மொத்தப் பதிவுகளும் இங்கே

பார்கெயினிங்

'இந்தா கிலோ பத்து ரூபாய் ன்னா கட்டாது.எட்டு  ரூபாய்னு வச்சிக்கிட்டு ஒரு கால் கிலோ குடு'
'கீரைக்கட்டு மூணு ரூபாயா..ஹூம் என்ன யானை விலை சொல்றே...ரெண்டு கட்டு அஞ்சு ரூபாய்க்குத் தருவியா'
ஆமாம் அஞ்சுக்கும் ஆறுக்கும் யானை எங்கே விக்கிறாங்க.
இது போல உரையாடல் தினசரி ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தெருவில் நிச்சயம்
நடந்து கொண்டுதானிருக்கும்.
கூடைக்காரிசொன்ன விலைக்கு வாங்கினா கால்கிலோவுக்கு அம்பது காசும் கீரைகட்டுக்குமேலும் ஒரு அம்பது காசும் மிச்சமாகும்.அப்படியே பேரம் பேசி வாங்கிட்டாமிச்சம் பிடிச்ச காசுல யானையா வாங்க முடியும்.பூனைக்கு ஊத்த பால் கூடவாங்க முடியாது.

ட்டிவீட் டைரக்ட் டூ காட் [GOD]

சாப்பிட்டது தூங்கியது ஊருக்குப் போனது மொக்கை போட்டது மனசுல பட்டதுன்னு எழுத மட்டும் செய்யாமல் பிரேயர்ஸ்/ வேண்டுதல்களையும் எழுதச் செய்து ஒரு ட்விட்டர்தளம் நேரிடையாக கடவுளிடம் சேர்ப்பிக்கிறது.
twitter/TheKotel என்பது அந்த ட்விட்டர் சைட்டின் பெயர்.
TheKotel என்பது இஸ்ரேலில் ஜெருசேலத்தில் உள்ள வெஸ்டர்ன் வால் எனப்படும் ஒரு புனித தலத்தின் சுற்றுச்சுவர். இதில் பலர் தங்கள் வேண்டுதல்களை எழுதி அந்த சுவரில் உள்ள ஓட்டை[பொந்து]களில் சொருகி வைப்பது ஒரு வேண்டுதல்.இது நேரிடையாக கடவுளிடம் போய்ச் சேரும் என்பது ஒரு நம்பிக்கை.

நிறுத்த வழி சொல்லுங்களேன்

நமக்கு முதல்ல அந்த ஆசை வந்ததே தப்பு.சரி வந்துடுச்சி.ஏதோ கொஞ்சநாள் அனுபவிச்சுப் பார்ப்போமுன்னு அதை ஓகே பண்ணேன்.ஆனால் விடாது காலைச் சுத்தும் பாம்பு மாதிரி ஆகிவிட்டது நிலைமை.காலோடு போனாப் பரவாயில்லை பாருங்க கையைக் கடிக்கிறதே.
சும்மாவே செல்போனை எடுத்துப் பேசினா 30 நிமிடமாகும் வைக்க ஒன்னு எனக்கு காது சூடாகனும் இல்லை கேக்கிறவங்களுக்கு ரத்தம் வரனும்.இதுல அந்த ஆசை வேறு வந்திருக்க வேண்டாம்.

ஏய்..யூ..நெக்ஸ்ட்

'ஏய்யா இங்க வா இந்த செடிக்கெல்லம் நல்லா தண்ணி விடு'
இந்தாம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை'
'யோவ் சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'
இப்படித்தான் பலநேரம் பலபேர் வீட்டுத் தோட்டக்காரர்,சமையல் செய்யும் பெண்மணி ,கார் டிரைவரிடம் கட்டளை இடுகிறோம்.
இதையே கொஞ்சம் மாத்திச் சொல்லிப் பாருங்க.
'ராமையா இந்த செடிக்கெல்லாம் தண்ணி விடு'
'அன்னம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை'

டெம்ப்ளேட் சோதிடம் [Templatology]


நியூமராலஜி,நேமாலஜி,வாஸ்தாலஜி மாதிரி புதுசா ஒரு ஜோதிடக்கலையை பல நாட்களாக ஆராய்ச்சி பண்ணி முடிச்சாச்சி.உடான்ஸ்மேனியா பல்கலைக் கழகத்திலிருந்து [எங்கே இருக்கு கோபி?] 'டாக்டர்' பட்டம் வந்து வாங்கிக்க சொல்லியும் போக பிடிக்கலை.இந்த ஜோதிடத்துக்குப் பேரு என்னன்னு கேக்கலையே 'டெம்ப்லேட்டாலஜி'.

கந்தசாமீமீய்ய்ய்.........

கந்தசாமி சாமிக்கு வணக்கமுங்கோ
சாமீஇய்ய்ய்ய் நீங்க யார் யார் என்னவேனும்னு கேட்டு எழுதி
வச்சாலும் பறந்து வந்து உடனே நிறை வேத்தி வைக்கறீங்க.
இப்ப தங்கம் விக்கிற விலையில் நகை கேக்கலீங்கோ
ஆரெம்கேவி,போத்தீஸ்னு புடவை கேக்கலீங்கோ
நான் ஒரு பிலாக்கருங்கோ.இங்கன வந்து ஒரு ரெண்டு வருஷமா குப்பை கொட்டுறேங்கோ