PAGE LOAD TIME

தாய்மையைப் போற்றுதும்...


ள்ளக் காதலில் பிறந்ததால் சிசுக்களைக் கொல்லும் தாய்கள்,பெண் குழந்தையாகப் பிறந்து விட்டதால் கொல்லப்படும் சிசுக்கள்..கணவன் இறந்து விட்டதால் விஷம் கொடுத்துப் பெற்ற பெண்ணைக் கொன்ற நவீன நல்லதங்காள்...இப்படிச் செய்திகளைப் படிக்கும் போது மனிதம் மட்டுமல்ல தாய்மையும் அழிந்து வருகிறதோ என எண்ணும் நேரம்.இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமா என மலைக்க வைக்கிறார் டாமி வெட்மோர்.ஜூலியானா வெட்மோரின் அம்மா.

ஜூலியானா யார் எப்படியிருப்பாள் என்பதைப் பார்க்கும் முன்பு கொஞ்சம் அவள் பிறந்த கதையைப் பார்ப்போம்.
2003 மார்ச் மாதம் ஜூலியானா பிறந்தாள்.தாயின் கர்ப்பத்தில் ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.முதல்முறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போதுதான் குழந்தைக்கு வயிற்றுப் பகுதி இல்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.மறுபடியும் 24 வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்த டாக்டர் amniocentesis எனப்படும் குரோமசோம் பற்றிய ஆய்வு நடத்த வேண்டும் என்றிருக்கிறார்.குரோமசோம் குறைபாடுகளுடன் உள்ள அந்தக் குழந்தை பிறக்கும் போது எதுவும் நிகழலாம் என்பதால் அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளச் சம்மதமா அந்த பிரக்னன்ஸி தொடர வேண்டுமா என்றபோது டாமியும் அவர் கணவர் தாம் மும் மனப் பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அடுத்து வந்த மாதங்கள் மிகுந்த வேதனைகளோடும் பிரார்த்தனைகளோடும் கழிய 38 வாரங்கள் கடந்த பின் ஏராளமான செவிலியர் மருத்துவர்கள் மயக்க மருந்து வல்லுநர்கள் பல்துறை வல்லுநர்கள் சூழ்ந்திருக்க ஜூலியானா பிறந்தாள்.அவள் பிறந்த போது அவளின் தாய்க்கும் உதிரப் போக்கு அதிகமிருந்ததால் குழந்தைக்கு ஒரு டீம் தாய்க்கு ஒரு டீம் என பெரிய மருத்துவர் பட்டாளமே சிகைச்சை அளித்திருக்கிறது.
பிறந்த 5 ம் நாளே மூச்சுவிடவும் உணவுக்கும் என 2 குழாய்கள் பொருத்த அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது.
கோணலான மண்டையோடு முகத்தில் கண்கள் வாய் மூக்கு காது என எதையும் பகுத்தறிய முடியாத சதைப் பிண்டமான தலையில் craniofacial surgery எனப்படும் சிகிச்சைக்கு உலகின் தலை சிறந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் பட்டாள்.அவளின் முதல் 18 மாதங்கள் அறுவைச் சிகிச்சைகளிலும் வேதனையிலுமே கழிந்திருக்கிறது.மூச்சுவிடச் சிரமம் நிமோனியாத் தாக்குதல் எனப் பலமுறை அவள் இறப்பு உறுதி செய்யப் படும் போதெல்லாம் மண்டியிட்டு வேண்டுவது மட்டுமே அந்தத் தாயால் செய்ய முடிந்திருக்கிறது.
இதுவரை 21 முறைக்கும் மேலாக அறுவைச் சிகிச்சை நடந்திருக்கிறது.இதில் எதுவும் அழகுக்கான அறுவைச் சிகிச்சையில்லை.மூச்சு விட சாப்பிட என வாழ்வுக்கான அடிப்படை கிகிச்சைகள்.
அவள் எப்படியிருக்கிறாளோ அப்படியே அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒன்றே இலட்சியம் என்கின்றனர் அவளின் பெற்றோர்.
அவளுடையப் புகைப்படங்கள் அவளுக்கு நடந்த சிகிச்சைகள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் சந்தித்த சோதனைகள் அவள் படிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கும் தளம் Juliana Wetmore.

மெயிலில் வந்த புகைப்படங்களைப் பார்த்ததிலிருந்து மனம் கனத்துப் போயிருந்தது.
களி மண்ணுல பிள்ளைங்க பொம்மை செய்தாக்கூட அதுக்குத் தனித் தனியா கண் மூக்கு காதுன்னு வச்சிடுங்க.ஆனால் என்ன மரபுக் கோளாறோ இந்தக் குழந்தை பிசைந்த களிமண் போல இப்படிப் படைக்கப் பட்டிருக்கு.மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்தை சிலமுறை பார்க்க நேர்ந்த தருணங்களிலும் இப்படித்தான் வேதனை ஏற்பட்டது.எதுவும் சொல்லத் தோன்றாத வேதனை.கடவுளின் படைப்பில் ஏனிப்படி என ஆற்றாமை.அதையும் தாண்டி இப்படியொரு குறைபாடுள்ள அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கச் சம்மதித்துப் பேணிக்காத்து வரும் அந்த தாய்க்கு என் வணக்கத்தைச் சொல்லும் விதமாக இந்தப் பதிவு.
அவளைப் பார்க்கனுமா?இதோ பாருங்க:


 
7 மறுமொழிகள்::

பூங்குன்றன்.வே said...

அந்த குழந்தையோட புகைப்படங்களை பார்த்தபிறகு மனசே சரியில்லைங்க.பாவம்..அதேசமயம் அந்த நல்ல தாய்க்கும் நாம் நன்றியை தெரிவிப்பதில் பெருமைதான்.

கோபிநாத் said...

என்ன சொல்றது...!!

சின்ன அம்மிணி said...

என்ன சொல்றதுன்னே தெரியலைங்க கண்மணி

புதுகைத் தென்றல் said...

தாய்மை போற்றுதும்- போற்றுகிறேன் அந்தத் தாயை.

பா படத்தில் கூட தன் குழந்தைக்கு வந்திருக்கும் நோய் பற்றி தெரிந்த கணத்தில் உடைந்தாலும், தெளிந்து அந்தக் குழந்தையை வளர்ப்பதாக காட்டிருப்பார்கள்.

தாய்மை புனிதமானது.

Sangkavi said...

தாயைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை...

அந்தக் குழந்தை புகைப்படத்ததைப் பார்த்தவுடன் என்ன சொல்வது
மனது கண்ணீர் வடிக்கிறது.

thenammailakshmanan said...

ஆமாங்க உள்ளபடியே அந்தத் தாய் பாராட்டப்பட வேண்டியவர் தான்

Barari said...

thaimai enbatharkku mika sirantha uthaaranam.ippadi sithaintha uruvaththai koduththa antha andavan avalai sirappaka vaza vaippaan.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)