PAGE LOAD TIME

காதலர் தினம்













எலும்புகளற்ற புழுவினைப் போல
வளைந்து சுழலும்
நாவிலிருந்து வந்தன
ஈரமற்ற வார்த்தைகள்

மை நிரப்பிய தூரிகையில்
வாத்தைகளைப் போட்டு
கவிதைகளாக்கி
காதலை வாசிக்காதே
நேசி

நினைவுப் பொருட்களும்
பரிசுகளும்
காதலர் தினங்களும்
என் ஞாபகங்களைக் கொண்டுவருமெனில்
காதலை வணிகமாக்காதே
நேசி

நானென்பதும் நீயென்பதும்
நாமாகிப் போதல்
காதலென்றால்
காதலை யாசிக்காதே
நேசி

நான் நானாகியும் நீ நீயாகியும்
இருந்தாலும்
எனக்குள் நீயும்
உனக்குள் நானும்
பிரியங்களால் புதைந்து போதல்
காதல்

பிரியங்கள் காதலின்
மீதென்றால்
நினைவுகளை மீட்டியெடு
என் மீதென்றால்
புதைத்து விடு
காதலை சுவாசிக்காதே
நேசி

13 மறுமொழிகள்::

Sangkavi said...

//பிரியங்கள் காதலின்
மீதென்றால்
நினைவுகளை மீட்டியெடு
என் மீதென்றால்
புதைத்து விடு
காதலை சுவாசிக்காதே
நேசி//

வரிகள் அனைத்தும் நேசிக்க வைக்கின்றன...

V.A.S.SANGAR said...

நேசித்தேன் உங்கள் வரிகளை

கமலேஷ் said...

மிக அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

இராஜ ப்ரியன் said...

beautiful.........
ssrajapriyan
www.ithutamil.com

ராமலக்ஷ்மி said...

அருமை கண்மணி. நேசிப்போம் காதலை!

ரிஷபன் said...

நேசிப்பின் பிரகடனம் ஜோர்

SanjaiGandhi™ said...

குட்

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

வார்த்தைகள் ...

தட்டச்சு பிழை சரி பாருங்க :)

கண்மணி/kanmani said...

நன்றி சங்கவி

நன்றி கமலேஷ்

நன்றி ஷங்கர்

நன்றி இராஜப் பிரியன்

கண்மணி/kanmani said...

நன்றி ராமலஷ்மி

நன்றிங்க ரிஷபன்

@சஞ்சய்...அய்ய் தொர குட் சொல்லிட்டாரு

கண்மணி/kanmani said...

நன்றி நேசமித்ரன்
பிழையெங்குன்னு சொன்னால் நலம்

மீட்டியெடு--???இசைத்துப் பெற

மீட்டுயெடு--??திரும்பப் பெற

தூரிகை??---

பாட்டில் எவ்வளவு பிழை இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி குறைச்சிட்டு மீதி அமௌண்ட் குடுத்தாப் போதும் :)))))))))))))

புலவன் புலிகேசி said...

//நினைவுப் பொருட்களும்
பரிசுகளும்
காதலர் தினங்களும்
என் ஞாபகங்களைக் கொண்டுவருமெனில்
காதலை வணிகமாக்காதே
நேசி//

செம டச்...நல்லா இருக்குங்க

கண்மணி/kanmani said...

@ புலவன் புலிகேசி நன்றிங்க :)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)