PAGE LOAD TIME

தொலைந்து போன காதல்எனக்கும் உனக்குமான காதல்
ஒரு சந்திப்பின் விபத்து
மட்டுமேயெனப் புரிந்தபோது
வருடங்கள் பல
கடந்து போயிருந்தன

பெண்கள் பற்றிய உன்
சராசரிப் பார்வையில்
ஆணாதிக்க கர்வம் மட்டுமே
பிரதானமான போது
என் நம்பிக்கை தகர்ந்து போனது

வாழ்வதற்கு பற்றுதலாய்
வரம் வேண்டி தோற்றபோது
என் இருப்பும் வெறுத்துப் போனது

விடையில்லாத கேள்விகளின்
அவிழ்க்கப்படாத முடிச்சுகளாய்
நாட்கள் கரைந்து போவது தவிர
வென்றதற்கான அடையாளம்
மிச்சமில்லை எதுவும்

மனங்கள் ஒன்றாத வாழ்வில்
உணர்வுகள் மரத்துப் போனது
காதல் தோற்றுத்தான் போனது
முதன் முறையாக
கல்யாணத்திற்குப் பிறகும்

19 மறுமொழிகள்::

அண்ணாமலையான் said...

கல்யாணத்திற்கு பிறகு தோற்ற காதல்கள் கோடி
ஆனால் அதை கவிதையாய் சொன்ன கண்மணிதான் முதல் லேடி...!!!(எப்பூடி???)

cheena (சீனா) said...

அன்பின் கண்மணி

அருமையன சிந்தனை - காதல் தோற்றது - அல்ல அல்ல - தொலைந்து போனது - எப்போது - கல்யாணத்துக்குப் பிறகும்.

நச்சென்ற வரிகள் இறுதியில்

நன்று நன்று நல்வாழ்த்துகள்

சின்ன அம்மிணி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்மணி டீச்சர்.

வல்லிசிம்ஹன் said...

வெகு யதார்த்தமான கவிதை. காதல் தொலைந்து போவது எப்போது
என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள் கண்மணி. வெற்றிக்கு உரிய இலக்கணக் கவிதை.
வாழ்த்துகள்.

தமிழ் பிரியன் said...

கவிதையெல்லாமா? வாழ்த்துக்கள் டீச்சர்!

தியாவின் பேனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்மணி

Sangkavi said...

//மனங்கள் ஒன்றாத வாழ்வில்
உணர்வுகள் மரத்துப் போனது
காதல் தோற்றுத்தான் போனது
முதன் முறையாக
கல்யாணத்திற்குப் பிறகும்//

நச்சுன்னு ஒரு கவிதை..............

நல்லாயிருக்குங்க, வாழ்த்துக்கள்.....

கண்மணி said...

அண்ணாமலையாரே நான் லேடி இல்லை பாட்டி...ஆஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா

கண்மணி said...

வாங்க சீனா சார் தொலைந்து போனது திரும்பக் கிடைக்கலாம்.தோற்றுப் போனது ஜெயிக்காது-மனிதரின் ஆணோ/பெண்ணோ இயல்பு மாறும் வரை.
நன்றி சார்

கண்மணி said...

அம்மிணி நன்றிங்கோ..ச்சும்மா ஒரு பங்களிப்புதான்.
நன்றி வல்லிம்மா.நிறையப் பேர் வாழ்வில் தொலைந்து போவதுதானே.

கண்மணி said...

தியாவின் பேனா நன்றிங்க

நன்றி சங்கவி

கண்மணி said...

அதென்ன கவிதையுமான்னு கேள்வி தமிழ்ப்பிரியன்.??.
ஒரு ரகசியம் உரையாடல் கவிதைன்னாதால கலந்துகிட்டேன்.நம்மளது அந்த ரகம்தானே;))

பூங்குன்றன்.வே said...

கவிதைக்கு வார்த்தைகள் மட்டுமில்லை,உணர்வும் முக்கியம்..அது இதில் இருக்கு கண்மணி

நட்புடன் ஜமால் said...

உண்மையில் காதல் தோல்வி என்பது இது தான் ...

Sivaji Sankar said...

//எனக்கும் உனக்குமான காதல்
ஒரு சந்திப்பின் விபத்து
மட்டுமேயெனப் புரிந்தபோது
வருடங்கள் பல
கடந்து போயிருந்தன//

சரிதானுங்க சிலருக்கு காதல் ஏன் வருதுன்னு தெரியாது..சிலருக்கு காதல் எப்போ வருதுன்னு தெரியாது..

அண்ணாமலையான் said...

சரிங்க பாட்டி. நம்ம ப்ளாக் பக்கம் வாங்க ஆசிர்வாதம் பன்ன...

ராமலக்ஷ்மி said...

உங்கள் முந்தைய கவிதையோடு போட்டி போட்டு முந்துகிறது இந்தக் கவிதை. அருமை. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

காயத்ரி said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்....
உங்களின் வலைப்பூ உண்மையிலேயே வலை பூ...

மிகவும் அழகான பூந்தோட்டமாக சிவப்பு வண்ணம் உள்ளம் மயக்குகிறது... வாழ்த்துக்கள்...

thenammailakshmanan said...

//வாழ்வதற்கு பற்றுதலாய்
வரம் வேண்டி தோற்றபோது
என் இருப்பும் வெறுத்துப் போனது//

மிக அருமை கண்மணி
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)