PAGE LOAD TIME

கனவில் வந்தவர்களும் பலன்களும்

ன்னென்ன பொருள் கனவுல வந்தா என்னென்ன பலன்னு ஒரு புத்தகத்தில் படிச்சேன்.A-z எல்லாம் போட்டிருந்தது.சாம்பிளுக்கு சில இங்கே:

கடிதம்: வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வருவாங்களாம்.[இப்பெல்லாம் போன் அல்லது மெயில்தானே]

சாவி: எதிர்பாராதது நடக்குமாம்.சாவி தொலைந்து போவது போல வந்தால் கஷ்டம்.தொலைந்த சாவியைக் கண்டு பிடிப்பது போல வந்தால் அதிர்ஷ்டம்


குடை:[குடை வந்தால் மழை வரும்]மழையிலும் மடக்கிய குடை வந்தால் கஷ்டம் வரும்.மழையில் விரித்த குடை வந்தால் சந்தோஷம்

கொட்டாவி:[வந்தா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே] கனவுல கொட்டாவி வந்தால் யாராவது பணக்கார மாப்பிள்ளை மாட்டுவாரம்.[அது சரி தின்னுட்டு தின்னுட்டு துங்கினா கொட்டாவிதான் வரும்]

சிலந்தி:எட்டுக்கால் பூச்சி கனவுல வந்தா அதிர்ஷ்டம்.அது சுவத்துல ஏறுவது போல இருந்தால் விரைவில் உங்க ஆசை நிறைவேறுமாம்.வலை பின்னுவது போல கனவு கண்டால் நிறைய பணம் சம்பாதிப்பீர்களாம்.[தூக்கத்துல நிஜ சிலந்தி கடிச்சிடப்போவுது]

இப்படி இன்னும் இன்னும் நிறைய எழுதியிருந்தது..அதெல்லாம் நமக்கெதுக்குங்க.
நம்ம மக்களுக்கு கனவுல சினிமா நடிகைங்கதானே வருவாங்க.அப்படி யார் யார் வந்தா என்ன பலன்னு கணிச்சுப் பார்த்துட்டோம்ல.

அசின்:[இப்ப ஹிந்தி பக்கம் போயிட்டாங்கல்ல]பலனா? புதுசா ஒரு பாஷை கத்துக்க ஆசைவருமாம்.அதுவும் ஹிந்தியாக இருக்கலாம்.

புவனேஸ்வரி:எதிர்பாராமல் கைதாகலாம்.பயப்படாதீங்க.விடுதலையும் ஆயிடலாம்.அதைவிட ஒரு கட்சியில் சேர்ந்து கொ.ப.செ ஆகும் வாய்ப்பும் கிடைக்கலாம்;))

தேவயானி:[உங்களுக்கு அக்கா இருந்தால்]உங்க சகோதரியால் நன்மை கிடைக்கும்.திரைப்பட வாய்ப்போ அல்லது சீரியல் வாய்ப்போ கிடைக்கும்.அதுவும் சீரியல்னா ஒரு ஆறு வருஷத்துக்கு கோலம் போட்டுக்கிட்டே இருக்கலாம்.அட நடிச்சிக்கிட்டே இருக்கலாமுங்கோ.

குஷ்பு:ஏதாவது சர்ச்சை விவகாரம்னு உங்க பேர் பேப்பர்ல வரலாம்.எப்படியிருந்தாலும் உங்க செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருக்கும்.டிவி நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜா போகலாம்.விருதும் கிடைக்கலாம்.ஏன் யாராச்சும் உங்களுக்கு கோயில் கூட கட்டலாம்:))

நயன்தாரா: பார்த்துங்க. கல்யாணம் ஆகாதவர்னா திடீரென உங்க காதலி கழட்டி விட்டுடலாம்.ஆனவர்னா உங்க மனைவிகூட உரசல் குடும்பத்துல குழப்பம் வரலாம்.

தமன்னா:எப்போதும் நல்ல ஜாலி மூடில் கலகலன்னு இருப்பீங்க.படம் இல்லைன்னாலும் விளம்பரங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.வாழ்க்கை சுமாராப் போயிட்டிருக்கும்.நோ பிராப்ளம்.

திரிஷா:எங்க இருக்கீங்கன்னு தெரியாம காணாமப் போகலாம்.போட்டியாளர்கள் உருவாகலாம்.வீடியோ சர்ச்சைகள்ல கூட மாட்டலாம்.உஷாருங்கோ.

சந்தியா: காதலில் நீங்க நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தோல்வி ஏற்படலாம்.நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டு 'ண்ங்'ணங்' னு குட்டிக்கிட்டு அழும் சூழ்நிலையும் வரலாம்.

சிநேகா: சிரிப்பும் சந்தோஷமும் இருக்கும்.நிறைய பட்டுப் புடவைகள் ,நகைகள்னு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.ஆனால் உங்க மொபைல்,எஸ்எம்மெஸ் விஷயத்தில் கவனம் தேவை.

ராதிகா: உங்களுக்கு பெரிய நிறுவனத்திடமிருந்து சீரியல் டைரக்ட் செய்யும் வாய்ப்பு வரலாம்.ஹிரோயின் தேடும் வேலை மிச்சம்.அவங்கதான் மெயின் ரோல்.அதுக்குத் தகுந்த மாதிரி கதை.நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.அதுபோல எந்த நேரத்திலும் கழட்டி விடப்படலாம்.

சோனியா அகர்வால்-உங்க வாழ்க்கையில் சிரிப்புக்கே இடமில்லை.எந்நேரமும் அழுகாச்சிதான் நீங்க.வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் [கஷ்டம்]வரலாம்.


ஸ்ரேயா---???'போடா போடி ன்னு விரட்டலாம்
நமிதா---???'மச்சான்ஸ்' மச்சான்ஸ்'னு கொஞ்சலாம்.இன்னும் பிரியாமணி,அனுஷ்கானு நெறைய பொம்மாயிங்க இருக்காங்க சாமி.அம்புட்டு பேருக்கும் சொல்ல முடியுமா.அவங்கவங்களே பலன் தெரிஞ்சுக்குங்க.
11 மறுமொழிகள்::

அண்ணாமலையான் said...

என் கனவிலே யானை வருது. அப்படின்னா நிஜத்துல நான் யார மீட் பன்னுவேன்?

கண்மணி/kanmani said...

அநேகமா ஆர்த்தியாக இருக்கலாம்.:))

Thamiz Priyan said...

எனக்கு கனவே வர மாட்டேங்குதே... ;-)

கோபிநாத் said...

வர வர அதிகம் சிரியல் பார்க்குறிங்க போல..!!!

விரைவில் "கனவு பலன்கள் கண்மணி" கூப்பிட போறாங்க..! ;)))

Anonymous said...

அநேகமா ஆர்த்தியா இருக்கலாம் //

இது என்ன கொடுங்க கண்மணி டீச்சர் :)

அண்ணாமலையான் said...

நல்ல வேளை நான் தப்பிச்சேன். பாவம் கணேஷ்கர்

பூங்குன்றன்.வே said...

இப்ப கூட பாருங்க..உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போடறா மாதிரியே கனவு வருதுங்க..

தருமி said...

விஜய் வந்தா ... ?

கண்மணி/kanmani said...

ஆஹா சார் விஜய் ரசிகரா?
அப்ப உங்க உச்சி மண்டையில் சுர்ர்ருன்னு ஏறுமுங்க [பாட்டு சார்]

Raja P said...

Good

Vijayan Durai said...

வித்தியாசமான பதிவு.

படித்தேன்,ரசித்தேன்,சிரித்தேன்...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)