மொத்தப் பதிவுகளும் இங்கே

ஒரே வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை



புத்தாண்டு வாழ்த்துக்கள்

திய வருடத்தை எதிர் கொள்வதற்கான கொண்டாட்டங்கள் தீர்மானங்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு களை கட்டும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவோம்.புத்தாண்டு பிறப்பதற்கு முன் இருந்த வேகமும் முனைப்பும் கால ஓட்டத்திலும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளிலும் திசை மாறி வலுவிழந்த புயல் சின்னம் போல நம் நினைவுகளின் கரை கடந்து போகும்.

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும் [விழிப்புணர்வு மீள் பதிவு]


ப்ச் ன்னு துரத்தி அடித்தாலும் நம்மையே பாசமாக சுற்றிச் சுற்றி வந்து க்ய்ய்ங் கொய்ய்ங் னு ரீங்காரமிட்டுக் கொண்டே நம்மைக் கடித்து வைப்பதோடு டெங்கு மலேரியா பைலேரியா சிக்கன் குனியா நிமோனியா எனப் பலவித பரிசுகளையும் வாரி வழங்கும் வள்ளல் திருவாளர் 'கொசு' அவர்களுக்கு இந்த மீள் பதிவு சமர்ப்பணம்.
பாருங்க இப்ப டைப்பிக் கொண்டிருக்கும் போதும் அண்ணன் கடித்துக் கொண்டே 'டாங்கீஸ்' னு சொல்றார்.இந்தப் பதிவு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதியது.உண்மையில் என் சொந்த அனுபவமே.பொதுவாக மீள் பதிவு போடும் அளவிற்கு நம்ம பதிவுகள் இல்லையென்றாலும் போட்டதன் காரணம் டிஸ்கியில் சொல்றேன்.

இப்ப மீள் பதிவைப் படிங்க:

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும்

மெய்நிகர் முத்தம்


அம்மா!
பெண்ணைப் பிடித்திருக்கிறதா
உனக்கும் அப்பாவுக்கும்
சம்மதம் என்றால் திருமணம்
உனக்குப் பிடித்திருந்தால் சரி
ஊடுவலையில் உருவான பந்தம்
மருமகள் அழகாகச் சிரித்தாள்
அம்மா!
உன் மருமகள் கர்ப்பமாயிருக்கிறாள்
மேடிட்ட வயிறு  பூரிப்பு தந்தது
மறக்காமல் அனுப்பி வைத்தாள்
வாழ்த்துக்களும் கர்ப்பகால குறிப்புகளும்
மின்வெளி அஞ்சலில்
அம்மா!
குழந்தையைப் பார்
கொள்ளை அழகில் மயங்கிப் போனாள்
அள்ளிக் கொஞ்சிட மனம் தவித்தாள்
அம்மா!
உன் பேத்தி முத்தமிடுகிறாள் பார்
நீட்டிய கன்னத்தில் சூடாகப் பட்டது
வலைநிழலி வழியாக
மெய்நிகர் முத்தம்




வலைநிழலி=web cam
மெய்நிகர் =virtual
ஊடுவலை=web/cyberspace
மின்வெளி அஞ்சல்=email




வெட்கங்கெட்டவர்கள்


ண்ணீரின் தாரைக் கன்னத்தில் இறங்கிக் கறையாகப் படிந்து விட்டிருந்தது.இரவெல்லாம் உறக்கம் வராமல் அழுததில் தலை பாரம் கூடிப் போயிருந்தது.இதொன்றும் புதிது இல்லை.
திருமணமான இந்த பத்து வருடங்களில் வாரம் ஒருமுறையேனும் இப்படி நடந்து கொண்டுதானிருக்கிறது.
திருமணமான புதிதில் இருந்த விட்டுக் கொடுத்தல் என்பதோ புரிந்து கொள்ளுதல் என்பதோ அடியோடு காணாமல் போய்விட்டது.

