்சல் டெங்கு சிக்கன்குனியா எல்லாம் தான் இனி சர்வ சாதாரணம் ஆகிவிடும்னு டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் காய்ச்சல் என்றால் அதிலும் வாந்தி வயிற்றுப் போக்கு கடுமையான வயிற்றுவலி கண் சிவந்து எரிதல் மூட்டுக்களில் வலிபோன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இல்லாமல் உடனடி கவனிப்புத் தேவை. இவையெல்லாம்தான் இந்த வகைக் காய்ச்சலுக்கு அறிகுறிகளாம்.

இப்ப சொல்லுங்க 100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும்.பரிசு கிடைக்காட்டிப் போனாலும் குழந்தைங்க சுகமாக இருந்தால் நிம்மதி கிடைக்கும்.சரிதானே?

டிஸ்கி:2 வீட்டைச் சுற்றி சுத்தமாக நீர் தேங்காமல் வைத்திருந்தும் ஆல் அவுட் ஒரு பக்கம்.கொசு அடிக்கும் பேட் ஒரு பக்கம் என தற்காப்பு நடவடிக்கைகள்  இருந்தும் பிள்ளைங்களுக்கு காய்ச்சல் வருது.
ஒரு சின்னக் கொசு உற்றுப் பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியக்கூடிய உருவம் எத்தனை வேதனை கொடுக்கிறது என்றி நினைத்தாலே எரிச்சல் வருது.பள்ளிகளில்,தெருக்களில்,பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும் அந்தந்த ஏரியா நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


16 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா ரொம்ப சரி.. நாங்க சைனா ஐட்டத்தை வாங்ககூடாதுன்னு பாலிஸி வ்ச்சிருந்தாலும் இந்த கொசு அடிக்கிற் பேட் மட்டும் வாங்கி வச்சி தினம் வேட்டையாடிக்கிட்டிருக்கோம்.. வீட்டுல இப்ப ரிமோட்டை விட அதிகமா எல்லாரும் போட்டி போடுவது இந்த கொசு பேட் க்குத்தான்.. :)

கண்மணி said...

ஆமாம் முத்து இதுங்களை ஒழிக்க எந்த 'வேட்டைக்காரனாவது' வந்தால் தேவலை.அதுங்க பேட்டுக்கு மட்டும் அடங்குதா என்ன?ஒரு கொசு மாட்டினாலே பொரி பொரி ன்னு பொரியுது.நாம ஏதோ சாதிச்ச மாதிரி நெனைச்சிக்கிறோம்.
ஆலவுட் தேவலை.அதுவும் 'வீஸிங்' வரும் பிள்ளைங்களுக்கு ஒத்துக்கிறது இல்லை.

மாதேவி said...

இங்கும் அதே.. இதுதான். பேட்தான். தூங்கும்போது எலெக்ரிக் மருந்து வேறு வழிகள் தெரியவில்லை.

இதனால் எழுதியதுதான் "மணநாள் பான விருந்து"

தருமி said...

you cannot win all கொசூஸ்!!

மாசிலா said...

ஆரம்பத்தில் காமெடி, கடைசியில் நல்ல நல்ல அறிவுரைகள். சூப்பர். ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.


நன்றி.

கண்மணி said...

வாங்க மாதேவி கொசு உற்பத்தியாகும் இடங்களில் அதன் பெருக்கத்தைக் கட்டுப் படுத்தினால் ஒழிய வேறு மார்க்கமில்லை.அப்படியும் அவை முழுமையாக அழியாது

கண்மணி said...

அதை நினைச்சாத்தான் தருமி சார் அவமானமாக இருக்கிறது.
ரங்கமணியை ஜெயிக்க முடியுது..கொசுவிடம்?அவ்வ்வ்வ்

கண்மணி said...

நீண்ட நாள் கழித்து வருகை.வாங்க மாசிலா.
மிக்க நன்றி.

Sangkavi said...

கலக்கலா எழுதிஇருக்கறீங்க கண்மணி.........

Vidhoosh said...

tamil manam vottu ennuthu.

romba suvaarasiyamaana post-nga. arumaiyaana vilippunarvu... :)

நசரேயன் said...

உண்மையிலே விழிப்புணர்வு இடுகைதான்

கண்மணி said...

நன்றி சங்கவி
நன்றி நசரேயன்

கண்மணி said...

விதூஷ் நான் ஓட்டு பின்னூட்டம் எதையும் எதிர்பார்க்கும் ஆவல்களைக் கடந்த பழம்பெரு பதிவர்:))இருந்தாலும் நன்றி

Dr.எம்.கே.முருகானந்தன் said...

சுருக்கமாக எழுதினாலும்
"ப்ச் ன்னு துரத்தி அடித்தாலும் நம்மையே பாசமாக சுற்றிச் சுற்றி வந்து க்ய்ய்ங் கொய்ய்ங் னு ரீங்காரமிட்டுக் கொண்டே நம்மைக் கடித்து" என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
அவசியமான பதிவு.

Chithu said...

Kosukala olikka selavu illama oru vali solluren kanmani akka...Karpooravalli(Omavalli) ilayum Sothu kathalaium sama alavu eduthu mixila pottu araithu atha melliya thunila katti athula irunthu varra liquid eduthu empty liquidatorla pottu use pannunga appuram neenga irukira areavukey kosu varathu...

By
Chithu

ராமலக்ஷ்மி said...

கொசுக்கள் படாத பாடுதான் படுத்துகின்றன! நெல்லை எங்கும் இன்னும் டெங்குதானாமே:(?

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)