வாழ்த்துவது:
கதிர் நாற்பதின் பொருட்டு இந்தக் கல்லூரியில் சேர்ந்த போதே அவன் தாயார் நிறைய அறிவுரைகள் சொல்லித்தான் அனுப்பினாள்.
உன்னுடைய நோக்கம் நாற்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
எந்தச் சூழலிலும் முப்பதை விடக்கூடாது.அத்துடன் பதின்மூன்றும் ,பதினான்கும் மிக முக்கியம்.
அதனினும் முக்கியமாக என்பதைக் கடைபிடித்து எண்பத்தியிரண்டு,எண்பத்து மூன்றுகளை ஒதுக்கி எழுபத்தி ஒன்பதை தேர்ந்து எடுக்க வேண்டும்.
ப
யணக்கட்டுரை எழுதும் அளவிற்கு துளசி டீச்சர், புதுகைத் தென்றல் போல அடிக்கடி பயணம் செல்பவள் அல்ல என்றாலும்
சமீபத்தில் டெல்லிக்குப் போயிருந்தபோது அமிர்தசரஸ் போகும் வாய்ப்பும் அங்கிருந்து வாஹா போகும் வாய்ப்பும் கிடைத்தது.
ரங்கமணியோட வெளி நாடோ அல்லது வெளியூரோ போகக்கூடிய வாய்ப்பு இருந்து போயிட்டு வந்துட்டாலும் ஹூம் பதிவெழுதும் அளவுக்கு மேட்டர் தேறாது.அவங்களுடைய வேலையே பிரதானமாக இருப்பதாலும் ,வேலை முடிந்தவுடன் அடுத்த ஃபிளைட்டுக்கே ஏற்கனவே ரிட்டன் டிக்கெட் போட்டுவிடுவதாலும் சைட் சீயிங் என்பது ச்சும்மா லுலூலாயிக்குதான்.
ஓ
டினேன்.....ஓடினேன்.ஆனாலும் ஆக்டோபஸாய் கிளை விரித்துப் பிரிந்து பறந்து மேலும் துரத்திக் கொண்டே வந்தன.சட்டென்று முதுகில் குத்தியது போல எரிச்சலும் வலியுமாக உணர்ந்த கணம் என்னுள் இருந்த 'மறத் தமிழச்சி' விழித்துக் கொண்டு கெக்கலித்தாள்.புலி விரட்டிய தேசத்தில் புறமுதுகு காட்டுவதா எனத் திரும்பிய நேரம் சுள்ளென்று இடது கையில் ஒரு எரிச்சல்.மாட்டியாகி விட்டது இனியென்ன எனத் திரும்பிப் பார்த்தால்...புடவையையும் சட்டையையும் துளைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்திருந்தது ஒரு தீக் கங்கு.சொக்கப்பனை கொளுத்தியது போல எதிரே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன பச்சைப் புல்வெளியும் ஈச்சமரக்கன்றுகளும்...
