PAGE LOAD TIME

இன்று ஒரு நாள் மட்டும்








இன்று ஒரு நாள் மட்டும்
உன் கரிசனப் பார்வையில்
புறந்தள்ளப் பட்டன
என் குறைகள்
இன்று ஒரு நாள் மட்டும்
பார்த்தேயிராத உன்
புன்னகையில்
சிவப்பேறின

என் கன்னங்கள்
இன்று ஒரு நாள் மட்டும்
வார்த்தைகளில்
தேனருந்த சிறகடித்தன
மனப் பட்டாம் பூச்சிகள்
அழுது வடியும் முகம்
உன் அதிர்ஷ்டத் தருணங்களை
சிதைத்து விடாமலிருக்க
நான் நானாக
என் சுயங்கள்
அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன
இன்று ஒரு நாள் மட்டும்
புது வருடத் துவக்கம்

15 மறுமொழிகள்::

Sangkavi said...

படமும், கவிதையும் அழகு....

Vidhoosh said...

:)
vidhya

அண்ணாமலையான் said...

அடடே.. ஆனந்தமா இருக்கு.... (என்னமோ செய்யட்டுமான்னு கேட்டீங்க.... சத்தத்தையே கானோம்?)

கண்மணி said...

நன்றி சங்கவி

கண்மணி said...

நன்றி வித்யா
கிவிதை சுமாருன்னா சிரிப்பானா:((

கண்மணி said...

அண்ணாமலையான் மெயில் பாருங்க
அது சரி எதுக்கு ஆனந்தம் ஒரு நாள் விடுதலைக்கா?

My days(Gops) said...

ஏங்க என்னா நாள்'னு சொல்லாம விட்டுடீங்களே?

கண்மணி said...

வாங்க Gops சொல்லியிருக்கேனே
//இன்று ஒருநாள் மட்டும்
புது வருடத் துவக்கம்//

kamalesh said...

மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்..

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க கவிதை

அண்ணாமலையான் said...

போங்க நீங்க பாராட்டுறத கூட புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க...

Anonymous said...

நல்லா இருக்கு!!!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

கண்மணி said...

நன்றி அம்மிணி

நன்றி ராமலஷ்மி

kanalvanan.blogspot.com said...

நல்ல கவிதை.சிறந்த கவிதையும் நீங்கள் எழுதலாம் முயன்று பாருங்கள் வாழ்த்துக்கள்
க. கதிரவன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)