PAGE LOAD TIME

ஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கைபுத்தாண்டு வாழ்த்துக்கள்

திய வருடத்தை எதிர் கொள்வதற்கான கொண்டாட்டங்கள் தீர்மானங்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு களை கட்டும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவோம்.புத்தாண்டு பிறப்பதற்கு முன் இருந்த வேகமும் முனைப்பும் கால ஓட்டத்திலும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளிலும் திசை மாறி வலுவிழந்த புயல் சின்னம் போல நம் நினைவுகளின் கரை கடந்து போகும்.

பெரிய பெரிய தீர்மானங்கள் சபதங்கள்னு அகலக் கால் வைக்காமல் சின்னதாய் சில ஒற்றை வார்த்தைப் பயன்பாடுகளை மட்டும் கடை பிடித்தால்கூட போதும் வாழ்க்கை சுகமாய் நகரும்.

பாராட்டு/very good/keep it up:

மனித மனம் புகழ்ச்சிக்கும் தட்டிக் கொடுத்தலுக்கும் ஏங்குவது இயல்பு.தினக் கூலித் தொழிலாளியாகட்டும் உயர் பதவியில் இருப்பவராகட்டும் அவர்களின் திறமை மெச்சப் படும்போது அவர்களுக்குள் ஒரு உத்வேகம் கிளம்பி அடுத்தடுத்து இன்னும் சிறப்பாகச் செய்யத் தூண்டும் .பாராட்டுதல் தன்னம்பிக்கையின் கிரியா ஊக்கியாக செயல்பட்டுத் தட்டிக் கொடுக்கும்.
அட இந்த வேலையை இவ்வளவு எளிதாகச் செய்து விட்டாயே சபாஷ்
உன்னால் மட்டும்தான் இப்படிச் சிறப்பாகச் செய்ய முடிந்திருக்கிறது.
அருமை.உன்னால் இன்னும் கூட சிறப்பாகச் செய்ய முடியும். இப்படியான பாராட்டுக்கள்.....
குடும்பத்திற்கும் இதே ஃபார்முலாதான்.கணவன் மனைவியோ இல்லை குழந்தைகளோ நிச்சயம் பாராட்டை விரும்பாதவர்கள் யாரிருக்க முடியும்.
நல்ல சமையலுக்கு.....பிள்ளைகள் நன்றாக மார்க் வாங்கியிருப்பதற்கு..
.போட்டிகளில் வென்றதற்கு...
உண்மையிலேயே பிடிக்கலை என்றாலும் கணவர் வாங்கித் தரும் பரிசுகளுக்கு...இப்படியாக பல தருணங்களில்

நன்றி/thank you/so nice of you:

பாராட்டுதலை விடவும் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் உண்டென்றால் அது அடுத்தவரின் செயலுக்கு நன்றி கூறுதல்.காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது போல சின்னதோ பெரிதோ ஒருவர் நமக்குச் செய்த உதவிக்கு அவர்களுக்கு உடனடியாகச் செய்யக் கூடியது வார்த்தைகளால் நன்றி கூறுதல் மட்டுமே.
அவன் வேலையைத் தானே செய்தான்...இது அவன் கடமை இதற்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா என நினைக்காமல் சொல்ல வேண்டும்..
ஒருவர் தான் ஒவ்வொருமுறை பேருந்தில் சென்று தன் இடம் வந்து இறங்கும் போதும் நல்லபடியாகக் கொண்டுவந்து சேர்த்ததற்காக அந்த பேருந்தின் ஓட்டுனருக்கு நன்றி சொல்வாராம். கேட்கும் போது இந்த ஆளுக்கு என்ன கிறுக்கா தினமும்தான் போகிறோம் இப்படி பேருந்து ஓட்டுனர் ஆட்டோ ஓட்டுபவர்னு ஆளாளுக்கு நன்றி சொல்லிக்கிட்டிருக்க முடியுமான்னு கேலி செய்ய ஒதுக்கும் நேரத்தில் 'நன்றி' என்ற ஒற்றை மந்திரச் சொல்லை ஏன் பயன் படுத்தக் கூடாது..
நண்பரிடமோ உயர் அதிகாரிகளிடமோ தினமும் சொல்லித்தானே ஆக வேண்டும்.வேலை விண்ணப்பத்திலோ விடுமுறை விண்ணப்பத்திலோ தேங்யூ னு எழுதாமல் விடமுடியுமா?
யாருக்கு நன்றி சொல்கிறோம் எதற்காக நன்றி சொல்கிறோம் என்பதல்ல.நமக்காக நல்லது செய்யும் யாருக்கும் நன்றி சொல்லலாம்.

