PAGE LOAD TIME

மெய்நிகர் முத்தம்


அம்மா!
பெண்ணைப் பிடித்திருக்கிறதா
உனக்கும் அப்பாவுக்கும்
சம்மதம் என்றால் திருமணம்
உனக்குப் பிடித்திருந்தால் சரி
ஊடுவலையில் உருவான பந்தம்
மருமகள் அழகாகச் சிரித்தாள்
அம்மா!
உன் மருமகள் கர்ப்பமாயிருக்கிறாள்
மேடிட்ட வயிறு  பூரிப்பு தந்தது
மறக்காமல் அனுப்பி வைத்தாள்
வாழ்த்துக்களும் கர்ப்பகால குறிப்புகளும்
மின்வெளி அஞ்சலில்
அம்மா!
குழந்தையைப் பார்
கொள்ளை அழகில் மயங்கிப் போனாள்
அள்ளிக் கொஞ்சிட மனம் தவித்தாள்
அம்மா!
உன் பேத்தி முத்தமிடுகிறாள் பார்
நீட்டிய கன்னத்தில் சூடாகப் பட்டது
வலைநிழலி வழியாக
மெய்நிகர் முத்தம்
வலைநிழலி=web cam
மெய்நிகர் =virtual
ஊடுவலை=web/cyberspace
மின்வெளி அஞ்சல்=email
33 மறுமொழிகள்::

Anonymous said...

மெய்நிகர் - அருமையான மொழிபெயர்ப்புங்க டீச்சர்

Anonymous said...

மெய்நிகர் - அருமையான மொழிபெயர்ப்பு

அண்ணாமலையான் said...

நிகழ் கால வாழ்க்கை... சின்ன சின்ன வரிகளில்

கே.ரவிஷங்கர் said...

ஆமா நீங்க டீச்சரா? நல்லா இருக்கு டீச்சர்.

ராமலக்ஷ்மி said...

இப்படியாவது கிடைக்கிறதே முத்தங்கள் என திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியாதாய் நகர்கின்றது வாழ்க்கை. அருமையான கவிதை. அழகான தலைப்பு.

ஆயில்யன் said...

//வலைநிழலி=web cam
மெய்நிகர்//

மிக அருமை - சொல் !& கவிதையும்..!:)

Sangkavi said...

அழகான வரிகளில், அழகான கவிதை........

கண்மணி said...

நன்றி சின்னம்மிணி.கொஞ்சம் திருத்தியமைத்திருக்கிறேன்

கண்மணி said...

நன்றி அண்ணாமலையான்

டீச்சர் என்றால் பயமா ரவிஷங்கர்.நான் 'சிரிப்பு டீச்சர்' [சிரிப்பு போலிஸ் போல]:))

கண்மணி said...

வாங்க ராமலஷ்மி.
கவிதையாக்கம் எனதென்றாலும் இது ஒரு தினசரி செய்தியை வைத்து எழுதியது.உலகம் இப்படித்தான் வலைக்குள் சுருங்கி விட்டது.

கண்மணி said...

நன்றி ஆயில்யா!மூஞ்சி புக்குல போட்டுத்தான் உன் மூஞ்சை இங்கே காட்ட வைத்தேன் ஆஹ்ஹாஹ்ஹா

கண்மணி said...

நன்றி சங்கவி

பூங்குன்றன்.வே said...

நிழல் நிஜமாக முடியாது என்றாலும் கொஞ்சம் நிழலையாவது தரிசிக்கவிடுவாயா என்று ஒரு காதலன் காதலியை பார்த்து கேட்பது மாதிரி இந்த கவிதை நிஜ சந்தோஷங்களை இப்படி நிழல் வாயிலாக அடைவது பற்றி அருமையா சொல்கிறது; ரொம்ப குழப்பிட்டேனா?

கமலேஷ் said...

உண்மையான வரிகள்
அழகாய் இருக்கறது..

Kannan said...

வாசிக்க சிரமமாய் இருகிறது. Dark Background la Black letters.... :(

கோபிநாத் said...

அருமை ;))

தமிழ் பிரியன் said...

டீச்சர்... இந்த டெம்ப்ளேட் நல்லா இருக்கு.. முதலில் இருந்து ஓட்டங்கள் சரியில்ல... இதே இருக்கட்டும்.

கவிதை... எல்லாரும் என்னமோ சொல்றாங்க.. ஆமா போட்டுக்கிறேன்.. ;-))

கண்மணி said...

கமலேஷ் நன்றி
கோபி...ம்ம்ம்ம்..சரிசரி
தமிழ்ப்பிரியன் இந்த கவிதை உங்களுக்குப் பொருந்தும்.குட்டி பாப்பா கிட்ட இருந்து வலைநிழலி மூலம் முத்தம் கிடைத்தால் புரியும்

கண்மணி said...

கண்ணன் நன்றி.
உங்க இணைய இணைப்பு சரியில்லையோ?சைடுதான் டார்க் கிரீன்.போஸ்ட் பகுதி வெள்ளைதான்.
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்.

தியாவின் பேனா said...

அருமை

அண்ணாமலையான் said...

சிரிப்பு டீச்சர்..? ஹா ஹா ஹா...

சிவப்ரியன் said...

மெய்நிகர் முத்தம் - தலைப்பே கலக்கல்.
நிறைய ரசித்தேன். வாழ்த்துக்கள்.

கண்மணி said...

நன்றி தியா

நன்றி சிவப்ரியன்.

திகழ் said...

வாழ்த்துகள்

யாநிலாவின் தந்தை said...

மெய்நிகர் - அழகான வார்த்தை.....ரசித்தேன்

thenammailakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Kavithaigal said...

nice kavithai..

all the best...

சக்தியின் மனம் said...

வாழ்க்கை தேவைகளை கொன்று வாழ்க்கை தேவைகளுக்காக உழைக்கும் மக்கள் நாம்.. அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்திய ஜிந்தாபாத் என்பதைப்போல... இதனை எல்லாம் சகித்துத்தான் ஆகவேண்டும்..

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் கண்மணி! :-)

சேரல் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் கண்மணி!

-ப்ரியமுடன்
சேரல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் கண்மணி..

கவிநா... said...

வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)