PAGE LOAD TIME

பத்து ரூபாய்ப் பசங்க

ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுன்னு சொன்னவர்தான்...மேலும் சொல்கிறார்..கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிதுன்னு..
உயிர்வாழப் பணம் சம்பாதிப்போம்.ஆனா பணம் சம்பாதிக்க உயிரையேப் பணயம் வைக்கும் சிறுவர்கள்தான் இந்தப் பத்து ரூபாய்ப் பசங்க.
தமிழகத்தின் நயாகரா ஒகேனக்கல் அருவிக்கு போயிருக்கீங்களா?
ஓவென்று கொட்டும் அருவியும் சுழித்துக் கரை புரண்டு ஓடும் தண்ணீரும் பார்க்கஅழகுதான்.

ஆனால் அங்கதான் இந்த பத்து ரூபாய்க் கூத்தும் நடக்கிறது.தனி ஒருவரோ அல்லது ஒரு குழுவாகவோ பத்து ரூபாய் பணம் தந்துட்டீங்கன்னா போதும்.
சுமார் அறுபது அடி உயரத்துல இருந்து நூறு அடி ஆழமுள்ள அருவியில் குதிக்கப் பசங்க ரெடி.இவங்களுக்குத்தான் பத்து ரூபாய் பசங்கன்னு பேரு.கொஞ்சம் கஞ்சத்தனம் பண்ணினால் அஞசுக்கும் கூட குதிப்பாங்க அஞ்சு ரூபாய்ப் பசங்க.ஒரு முறை இல்லீங்க.ஒரு நாளைக்கு 40,50 முறை கூட குதித்து 500ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க.

 


சென்றவாரம் சன் டிவியில் நிஜம் நிகழ்ச்சியில் பார்த்தப்பதான் தெரிந்தது.எப்பவோ படிக்கிற காலத்துல ஒகேனக்கல் பிக்னிக் போயிருக்கோம்.ஆனால் சமீப காலமாகத்தான் இந்த குதித்தல் தொழில்.சுற்றுலாப் பயணிகளுக்கு மாலிஷ் போடுவது ,எண்ணெய்க் குளியல் இவற்றோடு இல்லாமல் 60 அடி உயரத்திலிருந்து டைவ் அடிப்பது என்பதுதான் தர்மபுரி மாவட்டத்தின் வறட்சிப் பகுதியான ஒகேனக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சிறுவர்களின் வருமானம்.
ஆடு மாடு மேய்த்துப் பிழைப்பு நடத்தும் பெற்றோர் அன்றாட சாப்பாட்டிற்கே வழியிலாத நிலையில் தங்கள் பிள்ளைகளின் இந்த நிலைக்கு மனப்பூர்வமாக அனுமதி தராவிட்டாலும் தடுப்பதுமில்லை.
முருகன்,விஜய்,அருணாச்சலம் என சன் டிவி பேட்டி கண்ட சிறுவர்கள் 12லிருந்து 13 வயதுக்கு உட்பட்டவர்களே.சில பேர் பள்ளிப் படிப்பை முழுவதுமாக நிறுத்தி விட்டனர்.சிலர் சனி,ஞாயிறு என விடுமுறை நாட்களில் மட்டும் இந்த [தொழிலை???]ச் செய்கின்றனர்.
எந்தப் புண்ணியவான் ஆரம்பித்து வைத்தாரோ தெரியலை.அய்யோ பாவம் சின்னப் பையன் 60 அடி உயரத்துல இருந்து குதிச்சிக் காட்டுறானேன்னு என்று யாரோ பணம் கொடுக்க ருசி கண்ட சிறுவர்கள் இதை ஒரு வருமானத்துக்கான உத்தியாகவே பயன் படுத்தத் தொடங்கி விட்டனர்.
எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கையும் முறையான பயிற்சியுமின்றி 'இளங்கன்று பயமறியாது' என செய்கின்றனர்.அருவியும் மிகக் குறுகளான இடுக்குப் பாறைகள் நிறைந்த பகுதி.கொஞ்சம் தவறினாலும் பாறைகளில் மோதிக் கொள்ளக்கூடிய அபாயம் உண்டு.விழுந்தவனுக்கு அடிபட்டாலோ நீரில் மூழ்கி விட்டாலோ காப்பாற்றக்கூட முதலுதவிக்குன்னு யாரும் இல்லாத நிலை.நீரின் ஓட்டத்தையும் போக்கையும் தாங்களாகவே கணித்து பணம் கொடுக்கப்போவோரிடம் 'குதிக்கட்டுமா' என அனுமதி வாங்கிக் கொண்டு மேலிருந்து விழுகின்றனர்.
அருவியில் பரிசல் சவாரியும் உண்டு.சிலசமயம் மேலிருந்து குதிப்பவன் கீழே பரிசல்மீது விழுந்து அடிபடுவதும் கூட நடக்குமாம்.அப்படி ஒருமுறை வெங்கடேஷ் என்ற சிறுவன் பரிசல் மீது விழுந்து வயிற்றில் அடிபட்டிருக்கிறானாம்.
எல்லோருமே கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு செல்லும் கூட்டம்.அவர்களுக்கு அந்த பத்து ரூபாய் பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அந்த பசங்களுடைய உயிர்?.
இதை எப்படி அங்குள்ளவர்கள் அனுமதிக்கின்றனர்.ஏன் காவல்துறையினர் தடுப்பதில்லை?
வாழ்க்கையில் விரக்தியாகி தற்கொலைக்கு முயல்பவனைக்கூட கைது செய்யும் சட்டம் இப்படித் தினம் தினம் தற்கொலைக்குச் சமமான விளையாட்டில் ஈடுபடும் இந்த சிறுவர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?இவர்களுக்கு என்ன அனுமதியா கொடுக்கப்பட்டிருக்கு?
பொதுவாக அருவி ,அணைக்கட்டுப் போன்ற சுற்றுலாப்பகுதிகளில் சிறப்புக் கண்காணிப்பு காவலர்கள் பணியமர்த்தப் பட்டிருப்பார்கள்.அவர்கள் ஏன் இதைத் தடுப்பதில்லை?
அடிபடும் அபாயம் போக ஒரு நாளைக்கு 40,50 முறை மேலிருந்து கீழாக தண்ணீரில் குதிப்பதால் காது சவ்வு சேதமடையக்கூடுமாம்.அப்படி அருணாச்சலம் என்ற 13 வயது பையனுக்கு இப்போது காது சரியாக கேட்பதில்லையாம்.அவன் 12 வயதில் தொழிலை?ஆரம்பித்து கடந்த ஒரு வருஷமாக குதிக்கிறானாம்.சிலர் 4,5 வருட அனுபவம் உள்ளவர்களாம்.

