PAGE LOAD TIME

வாசு...கீ























வாசு...கி
இறைத்துக் கொண்டிருந்த வாளியை
அந்தரத்தில் நிறுத்தி வைத்து
வள்ளுவன் குரலுக்கு
உள்ளே போனாளாம்
புருஷன் பொண்டாட்டின்னா
இவங்களைப் போல இருக்கனும்
அம்மா போதித்து அனுப்பினாள்
புகுந்த வீட்டுக்கு


வாசு...கீ
ஆம்லெட்டும் ஊறுகாயும் எங்கே
போதையில் உறுமியது குரல்
இறைத்துக் கொண்டிருந்த வாளியை
கை நழுவ விட்டு விட்டு
அவசரமாய் ஓடினேன்


பக்கத்து வீட்டில்
பாதாளக் கொலுசு வாங்கி
கிணற்றில் விழுந்த வாளியை
எடுக்க வேண்டும்
நாளைக்கு

12 மறுமொழிகள்::

Anonymous said...

:))

பூங்குன்றன்.வே said...

//பக்கத்து வீட்டில்
பாதாளக் கொலுசு வாங்கி
கிணற்றில் விழுந்த வாளியை
எடுக்க வேண்டும்
நாளைக்கு..//

நெருப்பு வரிகள் கண்மணி !!!

கண்மணி said...

நன்றி பூங்குன்றன்.சும்மா அப்பப்ப இப்படிக் கிறுக்குவேன்.

goma said...

கணவர்மார்கள் யாரும் வள்ளுவராக இல்லை ஆனால் மனைவிமார்கள் மட்டும் வாசுகிகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சென்ஷி said...

:-)

கதிரவன் said...

:-))

கண்மணி said...

வெல் செட் கோமா.மனைவுமார்களும் அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை:))

கண்மணி said...

நன்றி சென்ஷி
நன்றி கதிர்

உமா said...

//பக்கத்து வீட்டில்
பாதாளக் கொலுசு வாங்கி
கிணற்றில் விழுந்த வாளியை
எடுக்க வேண்டும்
நாளைக்கு//

புதுவிதமான கவிதை ரசிக்கவைக்கிறது...வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

வள்ளுவன் காலம் மலையேறி விட்டது. இப்பொழுதும் வாசுகியை நினைத்து உருக வேண்டாம். புரிதலுணர்வு வெவ்வேறு விதங்களில் காலத்திற்குத் தக்கவாறு மாறிக்கொண்டே இருக்கிறது.

நல்ல கவிதை (????)

நல்வாழ்த்துகள் கண்மணி

கண்மணி said...

அதானே பார்த்தேன்.யாரும் சண்டைக்கு வரலைய்ய்ன்னு.:))
சீனா சார் சும்மா ஒரு நகைச்சுவைக்கு யோசித்து எழுதினேன்.ஆனாலும் இதுதானே நிஜம்.இந்தக் காலத்துல வாளி அந்தரத்தில் நிற்குமா?ஆஹ்ஹா.டேக் இட் ஈஸி சார்

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்..

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)