தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.
இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.
தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.
மொத்தப் பதிவுகளும் இங்கே
நீதி மன்றம்.கூண்டில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன்
ஆதாரங்கள் போதுமானதாக இருந்தாலும் குற்றவாளி அதை மறுக்கிறான்.
'நான் கொலையே செய்யவில்லை.இன்னம் கொஞ்ச நேரத்தில் நான் கொலை செய்ததாக கூறப்பட்டவனை வரவழைக்கிறேன்' என்று யாருக்கோ ஃபோன் செய்தான்.
'இதோ வந்து விடுவான்'என்றதும் நீதிபதி முதல் அனைவரும் வாசலையே பார்க்க,
'டேய் ரோஸி மிஸ் ஏன் வரலை'
'அவங்க நாய்க்குட்டி செத்துப் போயிடுச்சாம்'
'அவ்வ்வ்வ்.......வவ வவ் வவ வ வ்'
ரோஸி மிஸ் மீது அதிக பாசம் கொண்ட சிறுவன் மிஸ் வீட்டுக்குப் போகிறான்.
'மிஸ்... ''ரோஸி மிஸ்'
சிறுவனின் குரல் காதில் விழவில்லையோ.இல்லை மிக ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி செத்துப் போனதால் சோகமாயிருக்கும் ரோஸி மிஸ் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
பார்த்தது படித்தது
கேட்டது இரசித்தது
நிகழ்ந்தது உணர்ந்தது
காதுகள் கிடைத்தால்
மூடாது வாய்கிழியும்
போகவும்
ஆசைகள்
அபிலாஷைகள்
அந்தரங்கமாகும்
அனுமதியில்லா நாட்குறிப்பில்
எல்லைக் கோடுகள் இல்லை
எலக்கணமும் இல்லை
அடுக்குமொழியும் இல்லை
அழகுத் தமிழும் இல்லை
கட்டில்லாப் பெருவெளியில்
பதிவாக்கி விட்டேன்
பகிரங்கமாக.
டிஸ்கி: Its me
சிரிப்புத் துணுக்குகள்
தினசரி நாளிதழ்கள்
கவிதைகள்
கையெழுத்துப்பிரதிகள்
சிறுகதைகள்
வார இதழ்கள்
குறுநாவல்கள்
மாத இதழ்கள்
பிரசுரமாகவில்லை.....
பிலாக் எழுதிக் கொண்டிருக்கிறான்/றாள்
டிஸ்கி: not me
பில்கேட்ஸ் ஒரு நாள் மேலோகம் வந்தார்.
ஏன் எப்படி ஏதுன்னு கேள்வி கேட்காம மேல படியுங்க.
வாசலில் வந்து வரவேற்ற எமதர்மன் ,'சாரி மிஸ்டர் பில்கேட்ஸ் உங்களுக்கு இன்னும் சொர்க்கமா நரகமானு முடிவு பண்ணலை.'
'ஏன்'
'உங்க கம்யூட்டர் கண்டுபிடிப்புகள் எப்படியெல்லாம் பயனளிக்கிறது என்பதால் நான் உங்களுக்கு சொர்க்கம் தரச் சொன்னேன்.ஆனால் சித்ரகுப்தனோ கணிணி வளர்ச்சியால் என்ன என்னதீங்கு விளையுதுனு பட்டியல் போட்டு உங்களுக்கு நரகம்தான் குடுக்கனும்னு சொல்றான்.அதிலும் வலைப்பதிவுகளைப் படித்த பிறகுதான் மிகவும் கோபமாக இருக்கான்.'
'அப்ப என்ன செய்யப் போறிங்க'என பில் கேட்க
'உங்களுக்கு மட்டும் ஆப்ஷன் தரேன்.நீங்களாகவே இரண்டையும் பார்த்து முடிவு செஞ்சிக்குங்க'என் எ.தர்ம ராஜா சொல்கிறார்.
பில் முதலில் நரகத்திற்குப் போகிறார்.
அழகான விளக்குகளின் ஒளியில் தடாகமும்,தாமரைகளும் மலர்ந்திருக்க ஒரு புறம் மீன் கூட்டம் துள்ளி ஓட இன்னொருபுறம் மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.உஸ் என்ற ஓங்கார ஆர்ப்பரிப்போடு அருவி கொட்டிக் கொண்டிருக்க அழகான பிகினி உடைகளில் எழிலான மங்கையர்கள் புன்னகைத்தபடி கண்ணசைக்கவும் பில்லுக்கு மயக்கமே வந்து விட்டது
'அடடா நரகமே இத்தனை அழகென்றால் சொர்க்கம் எப்படியிருக்கும் என்று அங்கு போய்ப் பார்க்கிறார்.
அமைதியான சூழலில் அங்கிருந்தவர்கள் யாரோடும் யாரும் பேசாமல் தங்கள் வேலைகளைச் செய்தபடி இருக்க வெகு நிசப்தமான அந்த சூழல் பில்லுக்கு பிடிக்கவில்லை.
கண்ணைக்கவரும் அழகோ,ஒளியோ ஆர்பரிப்போ இல்லாத இந்த ஏகாந்தம் சுத்த போர் என்று திரும்ப நரகத்துக்கே வந்து விட்டார்.
கொஞ்சம் நாள் கழித்து எ.தர்மராஜா வந்து பார்த்து 'ஹவ் ஆர் யூ பில்கேட்ஸ் 'னு கேட்க
'என்ன மிஸ்டர் எ.த.ராஜ் யூ சீட்டட் மீ.அன்னைக்கு பாத்தப்போ அருவி,ஓடை,மீன்கள்,அழகிகள் னு செம ஜாலியா இருந்தது.இப்ப ஏதும் இல்லை.வெறிச்சோடி கிடக்கு 'என கோபிக்க
சி.குப்தன் நமட்டுச் சிரிப்போடு சொன்னார்,
அது நீங்க உருவாக்குன ஸ்கிரீன் சேவர்தான் மிஸ்டர் பில்'