நிஜம் நிகழ்ச்சி பேட்டியில் பேசிய பெண்கள் சொன்னார்கள்"என்னங்க பண்றது.ஆடு மேய்க்கற தொழில்ல வருமானம் வர்ரதில்லை.அப்புறம் இங்கன உள்ள பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு வாத்தியார்.அவரும் அடிக்கடி வர்ரதில்லை.அதுனால ஸ்கூலுக்கும் போவதில்லை.அருவிக்கு நாங்களா புள்ளைங்களை அனுப்பறோம்.அதுங்களாப் போகுதுங்க"
வயிற்றுப் பிழைப்புக்கும் தன் தம்பி,தங்கைகளைக் காப்பாற்றவும் இப்படிச் செய்வதாகக் கூறும் இவர்கள் மீது எழும் கோபம் வேதனையாக மாறுகிறது.
ஆனால் அற்ப சந்தோஷத்திற்காக சின்னப் பிள்ளைகளை இப்படிப் பட்ட காரியங்களில் ஈடுபட ஊக்குவித்து பணம் கொடுத்துப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் மீதும்,இது அபாயகரமான விளையாட்டு எனத் தெரிந்தும் அருகில் உள்ள காவல்துறையோ ஊர்ப் பெரியவர்களோ,ஊர் நிர்வாகமோ கண்டுகொள்ளாமல் இருப்பதும் கோபப்பட வைக்கிறது.
இளஞ்சிறார்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமென்றால் இது எந்தவகையைச் சேர்ந்தது.
உயிருக்கே உலை வைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டுத் தொழிலில் இருந்து அவர்களை யார் காப்பாற்றுவது?
இங்கேயும் பாருங்க
12 மறுமொழிகள்::

புதுகைத் தென்றல் said...

:((( மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

கொடிது கொடிது வறுமை கொடிது,
இளமையில் வறுமை மிக மிக கொடிது

vattukozhi said...

மனித நேயமுள்ள சிந்தனை.

நட்புடன் ஜமால் said...

குற்றங்கள் பெருக இது போன்ற நிகழ்வுகளும் ஒரு காரணம்.

பிரியமுடன்...வசந்த் said...

அட

அடடா ப்ச்..

:(

சிறப்பான இடுகை..

கோபிநாத் said...

ம்ம்ம்...நானும் டிவியில் இந்த கொடுமையை பார்த்தேன்..;(

Anonymous said...

பாத்தாலே பதறுது

கண்மணி said...

நன்றி தென்றல்
வாத்து கோழி
ஜமால்
வசந்த்
கோபி
அம்மிணி

சந்தனமுல்லை said...

:-((

நல்ல சிந்தனை!

PPattian : புபட்டியன் said...

என்ன கொடுமைங்க இது.. கட்டாயம் சுற்றுலாப் பயணிகள் இவர்களைத் தவிர்க்க வேண்டும்.. ஆனாலும் அவர்கள் வயிறு? கல்வி? :(

அண்ணாமலையான் said...

வறுமை மட்டுமே காரனமல்ல, இவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் கும்பலும் ஒரு காரனம்.

ரோஸ்விக் said...

எட்டு வருடத்திற்கு முன்னாள் நான் அங்கு சென்றிருந்தேன். அப்பொழுது கூட அவர்கள் இது போல குதித்து பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் மனம் வருந்தியதுண்டு. ஆனால், நாங்கள் அவர்களை ஊக்குவிக்கவில்லை.

நல்ல இடுகை. வாழ்த்துகள்.

கண்மணி said...

நன்றி ரோஸ்விக்.எல்லோரும் இப்படிச் செய்தால் நிச்சயம் இது தடுக்கப்படும்.
இல்லை தடுப்பதற்கான நடவடிக்கையாவது எடுக்கனும்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)