வாசு...கீ























வாசு...கி
இறைத்துக் கொண்டிருந்த வாளியை
அந்தரத்தில் நிறுத்தி வைத்து
வள்ளுவன் குரலுக்கு
உள்ளே போனாளாம்
புருஷன் பொண்டாட்டின்னா
இவங்களைப் போல இருக்கனும்
அம்மா போதித்து அனுப்பினாள்
புகுந்த வீட்டுக்கு


வாசு...கீ
ஆம்லெட்டும் ஊறுகாயும் எங்கே
போதையில் உறுமியது குரல்
இறைத்துக் கொண்டிருந்த வாளியை
கை நழுவ விட்டு விட்டு
அவசரமாய் ஓடினேன்


பக்கத்து வீட்டில்
பாதாளக் கொலுசு வாங்கி
கிணற்றில் விழுந்த வாளியை
எடுக்க வேண்டும்
நாளைக்கு

தொலைந்து போன காதல்















எனக்கும் உனக்குமான காதல்
ஒரு சந்திப்பின் விபத்து
மட்டுமேயெனப் புரிந்தபோது
வருடங்கள் பல
கடந்து போயிருந்தன

பெண்கள் பற்றிய உன்
சராசரிப் பார்வையில்
ஆணாதிக்க கர்வம் மட்டுமே
பிரதானமான போது
என் நம்பிக்கை தகர்ந்து போனது

வாழ்வதற்கு பற்றுதலாய்
வரம் வேண்டி தோற்றபோது
என் இருப்பும் வெறுத்துப் போனது

விடையில்லாத கேள்விகளின்
அவிழ்க்கப்படாத முடிச்சுகளாய்
நாட்கள் கரைந்து போவது தவிர
வென்றதற்கான அடையாளம்
மிச்சமில்லை எதுவும்

மனங்கள் ஒன்றாத வாழ்வில்
உணர்வுகள் மரத்துப் போனது
காதல் தோற்றுத்தான் போனது
முதன் முறையாக
கல்யாணத்திற்குப் பிறகும்

என்னைப் போல் இரு






தண்மையாய் இரு
கோபம் குறைக்கப்
பாடம் சொன்னது
பனித்துளி

உறுதியாய் செயல்படு
சோதனை தாங்கி
வாழச் சொன்னது
சிற்றுளி

வெம்மை கொடு
தளைகள் தகர்த்து
வெளிவரச் சொன்னது
சாளரம்

புத்தியைக் கூர்மையாக்கு
களவும் கற்று மறக்க
கண்டிப்பு காட்டியது
கத்தி

வெளிச்சம் கொடு
முன்னேறிச் செல்ல
வழி காட்டியது
மெழுகுவர்த்தி

காலம் பொன்னானது
 நழுவ விடாமல்
கவனிக்கச் சொன்னது
நாள்காட்டி

அன்பால் பிணை
உறவுகள் வளர்க்க
போதனை செய்தது
பசைக் குப்பி

வாழ்க்கை இதுதான்
கற்றுக்கொள் என்றது
இயற்கை

உரையாடல் -கவிதைப் போட்டிக்கு


பத்து ரூபாய்ப் பசங்க

ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுன்னு சொன்னவர்தான்...மேலும் சொல்கிறார்..கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிதுன்னு..
உயிர்வாழப் பணம் சம்பாதிப்போம்.ஆனா பணம் சம்பாதிக்க உயிரையேப் பணயம் வைக்கும் சிறுவர்கள்தான் இந்தப் பத்து ரூபாய்ப் பசங்க.
தமிழகத்தின் நயாகரா ஒகேனக்கல் அருவிக்கு போயிருக்கீங்களா?
ஓவென்று கொட்டும் அருவியும் சுழித்துக் கரை புரண்டு ஓடும் தண்ணீரும் பார்க்கஅழகுதான்.

கனவில் வந்தவர்களும் பலன்களும்

ன்னென்ன பொருள் கனவுல வந்தா என்னென்ன பலன்னு ஒரு புத்தகத்தில் படிச்சேன்.A-z எல்லாம் போட்டிருந்தது.சாம்பிளுக்கு சில இங்கே:

கடிதம்: வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வருவாங்களாம்.[இப்பெல்லாம் போன் அல்லது மெயில்தானே]

சாவி: எதிர்பாராதது நடக்குமாம்.சாவி தொலைந்து போவது போல வந்தால் கஷ்டம்.தொலைந்த சாவியைக் கண்டு பிடிப்பது போல வந்தால் அதிர்ஷ்டம்