PAGE LOAD TIME

கான்கிரீட் தீவுகள்


பக்கத்து போர்ஷன் பாட்டி
படியில் விழுந்து
மண்டை உடைஞ்சிடுச்சு
வாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்
பீரோ உடைத்து
திருடு போயிடுச்சாம்
பேப்பரில் போட்டிருந்தது

மாடி போர்ஷன் மாமி
கற்பழித்துக் கொலை
டிவியில் பார்த்த முகம்
பரிச்சயமானது
லிஃப்டில் கூட வந்தவள்

சீக்கிரம் வந்துடுப்பா
தனியாக இருக்கனும்
பயத்தோடு சொன்னாள்
கிராமத்தில்
ஒத்தையில் வாழும் அம்மா


மூடியே கிடக்கும் கதவுகள்
சன்னலில் தோன்றும் முகங்கள்
சிரிக்க யோசிக்கும் உதடுகள்
அடுத்தவர் விஷயத்தில்
மூக்கு நுழைக்காத
நாகரீகக் கலாச்சாரத்தில்
அடுக்குமாடி வீடுகள்

17 மறுமொழிகள்::

Anonymous said...

அபார்ட்மெண்ட் மட்டும் இல்லை. இப்ப எல்லா வகை வீடுகளும் இப்படித்தான்.
கவிதை வழக்கம்போல் சூப்பர்

ராமலக்ஷ்மி said...

அப்படித்தான் ஆகி விட்டது வாழ்க்கை! அம்மிணி சொல்வதும் உண்மை. கான்கிரீட் தீவுகளில் அதிகமாய். நல்லாயிருக்குதுங்க கவிதை.

goma said...

ஆயிரம் பேருக்கு நடுவே இருந்தாலும் தனித்து வாழத்தெரிந்தவர்கள் கான்க்ரீட் தீவு வாசிகள்.

புதுகைத் தென்றல் said...

:(( நிஜத்தை சொல்லியிருக்கீங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப உண்மை.. குட்டிகுட்டி தீவு ஒவ்வொரு வீடும்..

Sivaji Sankar said...

கவிதையன்று நிசம்..
நிசம் அழகு..!

க.பாலாசி said...

நகரத்திலேயே பொதுவா இந்த நிலைமைதாங்க... அடுத்த வீட்டு முகவரிக்கூட தெரியாது. இதுல அடுக்குமாடி விதிவிலக்கா என்ன???

நல்ல கவிதை...ரசித்தேன்...

கலை said...

ம்ம்ம். எங்கேயோ போறோம். :(

நேசமித்ரன் said...

கவிதை நல்லாயிருக்கு

கண்மணி said...

நன்றி

சின்னம்மிணி

ராமலஷ்மி

கோமா

கண்மணி said...

அழாதீங்க புதுகை...

உண்மைதான் முத்து

கலை நாம் மனிதத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கோம்

கண்மணி said...

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

சிவாஜி சங்கர்

பாலாசி

நேசமித்ரன்

thenammailakshmanan said...

உண்மைதான் கண்மணி நமக்கென்ன என்கிற மனோபாவம் தான் அதிகம்

Madurai Saravanan said...

atkku maati veetu parri attkkatukkai sollalaam . anal inru manitha neyam seththu varukirathu. athanaal thaan arukil ullavarkal kuuta kannukku therivathillai . unmaiyaana karuththu.

Anonymous said...

//மூடியே கிடக்கும் கதவுகள்
சன்னலில் தோன்றும் முகங்கள்
சிரிக்க யோசிக்கும் உதடுகள்

உண்மையான வரிகள்.

நட்புடன் ஜமால் said...

தலைப்பே சொல்லிடிச்சி மொத்தமும் - நிதர்சணத்தோடு வரிகள்

parhti zplus said...

சங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)