தயவு செய்து:/please/kindly

ஒரு செயலின் வெற்றி அதை செயல்படுத்தும் விதத்தில்தான் அமைகிறது.ஆணையிட்டு நிறைவேற்றுவதைக் காட்டிலும் அன்பாகக் கேட்டு செயல்படுத்தும் போது நூறு சதம் நிறைவாக முடியும்.அழுது வடியும் மெகா சீரியல்களில் கூட சில நேரம் நல்ல சங்கதிகள் தட்டுப்படும்.ஒரு தொடரில் கேட்ட வசனம்'அதட்டிப் பேசினா அஞ்சு மணி நேரம் சிரிச்சுப் பேசினா சில நிமிடத்தில் வேலை முடியும்'
தயவு செய்து என்பது இறைஞ்சுதலோ பணிந்து போதலோ என நினைக்காமல் அன்பான வேண்டுகோளாக கருதப் படும் போது எந்த வேலையும் தங்கு தடையின்றி நடைபெறும்.இங்கும் நம்மைவிட உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பேதம் தேவையில்லை.விறைப்பாக பத்து ரூபாயைக் கொடுத்துக் கிடைக்காத சில்லறை ப்ளீஸ் னு சொல்லிக் கேட்கும் நூறு ரூபாய்க்கு எளிதில் கிடைக்கலாம்.

வருந்துதல்:/sorry/excuse me/

எதிர்பாராமல் நிகழ்ந்து விட்ட தவறுகள் அல்லது செய்ய முடியாமல் போன உதவிகள் தடைபட்டுப் போன காரியங்கள் மனம் புண்படும்படியான வார்த்தைகள் இப்படி எதற்காகவேனும் நாம் வருத்தம் தெரிவிக்கும் சூழல் வந்தால் தயங்காமல் கேட்பது ஒரு இணக்கமான நிலையை உருவாக்கி மனதை லேசாக்கிவிடும்.தவறு செய்வது என்பது மனித இயல்பு.சினிமா வசனத்தில் வேண்டுமானால் 'எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு' னு சொல்லலாம்.அதற்காக எதுவும் செய்து விட்டு மன்னிப்புக் கேட்கலாம் என்று பொருளில்லை.பிழையாக நடந்து போனது அறியாமல் நடந்தது இயலாமை இப்படி....மறப்பதும் மன்னிப்பும் இல்லையென்றால் மனிதர்கள் எதிரிகளாகிவிடுவர்.

இப்படி சமையலில் சேர்க்கும் உப்பு புளி காரம் இனிப்பு போல தேவையான சமயத்தில் தேவையான 'மந்திர வார்த்தைகளைத்' தூவி வாழ்க்கையை இலகுவாகவும் இனிதாகவும் ஆக்கிக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

14 மறுமொழிகள்::

Sangkavi said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்......

Sivaji Sankar said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்... 2010

அண்ணாமலையான் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. (இது எத்தனாவது தடவ?)

தமிழ் பிரியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்!

கோபிநாத் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

நசரேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

அண்ணாமலையான் said...

உங்க அன்பான ஆசீர்வாதத்துக்கு பனிவான நன்றி...

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சின்ன அம்மிணி said...

Happy New year

க.பாலாசி said...

//ஆளாளுக்கு நன்றி சொல்லிக்கிட்டிருக்க முடியுமான்னு கேலி செய்ய ஒதுக்கும் நேரத்தில் 'நன்றி' என்ற ஒற்றை மந்திரச் சொல்லை ஏன் பயன் படுத்தக் கூடாது..//

//நமக்காக நல்லது செய்யும் யாருக்கும் நன்றி சொல்லலாம்.//

கண்டிப்பாக.

வாழ்வின் முன்னேற்றதிற்காக ஒவ்வொரு தலைப்பிலும் தாங்கள் சொல்லிய விடயங்கள் நிச்சயம் கடைபிடிக்கவேண்டியவை.

தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

nice article

happy new year

கண்மணி said...

வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பருக்கும் நன்றி.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

"மந்திர வார்த்தைகள்" வாழ்க்கைக்கு முக்கியமானவை. நல்ல பதிவு நன்றி.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)