PAGE LOAD TIME

தோற்றுப் போனது....














பனித்துளிகளைப் போலவும்
மென்மையானதாய்
எந்நேரத்திலும் சிதறக் கூடிய
சாத்தியங்கள்
உண்டென்றபோதும்
இல்லாமலிருத்தலை விட
இருந்தது என்பதே மேலானதாக....
பறப்பதற்கான தேவைகள்
இல்லையெனினும்
இறக்கைகள் கட்டிக் கொள்ளத்
தொடங்கிய மனது....
விழிகளில் தொடங்கி
விழிநீரிலேயே கரைந்து விட்டாலும்
எஞ்சியது நினைவுகளாக....
வெற்றி மட்டுமே சாத்தியமானதாக
கைகூடியிருப்பின்
காதலின் தடயங்கள்
ஆழமற்றுப் போயிருக்கலாம்.
சுயநலமும் கோழைத்தனமும்
துரோகத்துடன் போட்டிபோட
தோற்றுப் போனது
மனிதர்களும் அவர்கள் மீதான
நம்பிக்கைகளும் மட்டுமே

10 மறுமொழிகள்::

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை கண்மணி.

//பறப்பதற்கான தேவைகள்
இல்லையெனினும்
இறக்கைகள் கட்டிக் கொள்ளத்
தொடங்கிய மனது....//

அருமையான வரிகள்!

நட்புடன் ஜமால் said...

தோற்று போனது மனிதம்
இருக்கும் கொஞ்சம் நம்பிக்கையோடு

அமைதிச்சாரல் said...

//எந்நேரத்திலும் சிதறக் கூடிய
சாத்தியங்கள்
உண்டென்றபோதும்
இல்லாமலிருத்தலை விட
இருந்தது என்பதே மேலானதாக..//

மிகவும் பிடித்த வரிகள்.

அகல்விளக்கு said...

//பறப்பதற்கான தேவைகள்
இல்லையெனினும்
இறக்கைகள் கட்டிக் கொள்ளத்
தொடங்கிய மனது....//

அழகிய வரிகள்...

க.பாலாசி said...

//வெற்றி மட்டுமே சாத்தியமானதாக
கைகூடியிருப்பின்
காதலின் தடயங்கள்
ஆழமற்றுப் போயிருக்கலாம்.//

உண்மைதான்...தேடலில்லாத வாழ்வுபோல...

நல்ல கவிதை....

கண்மணி/kanmani said...

நன்றி ராமலக்ஷ்மி
காதல்னா மனசு ரெக்கை கட்டிப் பறக்கும்தானே

கண்மணி/kanmani said...

நன்றி அமைதிச் சாரல் காதல் தோற்றாலும் காதலித்த அனுபமும் நினைவுகளும் சுகம் தானே காதலித்தவர்களுக்கு

கண்மணி/kanmani said...

நன்றி ஜமால்

மனிதம் இன்னும் இருக்கா?:((



நன்றி அகல் விளக்கு

இருப்பை விட்டுப் பறக்கத்தானே விழைகிறோம்


நன்றி பாலாசி

எளிதில் கிடைச்சுட்டா எதற்கும் மதிப்பிருக்காது

V.A.S.SANGAR said...

//எந்நேரத்திலும் சிதறக் கூடிய
சாத்தியங்கள்
உண்டென்றபோதும்
இல்லாமலிருத்தலை விட
இருந்தது என்பதே மேலானதாக..//

சூப்பரு

Madurai Saravanan said...

illaamal iruththalai vida irunthathu enbathe melaanathaaka. super.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)