PAGE LOAD TIME

என்னைப் போல் இரு






தண்மையாய் இரு
கோபம் குறைக்கப்
பாடம் சொன்னது
பனித்துளி

உறுதியாய் செயல்படு
சோதனை தாங்கி
வாழச் சொன்னது
சிற்றுளி

வெம்மை கொடு
தளைகள் தகர்த்து
வெளிவரச் சொன்னது
சாளரம்

புத்தியைக் கூர்மையாக்கு
களவும் கற்று மறக்க
கண்டிப்பு காட்டியது
கத்தி

வெளிச்சம் கொடு
முன்னேறிச் செல்ல
வழி காட்டியது
மெழுகுவர்த்தி

காலம் பொன்னானது
 நழுவ விடாமல்
கவனிக்கச் சொன்னது
நாள்காட்டி

அன்பால் பிணை
உறவுகள் வளர்க்க
போதனை செய்தது
பசைக் குப்பி

வாழ்க்கை இதுதான்
கற்றுக்கொள் என்றது
இயற்கை

உரையாடல் -கவிதைப் போட்டிக்கு


20 மறுமொழிகள்::

ஆயில்யன் said...

சேமித்து வைத்துக்கொள்கிறேன் வரிகள் - வாழ்க்கை பயணத்தில் உதவும் :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

அருமையான உவ‌மைக‌ள்

Sangkavi said...

//வாழ்க்கை இதுதான்
கற்றுக்கொள் என்றது
இயற்கை//

அழகான வரிகள்.............

நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........
http://sangkavi.blogspot.com/

கண்மணி said...

நன்றி ஆயில்யா
என்ன ஒரே தத்துவம்ஸ்

கண்மணி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கரிசல்காரன்.

கண்மணி said...

வருகைக்கு நன்றி சங்கவி

பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதை..சிந்தனையை தூண்ட வைக்கிறது..வாழ்த்துக்கள் !!!

கலையரசன் said...

//வெம்மை கொடு
தளைகள் தகர்த்து
வெளிவரச் சொன்னது
சாளரம்//

எந்த சாளரம்... கார்க்கியோட சாளரமா?
:-)

கண்மணி said...

நன்றி பூங்குன்றன்
தூண்டினால் சரிதான் :))

கண்மணி said...

வாங்க கலையரசன்...கவிதைக்கும் க்க்க்க்கா

தியாவின் பேனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

வெற்றிக்கான வாழ்த்துக்கள்

கண்மணி said...

நன்றி தியா
நன்றி அண்ணாமலையான்

நட்புடன் ஜமால் said...

வெற்றியடைய வாழ்த்துகள்.

கவிதையும் - தேடி எடுத்த படமும் மிக அழகு.

நட்புடன் ஜமால் said...

getting errors while opening this blog via internet explorer - please take backup.

தென்றல் said...

அட கவிதையெல்லாம் எழுதிவீங்களா..

வெற்றிபெற வாழ்த்துக்கள்!

திகழ் said...

அருமை

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை. இயற்கையிடம்தான் கற்றுக் கொள்ள எத்தனை இருக்கின்றன! வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

thenammailakshmanan said...

//அன்பால் பிணை

உறவுகள் வளர்க்க
போதனை செய்தது

பசைக் குப்பி//

அருமை கண்மணி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

புதுவைப்பிரபா said...

நம்பிக்கையூட்டும் வரிகள்.

வாழ்த்துக்கள்

புதுவைப்பிரபா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)